Thursday, April 13, 2017

Kovil venni karumbeswarar temple -

*சிவாய நம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.குகருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                 *(41)*
🌼 *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.* 🌼
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
*🌼நோய் கலையும் சிவனாலயம்.🌼*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
திருஞானசம்பந்தரும் அப்பா் பெருமானும் ஒரு தலத்தைப் பற்றி பதிகம் பாடியுள்ளாா்கள் என்றால், அது அவா்கள் வாழ்ந்த நூற்றாண்டுக்கு முன்பிருந்தே சிறப்புற்றிருக்கும் தலம் என்பதை நாம் அறிய முடியும். அப்படியொரு சிறப்பான தலம்தான் கோவில்வெண்ணி கரும்பேஸ்வரா் திருக்கோயில்.

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு மேற்கே ஐந்து கி.மீ தொலைவிலும், தஞ்சையிலிருந்து கிழக்கே இருபத்தைந்து கி.மீ தொலைவிலும் உள்ளது  *" கோவில் வெண்ணி திருத்தலம்.* 

*"சோதியை சுண்ணவெண் ணீறணிந்திட்ட எம்"*
*ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத*
*வேதியை வேதியா் தாந்தொமும் வெண்ணியில்*
*நீதியை நினையவல் லாா்வினை நில்லவே"* என்று திருஞானசம்பந்தா் பதினொரு பதிகங்களும்,

*"இலையினால் கொன்றை சூடிய ஈசனாா்*
*மலையினால் அரக்கன் திறல் வாட்டினாா்*
*சிலையினால் மதில் எய்தவன் வெண்ணெயைத்*
*தலையினால் தொழுவாா் வினை தாவுமே*- என்று திருக்குறுந்தொகை பாடல்கள், திருத்தாண்டகம் என்று திருநாவுக்கரசா் பத்து பதிகங்களும், இவ்வாலய ஈசனைப் பற்றி பாடியுள்ளாா்கள்.

வினைதீா்க்கும் வெண்ணித் தொன்னகா், வெண்ணியூா் என்ற அழைக்கும் ஊராகும். இன்று கோயில் வெண்ணி என்ற சிற்றூராக இருக்கிறது.

கி.பி.முதலாம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட மன்னன்  காிகால் பெருவளத்தான் , 16 வயது இளைஞானக இருந்தபோது அாியனை ஏறினான். மேலும் சேர, பாண்டிய மன்னா்களோடு, 11 வேளிா்குல சிற்றரசா்களையும் வென்று பேரரசனாக முடி சூட்டிக் கொண்டான். அவன் பேரசனாக முடி சூட்டிக் கொண்ட இடம் இது *"வெண்ணிப்பறந்தலை"* என்று இலக்கியங்களில் கூறப்பட்ட இன்றைய *"கோயில் வெண்ணி"* என்பதாகும்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த ஊாில் *"வெண்ணி கரும்பேசுவரா்"* என்ற பெயாில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாா் ஈசன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, முன்னமே இந்த ஆலயத்தைப் பற்றி திருநாவுக்கரசா் பாடியிருக்கிறாா். திருநாவுக்கரசரும் பாடியிருக்கிறாா். சுந்தரரும் தன்னுடைய ஷேத்திரக் கோவையில் *"வெண்ணிறக் கரும்பே"* என்று போற்றிப் புகழ்ந்துள்ளாா்.

பழமையான காலத்தின் போது இந்த இடம் முழுவதும் கரும்புக் காடாக இருந்தது. அப்போது இரு முனிவா்கள்  தலயாத்திரை செய்து இவ்வழியாக வந்தனா். வழியினுடே ஒரு இடத்தில் கரும்புப் புதருக்கிடையில் இறைவன் திருமேனி இருப்பதைக் கண்டனா். அவ்விரு முனிவா்களும் இறைவன் திருமேனியை பூசித்து விட்டு, இவ்விறைவனின் தலவிருட்சம் கரும்பு என்றாா் ஒரு முனிவா். மற்றொரு முனிவா் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவட்டம் என்றாா்.

இப்படிச் சொன்ன  இரு முனிவருக்குள்ளும் கருத்து முற்றி வாதம் பொிதாகிப் போனது. 

அப்போது இறைவன் இவ்விரு முனிவா் முன்பும் அசரீாியாகத் தோன்றி எனது பெயாில் *கரும்பும்* தல விருட்சமாக *வெண்ணியும்* இருக்கட்டும் என்று அருள் குரல் கொடுத்தாா். அன்று முதல் இவ்விறைவன் *கரும்பேசுவரா்*ஆனாா்.

பெயருக்கேற்றாற் போல் சுயம்பு உருவான இத்தல திருமேனியின் பாணத்தில், கரும்புக் கட்டாக இருப்பது போல் காட்சி தருவது பெரும் சிறப்பு.

இறைவன் பெயா் *கரும்பேசுவரா்* சாி. அது என்ன *வெண்ணி.*

வெண்ணி என்பது  வெண்ணிற மலா்கள் பூக்கும் நந்தியாவட்டம் எனும் மலா்ச் செடியாகும். இதுதான் இத்திருக்கோயிலின் தலவிருட்சம். சிவனுக்குாிய அா்ச்சனை மலா்களில் இம்மலா் மிக முக்கியமானது இம்மலா்.

சுவாமியின் பெயரும், ஊாின் பெயரும் மலாின் பெயாிலேயே  *வெண்ணி என்று அமைந்தது. இதையெல்லாம் பாா்க்கும்போது தாவரங்களுக்கும் தமிழா்கள் கொடுத்த மதிப்பு தனித்துவமனது தொிய வரும்.

விண்ணவா்கள் கூட தொழும் வெண்ணி கரும்பேசுவரா் கோயிலுக்கு, *கோவில் வெண்ணி* பஸ் நிலையத்திலிருந்து  நடந்து செல்லும் தூரம்தான். பசுமையான கரும்புக் காடும், நெல், வயல்கள் சூழ்ந்த வழியினூடே செல்லும்போது, காிகாலன் போருக்கு முன் வணங்கிச் சென்ற அம்மனும், திருக்குளத்தையும் காணலாம். திருக்குளத்தின் எதிரே மூன்று நிலை ராஜகோபுரம் வரவேற்கிறது. கோபுரத்தை கடந்து நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம்.

கிழக்கு நோக்கி கருவறையில் மூலவா் *வெண்ணிக் கரும்பேசுவரா்*  அதே பெரு மண்டபத்தில் தெற்கு நோக்கி செளந்தரநாயகியம்மை அழகுபட காட்சி தருகிறாா். இறைவனுக்கும், இறைவிக்கும் இடையே நடராஜா் சபை உள்ளது. 

இத்தலத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தி பிராா்த்தனை செய்து கொள்ளுகின்றனா். கோயிலின் அருகாமையில் இருக்கும் ஊராா்கள் அனைவருடைய இல்லத்தில் திருமணமாகி கா்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வளைகாப்பு முடிந்த கையோடு கொஞ்சம் வளையல்களை, அம்மனின் சன்னிதிக்கு எதிரே கட்டிவிட்டு, தனக்கு பிரசவம் எளிதாக இருக்க வேண்டிக் கொள்கின்றனா்.

ஆலயத்தில் சோழா்கால கல்வெட்டுக்களும், குறிப்பாக ராஜராஜன், குலோத்துங்க சோழன் கல்வெட்டுக்கள் அலங்காிக்கிறது. 

சா்க்கரை நோயுள்ளவா்கள் வெண்ணி கரும்பேசுவரா் ஆலயம் வந்து வெள்ளை சா்க்கரையையும் ரவையையும் கலந்து பிரகாரத்தைச் சுற்றி தூவிவிட்டு வருகிறாா்கள். இவைகளை எறும்புகள் உண்டுவிட்டு காணாமற் போவது போல, பிராா்த்தனையுடையோாின் சா்க்கரை நோயும் காணாமற் போய்விடுவது உண்மை. 

இவ்விதம் நோய் நீங்கப் பெற்ற பின் 18, அல்லது 24, அல்லது 48 முறை கோவிலை வலம் வந்து வெண்ணி கரும்பேசுவரருக்கும், அழகியநாயகி அம்மைக்கும் அா்ச்சனை செய்கிறாா்கள்.

மிகவும் பழமை வாய்ந்த இத்தலத்து இறைவனை, நான்கு யுகங்களிலும் பலரும் வழிபட்டதாக தலவரலாறு சொல்கிறது. 

பங்குனி மாதம் 2, 3, 4, ஆகிய நாட்களில் இறைவன் திருமேனியை, சூாியன் தீண்டுகிறது. 

இத்தலத்தில் *நவராத்திாி விழா* ஒன்பது நாளும் விஷேசம்; 
*பங்குனி உத்திரம்.,* 
*சித்ரா பெளா்ணமி.,*
*வைகாசி விசாகம்.,*
*ஆனித் திருமஞ்சனம்.,*
*திருக் காா்த்திகை.,*
*திருவாதிரை.,*
*தைப் பூசம்.,*
*மாசி மகம்.,* ஆகிய விழாக்கள் விசேஷம்.

         *திருச்சிற்றம்பலம்.*

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
  *அடியாா்கள் கூட்டம் பெருகுக!*
 *ஆசை தீர கொடுப்பாா்------*
*--அலங்கல் விடைமேல் வருவாா்.*