Tuesday, February 21, 2017

Only shiva temple without Nandi

*சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி...                                                     🌹சிவாயநம*🌹
✍🏾 *எழுதுகிறேன் சிவசித்தன் சிவனேயச்செல்வன் அருண்:9094830243...*
 
பொதுவாக சிவபெருமானுக்கும் நந்திக்கும் இடையே இருக்கும் அற்புதமான‌ தொடர்பு உலகறிந்த
ஒன்று. சிவன்கோவில்கள் எங்கெல்லாம் இருக்கி றதோ அங்கெல்லாம் சிவனுக்கு எதிரே அவரை பார்த்த‍படி மண்டியிட்டு அமர்ந்த நிலையில் இரு க்கும் நந்தியை பார்த்திருக்கிறோம்.  

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் ஆலயத்தில், சிவ பெருமானுக்குமுன் நந்தி வைக்கப்படவில்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோயில் இது ஒன்று தான்.

இதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு!

ஒருமுறை இந்திரசபையில் பிரம்மனுக்கும், சிவனு க்கும் இடையே வாக்கு வாதம் உண்டானது. சிவந்த கண்களுடன் சிவபெருமான் சினத்தில் இருந்தபோது , பிரம்மனின் 5 தலைகளில் நான்கு தலைகள் வேத ங்களை உச்சரித்துக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு தலை மட்டும் சிவனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டது. வெகுண்ட சிவ பெருமான், அந்தத் தலையை கொய்தார்.

இந்த செயலால் சிவனுக்கு பிரம்ம ஹத்யா (பிராமணனை கொல்லுதல்)தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழு வதும் சுற்றினார். ஆனால், பாவ நிவர்த்திக்கு வழி தெரிய வி ல்லை.

சோமேஸ்வர் என்றஇடத்திற்கு சிவன் வந்தபோது, பசு ஒன் று தன் கன்றுடன் பேசுவதைக்கேட்டார். பிராமணன் ஒருவனை தனது கொம்பால் குத்திக் கொன்று பிரம்ம ஹத்யா பாவத்தி ற்கு ஆளான கன்றுக்கு, தாய்ப் பசு பரிகாரம் சொல்லிக் கொண்டிருந்தது.

இதன்படி, பரிகாரத்திற்காக பசுங்கன்று சென்ற திசை யை பின்பற்றி சிவபெருமானும் சென்றார். பஞ்சவதி அருகே வந்ததும் கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தன் பிரம்மஹத்யா பாவத்தைபோக்கி, பழைய நிலைக்கு திரும்பியது. அதே இடத்தில் சிவனும் நீராடி தனது பாவத்தைப்போக்கிக் கொண்டார்.

பின்னர், அருகே இருந்தமலையில் சிவபெருமான் குடி கொண்டார். சிவனை பின்தொடர்ந்து சென்ற பசு, அவருக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தது. ஆனால் இதற்கு சிவன் ஒப்புக் கொள்ளவில்லை. தன்னை பிரம்ம ஹத்யா பாவத்தில் இருந்து விடுவித்ததால் குருவுக்கு சம மானவர் என்றும், அத னால் தன்முன் அமர வேண் டாம் என்றும் நந்தியைக் கேட்டுக்கொண்டார். ஆனால் நந்தியோ சிவபெருமான்மீது கொண்ட அளவு கடந்த பக்தியால் கோவிலில் இருந்து வெளியேற மறுத்து, தன்னை அனுமதிக்குமாறு சிவனிடம் மன்றாடியது. 

இருப்பினும் சிவபெருமான் கண்டிப்புடன் வெளியேற சொ ன்ன‍தால், தனது இயலாமையை நினைத்தும், சிவனுக்கு எதிரில் இருக்கும் பாக்கியத்தை இழந்துவிட்டோ மே என்ற சோகத்திலும் அந்த சிவாலயத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறியது அந்த நந்தி. இந்நிகழ்வு நிகழ்ந்ததாக புரா ணங்களில் காணப்படுகிறது. அதனால்  இங்குள்ள‍ மக்க‍ள் இங்குள்ள சிவாலயத்தில் நந்தி சிலை வைக்கப்படவில்லை.                                     *இறையன்பில்                         ****************************
*தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*
***************************
அடியேன் *சிவசித்தன் சிவனேயச்செல்வன் அருண்:9094830243...*

No comments:

Post a Comment