Monday, March 13, 2017

How one should rule?

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                    *(18)*
👏 *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.* 👋
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🌺   *எப்படியும் ஆட்சி இருக்கலாமா?* 🌺
_________________________________________
இது அரசியல் பதிவன்று! மன்னிக்கவும்.
__________________________________________
ஆட்சி பீடத்தையும் அதைச் சார்ந்த அதிகாரத்தையும் பெறுவதென்பதெல்லாம், மக்களின் முன்னேற்றைத்தைச் சுரண்டி,  அவர்கள் மட்டுமே உயரவேண்டுமென்பதற்காகத்தான் என்பதை  பல காட்சிகளாய் பல தருணங்களாய் கண்டு வருகிறோம்!

இச்செயல்களைக் காணும் போது மனம் எவ்வளவு வலித்தது என்பதை எல்லோரும் உணரப்பட்டிருப்போம்.

சிலநாளாய் சில விஷயங்களை கேக்கும்போது மனம் கணக்கிறது. சில விஷயங்களை பார்க்கும் போது மனம் கலங்குகிறது. சிலவிஷயங்கள் நடந்ததை பார்க்கும் போது குருதியும் உஷ்ணமானது!. மேலும் சில விஷயங்கள் *"இப்படியுமா?* அதிர்ச்சியும் எழுந்தது! மனம் கல்லாகி பணம் குரங்காகி மேலும் கீழும் தாவி அது மரணித்துப் போய்விட்டது. இதற்காகவென்றும், அதற்காகவென்றும் நடக்கின்ற அகநடவடிக்கைகளை பார்க்கின்றோம். 

பக்தனின் மெய்ம்மையை உணர்த்த ஈசன் ஏராளமான திருவிளையாடல்களை நடத்தினான்.

இப்போது நாட்டிற்காக இளைஞர்கள் மாணவசமுதாயங்கள் சிறு விளையாட்டுகளை நடத்த வேண்டும். ஆம்! புதுமை எழுச்சி பெறப்பட வேண்டும். அனைத்து இளைஞர்களும் விழிக்க வேண்டும். முக்கியமா அந்த இளைய சமுதாயாத்தினரிடம் இறைபக்குவம் கண்டிப்பாக இருக்கும். 

நமக்கும் தெரியும், நம்மடியார்களுக்கெல்லாம் ஆட்சியாளன் ஈசன்தான். அவன்தான் நம்மை வழி நடத்துகின்றான். அவனின்றி அனுவும் அசையாதென்போம்! அவனும் நமக்குண்டானதை அருளிக் கொண்டுதானிருக்கிறான். நமக்குத்  தேவை அதிகமாயிருப்பின் அதற்கு அவன் பொறுப்பு கிடையாது! அவன் காரணமுமல்ல! 

நெளிவுத் தன்மை கொண்ட நம்முடம்பைக் கொண்டு நெளிவு சுழிவுகளை ஆராய்ந்து நாமதான் கட்டம் கட்டி வாழப்பழகி  உயரவேண்டும்.

அடியார்களுக்கு இப்பதிவு தேவையா? என எண்ணம் கொள்ள வேண்டாம். நமக்கு அரசியல் சாயம் வேண்டாம். அதற்காக, நம்நாடு நம் மக்களையும் பார்க்க வேண்டும். அந்த மக்கள் கூட்டத்துக்குள்தான் இந்த அடியார் கூட்டம் இருக்கிறது.

ஏன்!,.... அரசியலே வேண்டாமென்றும்தான் எல்லா அடியார்களும் இருக்கிறோம். நம் வயிற்றுக் கடனுக்குண்ட பணியை செய்துவிட்டு அதன்பின், அடியார்கள் தொண்டையும் ஆலயத் தொண்டையும் செய்கிறோம். அதற்காக நாமெல்லாம் ஜனநாயகக் கடமையாற்ற நமது வாக்குரியையெல்லாம் கொண்டு செலுத்தித்தானே வருகிறோம்.

ஏனென்றால் அந்தக் காலத்தில் மாதம் மும்மாரி பெய்ததாம்!. காரணம், நாட்டில் எதேச்சையாக நடந்த தவறுகளுக்குக் கூட பொறுப்பேற்றுக் கொண்டு அறம், இறை முறைகளை கடைபிடித்து வந்தார்கள்.

இப்படித்தான்....சோழநாட்டிலுள்ள கரூரில் பிறந்தவர் எறிபத்தர் நாயனார். இவர், எப்பொழுதும் வெட்டும் கோடாரியை உடன் வைத்திருப்பார். இறைவன் மனதை திருடி வைத்திருப்பவர்.

இறைவனடியார்களுக்கோ, இறை வழிபாட்டுக்கோ ஒருவனால் தீங்கு நேர்வதைக் கண்டால் உடனடியாக, உடன் வைத்திருக்கும் வெட்டும் கோடாரியால் தாக்கி விடுவார். 

இறைவனுக்கோ, அடியவர்க்கோ தீங்கெங்பதை பொறுத்துக் கொள்ளாத அளவுக்கு இறைவன் மீது பற்றும், அடியவர்கள் மீது அன்பையும் கொண்டு வாழ்ந்து வந்தவர்

தீங்குகளை எதிர்த்து, வெட்டும் கோடாரியினால் எறிவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் இவரை எறிபத்தர் என்று கூறியழைத்தனர்.

இவரூரிலேயே சிவகாமியாண்டார் எனும் ஒரு சிவனடியார் இருந்தார். இவர் ஒரு அந்தணரும் கூட. 

அனுதினமும்   வனம் சென்று பூ பறித்து பூமாலை தொடுத்து, அதை கருவூரிலிருக்கும் பசுபதீஸ்வரர் திருக்கோயிலுக்குக் கொடுத்து வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வனத்தில் பூக்கும் அந்த பூக்களைத் தவிர வேறெங்கும் பூமலர்கள் காணப்படாத நிலையில்,  வனத்திற்கு நேரமறிந்து சென்று முறையாக பூக்களை பூக்குடலில் பெருக்கி மாலை தொடுத்து வருபவர் சிவகாமியாண்டாரின் தொண்டு.

எப்பொழுதும் போல் பூக்கள் உள்ள பூக்குடலை தாங்கியவாறு வனத்திலிருந்து ஆலயம் நோக்கி சிவகாமியாண்டார் வந்நு கொண்டிருந்தார். 

அப்போது எதிரே வந்து கொண்டிருந்த புகழ்ச்சோழரின் பட்டத்து யானையை பாகன்களால் வழிநடத்திக் கொண்டு வந்தனர். திடீரென அந்த யானைக்கு மதம் பீடித்து அலைந்தொழிந்து இங்கும் அங்கும் ஓடியது.

இதனைக்கண்டு பயந்து தெருவில் வந்தோர் பதறிக் கொண்டு ஓடினார்கள். சிவகாமியாண்டவரால் அவ்விதம் ஓடமுடியவில்லை.

சிவகாமியாண்டவருக்கோ..........ஓடினால், பூக்குடலிலுள்ள பூக்கள் சிதறி விடுவே என்ற பயம்!.. 

அதற்குள்.......பாகனுக்கெல்லாம் கட்டுப்படாத அந்த யானை தொடர்ந்து ஓடி வந்து சிவகாமியாண்டவரின் தோளில் தொங்கிய பூக்குடலையை தும்பிக்கை கொண்டு தள்ளியெறிந்து பிளிறி ஓடியது.

பூக்குடல் கீழே விழுந்தது. மலர்கள் எல்லாம் தரையிலே விழப்பட்டு மன்னாகின. இறைவனுக்கு வேறு மலர்களும் இல்லை. வனத்திலிருந்த மலர்களையும் பறித்து வந்தாகிவிட்டது. இனியென்ன செய்வேன் என கவலை கொண்டார்.

அப்போது அங்கு வந்து சேர்ந்த எறிபத்தர், மலர்சிந்திக்கிடந்த காட்சியினைக் கண்டும் சிவகாமியாண்டாரின் நிலையையும் எண்ணிய எறிபத்தர், யானை ஓடிய தெருவினை நோக்கி ஓடினார். அங்கோ  இவரை நோக்கி  மதம்பிடித்த அந்த யானை எதிரே  மூர்க்கமாக விரைந்து வந்தது. எறிபத்தர் அசையாது அப்படியே எதிரே நின்றார். யானை தன்னை நெருங்கி வரவும், வெட்டும் கோடாரியை ஆவேசமாக வீசியெறிந்து பிளிறத்தூக்கிய யானையின் தும்பிக்கையை வெட்டி வீழ்த்தினார். யானை பிளிறித் துடித்து உயிரை விட்டது. யானை மத்தகத்தில் அமர்ந்திருந்த பாகன் நிலைதடுமாறி கீழே விழுந்தான். அந்த பாகனையும் வெட்டுக் கோடாரியால் வெட்டித்  தலையை துண்டித்தார். இதனைத் தடுக்க ஓடிவந்த அரச காவலர்களைப்  பார்த்து..........

உங்களது வேலை யானையை ஒழுங்காக வழிநடத்திக் கொண்டு போவது! மதம் பிடித்த யானையை அடக்கத் தெரியாத நீங்களெல்லாம் பாகனா?  காவலாளிகளா? அதை செய்ய தவறிய காரணத்தால் வழிபாட்டுக்குண்டான பூக்குடல் சிதைக்கப்பட்டு  மலர்கள் மண்ணில் விதைந்தன. பூஜைக்கு வேறு மலர்களுக்கும் வாய்ப்பில்லை. அதனால் இன்றைக்கு பூஜை இல்லை. இதுக்குக் காரணமான நீங்கள் உயிரோடிருத்தல் கொடும்பாவம்! எனக்கூறி ஐந்து காவலர்களையும் வெட்டுக் கோடாரினால் வீழ்த்திக் கொன்றார்.

மன்னருக்குச் செய்தி கொண்டு சென்றனர். மன்னர் புகழ்ச் சோழர் பரிவாரங்களை துணைக்கழைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

அங்கே...உடலெங்கும் வீபூதி தரித்த கோலத்துடன், இன்னும் கோபக்கணல் தாங்கிய கண்களுடன்,  இரத்தக்கறைத் தோயப்பெற்ற  வெட்டுக் கோடாரி கீழே கிடக்க அதனருகே எறிபத்தர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார் புகழ்ச் சோழர்.

ஒரு சிவனடியாரா இப்பெரிய காரியத்தை நடத்தியது!?, அப்படியானால் சிவனடியார் இதைச் செய்வதற்கு வேறு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்!?, என நினைத்து எறிபத்தர் அருகிற் சென்று விளைந்த  விபரத்தைக் கேட்டார் புகழ்சோழர்.

நடந்த சம்பவம் முழுவதையும் எறிபத்தர், புகழ்ச் சோழரிடம் கூறினார். எறிபத்தரின் வாதத்தில் இறையுண்மை தெரிந்தது.

பக்தனே!..இந்நிகழ்வு நிகழக் காரணமானவர்களாக மாண்டுகிடக்கும் அடியேனின் சேவகர்களே என்றாலும், இவர்கள்  என்னால் பணியில் நியமிக்கப் பட்டவர்கள். எனவே இவர்களை நியமித்த காரணகர்த்தவான நானும் இச்சம்பவம் நடைபெற காரணமானவனாக இருந்துள்ளேன்! ஆதலால் இவர்களுக்கு இட்ட செயலை போல என்னையும் நீங்கள் கொல்ல வேண்டும்!. இன்றைய.சிவபூஜை நடவாமல் போனதற்கு முழுக்காரணமான என்னையும் கொல்ல வேண்டும்!,கொல்லுங்கள்....எனகூறி தன் வாளை இடையிலிருந்து உருவி நீட்டினார்.

எறிபத்தருக்கு தம் உயிரையே விட்டுவிடலாம் போலிருந்தது!, மன்னனின் பணிவான ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டிமுனையால் தன்னைத் தைப்பது போலிருந்தன. அவர் நிலை தடுமாறி சகஜ நிலைக்கு வர சில நிமிடங்கள் செலவழிந்தது.

இப்படியொரு அருமையான மன்னன் மக்களுக்குக் கிடைக்கப்  பெற்றிருக்கிறார்களே! நான் அவசரகதியில் யானையையும் பணியாளர்களையும் கொன்று விட்டேனே!....'என நினைத்து நினைத்து வேதனைப்பட்டார். 

அதன்பின் தாமதிக்கவில்லை எறிபத்தர். மன்னன் கொடுக்க இருந்த வாளை கைநீட்டி வாங்கினார். 

சம்பவ இடத்தில் கூடியிருந்த கூட்டம் பூராவும், மன்னர் கேட்டுக் கொண்டதற்கினங்க, எறிபத்தர் மன்னரை வெட்டப் போகிறார் என்று பதபதைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் அது நடந்தது! மன்னனை விட்டு சற்று விலகி வந்து, புகழ்சோழரிடம் வாங்கிய வாளை ஆவேசமாக உயரமாக வீசி வாளின் முனையை தலைகீழா கவிழ்த்து தன்னையே குத்திக் கொல்ல கைகளைத் தாழ்த்தினார். 

வாளின் முனை எறிபத்தரின் நெஞ்சில் இறங்கும் முன்.............

புகழ்சோழர் பாய்ந்து வந்து, எறிபத்தருக்கு ஏற்பட விருந்த உயர்போக்குதலை, தாழ்த்திறக்கிய வாளை பிடித்து நிறுத்தி தடுத்து விட்டார்.

அப்போதே அவ்விடமெங்கும்,  பொங்கிப் பெருகி ஒளிச்சிதறல்கள் அவ்விடமெங்கும் பரவி விரிந்தன. அவ்வொளியின் கீற்றுக்குள்ளிருந்து..........
இடபவாகனருவாய் ஈசனும் இறையவரும் காட்சி தந்தனர். 

*பக்தர்களே! உங்களின் சிவபக்தியை மக்களுக்கு எடுத்தியம்பவே இப்படியொரு நிகழ்வை நடத்தினோம்!, இறந்தவரும் யானையும் உயிர் பெறுவர் எனக்கூறி எழச் செய்து மறைந்தார்.*

எறிபத்த நாயனாரின் குருபூஜை மாசி மாதம் அஸ்தம் நட்சத்திரம் அன்று வருகிறது. எனவே அந்த இனிய நாளில் சிவஅடியார்கள் சிவபக்தர்கள்  அனைவரும் எறிபத்தரின் பூஜையில் கலந்து அவரின் ஆசியைப் பெறுவீர்களாக! 

அதோடு தம் தாய்நாட்டுக்கு திருத்தப்பட்ட நல்ல ஆட்சியும், நல்ல கோணும், நீதி தவறாத ஆட்சியாளரும் அமைய வேண்டி பிரார்த்தித்துக் கொள்வோமாக!

*மீண்டும் தெரிந்தும் தெரியாமலும் தொடரில்,*
    
           திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*