Wednesday, December 7, 2016

Tiruvilayadal puranam 21st day

*சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
             *(21- வது நாள்)*
🍁 *திருவிளையாடல் புராணத் தொடர்.* 🍁
17-வது படலம்.எளியநடை சரிதம்.
*மாணிக்கம் விற்ற படலம்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திருமாங்கல்யத்தில் வைரம் பதிக்கக் கூடாது.

பலநிறம் காட்டும் வைரம் அரசர்க்குரியது.

இரத்தினங்களுக்குரிய கிழமைகளில் அவைகளை வாங்குவது, வாங்கியவர்க்கு செல்வமும், கீர்த்தியும் தேடித்தரும்.

இனி முத்துக்களது இலக்கணம் முத்துக்கள் நீரிலுண்டானவை, தரையிலுண்டானவை என இருவகைப்படும்.

வலாசுரனது பற்கள் பதின்மூன்று இடங்களில் சிதறுண்டு விழுந்தன. அவை சங்கு, மீனின் தலைப்பாகம், மேகம், மூங்கில், பன்றியின் பல், பாம்பின் படம், யானைத்தந்தம், கொக்கின் கழுத்து, நாமக் கரும்பின் கணுக்கள், நெற்கதிர், முத்துச் சிப்பி, கோவேறு கழுதையின் புஜம், கற்புடைய மங்கையரின் கழுத்து,

மாடப்புறா முட்டைபோல் வெளுத்த சங்கிலிருந்து உண்டான முத்து மேன்மை பெற்றது. மீன் தலையினின்று உண்டான முத்து பாடலிப்பூ போல இருக்கும். மேகமுத்து இளம் சூரிய ஒளி போலிருக்கும்.

ஆலங்கட்டி நிறமுள்ள மூங்கில் முத்தை அணிந்தவர் கீர்த்தியும், செல்வமும் பெறுவார்கள். பன்றிப்பல் முத்து லேசான சிவப்பாயிருக்கும். 

பாம்பு முத்து நீல ஒளிவீசும். நெல்முத்து, நாமக் கரும்பு முத்து, யானை முத்து, மூன்றும் லேசான மஞ்சள் நிறமாயிருக்கும். சிப்பி முத்து நிலாவைப் போன்ற நிறம். சிப்பி முத்து பல சிறப்புக்களை அணிபவருக்குக் கொடுக்கவும்.
உயிருள்ள மங்கையர், கோவேறு கழுதை, கொக்கு இவற்றை முத்துக்காக எவரும் கொல்வதில்லை. கொல்வது தவறு.

விஷ்ணு முத்து நீலநிறம். இந்திர முத்து மஞ்சள் நிறம். யமமுத்து மேகநிறம், வாயுமுத்து இரத்த சிவப்பு நிறம்; வருணமுத்து வெண்மை நிறம், அக்னி முத்து செந்நிறம்.

உருண்டையான கனமும், வழுவழுப்பும், ஒளியும் கூடிமய முத்தை அணிவதால் கெடுதல்கள் நீங்கும். செல்வமும்,ஆயுளும் பெருகும்.

*இனி மாணிக்கத்தின் தன்மை.*

கிருத யுகத்தில் மக்கத்திலும், திரேதாயுகத்தில் காளபுரத்திலும், துவாபரயுகத்தில் தும்புரு என்னுமிடத்திலும்,கலியுகத்தில் சிங்களத்திலும் மாணிக்கச் சுரங்கங்கள் இருக்கும். 

செந்தாமரை, செங்கழனிப்பூ, மின்னிப் பூச்சி, நட்சத்திரம், அனல், தீப ஒளி, மாதுளை, முத்துக்கள், சூரியன், மாதுளம்பூ, பட்டுப் பூச்சி இவை போன்ற நிறமுள்ள மாணிக்கங்கங்கள் சிறந்தவை.

மாணிக்கத்தில் சாதரங்கம், குருவிந்தம் செளகந்திகம், கவாங்கம் அல்லது நீலகந்தி என நான்கு வகை உண்டு.

குருவிந்தம் அரசர்கள்,அரசியலில் சம்பந்தப்பட்டவர்கள் அணிந்தால் சாதுரியத்தையும், வெற்றியையும் தேடித்தரும். எதிரிகளை சுலபமாக ஜெயிக்கலாம். வணிகர்கள் செளகந்திகம் அணிந்தால் வியாபாரம் செழிக்கும், நீண்ட ஆயுளுடன் செல்வமும் பெருகும். கட்டிட வேலை, பொன் வேலை, மர, சிற்ப வேலை செய்வோர் நீலகந்தி அணிந்தால் மேன்மேலும் புகழ் பெறுவர்.

சாதரங்கம் செந்தாமரை, செங்கழனிப்பூ, மின்மினிப் பூச்சி, நெருப்பு, தீபச்சுடர் குயில் கண்கள், மாதுளை முத்து, கதிரவன், மாதுளம்பூ, பட்டுப் பூச்சி என்ற பத்து சாயைகளைக் கொண்டிருக்கும்.

குருவிந்தம் செம்பருத்திப்பூ, கிம்சு மலர், உலோத்திர புஷ்பம், பந்தூகப்பூ, குன்றிமணி, சிந்தூரம், முயல் ரத்தம் என்ற எட்டு சாயைகள் உடையவை.

செம்பஞ்சுக் குழம்பு, குயில் கண், இலவுப்பூ, ஐந்திலைப்பூ, பழுக்கக் காய்ச்சிய உலோகம் இவை செளகந்திகத்தின் சாயைகள்.

குசும்புப்பூ, கோவைப்பழம், மருதோன்றிப்பூ, மனோரஞ்சிதம் போன்றிருப்பது நீலகந்தி. மாணிக்கத்தில் மேல்நோக்கி ஒளி வீசுவது உத்தமம்; கீழ் நோக்கி ஒளிவீசுவது மத்திமம். பக்கத்தில் ஒளி வீசுவது மட்டம். புண்ணியம் செய்தவர்களுக்கே குற்றமற்ற மாணிக்கத்தை அணியும் பாக்கியம் கிடைக்கும்.

             திருச்சிற்றம்பலம்.

ஈசன் இன்னும் நாளை விவரிப்பார்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment