Wednesday, March 1, 2017

Tiruvarur temple part5

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *( 5 )*
🍁 *திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர்.*🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
 புற்றிடங் கொண்ட பரமனின் கருவறையின் இருபுறமும் இரண்டு வாயிற் காப்போர் சிலைகள் உள்ளன. 

இது முதல் ஆதித்தன் காலத்தில் நேர்த்தியான சிற்ப எழில் மிகுந்து படைக்கப் பட்டவையாகும். இதே கருவறையின் நிலைப்படியின் மேல்விளிம்பில் கயிலை உறையும் நாதனார் மணக்கோல நம்பியாகக் காட்சி நல்குகிறார்.

உமையாளின் கரம்பற்றி, தேவர்கள் சூழத்திகழும் இச்சிற்பத் தொகுதி உயரிய சிறப்புடையன.

புற்றிடங்கொண்டார் திருக்கோயில் கருவறையின் வெளிப்புறம் பட்டிகைத் தொகுதியில் நுண்ணித்தன்மையுள்ள சிற்பங்கள் உள்ளன.

முற்காலச் சோழகர்களின் சிறப்புப் பணியான இவ்வகைச் சிற்பங்களில் ஆலினைக் கண்ணன், வேழம் உரித்த வேதநாயகன் போன்ற சிற்பங்கள் கலைநயம் வாய்ந்தவையாகும்.

அரநெறியாம் திருக்கோயில் கோஷ்டங்களில் இடம்பெற்றுள்ள துர்க்கை, பலியாக உறுப்பை அரிந்துஸதரும் வீரர்கள், கங்காளமூர்த்தி, உமையொருபாகன்,இலிங்கோத்பவர், மன்னர்கள் திருவுருவங்கள், போன்றவை சிறப்பாக காட்சி தருபவையாகும்.

கும்பகோணம் கீழ்க்கோட்டம்(நாகேஸ்வரன் கோயில்) சீனிவாச நல்லூர் அரங்கநாதர் கோயில் போன்ற திருக்கோயில் சிற்பங்களை ஒத்த எழில் வாய்ந்தவையாகும்.

கிழக்கு இராஜகோபுரத்திலுள்ள சிற்பங்களைப் பார்த்தால் அனைத்தும் முத்துக்களாகும். சிவபெருமானின் பல்வேறு கோலங்கள், உமை மாலவன், எண்திசைக் காவலர்கள், நாகராஜன், சூரியன் வாயிற்காவலர் போன்ற தெய்வத்திருவுருவங்கள் பிற்காலச் சோழர்கலையின் உன்னதப் படைப்புகளாகும்.

தில்லையில் நாட்டிய மாதர்கள், சிற்பங்கள், தஞ்சையில் பரமனே ஆடும் தாண்டவக் கோலச் சிற்பங்களும், சுவரில் காணப்படும் அரை செதுக்குருவச் சிற்பங்களே.

ஆனால் ஆரூர் திருக்கோயிலில் உள்ள எல்லா நடன மாதர் சிற்பங்களும் கர்ண முத்திரைகளின் அத்தனை வெளிப்பாடுகளையும் துல்லியமாகக் காட்டும் வண்ணம் முழுச்சிற்பங்களாக (முதுகுப்புறமும் தெரியும் வண்ணம்) செதுக்கப்பட்டு, பின்பே தேர்ப்பாவைகளை இணைப்பது போன்று கோபுரத்திலும், மண்டபங்களிலும் இணைத்துள்ளன.

சிற்பக்கலையிலும், ஆடற்கலையிலும், அன்று ஆரூர் முழுமையாகப் பெற்ற ஓர் கேந்திரமாய்த் திகழ்ந்தது என்பதை நமக்குக் காட்டும் சான்றாக நிமிர்ந்து நிற்கின்றன.

நீதி வழுவா.சோழர்களின் பெருமைக்கு மனுச்சோழன் வரலாறு ஓர் எடுத்துக் காட்டாகும். சேக்கிழார் திருத்தொண்டர் மாக்கதையில் நகரப் பெருமை கூறும்போது இம் மன்னவனின் திறம் உரைக்கிறார்.

விக்கிரம சோழன் காலத்து ஆரூர் கல்வெட்டொன்று இக்காவியத்தின் பெருமையினை வரலாற்றோடு இணைத்துப் பேசுகிறது.

இக்கல்வெட்டை இடம் பெறச் செய்த விக்கிரம சோழன் இக்காவியத்திற்கு கல்லில் வடிவம் கொடுத்தான். கல்லில் தேர் அமைத்து அதன் ஆழியில் கன்று சிக்கியுள்ள காட்சியையும் கன்றை இழந்த கோ, கொம்பால் மணி அடிக்கும் காட்சியையும் சிற்பங்களாக வடித்துவைத்துதவினான்.

கல்தேரின் உட்புறம் விடைமீது சாய்ந்த வண்ணம் அமர்ந்த உள்ள கயிலையம்பெருமான் மற்றும் உமையவள் அருகே ஓர் புறம் உயிர் பெற்றெழுந்த கன்றும், தாய்ப்பசுவும் நிற்க எதிர்ப்புறம் வணங்கிய நிலையில் மனுவேந்தன், அவன் மைந்தன் பிரிய பிருத்தன், அவனின் அமைச்சன் பாலையூரினனான உபயகுலாமலன் ஆகியோர் நிற்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

தேரின் தூண் ஒன்றில் ஆரூர் இறைவனைக் கரம் கூப்பித் தொழும் விக்கிரம சோழன், அவனது காலத்தில் வாழ்ந்து மாளிகையும் மனையும் பெற்ற உபயகுலாமலனின் வழித்தோன்றலான சந்திரசேகரன் ஆதிவிடங்கன் எனும் பாலையூரினனின் சிற்பமும் வடித்தி வைத்திருப்பதைக் காணலாம். புராணத்தோடும் பின்னிப்பினைந்த அரிய சிற்பத் தொகுதிகளாக இவை திகழ்வதை நன்றாக கவணித்து ரசிக்க வேண்டும்.

யோக நிலையில் அமர்ந்தவளாகக் கமலாம்பாளும், நின்ற கோலத்தில் அருகிருக்கும் தோழியின் தோளில் அமர்ந்துள்ள குழவி முருகனின் சிரம் தீண்டும் அருள் நங்கையாக நீலோத்பலாம்பாள் சிற்பமும் வடிக்கப்பட்டிருப்பதைக் காணவேண்டியவைகளை.

தேவகண்மீசம் எனும் பிற்காலத் திருக்கோயில் தஞ்சை நாயக்கர்கள் காலச் சிற்பப் பள்ளியின் சிறந்த படைப்பு.

மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்துள்ள இச்சிறிய கற்றளியில் தேர் சிற்பமொன்று காட்டப்பட்டுள்ளது.

தேரில் பசு ஒன்று நிற்க அதன் ஆழியில் மனிதன் உருவம் கிடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதையும் நோக்க வேண்டிய காட்சியாகும்.

ஆனந்தீச்சரம் எனும் கோயிலின் பிறைமாடத்தில் இடம் பெற்றுள்ள இராஜேந்திர சோழன் பரவை நங்கை சிற்பம், கிழக்கு ராஜகோபுரத்திலுள்ள மூன்றாம் குலோத்துங்கன், ஈஸ்வரசிவர், வடக்கு வாயிலிலுள்ள செவ்வப்பன், உருவச் சிலைகளும் சிறந்த எடுத்துக்ஸகாட்டாய்த் திகழ்கின்றன.


*திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தோடர் நாளையும் வ(ள)ரும்.*

    திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment