திருஞானசம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க திருக்கொள்ளம்புதூர் வரும்போது காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் ஆலயத்திற்குச் செல்ல ஓடக்காரன் இல்லை.
அடியார்கள் திகைத்து அக்கரை செல்வது எப்படி என்று கவலைப்பட்டனர்.
அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி
"கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்" என்று தொடங்கும் பதிகம் பாடினார்.
இறைவனின் திருவருளால் ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும், அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது.
திருஞானசம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு.
இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது.
ஆற்றின் அக்கரையில் சம்பந்தருக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது.
இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம்போக்கி ஆறு என்று வழங்குகின்றனர்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய (காடு) தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு.
திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது கீழ்க்காணும் வரிசைப்படி ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த 5 தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது சிறப்பு.
1. திருக்கருகாவூர் – முல்லைவனநாதர் திருக்கோயில் -
(முல்லைவனம்)
விடியற்கால வழிபாட்டிற்குரியது.
தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்
கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.
2. திருஅவளிவநல்லூர் – சாட்சிநாதசுவாமி திருக்கோயில்
(பாதிரி வனம்)
காலை வழிபாட்டிற்குரியது.
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்
திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.
3. ஹரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி)
பாதாளேஸ்வரர் திருக்கோயில் (வன்னிவனம்)
உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
4. ஆலங்குடி – ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
(திருஇரும்பூளை)
பூளைவனம்
மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது
5. திருக்கொள்ளம்புதூர் – வில்வவனநாதர் திருக்கோயில் **********
(வில்வவனம்)
அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்
ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.
இந்த ஐந்து தலங்களையும்
வைகறை,
காலை,
நண்பகல்,
மாலை,
அர்த்த சாமம்
ஆகிய காலங்களில் வழிபாடு செய்தால் இப்பிறவியில் செய்த சகல பாவங்கள் நீங்கி மறு பிறவி இல்லா வாழ்வு கிட்டும்.
No comments:
Post a Comment