Monday, April 24, 2017

Above 50 years of age - osho

உங்களுக்கு 50 வயதாகிவிட்டதா?

அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

ஒஷோவின் அறிவுரைகள்:
(50 வயதைக் கடந்தவர்களுக்கு)

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. சனீஸ்வரன் போர்டிங் பாஸ் கொடுத்தால், போக வேண்டியதுதான்.

அது போல போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை. 
ஆகவே கஞ்சத்தனமாக - உங்கள் மொழியில் சொன்னால் சிக்கனமாக
இருக்காதீர்கள். 
செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். 
மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும்
நிறுத்த முடியுமா? 
வருவது வந்தே தீரும்!
நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். 
அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை. 
சிம்ப்பிள்- நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு
வந்துவிடும். 
உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும். உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். 
அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை! 
children will have their own 
destiny and should find their own way.
Life should have more to it than working from the cradle to the grave!!*

ஐம்பதைத் தாண்டிவிட்டீர்களா? சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். 
பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம். 
பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது! 
ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது. அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். 
ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரொக்கியமும்தான் கெடும். அதை மனதில் வையுங்கள். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஒவ்வொரு நாளும்
உங்கள் வாழ்க்கையை வளமாக்கிவிட்டுப் போகும். மாறாக மகிழ்ச்சியில்லாமல் கழியும் ஒவ்வொரு நாளும் உங்கள் அரோக்கியத்தைப் பதம் பார்த்துவிட்டுப் போகும். 
அதை மனதில் வையுங்கள். 
மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !

உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது!!!

நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!! 
அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவி, மக்கள்,
நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். 
அவைகள்தான் (அவர்கள்தான்) உங்களை இளைமையாகவும்,
அனைவரும் விரும்புபடியாகவும் வைத்துக்கொள்வார்கள்!!!!

வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment