Tuesday, April 11, 2017

Kachiappar & Muruga

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(47)*
🌿 *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.* 🌿
----------------------------------------------------
----------------
🌿 *மணிவாசகர் சொல்ல ஈசன் எழுத அதுபோல, கச்சியப்பர் எழுத முருகன் திருத்த...* 🌿
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

காஞ்சியிலிருக்கும் குமரக் கோட்டத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் முருகனை, காளத்தியப்ப சிவாசாரியார் என்பவர் பூசனை செய்து வந்தார்.

அவருக்கு பலகாலமாய் குழந்தைப் பேறு வாய்க்காமல் இருந்தது.

இதனால் அவர் மிகவும் மனம் வருந்தி பூசனை புரிந்து வரும் முருகனிடம் மன்றாடி வேண்டி விண்ணப்பம் செய்தார்.

முருகனின் அருள்பார்வை அவருக்கு கிடைக்க, ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு *கச்சியப்பர்* என பெயரிட்டு வளர்த்து வந்தார்.

குழந்தையாக இருந்த சிறு வயது முதலே கச்சியப்பர், தமிழ் மற்றும் சமஸ்கிருத புலமைகளில் தலைசிறந்து விளங்கி வந்தார்.

தன் தந்தையின் மறைவுக்குப் பின், கச்சியப்பரே குமரக் கோட்டத்திலுள்ள முருகனுக்கு பூசனை புரிந்து வரலானார்.

ஒருநாள் கச்சியப்பரின் கனவில் முருகன் காட்சியளித்து,.... வடமொழியிலிருக்கும் ஸ்காந்தத்திலிருந்து, நம் வரலாற்றை விளக்கும் பகுதியை *கந்தபுராணம்* எனும் பெயரில் காவியமாக பாடுவாயாக எனக் கூறி, முதலடியாக *திகட சக்கர...* என்ற வாக்கியத்தையும் அமைத்துக் கொடுத்து ,கனவை.விட்டு நீங்கிச் சென்றான் முருகன்.

கனவு கலைந்து எழுந்தவர், முருகன் எடுத்துறைத்துத் தந்த முதலடியான *திகட சக்கர* எனும் வாக்கியத்தை முதலில் அமைத்து கந்தபுராணத்தை எழுதத் துவங்கினார்.

ஒவ்வொரு நாளும் தாம் எழுதி வரும் பாடல் தொகுப்புகளை, அன்றன்றைய தினம் முருகன் திருவடியில் வைத்து விட்டு, திருக்கதவுகளையும் திருக்காப்பிட்டு வீடு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மறுநாள் வந்து சந்நிதியைத் திறந்தால், சில பாடல் வரிகள் அளித்து நீக்கப்பட்டும், சில பாடல் வரிகள் திருத்திச் சேர்க்கப்பட்டு எழுதப் பட்டிருக்கும்.

*திருவாசகத்தை மணிவாசகர் சொல்ல, ஈசன் தன் கைபட எழுதியதைப் போல, இப்போது கச்சியப்பர் எழுத முருகப் பெருமான் திருத்தி எழுதினார் அதுபோல.....*

ஆம்...அந்த முருகக் கடவுளே தம் திருக்கரங்களால் திருத்தி எழுதப்பட்ட நூலே *கந்தபுராணம்.* ஆகும்.

இந்த மாதிரியாகவே பத்தாயிரத்து முன்னூற்று நாற்பத்தைந்து பாடல்களுடன், கந்தபுராணம் முழுமை அடைந்தன.

கந்தபுராணத்தை அரங்கேற்றம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.

ஏராளமானோர் கூடியிருந்த அவையில் கச்சியப்பர், *திகட சக்கர....*எனும், முதல் பாடலைக் கூறி,, அதற்கு விரிவுரையையும் விளக்கினார்.

அப்போது கூடியிருந்த அவையில் உள்ள புலவர்களில் ஒருவர் எழுந்து,..........

'ஐயா!...தாங்கள் கூறியபடி, *திகட சக்கர* என்பதற்கு, இலக்கண விதியென்று ஏதும் கிடையாது. இவ்வாக்கியம் இலக்கணத்தை மீறிய செயலாகும். ஆக இந்நூலை ஏற்பதில்லை, ஏற்கவும் முடியாது என்றார்.

கச்சியப்பரோ, 'புலவர் பெருமானே!...இது அடியேன் எழுதியதல்ல; அந்த ஆறுமுகனே அடியெடுத்துக் கொடுத்த சொல் அது!...என்றார்.

வாதம் செய்த புலவரோ "அப்படியென்றால், அந்த ஆறுமுகனையே நேரில் வந்து.விளக்கமருளச் சொல்; அதுவரை இந்த அரங்கேற்றம் தொடரக் கூடாது. நிறுத்தி விடுங்கள்; என்றார்..


அப்போது வாதம் செய்த புலவருடன் மேலும் பலர் துணையாகச் சேர்ந்து............

ஆமாம்!...ஆமாம்!!.......அரங்கேற்றத்தை நிறுத்துங்கள்...நிறுத்துங்கள். என கூச்சலிட்டனர்.

பின் மனவருத்தத்தோடு கச்சியப்பர் அவ்விடத்தை விட்டு அகழ்ந்து சென்றார்.

ஆலயம் வந்த கச்சியப்பர் வழிபாட்டை முடித்து..
முருகனைப் பார்த்து அமர்ந்து......
 *"வள்ளிமணாளா!...உன்பாடலடியின் உண்மையை உணர்த்தமாட்டாயா?"* என வேண்டி, வேண்டித் தொழுது மனம் வருந்தி அப்படியே தூணில் சாய்ந்த வண்ணம் தூங்கிப் போனார்.

மீண்டும் கச்சியப்பர் கனவில் முருகன் வந்து....அப்பனே! கவலை கொள்ள வேண்டாம்!"  நாளை அரங்கேற்றத்தைத் தொடர ஏற்பாடு செய்! அப்போது புலவனொருவன் வருவான். அவன் வாதித்த புலவனுக்கு பதிலுரைப்பான். விழி! எழு!! சந்தோஷமாகு!! எனக்கூறி முருகன் மறைந்தருளிப் போனான்.

அரங்கேற்றம் தொடங்கடுகிறதென கச்சியப்பர் கூறியதைக் கேட்டு மீண்டும் சபைக்கு முன்னைவிட அதிகமாக புலவர்கள்
அனைவரும் கூடிவிட்டனர்.

அரங்கேற்றம் துவங்கியதும்....முருகப்பெருமான் உரைத்தபடி அவைகூட்டத்தினூடே புலவனொருவர் நூல்கட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு அவை மேடையை நோக்கி  வந்தார்.

அவை மேடைக்கு வந்த அப்புலவர் தான் கொண்டு வந்திருந்த *வீரசோழியம்* எனும் நூலை விரித்துக் காட்டி, இந்நூலில் சந்திப் படலத்தில், பதினெட்டாம் செய்யுளில், *திகட சக்கர* என்பதற்கான இலக்கணப் பொருளையும் கூறிவிட்டு, ஏனையோரும் வீரசோழிய நூலைப் பார்வையிடுமாறு சொல்லிவிட்டு  மறைந்து போனார்.

உண்மையை உணர்ந்த வாதித்த புலவர்களும், அவருடன் துணையான புலவர்களும் தம் அறியாமையை உணர்ந்து, கச்சியப்பரின் கால்களில் விழுந்து, மன்னிக்க வேண்டியும், வாதத் தன்மையைத் திரும்பப் பெறுகிறோம் என மனம் வருந்தினார்கள்.

கச்சியப்பரோ, 'மன்னிப்பு எதற்கு.....ஆறுமுகனே நேரில் வந்து மனக் கவலை ஒழித்தானே! அது போதுமே! அடியேன் எழுதிய நூல் பெருமை படக் காரணமாக இருந்தது, தாங்கள் செய்த வாதத்தினால்தானே!..உங்கள் வாதத்தினால்தானே அடியேன் பெருமைக்குரியதாயிருக்க காரணமாயிருந்தது. ஆக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியதுமில்லை. அடியேன் மன்னிக்க வேண்டியதுமில்லை எனக் கூறினார் கச்சியப்பர்.

பின் அரங்கேற்றம் சிறந்த முறையில் நடந்து முடிந்தது.

இது கதையில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வு இது.

இதுபோலதான் அடியார்கள் கொள்கை உறுதியாக இருக்க...நம் அல்லலொழிக்க ஈசன் எவ்வுருக் கொண்டும் பிரவனமாவான்.

     திருச்சிற்றம்பலம்.

*மீண்டும்..... தெரிந்தும் தெரியாமலும் மற்றொரு தொடரில்.......*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

*ஆசை தீர கொடுப்பார்------ அலங்கல் விடைமேல் வருவார்.*

No comments:

Post a Comment