*சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🍁 *திருவிளையாடல் புராணத் தொடர்.* 🍁
______________________________
*மேருவைச் செண்டாலடித்த படலம். (15-வது படலம்.)*
*(எளியநடை,சரிதம்.18-வதுநாள்.)*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
நோன்புகளில் சிறந்தது சோமவார விரதம் என்பதாகும். இதை முறைப்படி செய்த உக்கிர பாண்டியருக்கு இறையருளால் ஒரு வீர மைந்தன் பிறந்தான். அவன் பெயர் வீர பாண்டியன்.
எதிரிகளை வென்று இரப்போர்க்கு குபேரன் போல் அள்ளி வழங்கி அரசாண்ட உக்கிர பாண்டியன் காலத்தில் மறுபடியும் பஞ்சம் ஏற்பட்டது. அதுவும் கொடியதானதாக. மணிதானியமும் கிடையாது. அறம் வளர்த்த அந்தணர்களெல்லாம் வேறு நகரம் நாடிப் போய்விட்டனர். ஊர் வெறிமையாகிக் கொண்டிருந்தது.
ஈசனையும், அனனையையும் எண்ணிப் பலவாறு நொந்திருந்தான். பரிகார ஹோமங்கள் செய்யலாமென்றால், அந்தணர்களோ வேறு நாடு நீங்கிப் போய்விட்டிருந்தனர். எல்லாம் உன் வசமே என விதியை நொந்தபடியே தரையில் படுத்து தூங்கிப் போனான் மாமன்னர்.
அன்றைய தூக்கத்தில் அவன் கனவிலே தோன்றிய சிவபெருமான், *"உன் நாட்டையும் உன் படைகளையும் காக்க ஒரு வழி சொல்கிறேன் கேள் என்றார்.*
நீ மேரு மலைக்குச் சென்று அதைச் சண்டாயுதத்தால் அடித்து, வேணுங்கிற பொருளை எடுத்துக் கொண்டு மறுபடியும் முத்திரையிட்டு வந்து விடு!" அதன் பின் ஓராண்டுக்குள் உன் நாட்டிலுள்ள வறட்சி நீங்கியொழியும். ஒரு அந்தணரை அழைத்து வந்து தினந்தோறும் எண்ணைப்போல் எண்ணி வணங்கிவா" எனக்கூறி மறைந்தார்.
விடியலாகி தூங்கியெழுந்த அரசன், யாருக்கும் சொல்லாமல் படைநடத்திச் சென்று, குறுக்கோடிய ஆறுகளைக் கடந்து, வனம் கடந்து மேருவின் அருகாவிலுள்ள ஒரு நகரில் படையை தங்கியிருக்கும்படிச் செய்து விட்டு தனியொருயாளாக சண்டாயுதம் கொண்டு மலையை வலம் வந்து கிழக்கு நோக்கி நின்றான்.
முழு வேகத்துடன் சண்டாயுதத்தால் மேருவை அடித்தான். உடனே பந்து போல் சற்றிய மேருவுருவம் கொண்டு மன்னன் முன் நின்றது. அம்மேருவிடம், இறைவன் சொன்னபடி கனவில் நடந்ததை சொல்லினான்.
செவிமடுத்துக் கேட்ட மேரு *"மன்னா! எனக்கு அசையும் உருவம், அசையா,உருவம் என இருவகை உண்டு"* அசையும் வடிவத்தில் நான் தினந்தோறும் ஆலவாய் சென்று அம்மையப்பனை வழிபட்டு வருவது வழக்கம். என் அறிவு மயக்கத்தில் சில நாளாய் அம்மையப்பனை வழிபடாது இருந்து கழித்துள்ளேன். அதற்காகத்தான் இறைவன் எனக்களித்த செண்டாயுதடி.
என் தாவரவுடலில் மாசெபெற்ற இடம், மாசுபெறா யிடம் என இரண்டு பகுதிகள் இருக்கிறது. மாசு இல்லா இடத்தில் சூரியொளி போல் மிகத் தூயதான ஒரு பாகம் உண்டு. அதைத் தேடிப் பிடித்து அதன்மேல் மூடியுள்ள பாறைப் பகுதியை கல் கொல்லவனைக் கொண்டு தகர்த்து, அதிலிருக்கும் வேண்டிய பொன்னை எடுத்துக் கொள். எனக்கூறிவிட்டு மறைந்தான் மேருவானவன்.
*அதைக் கேட்ட மன்னன் மகிழ்ந்து மேரு சொன்னது போல் கல்க் கொல்லனைக் கூட்டி வந்து பாறையை உடைக்கச் செய்தான். பாறையினுள்ளாக யிருந்த பொன்னை பாளம் பாளமாக வெட்டி யெடுத்து, முடுயுமளவு வெளியே கொணர்ந்து பலசாலியான ஆட்களைக் கொண்டு சுமக்கச் செய்து, அறையின் வாயிலை மறுபடியும் பாறைகளைக் கொண்டு மூடச் செய்து, சண்டாயுதம், இரண்டு மீன்கள் சின்னம் இவை கொண்ட முத்திரையால் அடையாளம் இருக்கச் செய்து விட்டு, பொற்குவியல்களைகளோடு படைகளை நிறுத்தி வைத்திருந்த இடம் வந்து சோ்ந்தான்.
மன்னர் பொன்பாளங்களைக் கொண்டு வந்ததைக் கண்டு படையினர்கள் ஆச்சர்யப்பட்டுப் போயினர். அனைவருக்கும் வருடமுழுமைக்கும் உணவுக்கான பொன்னை அளித்தான் உக்கிர பாண்டியன்.
சோமசுந்தர மூர்த்தியின் திருக்கோயிலுக்கு விமானம், கோபுரம் கட்டி வழிபட்டு மகிழ்ந்தான். நாளடைவில் கிரகநிலை மாறி வருடம் பூர்த்தியாகும் முன் மழை பொழிந்தது. பஞ்சம் பறந்தது. குடிகள் பெருகி மகிழ்ச்சியாயினர்.
வீரபாண்டியனிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்த உக்கிரபாண்டியன் தந்தையுடன் ஐக்கியமானான். பின்னர் சச்சிதானந்தப் பெருமான் சோமசுந்தரக் கடவுளின் திருவடியிலே இரண்டறக் கலந்து கொண்டார் உக்கிர பாண்டியர்.
*திருச்சிற்றம்பலம்.*
இத்துடன் 15-வது படல மேருவைச் செண்டாலடித்த படல எளியநடை சரிதம் மகிழ்ந்து நிறைந்தது. நாளை 16-வது படலமான வேதத்துக்குப் பொருளுரைத்தத படல செய்யுள்நடை +விளக்கம் வரும்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment