Thursday, February 9, 2017

Agastiar

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                 *(4)*
*🍁சிவமய அருளான சித்தர்கள் தொடர்.*🍁
★★★★★★★★★★★★★★★★★★★★★
               *(அகத்தியர்)*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சித்தர் என்றும், சித்த வைத்தியம் என்றாலே உடனை நம் அனைவரின் நினைவுக்கு வருபவர் அகத்தியர்தான். இவ்வகத்தியர் வைத்தியத்திற்கு செய்திருக்கும் பணி எண்ணிலடங்கானவையாகும்.

இவரை கும்பமுனி என்றும் கூறுவார்கள். இந்த சித்தர்பிரான் உத்தம சித்தர்களின் தலைமைப்பீடாதிபதி--மகரிஷிகளின் உத்தமபீடம்--சித்த மாமுனி.

கருவிலே தோன்றாமல் தான்தோன்றிப் பிரபுத் தத்துவராக இறைவனருளால் கலசக் கும்பத்தில் சுயம் பிரகாசமாய் தோன்றியவர்.

இன்றைய மிகப் பெரும் மருத்துவ வல்லுநர்களும் விடை காண முடியாமல் தவிக்கும் பல நோய்களுக்கும், மருத்துவம் குறித்த சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்திருப்பவர் இவர்!.

இவருடைய தோற்றம் பற்றிப் புராணங்களில் பல்வேறு விதமாகக் கூறப்படுகிறது.

தாரகன் முதலான அரக்கர்கள் உலக மக்களுக்குப் பெரும் இடையூறுகளைச் செய்து வர அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்னி முதலானோருடன் பூமிக்கு வந்தான்.

இவர்களைக் கண்ட அரக்கர்கள் கடலுக்குள் சென்று ஒளிந்தனர்.
அவர்களைக் கொல்ல கடல் நீரை வற்றிப் போகும்படி செய்யுமாறு இந்திரன் அக்கினிக்குக் கட்டளையிட்டான்.

ஆனால் இதற்கு அக்னி, கடல் நீரை வற்றச் செய்தால் உலகிலுள்ள அனைத்து நீர்வளங்களும் குறைந்து விடும் என்று கூறி இந்திரனை சமாதானம் செய்தார்.

மறுபடியும் அரக்கர்களின் தொல்லை அதிகரித்தது. அக்னி கடல் நீரை வற்றச் செய்யாததால்தான் இந்த நிலை ஏற்பட்டது.

அன்றே வற்றிப் போகும்படி செய்திருந்தால் இத்துன்பங்கள் தொடர்ந்திருக்காது என்று நினைத்து கோபத்துடன் *"நீ வாயுடன் கூடிய பூமியில் போய் கும்பத்தில் பிறந்து கடல் நீரெல்லாம் குடிக்கக் கடவாய்"* என்று சாபமிட்டான். அதன்படி அக்னி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய்த் தோன்றினார்.

இந்திரனின் வேண்டுகோளின்படி  அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட அரக்கர்களை இந்திரன் அழித்தான். அதன்பின் அகத்தியர் நீரைப் பழையபடி கடலுக்குள் விடுத்தனர்.

*அகத்தியர் தோன்றியதற்கான இன்னொரு நிகழ்ச்சி.....*

பூமியில் கடற்கரை அருகே மித்திரா என்பவரும், வருணர் என்பவரும் தங்கியிருந்த சமயம், இந்திரன் சாபத்தால் பூலோகத்திற்கு வந்த ஊர்வசியைக் கண்டனர்.  அவளது அழகில் தங்கள் மனதைப் பறி கொடுத்த இருவருக்கும் மிகுந்த காமம் உண்டாயிற்று. இதன் காரணமாக ஒருவர் தம் வீரியத்தைக் குடத்திலிட்டார். மற்றொருவர் தண்ணீரிலிட்டார்.

குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் தோன்றினார்கள்.

பிரம்மதேவன் ஊர்வசியின் நடனத்தைக் கண்டு அவளழகில் மயங்கித் தன் வீரியத்தை விட அதிலிருந்து அகத்தியர் தோன்றியதாகக் காவிரி புராணம் கூறுகிறது.

குடத்திலிருந்து தோன்றியதால் அகத்தியருக்குக் கும்பமுனி  குடமுனி என்னும் பெயர்கள் உண்டாயின.

அகத்தியர் பெயரால் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரமொன்று கடல் நீரை உதயத்தில் வற்றச் செய்யும் என்று கூறப்படுகிறது.

அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரண்டு ஆண்டுகள் கடுந்தவம் இயற்றி பல அரிய சக்திகளைப் பெற்றார்.

இராமபிரானுக்கு சிவ கீதையை போதித்தார். சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தைப் போக்கினார். தமக்கு வந்தனை வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்து இருந்த இந்திரத்துய்மனை யானையாகப் போகும்படி சபித்தார்.

அகத்தியர் தென்திசை நோக்கி வரும் வழியில் தன் முன்னோர்கள் (பித்ருக்கள்) மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்கள் அகத்தியரிடம் அவர் திருமணம் செய்து கொண்டு ஒருமகனைப் பெற்றால்தான் தாங்கள் சுவர்க்கம் புக முடியும் என்றார்கள்.

அகத்தியர் எப்பொழுதும் தவத்திலேயே ஈடுபட்டிருந்தார். அதனால் அவருக்கு வேறு எதிலும் நாட்டம் ஏற்படவில்லை. திருமணம், மனைவி, மக்கள் என்ற எண்ணமே இல்லாமல் இருந்து வந்தார் அதுவரை.

அகத்தியரும் தன் முன்னோர்களின் சாபத்திற்கு அஞ்சி, *"நான்தான் அகத்தியன்"* விரைவில் *இல்லறமடைந்து உங்களை இத்துன்பத்திலிருந்து நீக்குகிறேன்"* என்றவர் விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் நடத்திய யாகத்தில் பிறந்த உலோப முத்திரையை அதிகப் பொருள் தந்து மணந்து தென்புலத்தார் கடனைத் தீர்த்தார்.

முருகக்கடவுளின் ஆணைப்படி தமிழுக்கு அகத்தியம் என்னும் இலக்கிய நூலை இயற்றித் தமிழை வளர்த்தார்.அகத்தியர், கலைகளில் சிறந்து விளங்கிய இவருக்கு திரண, 
*தூமாக்கினி (தொல்காப்பியர்),* *அதங்கோட்டாசான்,* *துராலிங்கன்,*
*செம்பூட்சேல்,* 
*வையாபிகன்,*
*வாய்பியன்,*
*பனம்பாரன்,*
*கழாரம்பன்,*
*அவிநயன்,*
*காக்கைப் பாடினி,*
*நற்றத்தான்,*
*வாமனன்* -போன்ற மாணாக்கர்கள் இருந்தனர்.

அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள *"சமரச நிலை ஞானம்"* என்னும் நூலில் உடம்பிலுள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது.

அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்ற நூலில் கிரிகை நூல் அறுபத்து நான்கு எனும் பகுதியில் பதினெட்டு வகையான மனநோய் பற்றியும்,  அவற்றின் இயல்புகள் பற்றியும், அவற்றிற்குரிய மருத்துவ முறைகளைப் பற்றியும் தெளிவாக்கியுள்ளார்.

அகத்தியர் அஷ்டமா சித்து என்னும் நூலில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்களைப் பற்றிய குறிப்புகளை காட்டியுள்ளார்.

*இவரின் மற்ற நூல்கள்:*
____________________________
*அகஸ்தியர் வைத்திய ரத்ன சுருக்கம் 360,*
*அகத்தியர் வாகட வெண்பா,*
*அகஸ்தியர் வைத்தியக் கொம்பி,*
*வைத்திய ரத்னாகரம்,*
*வைத்தியக் கண்ணாடி,*
*வைத்தியம் 1500,*
*வைத்தியம் 4600,*
*செந்தூரன் 300,*
*மணி 4000,*
*வைத்திய சிந்தாமணி,*
*கர்ப்ப சூத்திரம்,*
*ஆயுள் வேத பாஷ்யம்,*
*வைத்திய நூல்கள்,*
*பெருந்திரட்டு,*
*பஸ்மம் 200,*
*நாடி சாஸ்திரம் பக்ஷனி,*
*கரிசில் பஸ்பம் 200,* ஆகியநூல்களாவன.

*தத்துவ நூல்கள்:*

*சிவஜாலம்,*
*சக்தி ஜாலம்,*
*சண்முக ஜாலம்,*
*ஆறெழுத் தந்தாதி,*
*கர்மவியாபகம்,*
*விதிநூன் மூவகைக் காண்டம்,*
*அகத்தியர் பூஜா விதி,*
*அகத்தியர் சூத்திரம் 30,* போன்ற நூல்களாகும்.

மேலும், *ஐந்திலக்கணம் அடங்கிய அகத்தியம்.*
வடமொழி வைத்திய நூலான *அகஸ்திய சம்ஹிதை* ஆகிய நூல்களாகும்.

மேலும் , *அகஸ்தியர் ஞானம்* என்ற நான்கு தொகுப்புப் பாடல்கள் சித்தர் பாடல் திரட்டில் வரையப்பெற்றிருக்கிறார்.

*மனமது செம்மையானால் மந்திரஞ்ஸசெபிக்க வேண்டா*
*மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா*
*மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா*
*மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.*
                 -அகஸ்தியர் ஞானம்-2.

நாம் இதுவரை கண்டவை.அனைத்தும் புராணங்களில் கூறப்படும் அகத்தியர் பற்றிய விவரங்கள் என்றாலும் அகத்தியர் என்னும் பெயர் கொண்ட அறிஞர்கள் பலர் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்து பல்வேறு இலக்கியங்களை இயற்றியுள்ளனர் அவர்கள்.

*பொதியமலை அகத்தியர்,*
*முத்தூர் அகத்தியர்,*
*வாதாபி அகத்தியர்,*
*உலோப முத்திரை அகத்தியர்,*
*மைத்திரா வருண அகத்தியர்,*
*மானிய அகத்தியர்,*
*அம்ப அகத்தியர்,*
*அவிர்பூ புத்திரர் அகத்தியர்,*
*கந்தருவன் புத்திரர் அகத்தியர்,*
*ஏழு முனிவர்களுளொருவர் ஒருவரான அகத்தியர்,*
*புரோகித அகத்தியர்,*
*கொடி தோள் செம்பியன் காலத்து அகத்தியர்,*
*உலோப முத்திரை அகத்தியர்-II,*
*கோசல நாட்டு அகத்தியர்,*
*பஞ்சவடி அகத்தியர்,*
*மலையமலை அகத்தியர்,*
*குஞ்சரகிரி அகத்தியர்,*
*காரைத்தீவு அகத்தியர்,*
*போதலகிரி அகத்தியர்,*
*திலோத்தமை அகத்தியர்,*
*திருமாலை சிவனாக்கிய அகத்தியர்,*
*பள்ள அகத்தியர்,* இப்படியாகப் பல அகத்தியரின் பெயர்கள் தமிழிலக்கியங்களிலும், புராணங்களிலும் கூறப்பட்டு வருவதால் புராண அகத்தியரேயின்றி அவருக்குப் பின் தோன்றிய அகத்தியருள் ஒருவரே சித்தராய் அகஸ்தியர் ஞானம் பாடியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறதாம்.

அகத்தியருக்கு தட்சிணாமூர்த்தி என்கிற பெயரும் உண்டு என்பதை *'தட்சிணாமூர்த்தி குரு முகம் நூறு'* என்னும் நூலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

சென்னையிலுள்ள கீழை நாட்டுக் கையெழுத்துப் பிரதி நூலகம் தயாரித்துள்ள ஒரு பட்டியலில் அகத்தியர் பெயரில் சுமாராக 96 நூல்கள் காணப்படுகின்றன.

சித்தராய் விளங்கிய அகஸ்தியரைப் பற்றி சில கருத்துக்களை நாம் *"அகஸ்தியர் காவியம் 12000"* என்ற நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

அகத்தியர் பாண்டிய நாட்டின் காய்ச்சின வழுதி என்னும் அரசனின் அரசவையில் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் கடற்கோள் ஏற்பட்டு மதுரையும், குமரி ஆற்றை அடுத்திருந்த 49 நாடுகளும் அழிந்த போயின. இந்தப் பிரளயத்தைப் பற்றி அகத்தியர் தமது பெரு நூல் காவியம் 12000-ல் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் பிரளயத்தின் போதுதான் பெரும்பாலான தமிழ்நூல்கள் காணாமல் போய்விட்டிருக்கின்றன. கடலோரத்தில் மிதந்த ஒரு சில நூல்களை மட்டும் சேகரித்துக் கொண்டு வந்து அவற்றின் கருத்துக்களை அகத்தியரால் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. 

கடல் பிரளயத்தில் தப்பிப் பிழைத்த அகத்தியர் பொதிகை மலையை அடைந்த பொழுது அங்கிருந்த சித்தர்கள் பலர் இவரை வரவேற்றனர்.  அங்கே அவருக்கு பல சீடர்கள் ஏற்பட்டனர்.

வைத்தியர் என்கிற முறையில் இவருக்கு அங்கே ஒரு  தனிச்சிறப்பு ஏற்பட்டது. நாடு முழுக்க இவரது வைத்தியத் திறமையின்  புகழ் பரவியது. *கும்பமுனி, குறுமுனி, பொதிகை முனி, தமிழ் முனி என்ற சிறப்புப் பெயர்களும் ஏற்பட்டன.

அகத்தியர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சீடர்களும், அபிமானிகளும், தங்கள் பெயரையும் அகத்தியர் என்றே வைத்தியம் செய்தனர். நூல்களையும் இயற்றினர். பிற்காலத்திலும் பலர் அகத்தியர் என்ற பெயரால் நூல்களை இயற்றிச் சேர்த்து விட்டனர்.

அகத்தியர் தாம் வடக்கே இருந்து கொண்டு வந்த ஆயுர்வேதத்தினையும், தமிழ்ச் சித்தர்களின் மருத்துவத்தையும் ஒன்று கலக்க முயன்றதால் ஒரு நோய்க்குப் பல வித சிகிச்சை முறைகளைக் கூற வேண்டியிருந்தது. இதனால் முரண்பட்ட கருத்துக்களும் தோன்றின. 

அகத்தியர் திருவனந்தபுரத்தில் (அனந்த சயனம்) சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.  ஒரு சிலர் அகத்தியர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோயிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

*நன்மை விளைய குருவை போற்றுவோம்!*
*நமக்கினதை அடியார்க்குக் கொடுப்போம்.*

            திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■