Friday, December 23, 2016

Tiruvilayadal puranam 22nd day

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                     (22)
🍁 திருவிளையாடல் புராணத் தொடர். 🍁
17-வது படலம். எளியநடை சரிதம்.
மாணிக்கம் விற்ற படலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
வலாசுரனது பித்தநீரை இனி பச்சையின் இலக்கணம்.

பறவைகள் கொத்திக்கொண்டு போகையில் தில்லி அருகே சிந்தியது. அங்கே பச்சைக்கல் சுரங்கங்கள் மிகுதியாக உளது.

கருடனது தாயான வினதையின் மூத்தபிள்ளை அருணனது உடைந்த முட்டை ஓட்டை பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.

திருஷ்டி தோஷம் தாக்காதிருக்க ,அந்த கருநிற ஓட்டை கருடன் இடுப்பில் கட்டினாள்.

அந்த முட்டையோட்டின் துகள்கள் விழுந்த இடமெல்லாம் மரகதச் சுரங்கங்கள் உண்டாயின. 

பத்மாசுரனைக் கொல்ல மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். பத்மாசூரன் தன் தலையில் தானே கை வைத்து சாம்பலான பிறகு  சிவன் மோகினியின் அழகில் மயங்கினார். 

அப்போது சிவனாரின் விந்துக்கள் விழுந்த இடங்களிலெல்லாம் பச்சைச் சுரங்கங்கள் தோன்றின. 

கருடன் அந்த வீர்யத்தை உண்டபின் பறந்தான். கடல்தாண்டி அவன் எச்சமிட்ட இடங்களிலெல்லாம் பச்சைச் சுரங்கங்கள் உருவாயின. இதற்கு காருத்துமதம் எனப்பெயர்.

தோஷமற்ற பச்சைக் கற்கள்.
அருகம்புல் நிறமுடையது காடம்; பேசலம், தினை இலையின் நுனி போலுள்ளது. கிளி இறகு போலுள்ளது பித்தகம்; துளசிப்பச்சை நிறமுள்ளது முத்தம்; தாமரை இலைப் பச்சை பிருதுகம்; உல்லசிதம் பச்சைப் பயிர் போலிருக்கும்.

தோஷமுள்ள மரகதக் கற்கள்.
தோஷலே சாந்து வீத  மரகதம் எலுமிச்சை இலைப் பச்சையாய் இருக்கும். அரளி இலைப் பச்சை துஷ்டம்; செந்தாமரை இலைநிறம் தோஷமூர்ச்சிதம். தோஷலேசம் என்பது பனி தோய்ந்த தாமரை இலைநிறம்; மயில்தோகை நிறத்திற்கு மந்ததோஷம் என்று பெயர்.

குணமுள்ள மரகதக்கல் அணிபவன் எதிரிகளை வென்று  சீரும் சிறப்புமாய் வாழ்வான்.

நீலம் வலாசுரனின் கண்ணிலிருந்து தோன்றியது. சிவபெருமான் நஞ்சுண்டபோது ஓடி வந்த உமாதேவி நெஞ்சுக்குள் விஷம் இறங்கிவிடக்கூடாதே என சிவனின் கழுத்தை இறுக்கிப் பிடித்தாள். அவளது நகக்கண்கள் பட்டு சிவனாரின் நஞ்சு கலந்த உதிரம் சொட்டிய இடமெல்லாம் நீலக்கல் கனிமங்கள் உண்டாயின. இதற்கு மகாநீலம் எனப் பெயர். இதைப் பாலில் போட்டால் முன்னிலும் அதிகமாகப் பிரகாசிக்கும்.

விசுவரூபனைக் கொன்ற பழி நீங்க இந்திரன் அஸ்வமேத யாகம் செய்தான். யாகத்திற்காக குதிரை இரவு பகல் பாராமல் அலைந்தது. அப்போது அதன் கண்ணிலிருந்து நீர் பல இடங்களில் விழுந்தது. யாகம் நல்லபடியாக முடிந்ததும் குதிரையின் கண்ணீர் விழுந்த இடமெல்லாம் நீலக்கல் சுரங்கங்கள் உண்டாயின. அதற்கு இந்திர நீலம் என்று பெயர். 

வானவில்லைப் போல் பலநிறம் காட்டும் இந்திர நீலம் கிடைப்பது வெகு அரிது. அரசரது முடியில் வைரம், முத்து, மாணிக்கம், பச்சை, இந்திரநீலம் கட்டாயம் இருக்க வேண்டும்.

துவஷ்டாவின் மகள் சமிக்ஞை சூரியனின் மனைவி. சூரியனுடைய வெப்பத்தைத் தாளாமல் தன்னலப் போன்ற நிழலை ( 'சாயா' எனப் பெயர் சூட்டி) வைத்து விட்டுச் சென்று விட்டாள். 

சூரியன் மோக வேகத்தில் குதிரை உருவெடுத்து சமிக்ஞையைத் தேடிக் கொண்டு ஓடினான். அவன் விந்து விழுந்த இடங்களெல்லாம் நீலக்கல் கனிமங்கள் தோன்றின. 

அந்த நீலக்கற்கள் ஆயுளைக் கூட்டும்; வித்தை சுலபமாக வரும். செல்வம் சேர்க்கும். தரித்திரன் கையில் அந்த நீலக்கல் இருந்தால் புதையல் கிடைக்கும். 

கொஞ்சம் வெளிரிய நீலம் அந்தணஜாதி; சிவப்பும் நீலமுமாக ஜாலம் காட்டுவது அரசரும், அமைச்சர்களும், அரசியலில் பங்கு கொள்வோரும் அணியும் சஷத்திரிய ஜாதி; பெரும் கீர்த்தியையும், சொல் சாதுரியத்தையும் அளிக்கக் கூடியது; 

வெளுப்பும், கருப்புமாய் ஒளிவிடுவது வியாரிகள் அணியக்கூடியது. புகழும், செல்வமும் சேர்க்கும். மிகக் கருத்த நீலக்கல் கட்டிட வேலை, விவசாயிகள், பொன், மர இரும்பு வேலை செய்வோர் அணிந்தால் திறமை வளர்ந்து செல்வமும் புகழும் கூடும்.

             திருச்சிற்றம்பலம்.

மாணிக்கம் விற்ற படலம், ஈசன் இன்னும் நாளை விவரித்துரைப்பார்.

No comments:

Post a Comment