Monday, March 6, 2017

Tiruvarur temple part8

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(8)*
☘ *திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
கங்கை முதல் கடாரம் வரை வென்ற மாமன்னன் முதலாம் ராஜேந்திரனின் உள்ளங்கவர்ந்த நங்கை பரவை தன் இறுதிக் காலம் வரை தன்னையே ஆரூர் கோயிலுக்கு அர்ப்பணித்து வந்தாறள்.

மாமன்னன் தனது பட்ட மகிஷிக்குரிய இடத்தை இந்நங்கைக்கும் அளித்துச் சிறப்பித்தான்.

ஆரூர் திருக்கோயிலில் வீதிவிடங்கப் பெருமானின் கோயிலைக் கற்றளியாக்க விரும்பிய நங்கை பரவையின் வேண்டுகோள் மன்னனால் செயலாக்கப்பட்டது.

மேலும் கற்றளிமேல் செம்பும், பொன்னும் போர்த்தப்பட்டது. முன்மண்டபங்களும், தூண்களும், செப்புத்தகடுகளால் எழிலுடன் செய்யப் பெற்றன.

இக்கற்றளியின் மங்கலவிழாவன்று மாமன்னனும் நங்கைபரவையும் தேரில் அமர்ந்து திருவாரூர் வீதியில் பவனி வந்தனர். 

ஆரூரின் முன்பு இருவரும் நின்று வணங்கிய இடத்தில் நிற்குமிடந்தெரியும் குத்துவிளக்கு ஒன்றும் மன்னனனது ஆணையால் வைக்கப்பட்டது.

*"பச்சைப்பாவை உமைநங்கை--பாவை சரியா முலை நங்கை"* என்ற பெயரில் இரண்டு குத்துவிளக்குகளும் எண்ணில்லா அணிகலன்களும் நிலமும், நிவந்தங்களும் ஆரூரானுக்கு அளித்தார் அனுக்கியர் பரவைநங்கை பரவைநங்கை மீதுகொண்ட அன்பால் மாமன்னன் பரவையும் *(பனையவரம் என்று விழுப்புரம் அருகிலுள்ள ஊர்)* எனும் ஊரையும் பரவை ஈஸ்வரமுடைய மகாதேவர் திருக்கோயிலையும் எடுத்தான்.

இராஜேந்திர சோழனின் மறைவிற்குப் பின்பும் பரவையின் தொண்டு ஆரூரான் திருக்கோயிலில் தொடர்ந்தது. இந்நங்கையின் விருப்பத்திற்கேற்ப மன்னனின் மைந்தன் முதலாம் இராஜாதிராஜன் ஆரூர் திருக்கோயிலில் ஓர் பெருமண்டபம் எடுத்தான். அதற்கு இராஜேந்திர சோழன் திருமண்டபம் என பரவை நங்கையின் விருப்பப்படியே பெயரும் இட்டான்.

ஆரூர் திருக்கோயிலுக்கு மன்னர்கள் அளித்த அறக்கொடைகளை எல்லாம் மிஞ்சும் அளவு கொடை நல்கிய பெருமை நங்கை பரவைக்கே உரியதாகும்.

நங்கை பரவையும்-- மாமன்னன் இராஜேந்திர சோழனும் இறைவனை வணங்கும் கோல கற்படிமம் எடுத்து அதற்குப் பூசனை நிவந்தங்களும் அளித்தனர். 

மன்னனின் மைந்தர்களான முதலாம் இராஜாதிராஜனும் இரண்டாம் இராஜேந்திரனும், இதனையொத்த படிமம் பரவைபுரத்திலும் எடுக்கப்பட்டது.

ஒரு பட்டமகிக்ஷிக்குக் கிடைக்காத பெரும்பேரு நங்கை பரவைக்குக் கிடைத்தது. தனது உளம்கவர்ந்த நங்கையை மாமன்னன் போற்றியது வியப்பில்லை. 

ஆனால் மன்னனின் மைந்தர்கள் கூட சிலை எடுத்து அந்நங்கையை தெய்வமாகப் போற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

தனது ஒழுக்கத்தால் சீரிய தொண்டால் பரவைநங்கை பெற்ற பேரு சோழர் வரலாற்றில் யாருக்கும் கிடைக்கவில்லை.

இத்தனை செய்திகளும் ஆரூர் தியாகப்பெருமான் திருக்கோயில் கல்வெட்டுக்களிலும், பனையவரம் கல்வெட்டுக்களிலும் அழியாத உயர்காவியமாக இன்றும் திகழ்கின்றது. இராஜேந்திரன்-- பரவை நங்கை படிமமும் ஆரூரில் திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.


      திருச்சிற்றம்பலம்.

*திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர் நாளையும் வ(ள)ரும்*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment