Monday, April 3, 2017

Gorakkar sidhar

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை கு. கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(42)*
🌺 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🌺
___________________________________________
  🌺 *கோரக்கர் சித்தர்.* 🌺
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
ஒரு சமயம் சிவபெருமான் கடற்கரை உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார்.

சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்த தாரக மந்திரத்தை ஒரு மீனின் வயிற்றிலிருந்த குஞ்சு ஒன்று கேட்டு, அது மனித வடிவாகி வெளியே வர , சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் என்று பெயரிட்டு அதனை சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்பும்படி அருளினார்.

தவம் செய்தார் மச்சேந்திரர். பின் ஒரு நாள் ஒரு ஊருக்குள் சென்று கொண்டிருந்தார். இவர் வருகையைக் கண்ட ஒரு பெண் இவருக்குப் பிச்சையிட்டாள். 

பிச்சையிட்ட அப்பெண்ணின் முகத்தை நோக்கினார். அவள் முகம் வாடி சோகமாயிருப்பது தெரிந்தது. உடனே அவர், உன் சோகத்துக்கான காரணமென்ன என மச்சேந்திரன் கேட்டார்.

தனக்குக் குழந்தை பாக்கியம் வெகுநாளாய் வாய்க்காததை என்னி மனம் அமையதியற்று இருப்பதாய் அவள் தன் குறையைத் தெரிவித்தாள்.

மச்சேந்திரர் அவள் மீது இரக்கம் கொண்டார். தன் இடுப்புலிருந்த திருநீற்றுச் சுருட்டையை எடுத்து அவிழ்த்து, ..........

"இந்தா!....இவ்வெண்ணீற்றை நீ உட்கொள்! உனக்கு மகப்பேறு வாய்க்கும். எனச்சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார்.

திருநீற்றைப் பெற்றுக் கொண்ட அப்பெண்....நேராக வீடு வந்து சேர்ந்தவள்....பழக்கமுள்ள பக்கத்து வீட்டுக்காரி ஒருத்தியிடம், தான் மகப்பேறுவுக்காக ஒரு துறவியிடம் வெண்ணீற மருந்து வாங்கிக் கொண்டு வந்த விஷயத்தைக் கூறினாள்.

அதற்கு அந்த பக்கத்து வீட்டுக்காரியோ,
......அடி போடி பைத்தியக்காரி!.... அது மகப்பேறுவுக்குண்டான மருந்தா இருக்காதுடீ!".....அவர் போலித் துறவியாக இருந்தாலும் இருக்குமடீ!"....மேலும் உன்னை வசப்படுத்துவதற்குக் கொடுத்த விபூதியாககூட இருந்தாலும் இருக்குமடி!..எனவே அந்த விபூதியை சாப்பிட்டு விடாதே! என அச்சப்படுத்தி விட்டாள்.

அவ்வளவுதான். ..இதைக்கேட்ட அச்சமடைந்த அப்பெண், துறவி தந்த வெண்ணீற்றை அடுப்பில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் போட்டு விட்டாள்.

பல வருடங்கள் கழிந்தன. அப்பெண் இருக்கும் அவ்வூருக்கு மீண்டும் அந்த மச்சேந்திரர் வந்தார். முன்னமே பிள்ளைப் பேறுவுக்கு   விபூதி கொடுத்திருந்த  அப்பெண் வீட்டிற்கு நேராக வந்தார்.

அம்மணி!...அம்மணி!!.... என கதவைத் தட்டினார். 

கதவைத் திறந்து வெளியே வந்து பார்ததவளுக்கு
........அதிர்ச்சி. அதோடு பயமும் சேர்ந்திருந்தது. 

எங்கே உன் மகன்? அவனை நான் பார்க்க வேண்டும்! அவனைக் கூப்பிடு..என அவசரப்படுத்தினார்.

அவளோ"....நான் மோசம் போக நடந்து கொண்டேன்!..பக்கத்து வீட்டாளியின் பேச்சைக் கேட்டு, நீங்கள் தந்த வெண்ணீற்று விபூதியை உட்கொள்ளாமல் எரியும் நெருப்பிலிட்டு விட்டேன்.  இப்போது வரையும் அதே பிள்ளைப்பேறில்லா நிலையோடவே இருக்கிறேன். தான் செய்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டாள் அவள்.

அவள் மனநிலையைக் கண்டு மனமிரங்கிய மச்சேந்திரர்
...'சரி!....அந்த விபூதியை நெருப்பிலிட்ட இடத்தைக் காட்டு! என கேட்டார்.

 வீட்டுப் புறவாசல் பக்கம் போனாள். அங்கு வழக்கமாக அடுப்பெரிப்புச் சாம்பலை கொட்டி வைத்திருக்கும் குப்பைப் பெட்டியை மச்சேந்திரரிடம் காட்டினாள்.

மச்சேந்திரர் சாம்பல் குப்பைப் பெட்டி அருகே வந்து........
*கோரக்கரே!* என கூப்பிட்டார். 

அச்சாம்பல் குப்பைப்பெட்டிக்குள்ளிருந்து...... *"என்ன!* என பதில் குரல் வந்தது!

அருகே பக்கத்து வீட்டார்கள் நிறைய பேர்கள் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

மச்சேந்திரர் அவர்களை அழைத்து, குப்பைகள் அனைத்தையும் கிழைத்து அள்ளி அகற்றுமாறு கேட்டுக் கொண்டார்..

சிலர் சாம்பல் குப்பைகளை முழுவதும் அகற்ற......

*குழந்தை ஒன்று சாம்பக் குப்பையிலிருந்து வெளியே வந்தது!*

அதுவும், அப்பெண்ணுக்கு முன்னமே கொடுத்த விபூதி கொடுத்த காலம் முதல், இப்போது வரையான காலம் வரைக்குமுண்டான வளர்ச்சியோடு.....வெளிவந்தது.

மச்சேந்திர சித்தர் அச்சிறுவனை அந்தப் பெண்ணிடம் கொடுத்து விட்டுச் சென்றார்.

அச்சிறுவனோ... தாயிடம் இருக்கப் பிடிக்காமல் மச்சநாதர் பின்னாடியே பின் தொடர்ந்தான்...............
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                  *(43)*
☘ *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* ☘
___________________________________________
      ☘ கோரக்கர் சித்தர்.☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
குப்பைச்சாம்பலிலிருந்து வெளிப்பட்ட சிறுவனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார் மச்சேந்திரர்.

அச்சிறுவனே தாயிடம் இருக்கப் பிடிக்காமல் மச்சநாதரைப் பின் தொடர்ந்தே சென்று விட்டான். அவரிடம் சித்தனாகி குருவையே மிஞ்சிய சீடனாகித் திகழ்ந்தான்.

கோரக்கர் வாகட சூத்திரத்தில் வட இந்தியாவைச் சேர்ந்த கோரக்கர் (மராட்டியர்?) நந்தி தேவரைத் தமது குருவாகக் கொண்டார்.  இருப்பினும் நம் தமிழகத்தில் சித்தர்கள் வாசம் செய்யும் சதுரகிரியை நோக்கிப் பயணம் செய்து திருமூலர் வழி வந்த போகரைத் தோழராகக் கொண்டார் என்றும், சட்டை முனி, கொங்கணர் ஆகியோரின் பிரியத்திற்கு ஆளானார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தம் குருவான மச்சநாதரைப் பிரிந்த கோரக்கர் வரதமேடு என்னும் காட்டிற்குள் சென்று தவம் செய்து அதன் விளைவாகப் பல வித சித்திகளை அடைந்தார்

அங்கே இவரைப் போலவே தவம் செய்ய முன் வந்த பிரம்ம முனியைக் கண்டார். இருவரும் இணைபிரியாத நண்பர்களாக ஆனார்கள். 

இருவரும் உள்ளத்தில் தூய்மை கொண்ட துறவிகளை அணுகி அடிபணிந்து வணங்கினார்கள்.

அவர்களிடமிருந்து பெற்ற உபதேசங்களால் இருவருக்கும் தெய்வ சிந்தனை மேலோங்கி வளர்ந்தது. இருவரும் தங்களுக்குள் ஆத்ம சக்தியை வளர்த்துக் கொண்டு படைப்பு முதலான ஐந்தொழிலை செய்வதற்காக யாகம் ஒன்றை இணைந்து தொடங்கினார்கள்.

மாசி மகம் பெளர்ணமி அன்று மங்களகரமான நேரத்தில் யாகம் தொடங்கியது.

ஐந்தொழிலையும் அடையும் ஆற்றல் மிக்க யாகம் இது என்பதால் இதனை நிறைவேற விடக் கூடாது என்பதில் தெய்வ கணங்கள் முனைப்பாயிருந்தன. 

சிவசக்திக் கதிர்களில் இரண்டு சிலிர்த்து வெளி வந்தன..இருள் மாயை, மருள் மாயை என்னும் அவை இரண்டும் அந்த பிரம்மாண்டமான யாகத்தீயில் விழுந்து மறைந்தன.

அடுத்த கணம் அந்த யாகத்தீயில் இருந்து இரு அழகிய பெண்கள் எழுந்து வெளியே வந்தார்கள்.

ரதிதேவியையும் தோற்புறச் செய்யும்படி இருந்த அந்த அழகான இரு பெண்களும் யாகசாலையைச் சுற்றி வலம் வந்தனர்.

அவர்களைப் பார்த்த பிரம்ம முனிக்கும், கோரக்கருக்கும் கோபம் வந்து விட்டது. 

யாகத்தின் இடையில் புகுந்து குழப்பம் உண்டாக்கும் நீங்கள் யார்? என இருவரும் கோபத்துடன் கேட்க.......

அதற்கு அந்த இரு பெண்களும், "முனிவர்களே, நாங்கள் தேவலோகத்தைச் சேர்ந்த தேவ கன்னிகள். உத்தமமான உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்காக பூலோகம் வந்திருக்கிறோம். எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றனர்.

அதே சமயம் அங்கு தோன்றிய அக்கினியும், வருணனும் அவ்விரண்டு பெண்களையும் கண்கள் விரிந்தகழ பார்த்தார்கள்.

இவ்வளவு பேரழகு உடைய பெண்கள் தேவலோகத்தில் கூட கிடையாதே!, என்ற அழகு!...எப்பேர்ப்பட்ட அழகு?' என்று மோகித்து நின்றனர்.

தேவர்கள் மனமும் மோகத்தில் ஆழ்ந்து விட்டதை எண்ணி வருத்தப்பட்ட பிரம்ம முனி, கோரக்கர் இருவரும் அப்பெண்களின் மீது இன்னும் அதிகக் கோபம் கொண்டு கமண்டலத்தை எடுக்க, அக்னியும் வருணனும் நடுங்கி நின்றனர்.

பிரம்ம முனியும், கோரக்கரும் கமண்டலத்தில் இருந்து.நீரை எடுத்து அப்பெண்களின் தலைகளில் தெளித்ததும்தான் தாமதம், உடனே அவ்விடம் முழுமைக்கும் புகை பெருகி சூழ்ந்து பின் அடங்கியது. அவ்விடத்தில் இரு பெண்கள் இல்லை. மாறாக இரண்டு செடிகளாக மாறிவிட்டிருந்தனர்.

பிரம்ம முனிவரால் உண்டாக்கப்பட்ட செடி *"பிரம்ம பத்திரம்"* (புகையிலை) என்று பெயர் பெற்றது.

கோரக்கரால் உண்டாக்கப்பட்ட செடி *"கோரக்கர் மூலிகை"* (கஞ்சா) என்று பெயர் பெற்றது.

தேவர்களுக்கு சாபம் கொடுக்க நாம் யார்? அவர்கள் தீய எண்ணத்தை அவர்களே அனுபவிக்கட்டும் என்று அவர்களை விட்டு அகன்றனர்.

அக்கினியும், வருணனும் சித்தர்கள் சாபத்தில் இருந்து தப்பினாலும் அப்பெண்களின் மோகத்தில் இருந்து தப்ப முடியவில்லை. 

இருவரும் நீரும் நெருப்புமாக (வருணன், அக்னி) மாறி அச்செடிகளின் சேர்ந்தனர்.

கஞ்சா, புகையிலை இவ்விரண்டுக்கும் நீரும் நெருப்பும் அவசியம் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.


பெண்களுக்கு சாபம் கொடுத்ததால் சித்தர்கள் இருவரின் தவசக்தியும் அழிந்தது. தவ சக்தியை இழந்த இருவரும் அதை நினைத்து நினைத்து அழுதனர்.


அப்பொழுது சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றினார்.

      ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                  *(44)*
🌼 *சிவமய அருளான சித்தர்கள்.* 🌼
___________________________________________
    🌼 *கோரக்கர் சித்தர்.* 🌼
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
பெண்களுக்குச் சாபம் கொடுத்ததால் சித்தர்கள் இருவரின் தவசக்தியும் அழிந்தது. 

தங்களின் தவசக்தி தங்களை விட்டு இழந்து போனதைக் கண்டு இருவரும் அதை நினைத்து அழுதனர்.

அப்பொழுது சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றி, *"அற்புதமான யாகத்தைச் செய்தீர்கள்.* ஆனால் விதி இடையில் கெடுத்து விட்டது. 

தகுதி இல்லாத உங்கள் எண்ணத்தால்தான் அப்படி நடந்தது. இருப்பினும் நீங்கள் உழைத்த அளவிற்கு உங்களுக்குப் பலன் உண்டு. 

அக்காலத்தில் இறந்து போனவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்கள் சாபத்தினால் உண்டான இந்த இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழும்" என்ற வரமளித்து மறைந்தார்.

அன்று முதல் பிரம்ம முனியும், அவரது சீடர்களும் புகையிலைகளைப் பசுமையாகப் பறித்து தின்று பயன் அடைந்தார்கள். 

அதே போல கோரக்கரும் அவரது சீடர்களும் கஞ்சா இலையைத் தண்ணீரில் போட்டு ஊறிய நீரைக் குடித்தார்கள். அவைகள் அமுதசாரமாக ஆகி ஆயுளை வளர்த்தன. இதன் பிறகுதான் புகையிலையும், கஞ்சாவும் காயகல்பமாகப் பயன் படுத்தப்பட்டன.

கோரக்கர் செய்த தவ நூல் *"கோரக்கர் வைப்பு"* என அழைக்கப் படுகிறது. இவர் கஞ்சாவை முதல் சரக்காகக் கொண்டதால் அதற்கு *"கோரக்கர் மூலிகை"* என பெயரானது.

மீன் குஞ்சு வடிவத்தில் மச்சேந்திரர் (கோரக்கரின் குரு) கேட்ட தாரக மந்திரமே பதினென் சித்தர்கள் ஞானக் கோவையுள் கூறப்படுகின்ற ஞான சார நூல் என கூறுவர்.

இதில் சரம் பார்க்கும் ஆசனஜவிதி, சரம் பார்க்கும் மார்க்கம், போசன விதி, கர்ப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை போன்றவைகள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. 

போகரும் கோரக்கரும் ஒன்றாக நிகழ்த்திய பல சித்துக்களை கோரக்கர் தமது சந்திர ரேகை என்னும் நூலில் கூறியுள்ளார்.

சித்தர்கள் பலரிடம் தாமறிந்த சித்து மற்றும் ஞானங்களை எல்லாம் மறை பொருளாகப் படாமல் எல்லோருக்கும் விளங்கும் வண்ணம் வெளிப்படையாகப் பாடி விட்டார் கோரக்கர். 

இவர் இயற்றிய நூல்களில் தீயவர்கள் உலகில் கெடு வினையையே மேற்கொள்வார்கள் என்று கருதிய மற்ற சித்தர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக கோரக்கய் ஆசிரமத்திற்கு வந்தார்கள்.

வருகின்ற சித்தர்கள் எல்லோரும் தம்முடைய ஞான நூல்களை எல்லாம் பறித்துக் கொள்ள வருவார்கள் என்று தெரிந்தும் அவர்களை சற்று தாமதிக்க வைக்க முடிவு செய்தார்.

உடனடியாக அரிசியையும், கஞ்சாவையும் சேர்த்து அரைத்து அடை சுட்டு வைத்தார். சித்தர்கள் வந்ததும் வராததுமாக அங்கும் இங்கும் தங்கள் பார்வையை ஓட விட்டனர். கோரக்கர் ருசியாகச் சுட்டு வைத்திருந்த அடை அவர்கள் கண்ணில் பட்டது.

அதை எடுத்துச் சுவைத்துக் கொண்டே அமர்ந்த சித்தர்கள் கஞ்சாவின் தீவிரத் தன்மையின் காரணமாக அப்படியே ஆளுக்கொரு மூலையில் அங்கேயே சுருண்டு படுத்துக் கொண்டு விட்டனர்.

இதுதான் தக்க சமயம் என்று கோரக்கர் தன் நூல்களுள் முக்கியமானவற்றை மட்டும் எடுத்து மறைத்து விட்டார்.

சித்தர்கள் கண் விழித்து எழுந்ததும் கோரக்கரிடம் அவர் செய்த நூலைக் கேட்டார்கள். கோரக்கர் எடுத்துக் கொடுத்தார். அவற்றை வாங்கிக் கொண்ட சித்தர்கள் அவை தவிரவேறு ஏதாவது இயுக்கிறதா என்று கவனித்தனர். வேறு எதுவும் இல்லை என்பது நிச்சயமானவுடன் அவர் நூல்களைத் தங்கள் குகையில் பாதுகாக்கப் போவதாகக் கூறி ஓலைச் சுவடிகளுடன் சென்று விட்டனர்.

இவ்வாறு பாதுகாப்புக் காரணங்களுக்காக கோரக்கர் நூல்கள் கொண்டு செல்லப்பட்டு விட்டதால் அவர் இயற்றிய பல நூல்கள் நமக்குக் கிடைக்காமலேயே போய் விட்டன.

*கிடைக்காமல் போன நூல்கள்.*
கோரக்கர் காளமேகம்,
கோரக்கர் கபாடப் பூட்டு, 
கோரக்கர் கமலாஞ்சனி,
கோரக்கர் பிரமபோதம், 
கோரக்கர் லலாடப்பூட்டு,
கோரக்கர் பஞ்சவர்த்தம்,
கோரக்கர் மறலிவாதம்,
கோரக்கர் முனி ஜென்மசித்து,
கோரக்கர் முனி ஆன்ம சித்து,
கோரக்கர் ஞான சோதி,
கோரக்கர் கல்ப போதம்,
கோரக்கர் நிலையொடுக்கம்.

*கிடைத்திருக்கும் நூல்கள்.*
கோரக்கர் சந்திர ரேகை,
கோரக்கர் நம நாசத்திறவு,
கோரக்கர் ரஷமேகலை,
கோரக்கர் முத்தாரம்,
கோரக்கர் மலை வாகடம்,
கோரக்கர் கற்பம்,
கோரக்கர் முக்தி நெறி,
கோரக்கர் அட்டகர்மம்,
கோரக்கர் சூத்திரம்,
கோரக்கர் வசார சூத்திரம்,
கோரக்கர் மூலிகை,
கோரக்கர் தண்டகம்,
கோரக்கர் கற்ப சூத்திரம், 
கோரக்கர் பிரம்ம ஞானம். 

இவர் கார்த்திகை மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றும், வசிஷ்ட மகரிஷிக்கு, கன்னியான குறப் பெண்ணிடம் பிறந்த மகன் என்றும் போகர் 1000 என்னும் நூல் கூறுகிறது.

புதுச்சேரி மாநிலத்திலுள்ள கோர்க்காடு என்னும் ஊரானது கோரக்கர் தவம் செய்த ஊர் என கூறப்படுகிறது. சிலர் கோரக்கர் இவ்வூரில்தான் சித்தியடைந்தார் (ஜீவ சமாதி) என்றும், அதனாலேயே இவ்வூர் கோர்க்காடு என அழைக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

ஒரு சிலர் கோரக்கர் பேரூரில் சித்தி அடைந்ததாகக் கூறுவர்.

*சொல்லவே கோரக்கர் பிறந்த நேர்மை*

*சுந்தரனார் வசிஷ்ட மகரிஷியாருக்கு*

*புல்லவே கானக் குற ஜாதியப்பா*

*புகழான கன்னியவள் பெற்ற பிள்ளை*

*வெல்லவே அனுலோமன் என்னலாகும்*

*வேதாந்த கோரக்கர் சித்து தாமும்*

*நல்லதொரு பிரகாசமான சித்து*

*நாதாந்த சித்தொளிவும் என்னலாமே*
                               --போகர் 70000

           திருச்சிற்றம்பலம்.

இத்துடன் கோரக்கர் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.

No comments:

Post a Comment