Friday, November 18, 2016

Thirukadavur temple part 1 to 10

Courtesy:Sri.Kovai G.Karuppasamy

   ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
       🌷 திருக்கடவூர் 🌷
                      (1)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பிரபஞ்சம் என்னும் பேரரும்பின் மடல்கள் அவிழத் தொடங்கிய ஆதிகாலம். அண்டத்தின் நாபியிலிருந்து பொங்கியெழுந்தது ஓங்கார நாதம். படைப்புக் கலையின் மூலநாதமாய், முடிவிலா நடனத்தின் முதல் சுருதியாய், கால வீணையின் அதிர்வாய் ஓங்கி ஒலித்தது ௐ எனும் ஓங்காரநாதம்.

சிருஷ்டியின் உச்ச லயிப்பில் ஒன்றிருந்த இடகலை பிங்கலை சக்திகள் சலனம் கொண்டன. சற்றேன அதிர்ந்தன. நாதத்தின் கருப்பையில் பிரபஞ்சக் கரு மெல்ல மெல்ல உருக் கொள்வதை உணர்ந்தன.

நாதத்தின் பிறப்பே பிரபஞ்சம். நாதத்தின் இருப்பே உயிர்கள் நாதலயத்தின் நடனமே தொடக்கம். இது நீளும் ஊழிவரை.

மூல சிருஷ்டியின் நிறைவில், உருக் கொள்ளவுள்ள உயிர்களின் இடைவெளியில்லாத சங்கிலியில், முதற்க் கோா்வையான சங்கிலிக்கண்ணி பொருத்தப்பட்ட நேரமது. சக்தி வடிவம் தான் இடகலை. சிவ வுருவம் பிங்கலை. இதில் உழன்று கொண்டிருக்கும் உயிர்களெல்லாம் ஊடுருவியது சிவசக்தி அம்சம்.

ௐ.ௐ..ௐ...ௐ....ௐ.....ௐ......ஓங்காரத்தின் குரல் பிரயோகமாகிக் கொண்டேயிருந்தது. கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பு கனன்றது. வாக்கிறந்த பூரணத்திடமிருந்து சூட்சுமக் குறிப்பாய்க் கிளம்பி புறப்பட்டது பிரபஞ்ச ரகசியம்.

ஆதியோகியின் நாதக்கனிவில் மூவகை வுலகம் மூகிழ்விப்பதற்கான சலனங்களைக் கண்ணுற்ற உமையின் உள்ளுணர்வில் புரிபடத் தொடங்கியது பிரபஞ்ச ரகசியம். தன்னை ஆளுடை நாயகனின் உபதேசத்தில் கண்மூடி லயித்தாள் காருண்யை.

இனியெழும் உயிர்களின் வினையாற்றல், வினையேற்றல் இரண்டிற்கும் மெளன சாட்சியாய் இழையோடும் இந்த ஓங்கார நாதம். இதுவே ககன வெளியெங்கும் காற்றாகிச் சுழலும். உயிரியக்க சக்தியின் அலைவீச்சாய் இருக்கும் இந்த காற்று!.

தேவி!, தாவரங்களின் மகரந்த,சேர்க்கை, நாசிப் புலனுக்கு வாசம் புரிதல், உடம்போடு உயிரை இணைத்தல், பொறிபுலன்களை இயக்கச் சக்தியாய் இருத்தல், ஆவியாகிய கடல் நீா் வானகத்தே வாங்கிக் கொள்ளல், என்று படைப்பின் மூலசுவாசமாய் இயங்கும் காற்று. முகிலினை உயிா்க்கச் செய்து மழையினை பிறக்க வைத்தல், தழலினை உந்தி அழித்திடல் என சகலத்திற்கும் காரணமாகும் காற்று.

காற்றின் இழையைக் கைக்கொண்டிருக்கும் வரையே யாக்கையின் இயக்கம். யாக்கையினைத் தாண்டித் தொடரும் காற்றின் சுழல். அந்தச் சுழற்காற்றினை கட்டமைக்கும் வினைகளின் வலை அற்றுப் போகையில் ஏற்படும் வெற்றிடம்தான் முக்தி. இது பிரம்ம விதி. காற்றின் வழியே தன்னில் அமிழ்ந்து, இருமை கடந்து, தன்னையுணரும் யோகக் கலையின் எழுத்தில்லா,விளக்கமே சிவசக்தி சொரூபம்.

பிராணவாயுவின் பிரயோகம், வாழ்வின் மூலம் மட்டுமன்று சக்தி! அதுவே உயிராற்றலின் ஊற்றுக்கண். தன்னில் உள்ள இறைமையை உயிர்கள் உணர்ந்து, மரணம் தாண்டி, பேரின்பத்தில் நிலைத்திட,பிராணனே பிரதானம். கட்டற்றோடும் எண்ணக் குதிரையின் கடிவாளம் பிராணனே. கட்டுக்கடங்கிய அந்தக் குதிரையைக் கட்டும் கம்பமும் பிராணனே.

காற்றாகிய பிராணனின் நுட்பம் உணர உணர சூட்சுமம் பெறும் உயிர்சக்தி. காற்றைப் போலவே இலகுவாகும். அம்பிகே! காற்றிலாமை மரணமெனில் காற்றும் அமுதமாம். பிரபஞ்சமெங்கும் பரந்து விரிந்திருக்கும் பரத்துவமே பிராண சக்தி. அதுவே ஓங்காரத்திலிருந்து உயிர்த்த அமுதம். ஒவ்வோா் உயிரிலும் இது அடங்கல். இது இயக்கும். இறுதியில் இதுதான் கிடத்தும்.

ஷாம்பவி! இந்த அமுதம் நிரம்பிய பாத்திரமே சரீரம். மரணமிலாப் பெருவாழ்வின் அமுதம் நிரம்பும் கடம் மிருத்யுஞ்சயம். அமுதகடங்களே உடல்கள் என்பதை உணர்த்தும் தலம்தான் திருக்கடவூர் எனப்படும். அமுதக்கடமாய் தன்னை உணர்பவர்களுக்கு அதுதான் கடைசிப் பிறவி. கருவூரில் நுழைவோருருக்குக் கடையூரும் இதுவே.

சங்கரி! பிரபஞ்ச உருவாக்கத்தில் பங்கேற்ற நீ மனோன்மணி, மனசக்தி, பிங்கலையின் மூலவுருவாகிய யாம் புத்தி சக்தி. நாம் அருளிய அமுதமே காற்று. காற்றின் அசைவே பிரபஞ்சம். காற்றுக்கு கால் என பெயரும் உண்டு. காற்றின் இயக்கமே வாழ்க்கை என்னும் தத்துவத்தின், குறியீடாய்த் தாண்டவம் தொடங்குவோம்.

புரிதலெனும் விடையேறும் புனிதனும் புவனங்கள் ஈன்ற நாயகியும் ஆடத் தொடங்கிய ஆனந்த தாண்டவத்தின் அதிர்வில் ஒவ்வொரு மடலாய் மலர்த்தியது பிரபஞ்சத் தாமரை.

நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருநாள் நிழற்கீழ்
மூவகை உலகம் முகிழ்த்தன முறையே!

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
     🍁 *திருக்கடவூர்.* 🍁
                    *(2)*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
வெண்ணிற  வாரிதியின் கடைசலா, வாசுகியின் சீறலா என்று இனங்காணவொண்ணாப் பேரோசை எங்கும் பரந்தது. அசுரர்கள் மனத்திலும் முகத்திலும் களைப்பு ஏற்பட்ட சுவடு காணாது புன்னகையே விரிந்து படர்ந்தது. வான்முதல் கடலாழ வரை நீண்டு வளர்ந்திருந்த வாசுகியின் தலை பாகத்தை அசுரர்கள் பற்றிக் கொண்டிருந்தனர். வாசுகியின் வால் பகுதியை அமரர்கள் பற்றிக் கொண்டியிருந்தனர்.

அழுத்தத்தாலும் நெருக்குதலதாலும் வாசுகியிடமிருந்து வெளியானது வெப்பத்தனல். அந்த வெப்பத்தனலில் அசுரர்களின் உடல் உரோமக்கால் மயிர்கள் கருகி செத்தன.

பாற்கடலை அமரர்களுடன் சேர்ந்து நாமும் கடைவதென முடிவான போதே அசுரர் குலம் ஒற்றர்களால் சூழப்பட்டுக் கொண்டார்கள். அவ்வொற்றர்களின் ஒருவனிடமிருந்து செய்தி யொன்று பிறந்தது.

*திருமாலும் தேவேந்திரனும் உடன்படிக்கை செய்து கொண்ட ரகசிய குறிப்பு அது.*

"இந்திரா!" வடவரையை மத்தாக்கி பாற்கடலை கடைவதற்கு வாசுகியைக் காட்டிலும் வலிவுள்ள நாண் வேறொன்றும் கிடையா. பேராற்றலுக்கொரு வடிவம் கொடுத்தால் அதன் பரந்த விரிந்த மார்பில் யக்ஞோபவீதமாய் புரளக்கூடியவை அவை. பூமியை மழலையாக்கி எண்திசை யானைகளுடன் எதிர்க்க விட்டால் பூமிக் குழந்தையின் அரைஞாண் கயிறும் அதுவே.

அமரேசா!" உயிரினங்களில் எது தன் உச்சம் தொடுகிறதோ, அதுவே நான்.  யானைகளில் ஐராவதமாயிருக்கும் நான், நாகங்களில் வாசுகியாய் இருக்கிறேன். நாகமெனும் உயிர்வகையின் நிகரிலா உச்சம் வாசுகி.விண்டுரைக்க மாட்டாத குண்டலினியின் அசைவு வாசுகியின் அசைவே.

வாசவா!" நிலைபேறுடைய அமுதத்தை நீங்கள் பருக தன்னை ஒப்புக் கொடுக்கும் வாசுகியின் வல்லமை உங்கள் கைகளிலும் திரள வேண்டுமானால் அதற்கான வழியொன்றும் இருக்கிறது. பாற்கடலை கடையும் பொழுது முன்னதாகவே சென்று முதன்முதலாக வாசுகியின் தலைப்பகுதியைப் பற்றியிழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் வாசுகியினை கடைந்திழுக்கும்போது அதன் கண் ஒளியைக் காண்போர் சர்வ வல்லமை பேறு கிடைக்கப் பெறுவார்கள்.

சாச்சினா!" இன்னொன்றையும் தொிந்து கொள்ளுங்கள். வாசுகியை வாகமாக கொண்டிருப்பவள் அமுததேவி. வாசுகி பார்க்கின்ற திசையிலேதான் அவளும் திரள்வாள். ஆக முன்னதாக சென்று வாசுகியின் தலைப்பாகத்தை கைப்பற்றியழுத்திப் பிடித்துக் கடைந்து கொள்ளுங்கள். அசுரர்கள் முந்துக் கொண்டால், அவர்கள் உண்ட எச்சில் அமுதத்தை ஏந்திப் பருக வேண்டியவர்களாவீர்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை!! மிகவும் எச்சரிக்கை!!!"

ஆயிரஞ் செவிகள் கொண்ட ஆதிசேஷனைக் காட்டிலும், அதைவிட அதிக செவிகள் கொண்ட அசுரர்குல ஒற்றன் ஓடிப்போய் தம்பட்டமடித்தச் இச்செய்தி, அசுரர்களை ஆனந்தக் கூத்தாடச் செய்தது.

நிமிர்ந்த மேருவில் நாணான வாசுகியை முறுக்கி சுழற்றி கட்டப் பட்டது. இதுதான் சமயமென அதன் தலைப்பகுதியைப் பாய்ந்தோடி வந்து அழுத்தி வளைத்துப் பிடித்துக் கொண்டார்கள் அசுரர்கள்.

அதிர்ந்து போன இந்திரனின் செவிமடுத்தசொல்லை துளியும் கேளாது போயினர் அசுரர்கள்.
வெற்றிமுனையை பிடித்த உணர்வு போல முழு வல்லமையுடன் கடையத் தொடங்கினர் அசுரர்கள்.

அசுரர்கள் இழத்துக் கடைந்த வேகத்திற்கு, இணையாக அமரர்களால் கடைந்திழுக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு முறையும் யுத்தம் நடக்கும் போதெல்லாம் உயிர்ச் சேதம் என்னமோ தேவர்களுக்குத் தான் அதிகமாகவே இருந்து வந்தது.

அமுதம் கடைந்து பிழியப்பட்டு வரும்போது பருகிவிட்டால் மரணமிலாப் பேரின்ப பெரு வாழ்வு பெற்றிடலாம் என்று திருமால் நான்முகனுக்குத் தந்த அறிவுறுத்தலின் படியே பாற்கடல் கடையப் படுவதென்றும், அந்தப் பணியில் அந்தப் பணியில் அசுரர்களும் பங்கு பெறுவதென்றும், உருவான உடன்படிக்கை உயிர் பெற்றுக் கொண்டிருந்த வேளை அது.

ஊழியின் எல்லை வரைக்கும் உயிர்தரிக்க வைக்கும் அமுதம் தங்கள்  நாவினைத் தீண்டும் நாழிகை நெருங்கி வந்து விட்டதென்று பரபரப்புடன் வாசுகியை கடுஇறுக்கமாக கடைந்தனர் அசுரர்கள்.

வாசுகியின் நாண் மேரு மீது உராய தீத்தணல் அணல் பறந்தது. அழுத்தமான வேகமெடுத்து இழுத்த இழுவையினால் வாசுகியின் தேகம் வலி தினவெடுத்தது.  அந்த வலியின் வேதனையில் வாசுகியின் கண்களில் தெரிந்தது தெறித்தது.

அசுரர்கள் கடைய கடைய ஆகாயத்திலிருந்து பேரிடி தோன்றின போல, பூமி இரண்டாய் பிளந்தன போல,  பேரொலி ஓசை கேட்க்...................

அமிர்தம்!...அமிர்தம்!!....அமிர்தம்...........அமிர்தம்!!!!"

கடைந்ததில் முதல் பிரவாகமெடுத்து வந்தது புது நஞ்சு.

அதே நேரத்திலும் தன் உடலுமுறுக்கில் தாங்கொண்ணாத வலி வந்த வாசுகியும் தன் நஞ்சை வெளித் தள்ளியது. வானமுதமென எதிர்பார்த்திருந்த வாய்பிளந்த, அசுரர்கள் நஞ்சின் பேரலையில் கருகிச் சாய்ந்தனர். பாதங்கள் ஒடிந்தொழிய ஓடியவர்கள் நாலா திசைகளிலும் திசை காணா முட்டி மோதி நிலத்தில் வீழ்ந்தனர்.

பிறந்த புது நஞ்சு, இறுகப்பெருகி வந்த பெருநஞ்சு, உருக்கி வந்த வேகத்தில் அமரர்கள் குவித்து கூப்பிய கைகளுடன் கயிலால திசை நோக்கி அபயக் குரலெழுப்பினாா்கள்.

அந்நேரம் வானில் வெளிச்சக் குழம்பு. அது எல்லையில்லா தொலைவு விரிந்து பெருகி பரவியது.

*அவனே ஆதிநாதன்!*
*அவனே அணுக்கத் தோழன்!*
*அவனே சிவமேயாகிய சுந்தரன்!*
வெளிச்சக் குழம்புவிலிருந்து தோன்று வந்து கொண்டிருந்தான்.

வந்த வேகத்தில் பெருகி வந்த நஞ்சை, சிவமேயாகிய சுந்தரத் திருக்கரங்கள், பெருக்கெடுத்து திரண்ட நஞ்சை ஒன்றுதிரட்டின. துளியும் சிதறாது, மீதமுமிறாது ஆலகால விஷத்தை உள்ளங்கையில் தேக்கிப் பெற்றுச் சென்றார் ஆலால சுந்தரன்.

*ஆலால சுந்தரா வணக்கம்!*
*ஆதிநாதா சுந்தரா வணக்கம்.* என்று பேரொலி கொண்டு வணங்கினார்கள் தேவர்கள்.

என்ன நிகழ்ந்தென அறியா வண்ணம் நீங்கப் பெறாத மயக்கத்துடன் இருந்த அசுரர்களை, தேவர்கள் அங்குமிங்குமாய் புறந்தள்ளி ஆனந்தக் கூத்தாடினார்கள்.

அள்ளிச் சென்ற ஆலகால நஞ்சை தழும்பாமல், சிதறாமல் பெருமானின் கரங்களில் இருக்க, சிவந்த கைகளில் கருநஞ்சை ஏந்தியிருந்த கண்ணுதற் கடவுள், யாரும் நினைந்திராத வண்ணம் அந்த ஒரு நொடியினில் நஞ்சை அருந்தியுண்டார். கண்டுவிட்ட அமரர்குலம் வியந்து நடுங்கிப் போனது.

நஞ்சுண்ட அடுத்த ஒரு நொடியும் கூடிவிடாது, பெருமானின் தொண்டையை அழுத்தி மிடற்றி இறுக்கியது வடிவாம்பிகையின் வளைக்கரம்.

வாரிதி தந்த நஞ்சை வாரியுண்டருந்திய பெருமானின் திருமிடறு நஞ்சின் வேகம் கருகறுத்தது.

அதே நேரம் அம்பிகை தொண்டையைப் பற்றி நிறுத்திய பரிவால் நஞ்சின் வேகம் உள்ளீரம் குளிர்ந்து மணத்தது.

அருந்தியுண்ட நஞ்சு அமுதமாகிப் போனது. அம்பிகையின் கரத்தால் நஞ்சு அமுதமாகியதால், அம்பிகையின் திருமுகத்தை தொட்டு நிமிர்த்தி, பாற்கடலை நோக்கி சுட்டுவிரல் நீட்டி சுட்டிக்காட்டினார் இறைவன்........
    
*அங்கே!"*
......................,,,,,,,?,,,????,,,,,,,,??????

இறைவன் சுட்டிய பாற்கடலில் இனியென்ன????????......நாளை வ(ள)ரும்.

*வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல்*

*சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா*

*ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும்*

*இளம் பிறை சேர்ந்த நுதலன் களங்கனி*

*மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன்!*

        திருச்சிற்றம்பலம்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
      🍁 *திருக்கடவூர்.* 🍁
                     *(3)* 
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
ஆலகாலம் பெருகிய சுவடேயன்றி நிசப்தமாயிருந்த பாற்கடலின் மையப் பகுதியில் திடீரென மேருவை உராய்ந்து திருகி மேலெழுந்தது பேரலையொன்று.

பால்நுரைகளில் மிதந்த பதுமலர் மேலே பொன்னிறத் திருமேனி பேரொளி போல் வீசியது. மின்னற் கொடி போலும், முத்துச்சுடர் போலும் தென்றல் நடைபோலும் தேனின் மழைபோலும் அலைமகளாம் திருமகள் அசைந்து விரைந்து கரை வந்தாள்.

கரையிறங்கிய கருமுகில்போல் கனிந்துநின்ற கார்வண்ணனின் கண்கலந்த விநாடியில் செம்மை கன்னங்களில் கோலமிட ஒசிந்து நின்றாள் திருமகள்.

அந்நேரம் பாற்கடலிருந்து மெல்ல மெல்ல மேலெழுந்தன அரிய அற்புதங்கள். ஆனைகளின் வடிவான ஐராவதம், பசுக்குல காமதேனு, குதிரை வர்க்க உச்சைர்வம், விருட்சங்களின் அற்புதமாகிய கற்பகம், இவைகளுடனே சிந்தாமணி, கெளஸ்துப மணி, சூடாமணி ஆகியவை ஒவ்வொரு முறயும் ஒவ்வொன்றாய் வெளிப்பட்டு வந்தது. கரையோரமெங்கும் ஆனந்தம் பொங்கிய ஆரவாரம் நில்லா ஒலித்தன.

வானில் மெல்ல மெல்ல நட்சத்திரங்கள் மின்னின. தகதகவென பூரண நிலவு பால்போல பொங்கிப் பொழிந்தன. மரணமிலாப்  பெருவாழ்வின் மாமருந்தாய் வானவர் தம் பெருவிருந்தாய் கிளர்ந்தெழுந்த அமுதக்கலசத்தை தாங்கி முன் வந்தார் அப்சா.

இதுவரை நடந்த யுத்தங்களில் அசுரர் குலம் பெருத்ததாயும், அமரர்கள் கூட்டம் சிறித்ததாயும், இருந்த நிலை மாறி ஆலகால நஞ்சும் வாசுகியின் நஞ்சும் வெளியானதில் அசுரர்களில் பெரும் கூட்டத்தினர் அழிந்தொழிய மிகச் சொற்ப மானவர்களே எஞ்சியிருந்தனர். அந்த எஞ்சியவர்களில் ஒருவன் ஆவேசம் தலைக்கேறியதோடு திருமாலை நோக்கி பாய்ந்து வந்தான்.

வாசுகியின் தலைப்பகுதியை பிடித்திழுத்து கடைந்தால் அமுதம் வந்து சேருமென்று தேவர்களுக்கு நீதான் சொன்னாய். இவ்வரகசியத்தை தெரிந்து கொண்ட நாங்கள் தலைப்பகுதியை திரண்டு பிடித்தோம். ஆலகாலம் பெருகி வந்தது. அசுரன் முடிவுக்கு முன் அமரர்கள் பக்கமிருந்து ஆரவாரச் சிரிப்பு வந்தன.

முட்டாள் அரக்கனே!" உன் சூழ்ச்சி நிலையறிந்து, ரகசியம் என்பது போல உணக்கு உணர்த்தவதற்காக, திருமால் அதை ரகசியம் போலச் சொன்னார். அதில்  ரகசியம் ஏதும் இல்லை. அது உங்களுக்கு நீங்களே விரித்த வலை.

ஒன்றுமே செய்ய முடியாதென ஆற்றாமையால் அமுதக் குடத்திலாவது உரிமைப் பங்கை பெற்று விடுவதென முடிவெடுத்தனர் அசுரா்கள்.

எல்லாம் முடிந்ததும் அமுதம் கிடைக்க துணைசெய்த மேருவையும், வாசுகியையும் வரிசையாக வந்து வழிபட்டாா்கள் தேவர்கள்.

நடந்ததெல்லாம் ஏதோதொரு வியப்பே? என வியந்தவர்களை பாா்த்துச் சொன்னார் திருமால்.......,,,,

*"பாற்கடலினடியில் மேரு ஊன்றிருக்க அது நிலைநின்று ஒவ்வொரு சுற்றுக் கடைசலின் போது சறுக்க, நானே ஆமை வடிவெடுத்து கடலாழம் புகுந்து மேருவை நேர் செய்து தாங்கினேன். அதன்பின்தான் மேரு நிலை கொண்டு சாியானது என திருமால் மலர்ந்தருளினார்.

அது போதும்!" *"எங்கள் பங்கு அமுதம் எங்கே?"* காலந்தாழ்த்தியது போதும்!" *"அமுதத்தை பங்கிடுங்கள்"* கூச்சலிட்டார்கள்......அசுரா்கள்.

செய்வதறியாது திகைத்தனர் தேவர்கள். திருமாலைத் தேடிப் பரபரக்க அசுரர்களின் செவிகளில் அமுதமாய் கேட்டன சலங்கையொலியை. ஒலி வந்த திசையை நோக்க கண்களில் மோகக் கனல் தீ பற்றின.

தரையிலிறங்கி குளிர்நிலவாகத் தளுக்கி தளுக்கி நடந்து வந்தாள் மோகினியொருத்தி. புதைந்து கிடந்த பேரழகு, புண்முறுவல், சுந்தரவன பொன்னழகு, இவ்வளவும் கண்ட அசுரர்கள் நெஞ்சம் தடுமாறினார்கள் அசுரர்கள். அசுரர்களுக்கு காமப் பித்து பிறந்து உழன்றனர். மோகினியின் மோகப் பாா்வை மட்டுமே அசுரர்கள் கண் முன் நின்றன. அந்தப் பாா்வையினால்  மோகினியின் பின்னே நடந்தார்கள் அசுரர்கள்.

'நடமாடும் அமுதமா இதானிருக்க!"........ குடத்திலமிழ்ந்திருக்கும் அமுதமெதற்கு?".......என்றான் அசுரர்களிரொருவன்.

'ஆமாம்!" பேரழகான கனியிதழ்களை காணுங்கள்!" அதில் தேனும் பாலும் கலந்திணைந்திருக்கிறது!" இதைமடுத்து வேறென்ன  இனிமை இருக்குதோ?"....என்றான் மற்றொரு அசுரனொருவன்.

கண்கள் போதையாகி, கால்நடை தளரப் பின்ன பின்ன, மயக்கும் பேரழகியின் பின்னால் வரிசை கொண்டு போயினர்.

"அசுரர்களானவர்களே!" நான் வந்திருப்பது உங்கள் பங்கு அமுதத்தை வாங்கித் தரவே.! அமுதம் கிடைக்கும் வரை அமைதி காப்பீா்களாக!" என கிரங்கரிக்கும் குரலில் மோகினி கூறினாள்.

மோகினி ஏற்படுத்திய மாய கிரக்கத்தில் அவ்வசுரர்கள் மயங்கிக் கிடந்தார்கள். திருமாலெடுத்த மோகினி வுருவுக்கு மயங்கியவர்கள் அவர்கள் தெளிந்தெழும்வரை இருந்து, பின் தன் மாயத்தோற்றத்தினை விலக்கி தன்னுருவு கொண்டார்.

அமுதக் கலசத்தை மாா்போடணைத்து தன் விருப்பத்தின் வண்ணமே அமுதத்தை அமரர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் ஆவலாக வந்தவர், ஆலகாலத்தை அள்ளியுண்டு அமரர் குலம் காத்த ஆதிநாதனாம் பரமசிவனுக்கு நன்றி நவில விழைந்தார்.

எப்போதும்போல் தேவதேவர் இருவருடன் தேவர்குலம் முழுவதும் சிவ பூஜை புரிந்து அமுதம் உண்ணும் ஆவலுடன் திரும்பி வந்து பாா்த்தபோது அவர்களுக்கு பேரதிர்ச்சி!!!!!!!!!!,,,

அங்கே......

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
      🍃 *திருக்கடவூர்.* 🍃
                     *(4)*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
வாசுகியைக் கொண்டு மேருவைக் கடைந்த வேகத்தைக் காட்டிலும் பலமடங்கு கூடுதலாய் தேவர்களின் உள்ளங்களை  கலக்கம் கடைந்தது. அரிதின் முயன்று பெற்ற அமுதக்கலசம் அவர்களின் ஞான திருட்டிக்கும் அகப்படாத எல்லையில் இருப்பது மட்டும் தெரிந்தது.

அதிர்ந்து நின்ற அமரர் தலைவனை அருகே அழைத்தார் அச்சுதன்......."நாம் அவசரத்தில் தவறிழைத்து விட்டோம்...."ஆம்!" நாம் ஆனைமுகனை வணங்க மறந்ததால் வந்த விணையே அமுதக் கலசம் மறைந்து போகக் காரணம்.

இவ்விதம் சொன்னதும் தேவேந்திரனுக்கு சிரிப்பு வந்தது.....'அதலானென்ன? , அவர் தந்தஔயை வணங்கச் சென்றோம் என்று கூறினால் போதுமே! அமுதக் குடத்தை ஆனைமுகன் தந்துவிடமாட்டாரா? என்ன!..என்றார்.

அதிர்ந்து சிரித்தார் அத்துழாய் மார்பன். "நீ கணநாதனை குழந்தையென்று கருதிக் கொண்டிருக்கிறாய்.  முப்புரங்களை எரிக்கும் முனைப்பில், தன்னை வணங்காமல் புறப்பட்டார் என்பதற்காக சிவபெருமான் சென்ற தேரின் அச்சையே முறித்த அதிதீரர் ஆனைமுகத்தன். அவரை முறைப்படி பணிந்து மன்னிப்புக் கேட்டால் மனமிரங்குவார்."

ஆனைமுகத்தனைத் தேடி தேவர்குழாம் நாடிப் போனார்கள். ஆனைமுகன் கிழக்கு நோக்கி வீற்றிருந்தார். பெருத்த திருவயிற்றுடன் வளைந்த துதிக்கையுனுள் அமுதக் கலசம் பொதிந்து வைத்திருந்ததை யாராலும் கண்டு கொள்ள முடியவில்லை.

'விநாயகா!,......இவ்விடத்தில் கலசமொன்றிருந்ததே! அது  எங்கே உருண்டின கூறுங்களேன் என்றார் திருமால்.

அம்மானின் அகடவிகடம் அறிந்திருந்தும் ஏதுமெதும் தெரியாதவர் போல,  "என்ன குடம்? என்ன கலசம்?" எனறார் விநாயகன்.

'அடியார்களின் துயர் ஒழிப்பவன் நீ!"....உம் தும்பிக்கையைத் தொட்டுத் துதிக்கும் வரம் வேண்டி தவமியற்றியது தங்கக் குடமொன்று. அதனுள் உள் புகுந்திருக்கும் அமுதம் உன் பிரசாதமே!" அது தேவர்களுக்கு கிடைத்திடின் அதன் பலன் பலமடங்கு பெருகியருளுமே!"

மாலின் சூசகமான ஒளிந்திருந்த நயமான சொற்களைக் கேட்ட விநாயகன் சிரித்த முகத்துடன் துதிக்கையை அவர்கள் முன்னே நீட்டினார். நீட்டிய வளைந்த துதிக்கையில் பொதிந்திருந்த  பொன்குடமொன்று பிரகாசத்தோடு பேரொளி பரவ காட்சி தந்தது அமுதக் குடம்.

சங்கடம் போக்கும்  சசிவர்ணா! எங்கள்கண் பிழைகள் பொறுத்தருள வேண்டும்! பணிந்து வணங்கிய தேவர்களிடம் கனிந்து அருளாளியிருந்த நாபிக் கமலனை ரசித்து புண்ணகையித்தார் மால், அவர் திருமுன் வந்து நின்று, இதுவரை தீர கணபதியாகவே உன்னை வணங்கி வந்தோம்!", இனிமேல் உம்மை,சோர கணபதியென்றே அழைத்து வணங்குவோம் என்றார்.

*"கள்ள வாரணம்!*
*"கள்ள வாரணம்!* என்று கைகூப்பி தொழுத வண்ணம் அமுத பொன்குடத்தை உச்சி மோந்து சிருசு மேல் வைத்து வணங்கி நீங்கினர் தேவர்கள்.

தேவர்களுக்கு உண்டருள பரிமாறப்பட்ட அமுதத்தை பக்தியுடனும், பேராந்தத்துடனும் வடிந்தொழுக உண்ட தேவர்களை வரிசையாக கண்காணித்துக் கொண்டே வந்த மாலன்....

திடீரென அவ்விடத்தில் தன் பார்வையை அகலாது நிறுத்தினார். அவ்விடத்தில் அதைக் கண்டுவிட்ட அவனின் கமலக் கண்களின் பார்வை அவ்விடத்திலேயே நிலைத்து அகலாது நிற்க, பார்வை மேலும் கூர்மையானது.

அவர் கண்ட அவ்விடத்திலே இரண்டு ஜோதிப் பிழம்புகள் பரந்தாமனுக்கு எதையோ உணர்த்தி விட்டது.

*'அங்கே என்ன நடந்தது?"*

*புதிதாக ஒரு பிரட்சினை உருவானதோ?"*

*யாது.....????????....அது என்ன? *நாளை............பிரட்சினை*
*தெரியும்.*

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
       🌙 *திருக்கடவூர்.* 🌙
                     *(08)*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மனக்கவலையின் உச்சத்திலிருந்த மிருகண்டு முனிவரின் உள்ளம், தன் பாட்டனாராகிய குச்சகரை நினைத்தேங்கியது. மிருகண்டு முனிவரின் தந்தை மிருக கண்டூயர். அவருடைய தந்தைதான் குச்சகர்.

கடகம் எனப்படும் திருக்கடவூரில் வாழ்ந்தவர் அவர். தன் மகனுக்கு குச்சகர் இட்ட பெயரென்னவோ கெளச்சிகர்தான். பிரம்மச்சர்யப் பருவத்தில் பிரம்மம் தேடிப் பெருந்தவம் மேற்கொண்டார் கெளச்சிகர். ஊண் மறந்து துயில் மறந்து அசைவிலாத் தவத்திலிருந்தவரைக் கல்லென்று நினைத்து ஆவினங்கள் உரசிப் போயின. அத்தகைய கற்களுக்கு ஆதீண்டு குற்றியென்று பெயர்.

தன்னைக் கடந்த தவத்திலாழ்ந்த குச்சிகருக்கு, திருமால் தரிசனம் தந்தார். " *"மிருகங்கள் உன்னை உரசிப் போனதால் இனி உன் பெயர் மிருககண்டூயன். சிவபெருமானின் பூரண அருளுக்கு நீ பாத்திரமாவாய்"* என்றருளினார்.

அடுத்த படிநிலையாகிய இல்லறத்தில் தன் மகனை ஈடுபடுத்த நினைத்த குச்சகர், சோழ தேசத்தில் அநாமயம் எனும் வனத்திடையே ஆசிரமம் அமைத்து அருந்தவ வாழ்க்கை நடத்திய உசத்திய முனிவரின் உத்தமப் புதல்வியாம் விருத்தையை மகனுக்கு மணம்பேசினார். குச்சகர் அநாமயத்தில் தங்கியிருந்த காலத்தில் தோழியருடன் நீராடித் திரும்பும்போது மத யானை துரத்த, புதர் மூடிய கிணற்றில் விழுந்திறந்தாள் விருத்தை.

குச்சகர் கலங்கிட வில்லை. *"இவளின் மேனியைத் தயிலத்திலிட்டு வையுங்கள். இவளின் உயிரைத் தவம் செய்து மீட்பேன்"* என்று தனியிடம் புகுந்தார்.

எமனை நினைந்து தவம் புரிந்த குச்சகர் மருமகளின் உயிரை வரமாகப் பெற்றார். தைலமாடிய மயிலொன்று துயில்நீங்கி எழுவதுபோல் எழுந்தாள் விருத்தை. மிருககண்டூயருடன் விருத்தை நடத்திய இல்லறத்தில் பிறந்தவர் மிருககண்டு.

தவபலமும் அருள்பலமும் இயல்பாக வாய்க்கப் பெற்ற மிருகண்டு முனிவரின் மனைவி மருத்துவ வதி. இவர் முற்கல முனிவர் பெற்ற  பொற்கலம். அந்தப் பொற்கலத்தில் பிள்ளைக் கனியமுதம் வேண்டிப் பெருந்தவம் புரிந்தார் மிருககண்டு முனிவர். காசித்திருத்தலம் அடைந்து, கங்கைக் கரையோரம் மணிகர்ணிகையில் ஓராண்டு காலம் தவம்புரிந்த மிருகண்டு முன்னர் சிவபெருமான் தோன்றினார்.

"மிருகண்டு! உனக்குப் பிறக்கப் போவதோ ஒரு மகன்தான். அவன் திருமகனாய் விளங்க வேண்டுமா?" வெறும் மகனாய் இருக்க வேண்டுமா?" என்பது உன்கையில் இருக்கிறது.  வாணாளை வீணாளாய்க் கழிக்கும் பயனிலாப் பிறவியாய், பூமிக்கும் பாரமாய், பக்தி செலுத்தாத பாவியாய், நூறாண்டு வாழும் மகன் வேண்டுமா? சிவபக்தியில் சிறந்தவனாய், சீலங்கள் நிறைந்தவனாய், பதினாறாண்டுகளே வாழ்கிற மகன் வேண்டுமா?"

மறுவிநாடியே பதில் சொன்னார் மிருகண்டு முனிவர். *"பரமனே! உன் பனிமலர்ப் பாதங்களில் பத்திமை பூண்டு பதினாறாண்டுகளே வாழ்கிற  பிள்ளை போதும். மண்டிக் கிடக்கும் முட்புதரை விட, மலர்ந்து மணம்வீசி உன் மேனியில் விழுகிற மருக்கொழுந்து போதும். நெருடி வருத்தும் நெருஞ்சியை விட மலர்ந்து மறைகிற  குறிஞ்சி போதும்."*

கேட்ட வரமருளினார் கண்ணுதற் கடவுள். பயன் மிக்கதொரு பிறவியைத் தருவிக்க அன்று உதவிய திடசித்தம் இன்று தடுமாறியது மிருகண்டு முனிவருக்கு. சிவசிந்தனையும் மூத்தோர் வந்தனையும் உயிரியல்பாய்க் கொண்ட உத்தமச் செல்வன் மார்க்கண்டேயனுக்கு பதினாறாம் அகவை நெருங்கி வந்த தருணம். மருகினார் மிருகண்டுவும், மருத்துவ வதியும்.

பெற்றோரை உற்று கவனித்து வந்த மார்க்கண்டேயனுக்கோ உள்ளூர மனதில் ஏதோ உறுத்தியது. தன்னை நேரே கண்டால் மகிழ்வதும் தனியிடம் வந்து அழுவதும் அதிகரிந்துக் கொண்டே வருகிறதே!

தந்தையிடம் திரும்பத் திரும்பக் கேட்டபோது தயங்கித் தயங்கி உண்மையைச் சொன்னார் மிருகண்டு முனிவர். மாா்க்கண்டேயர் முகத்தில் முறுவல் மலர்ந்தது.

"தந்தையே! உங்கள் பாட்டனார் குச்சக முனிவர் செய்த தவம், மரணமடைந்த உங்கள் அன்னையின் உயிரை மீட்க வில்லையா? பரமன் அருளால் மரணத்தை வெல்வது நம் பரம்பரைப் பழக்கம்.  கவலை வேண்டாம். இன்று தொட்டு, நூற்றெட்டு சிவாலயங்களை வழிபட்டு சிவப்பரம் பொருளின் அருள்பெற்று தங்களிடம் திரும்முவேன்.".....மைந்தனின் மனவுறுதியில் மகேசனே பேசுவதாய் உணர்ந்தார் மிருகண்டு முனிவர். சிவாலயக் கோயில் சென்று வர மகனுக்கு விடை கொடுத்தனர் பெற்றோர்.

காசியிலிருந்து புறப்பட்ட மார்க்கண்டேயர் ஒவ்வொரு தலமாய் ஒப்புயர்வற்ற சிவவழிபாடு நிகழ்த்தி, சிவசிந்தனையிலும் சிவதரிசனத்திலும் சித்தம் குளிர்ந்து வந்து கொண்டிருந்தார் மார்க்கண்டேயர். அன்று மஹா சிவராத்திரி. தன்னுடைய சங்கல்பத்தில் மார்க்கண்டேயர் வந்து சேர்ந்த நூற்றியெட்டாவது திருத்தலமாக திருக்கடவூர் வந்தார்.

முக்கண் முதல்வனுக்கு மூன்றாம் சாம பூசனையினை மனமுருகிச் செய்து கொண்டிருந்தார் மார்க்கண்டேயர். மனமுருகி சிவபூஜை செய்து தொழுது கொண்டிருந்த மார்க்கண்டேயரின் செவிகளில் குதிரைகளின் காலடிக் குழம்புச் சத்தம் கேட்டது. எந்நேரமும் சிவத் தியானத்தில் இருக்கும் மார்க்கண்டயரைப் பலமுறை அணுக முயன்று தோற்ற எமதூதர்கள் மீது சினம் கொண்ட கூற்றுவன், தானே சூலாயுதம் ஏந்தி, பாசமும் பற்றி எருமைக்கடா மீதமர்ந்து எரிதழலனைய கண்களில் சினம் கனல சிவசந்நிதி நோக்கி வந்து கொண்டிருந்தான்.

*"அரும்பரம்பொருளே! அபயம்! அபாயம்!!*

*ஆலமுண்டவனே! அபாயம்! அபாயம்!!*

*கருவருவித்தாய்! அபாயம்! அபாயம் !!*

*கருணை வடிவே! அபாயம்! அபாயம்!!* என்று மார்க்கண்டேயர் அழுதார் .....அரற்றினார்......புரண்டார்.......,,,,,,,

எமனா?......மார்கண்டேயனுக்கு என்ன,விளைந்தது!....

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

       🌻 திருக்கடவூர். 🌻

                         (5)

அங்கே பார்த்த பார்வையில் இரண்டு ஜோதிப் பிழம்புகளை அவர் கண்டதும், அவருக்கு எதையோ உணர்த்த பார்வையைக் கூர்மையாக்கினார். 


சந்திர சூரியரே அந்த சூரியப் பிழம்புகள். இருவருக்குமிடையே ஒரு மாயத்தோற்றம். அமரர் போல் வேடமிட்டுக் கொண்டிருந்தனர். 


அசுரர்குலத் தோன்றலாகிய ராகுவை அடையாளம் கண்ட மாலன் சிறிதும் தாமதிக்காமல் தன் சக்ராயுதத்தை ஏவினார். தலை துண்டாகித் தரையில் வீழ்ந்தான் ராகு. 


ராகு கீழே விழுந்தானொழிய, அவனுயிர் அவனைவிட்டொழியவில்லை. சக்ராயுதம் தலையைத் தான் பிரித்ததே தவிர அவன் மாண்டு போகவில்லை. காரணம்",...அவன் அமுதம் உண்டருந்தியிருந்தானே!" ஆக அவனுக்கு மரணமேது?...


வல்லமை மிக்க நாகமொன்றின் தலையைத் துண்டித்து, அதனுடலில் ராகுவின் தலையையும், ராகுவின் உடலில் அந்த நாகத்தின் தலையையும் பொருத்தி விட்டார் மாலன். 


அமுதத்தை உள்ளீடாய் அருந்தியிருந்த இந்த இருவரே ராகு கேது ஆனார்கள்.


சந்திர சூரியரை வஞ்சம் தீர்க்க வஞ்சினம் உரைத்து வெளியேறிய ராகு கேதுக்களையே வெறித்துப் பார்த்த மாலன், பால் வீதியை நிமிர்ந்து பார்த்ததும் புன்னகை புரிந்தார். அந்தப் புன்னகையிலோ ஆயிரமாயிரம் அர்த்தங்கள் புதைந்திருந்தன.


அமிர்தம் உண்டருந்தி நிமிர்ந்த அமரர்களின் கண்களில் அலையலையாய் மின்னல்கள் ஒளிச்சிதரல்கள் தோன்றின. பக்திப் பெருக்கொண்டு தானாகவே கைகள் உயரெழும்பி தலைமேல் குவிந்தன. அவர்களுக்கான அமுதத்தைத் தாங்கித் தந்த குடம் பூமியுடன் அழுந்தி அழகான லிங்கத் திருமேனியுரு பொலிந்தது. கலகலவென வெங்கல மணியோசைகள். பரபரவென்று பஞ்ச வாத்திய முழக்கங்கள். ஹர ஹர வென சிவாய மந்திரங்கள் மலர்ந்தன. நான்கு மறைகள் நின்று "நமசிவாய" வென முழக்கங்கள் அதிர்ந்தன. பஞ்ச பூதங்களிலும் கலந்தொலித்தது பஞசாட்சர மந்திரம்.


பிரபஞ்சத்தின் மூலமாய், புரிதல் கடந்த ஞானமாய், ஆலகாலம் உண்ட அமுதமாய், அருவுருவாய் நின்ற அமுத கடேசனை தேவரும் யாவரும் பணிந்தனர்.


ஹர ஹர சுந்தரம்!"

"ஹர ஹர சுகானந்தம்"  என வாழ்த்தொலி புவனமுழுவதும் வியாபித்தது. 


நெடிதுயர்ந்த செழுஞ்சுடரை நெருங்கி இழைந்த நீலச்சுடர் மாலன் கேட்டார்..............,


"நாதா!"....... இந்நாடகம் நிகழ்ந்தேற இந்த சம்பவங்களின் தாத்பர்யத்தை நான் தெரிந்து கொள்ள முடியுமா?


"சியாமளா!"....ஒரு வித்து தன்னை விரித்தோங்கெழும்போது, அது "மா" விருட்சமா வெளிக்கொணர்ந்தாகப்படும். இதுவே நம்முன் ஒரு சம்பவமாக நிகழும்போது, அந்த சம்பவத்துனுள் பொதிந்துள்ள மூல தத்துவம் புலர்ந்து வெளிப்படும். ஒவ்வொரு உயிரிலும் அமுதம் உள்புகுந்திருக்கும். அதை அடைந்து வெளிக் கொணரப்படுவதே பிறவிப்பிறப்பு. 


வாசி வழியாக மேருவாக முதுகெழும்பாகக் கொண்டு கடையப்பட்ட போது வினைக் கட்டுகள் கசந்து நஞ்சாக பிறந்தது. வெளியுடலும் உள்மனமும் இரண்டுக்குமுன்டான உயிர்பாலம் ஒன்றாகப் பொருந்தி ஆமைத்தன்மை ஐம்புலன் அடங்கி உள்முகமாக ஒடுங்கிட அமுதம் உயிரெழும். நாடிகள் அனைத்தும் அமுதம் பெருக உடம்பு அமுதக் குடமானது.


புலனடக்கத்தின் குறியாய் கூர்ம வடிவெடுத்த மாலன் அமுதம் உயிர்ப்பெற  பெருந்துணை புரிந்தார். இந்த வாசியோகத்தின் சூட்சுமம், 'கூர்மநாடி' எனவழைக்கப்படும்.


ஓங்காரம் ஒற்றை எழுத்தல்ல!. அது பிரபஞ்ச உருவாக்கத்தின் மகாமந்திரம். 


கணபதியிடம் அமுதக் கலசம் ஒளிந்திருந்தது போல

*ஓங்காரத்தினுள்ளே அமுதத்தின் ஊற்றுக்கண் ஒளிந்திருப்பதை உணர்த்துவதே கள்ள வாரணத்தின் தாத்பர்யம்.


அமுதம் நிறைந்த குடம் லிங்கத் திருமேனியாய் வடிவெடுத்த தலம் தான் திருக்கடவூர் என போற்றப் பெற்ற திருத்தலம்.


பாற்கடல் கடைந்தபோது அமுதம் ஏந்தி சுமந்து வந்த அப்சா, தன்வந்தரியாகத் தோன்றி மருத்துவத்தின் அதிதேவதையாக விளங்கட்டும்.


பாற்கடலில் வெளிவந்த திருமகள், தன் திருவுளம் கவர்ந்த, மாலனை கரம்பிடிக்க சங்கல்பம் மேற்கொண்டுள்ளாள். திருவாரூர் அருகிலுள்ள திருக்கண்ணமங்கையில் தவம் செய்து மாலை மணம்புரிவாள்.


கூலினி! தலை மாறிய ராகு, கேதுவுடன் இணைந்து உன்னுடைய அம்சமாகிய துர்க்கையை நோக்கித் தவம் செய்வானாவான். அவளருளால் இருவரும் மனித வாழ்வின் போக்குகளை நிர்ணயிக்கும் ஒன்பது கிரகங்களின் வரிசையில் இரண்டு கிரகங்களாய் இடம் அடையப் பெறுவர். ராகுவுக்கு துர்க்கை அருள் புரிவாள். 


அபிராமி! ஒவ்வொரு மனிதனும் உள்முகமாய்க் கடைந்து  கரைசேரும் தலம் திருக்கடவூர்


பிறவிக்கடலிருந்து கடைத்தேற்றுவதால் இது திருக்கடையூர் எனவாகும் எனச் சொல்லி முடித்தார் செழுஞ்சுடர் ஈசன்.


சொல்லி முடித்த சடர்களிலிருந்து சடசவென பொறிகள், பிரபஞ்சத்தின் ரகசிய முதல் இழை பிடிபட்ட பெருமிதத்தில் மேலெழும்பியது. அது நட்சத்திரக் கூட்டத்தின் நடுவே போய் சேர்ந்தது.


இவ்வளவும் மாலனிடம் ஈசன்சொல்லி முடிக்க......

அங்கே........

நான்முகனுக்கும், வேறொருவருக்கும் சலசலப்பு

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

         🌙 திருக்கடவூர். 🌙

                    (07)

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

வாயிலருகில் வந்து நின்று கொண்டான் நான்முகன். 


"என்ன சுவாமி!" நந்திகேசுரர் வேலையை நான்முகனுக்குக் கொடுத்து விட்டீர்களா?" உமையவள் ஈசனிடம் கேட்க...,,,,


"இல்லை,தேவி!, எனக்குப் பக்கபலமாக நிற்பவர்கள் பஞ்ச நந்திகள். யானவன். உன்னையும் என்னையும் பூவுலகிற்குச் சுமந்து செல்லும் பணியை இந்திரன் வேண்டி நந்தி வடிவெடுத்தான்.  அவன் போக நந்தி யானவன். ஒவ்வோர் உயிருமே நந்தியின் அம்சமென்பதை உணர்த்தும் விதமாக பிரதோஷ திருநாளில் பூசை பெற்று என் ஆலயக் கொடி மரங்கள் அருகே நிற்பது ஆன்ம நந்தி யானவன். 


திரிபுறங்கள் எரிக்கக் கிளம்பிய போது மாலன் என் வாகனமாய் வந்தார். மைத்துனக் கேண்மையால் மனம் விரும்பி வந்தவர் மால்விடையாய் விளங்குகிறார். ஊழி முடிவில் உயிர்களெல்லாம் என்னில் அடங்கிய பின்னரும் உடனிருக்கும் இடபமாகிய நந்திகேசன் தரும நந்தி யானவன். உபதேசம் பெறும் விருப்பத்துடன் என்னைச் சுமக்க சித்தமாய் இருக்கும் நபீஜனாகிய நான்முகன் பிரம நந்தி யானவன் என்றார் ஈசன்.


பிரம்ம நந்தியின் பணிவிடை துவங்கியது. நாழிகைப் பொழுது போல் நாட்கள் நகர்ந்தன. பிரமனுக்குப் பெருமான் உபதேசிக்கும் நாள்தான் கனிந்து வரவில்லை. சரியான நேரம் பார்த்து சக்திலீலை துவங்கியது.


"எல்லாம் சாிதான் பிரபு!" உங்களை குருமூர்த்தியாய் வணங்க வந்துள்ள பிரம்மா திரிமூர்த்திகளில் ஒருவரல்லவா?" அவருக்கு உபதேசம் செய்ய இன்னும் காலம் தாழ்த்தலாமா?" நான்முகனுக்கு பரிந்துரை செய்தாள் உமையவள்.


உமையே!" பக்குவம் வரும் வரை பொறுத்திருப்பேன் நான்!. நீயோ" பரிவுகாட்டி அவசரப் படுத்துகிறாயே!" என செல்லச் சினுங்களுடன் சொன்னார் சங்கரன்.


"நாயகியின் ஆணைக்கு மறுப்பேதுமுண்டோ?" சாி என்ற ஈசன், நான்முகனை வரச் சொல்!" என்றார். நந்திகேசனை ஏவினார் நம்பீசன். வந்து நின்ற நான்முகன் கரங்களில் கைநிறைய எதையோ அள்ளித் தந்தார் பெருமான்.


"சதுர்முகனே!" இவை வில்வ விதைகள். எந்தத் தலத்தில் இதை விதைத்தபின் ஒரு முகூர்த்தத்துக்குள் முளை விடுகின்றனவோ, அந்தத் தலத்தில் யாம் உமக்கு உபதேசிப்போம்." எனக்கூறி விடை கொடுத்தனுப்பினார் நான்முகனுக்கு பெருமான்.


ஒவ்வொரு தலத்திலும் விதையூன்றிப் பார்த்தான் வாணிகாதலன். முகூர்த்தப் பொழுதுகள் கரைந்தொலிநத்தேயொழிய விதை முளை விடும் அறிகுறி தென்படவேயில்லை. தற்காக அவன் மனம் தளரவில்லை. எப்படியும் ஒரு நாள் தன் விருப்பம் நிறைவேறும் என்ற எண்ணத்தோடு தலங்கள் கடந்து வந்த நான்முகனின் பாதங்கள் திருக்கடவூர் எல்லையைத் தொட்டன.


"மந்திரோபதேசம் கேட்ட பிரம்மாவின் கைகளில் மகா வில்வ விதைகள் கொடுத்த மர்மமென்னவோ?" ....சிப்புடன் கேட்டாள் உமை.


கொன்றைவார் சடையான் இதழ்களிலோ குமிழ்சிரிப்பு. "என்னை நோக்கி தவம் செய்யும் போதெல்லாம் வில்வம் கொண்டு அருச்சிக்கும் வழக்கத்தை வழங்கியவள் நீதானே! வித்தகி! உலகிலுள்ள தாவரங்களிலே எனக்கு மிகவும் உகப்பானது வில்வமே.


வில்வ இலைகளிலுள்ள மூன்று முகங்கள், என் *மூன்று கண்களையும்,  என் கரத்திலுள்ள திரிசூலத்தையும், மூன்று காலங்களையும் உணர்த்துபவை. மும்மூர்த்திகளையும் வில்வத்தின் வடிவில் தரிசிக்கலாம்.  நந்திகேசனுக்கு ஒரேயொரு வில்வத்தை அர்ப்பணித்து வணங்குபவர்களின் பாவங்கள் நீங்கும். ஆயிரம் யானைகளை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும். நூறு வேள்விகள் நடத்துவதில் கிடைக்கப்பெறும் பலாபலன் உண்டாகும். கோடி கன்னியர்களுக்குத் திருமணம் செய்வித்த நல்பலன் கிடைக்கும். வில்வார்ச்சனையால் விளையும் வில்வம் திருமகளின் அம்சம்.


இலகுவான இப்பச்சிலையைக் கொண்டு எனை அர்ச்சிப்பது யாவருக்கும் எளிதானவை. அதனால் விளையும் பலாபலன்கள் இமயமலையினும் பெரிது. சிவார்ச்சனைக்கு உகந்ததால் மஹா பத்ரமாகவும், அரு நோய்களைத் தணிப்பதால் மஹா மூலிகையாகவும் விளங்கும் இவ்வில்வம்.


சடாஷரி! சதுர்முகனின் விருப்பம் முளைவிடும் நாள் இன்று. திருக்கடவூரில் அவன் விதைக்கும் வில்வ விதைகள் ஒரு முகூர்த்தத்துக்குள் முளைக்கும். எனவே இந்தத் தலத்துக்கு வில்வ வனம் என்னும் பெயரும் உண்டாகும். திருக்கடவுருக்கு வில்வமே தல விருட்சம். வில்வநாதர் எனும் பெயரில் திருக்கடவூரில் தனியிடம் கொள்வேன்.


பெருமானின் மலரிதழ்கள் அருளும் மந்திரச் சொற்களுக்கு நிகரான  மகிமை வாய்ந்த மகாவில்வ விதைகள் ஒரு முகூர்த்தத்துக்குள் முளைத்தன. பிரபஞ்ச பேரியக்கம் எனவான பேருண்மையின் சூட்சுமத்தை திருக்கடவூரில் பிரம்மாவுக்கு போதித்தன இரண்டு பெரும் அருட்சுடர்கள்.

.¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

       🌙 திருக்கடவூர். 🌙

                     (08)

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

மனக்கவலையின் உச்சத்திலிருந்த மிருகண்டு முனிவரின் உள்ளம், தன் பாட்டனாராகிய குச்சகரை நினைத்தேங்கியது. மிருகண்டு முனிவரின் தந்தை மிருக கண்டூயர். அவருடைய தந்தைதான் குச்சகர்.


கடகம் எனப்படும் திருக்கடவூரில் வாழ்ந்தவர் அவர். தன் மகனுக்கு குச்சகர் இட்ட பெயரென்னவோ கெளச்சிகர்தான். பிரம்மச்சர்யப் பருவத்தில் பிரம்மம் தேடிப் பெருந்தவம் மேற்கொண்டார் கெளச்சிகர். ஊண் மறந்து துயில் மறந்து அசைவிலாத் தவத்திலிருந்தவரைக் கல்லென்று நினைத்து ஆவினங்கள் உரசிப் போயின. அத்தகைய கற்களுக்கு ஆதீண்டு குற்றியென்று பெயர்.


தன்னைக் கடந்த தவத்திலாழ்ந்த குச்சிகருக்கு, திருமால் தரிசனம் தந்தார். " "மிருகங்கள் உன்னை உரசிப் போனதால் இனி உன் பெயர் மிருககண்டூயன். சிவபெருமானின் பூரண அருளுக்கு நீ பாத்திரமாவாய்" என்றருளினார்.


அடுத்த படிநிலையாகிய இல்லறத்தில் தன் மகனை ஈடுபடுத்த நினைத்த குச்சகர், சோழ தேசத்தில் அநாமயம் எனும் வனத்திடையே ஆசிரமம் அமைத்து அருந்தவ வாழ்க்கை நடத்திய உசத்திய முனிவரின் உத்தமப் புதல்வியாம் விருத்தையை மகனுக்கு மணம்பேசினார். குச்சகர் அநாமயத்தில் தங்கியிருந்த காலத்தில் தோழியருடன் நீராடித் திரும்பும்போது மத யானை துரத்த, புதர் மூடிய கிணற்றில் விழுந்திறந்தாள் விருத்தை.


குச்சகர் கலங்கிட வில்லை. "இவளின் மேனியைத் தயிலத்திலிட்டு வையுங்கள். இவளின் உயிரைத் தவம் செய்து மீட்பேன்" என்று தனியிடம் புகுந்தார்.


எமனை நினைந்து தவம் புரிந்த குச்சகர் மருமகளின் உயிரை வரமாகப் பெற்றார். தைலமாடிய மயிலொன்று துயில்நீங்கி எழுவதுபோல் எழுந்தாள் விருத்தை. மிருககண்டூயருடன் விருத்தை நடத்திய இல்லறத்தில் பிறந்தவர் மிருககண்டு.


தவபலமும் அருள்பலமும் இயல்பாக வாய்க்கப் பெற்ற மிருகண்டு முனிவரின் மனைவி மருத்துவ வதி. இவர் முற்கல முனிவர் பெற்ற  பொற்கலம். அந்தப் பொற்கலத்தில் பிள்ளைக் கனியமுதம் வேண்டிப் பெருந்தவம் புரிந்தார் மிருககண்டு முனிவர். காசித்திருத்தலம் அடைந்து, கங்கைக் கரையோரம் மணிகர்ணிகையில் ஓராண்டு காலம் தவம்புரிந்த மிருகண்டு முன்னர் சிவபெருமான் தோன்றினார்.


"மிருகண்டு! உனக்குப் பிறக்கப் போவதோ ஒரு மகன்தான். அவன் திருமகனாய் விளங்க வேண்டுமா?" வெறும் மகனாய் இருக்க வேண்டுமா?" என்பது உன்கையில் இருக்கிறது.  வாணாளை வீணாளாய்க் கழிக்கும் பயனிலாப் பிறவியாய், பூமிக்கும் பாரமாய், பக்தி செலுத்தாத பாவியாய், நூறாண்டு வாழும் மகன் வேண்டுமா? சிவபக்தியில் சிறந்தவனாய், சீலங்கள் நிறைந்தவனாய், பதினாறாண்டுகளே வாழ்கிற மகன் வேண்டுமா?"


மறுவிநாடியே பதில் சொன்னார் மிருகண்டு முனிவர். "பரமனே! உன் பனிமலர்ப் பாதங்களில் பத்திமை பூண்டு பதினாறாண்டுகளே வாழ்கிற  பிள்ளை போதும். மண்டிக் கிடக்கும் முட்புதரை விட, மலர்ந்து மணம்வீசி உன் மேனியில் விழுகிற மருக்கொழுந்து போதும். நெருடி வருத்தும் நெருஞ்சியை விட மலர்ந்து மறைகிற  குறிஞ்சி போதும்."


கேட்ட வரமருளினார் கண்ணுதற் கடவுள். பயன் மிக்கதொரு பிறவியைத் தருவிக்க அன்று உதவிய திடசித்தம் இன்று தடுமாறியது மிருகண்டு முனிவருக்கு. சிவசிந்தனையும் மூத்தோர் வந்தனையும் உயிரியல்பாய்க் கொண்ட உத்தமச் செல்வன் மார்க்கண்டேயனுக்கு பதினாறாம் அகவை நெருங்கி வந்த தருணம். மருகினார் மிருகண்டுவும், மருத்துவ வதியும்.


பெற்றோரை உற்று கவனித்து வந்த மார்க்கண்டேயனுக்கோ உள்ளூர மனதில் ஏதோ உறுத்தியது. தன்னை நேரே கண்டால் மகிழ்வதும் தனியிடம் வந்து அழுவதும் அதிகரிந்துக் கொண்டே வருகிறதே! 


தந்தையிடம் திரும்பத் திரும்பக் கேட்டபோது தயங்கித் தயங்கி உண்மையைச் சொன்னார் மிருகண்டு முனிவர். மாா்க்கண்டேயர் முகத்தில் முறுவல் மலர்ந்தது.


"தந்தையே! உங்கள் பாட்டனார் குச்சக முனிவர் செய்த தவம், மரணமடைந்த உங்கள் அன்னையின் உயிரை மீட்க வில்லையா? பரமன் அருளால் மரணத்தை வெல்வது நம் பரம்பரைப் பழக்கம்.  கவலை வேண்டாம். இன்று தொட்டு, நூற்றெட்டு சிவாலயங்களை வழிபட்டு சிவப்பரம் பொருளின் அருள்பெற்று தங்களிடம் திரும்முவேன்.".....மைந்தனின் மனவுறுதியில் மகேசனே பேசுவதாய் உணர்ந்தார் மிருகண்டு முனிவர். சிவாலயக் கோயில் சென்று வர மகனுக்கு விடை கொடுத்தனர் பெற்றோர்.


காசியிலிருந்து புறப்பட்ட மார்க்கண்டேயர் ஒவ்வொரு தலமாய் ஒப்புயர்வற்ற சிவவழிபாடு நிகழ்த்தி, சிவசிந்தனையிலும் சிவதரிசனத்திலும் சித்தம் குளிர்ந்து வந்து கொண்டிருந்தார் மார்க்கண்டேயர். அன்று மஹா சிவராத்திரி. தன்னுடைய சங்கல்பத்தில் மார்க்கண்டேயர் வந்து சேர்ந்த நூற்றியெட்டாவது திருத்தலமாக திருக்கடவூர் வந்தார்.


முக்கண் முதல்வனுக்கு மூன்றாம் சாம பூசனையினை மனமுருகிச் செய்து கொண்டிருந்தார் மார்க்கண்டேயர். மனமுருகி சிவபூஜை செய்து தொழுது கொண்டிருந்த மார்க்கண்டேயரின் செவிகளில் குதிரைகளின் காலடிக் குழம்புச் சத்தம் கேட்டது. எந்நேரமும் சிவத் தியானத்தில் இருக்கும் மார்க்கண்டயரைப் பலமுறை அணுக முயன்று தோற்ற எமதூதர்கள் மீது சினம் கொண்ட கூற்றுவன், தானே சூலாயுதம் ஏந்தி, பாசமும் பற்றி எருமைக்கடா மீதமர்ந்து எரிதழலனைய கண்களில் சினம் கனல சிவசந்நிதி நோக்கி வந்து கொண்டிருந்தான்.


"அரும்பரம்பொருளே! அபயம்! அபாயம்!!


ஆலமுண்டவனே! அபாயம்! அபாயம்!!


கருவருவித்தாய்! அபாயம்! அபாயம் !!


கருணை வடிவே! அபாயம்! அபாயம்!! என்று மார்க்கண்டேயர் அழுதார் .....அரற்றினார்......புரண்டார்.......,,,,,,,

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
       
🌙 *திருக்கடவூர் தொடர்.* 🌙
                   *(09)*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
அபயம்! அபயம்!!..... மார்க்கண்டேயர் அபயக் குரலெழுப்பினார்.

மீண்டும் மீண்டும்.....சிவ சிவனே சிவ சிவனே அபயம் என்று கூறித் தொழுதழுது இலிங்க மூர்த்தியை கட்டி இறுக்க அனைத்துக் கொண்டான்.

வெஞ்சினம் மிகுந்த அந்தகன் வீசிய பாசக்கயிறு, அந்தணனின் மேனிமீது மட்டுமின்றி அந்தமிலாப் பரம்பொருளின் இலிங்கத் திருமேனி மீதும் உராய்ந்து விழுந்தது.

துடித்து துணுக்குற்றெழுந்த மார்க்கண்டேயர் நிற்க, இலிங்கத்திருமேனி இரண்டுபட பிளந்து வெடித்தெழுந்தார் பெருமான். திரிநயனங்களும் சடாபாரமும், மஹாசிவராத்திரி வழிபாடுகளை ஏற்றருளும் சர்வாலங்காரங்களோடும் எண் கரங்களோடும் வெளிபட்டு வெகுண்ட கோலம் கண்டு வெருண்டான் கூற்றுவன்.,

லது புறத்தில் இருந்த நான்கு திருக்கரங்களில் தரித்திருந்த திரிசூலம், கோடரி, வஜ்ரம், கத்தி ஆகிய ஆயுதங்களில் அனல் பறந்தது. இடதுபுறத்தில் மேல் திருக்கரமோ, *"இங்கேயும் வந்து விட்டாயா?"* என்னும் வியப்பினை வெளிப்படுத்தும் விதமாய் மேல்நோக்கி உயர்ந்திருக்க, பாசம், கேடயம் ஆகியவற்றை மேலும் இரண்டு திருக்கரங்கள் பற்றியிருக்க, மற்றொரு திருக்கரமோ எமனை எச்சரிக்கும் விதமாய் சுட்டு விரலை,மட்டும் நீட்டியிருக்க, இடது திருபாதத்தால் எமனின் மார்பினில் உதைத்தார் பெருமான்.

கீழே விழுந்த எமனின் கைகளிலிருந்த பாசமும், சூலமும் தரையில் நழுவிற்று. பேரச்சம் கொண்டு கைகளைக் கூப்பிய எமனின் மார்பில் பதிந்தது திரிசூலம். மரணதேவன் மாண்டுபோக, *"கால சம்ஹாரா!*
*காலாந்தகா!!*
*காலாரி* என திசையெங்கும் பரவசக் குரல்கள் பொங்கின.

செழுங்கொம்பைப் பற்றிப் படர்ந்த நீலக்கொடி கொண்டற்காற்றில் சலசலத்தது. *"மரணதேவனுக்கு மரணமா?"* மஹேஸ்வரா!" இதென்ன நாடகம்?" தோடுடைய திருச்செவியில் அந்த வார்த்தைகள் விழுந்தாலும், *"மிருககண்டூ"* என்று கொவ்வைச் செவ்வாய் முணுமுணுத்தது.


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🌙 *திருக்கடவூர் தொடர்.* 🌙
                     *(10)*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*"தாரிணி!"*-பசுக்கள் உரசும் கல் என்ற பெயர்தான் மானிட யாக்கைக்கு எத்தனை பொருத்தம்!".

உயிராகிய பசு உரசிச் செல்லும் கல்லே உடல்.

உடலை நிலையென்று நினைப்பதும் அதற்காகத் தவிப்பதும் அறியாமை.

மரணம் வேண்டாமென்று மார்க்கண்டேயன் அலறி அரற்றியது சவமாகிப் போய் விடுவோமோ? அச்சத்தாலல்ல!.

சிவமாக வேண்டுமென்ற  சங்கல்பத்தின் உச்சத்தினால்.

கல்பகாலம் உள்ளளவும் சிரஞ்சீவியாய் சூக்கும வடிவில் மார்க்கண்டேயன் இருப்பான்.

இனி அவனுக்கு *"என்றும் பதினாறு"*.

சிவபூஜையில் ஈடுபவர்கள் மரணம், பிறவி என்னும் மாயச்சுழற்சியிலிருந்து விடுபடுவார்கள்.

வினை வயப்பட்டு, மறுபிறப்புக்குரிய உயிர்களை மட்டுமே கூற்றுவனால் கொண்டு செல்ல இயலும்.

*"தியானேஷ்வரி!"* எம சங்காரம் என்பது உள்நிலையில் அமுதம் நிரம்பிய ஒவ்வோர் உயிரிலும் நடப்பது.

இடப்பாதம் சந்திரகாலை.

வலப்பாதம் சூரியகலை.

சந்திரக் கலையில் ஓடும் நாடியைக் கும்பகம் செய்யும் வாசிக்கணக்கு கூற்றினை வெல்லவல்லது. குருமுகமாய் இதனை வழுவறக் கற்றோர் மரணத்தை வென்றவராவார்.

ஜனனி! எமன் இறந்ததால் பூபாரம் அதிகப்படும்!. நிலமகளின் வருத்தம் தீர்க்க எமனுக்கு விமோசனம் அருளப்படும். காலசம்ஹாரமூர்த்தி சங்கரித்த கோலத்திலேயே விமோசனமும் அருளியதால் கோர வடிவின்றி காருண்யத் திருவுருவாய் காட்சி கிடைக்கும். பக்கத்தில் பாலாம்பிகையாய் நீ நின்றருள்வாய்.

மார்க்கண்டேயன் சொல்லி வழிபட்ட மஹாமிருத்யுஞ்சய மந்திரம் இத்தலத்தில் எந்திரமாய் பிரதிட்டை செய்யப்படும்.

அமுதமே கடமாய் அமைந்ததாலும் எமபயம் அகன்றதாலும் ஆயுள் பலத்திற்கு ஆகச்சிறந்த தலமாய் திருக்கடவூர் திகழும்.

ஆண்டுகளின் சுழற்சிக் கணக்கே அறுபது. மனிதர்கள் அறுபதாவது வயதை அடைகையில் தாயின் கருவிலிருந்த காலத்தில் அனுபவித்த துயரங்கள் வரக்கூடும். அதிலிருந்து விடுபட இத்தலத்தில் உக்ரரத சாந்தி செய்வது பெரும் விசேஷமாகப் பரவும்.

அறுபது முடிந்து அறுபத்தொன்றாம் அகவையை தொடங்கும்போது சஷ்டியப்த பூர்த்தி.

மனிதப்பிறவிக்கு விதிக்கப்பட்ட நூற்றியிருபது ஆண்டுகளில் சரிபாதி என்பதால் இத்தலத்தில் அந்த சாந்தியினை மேற்கொள்பவர்கள் ஆயுள் பலம் கூடப் பெறுவர்.

காலாந்தரி! தன்னையுணரும் தெய்வீகப் பயணத்திற்காக இந்தப் பிறவியை ஒரு கருவியென்று கண்டுணர்பவர்களின் ஆன்ம விருத்திக்கே இந்த ஆயுள் ஹோமங்கள்.

இகவாழ்வின் கடமைகளை இனிது நிறைவேற்றி மறுமையின் மகோன்னதம் உணர முற்படுவர்களுக்கு காலக்கணக்கை நீக்கும் இத்தலத்தின் அதிர்வுகள் வழிகாட்டும்.

மரணமாகிய மிருத்யுவை வெல்ல அருள்வது *மிருத்யுஞ்சய மூர்த்தம்.*

அந்த வெற்றியில் விளைவதே *அமிர்தம்.*

காலாகிய காற்றின் துணைகொண்டு கூற்றுவனை வெல்லத் தூண்டுவதே *"கால சம்ஹாரம்"*

சுழல் கொண்டு வீசிய காற்றில் கலகலத்துச் சிரித்தன *கொம்பும் கொடியும்.*

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🍁 *திருக்கடவூர் தொடர்.* 🍁
                       *(12)*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*மஹதி!*
இயக்கம் ஓய்ந்த உடல்களை எரிக்கும் மயானங்கள் வேறு. இடையறாமல் இயங்கும் ஐந்தொழில்களைக் குறிக்கும் திருமயானங்கள் வேறு. இந்த இருவகை மயானங்களுமே எனக்கு உகப்பானவை.

அற்புதனின் பாகம்பிரியாளாய் இருப்பதில் அகமகிழும் அதிகர் விதாவின் பூர்ணிமைக் கண்களில் புரண்டெழுந்தன புன்னகை மின்னல்கள்.

*"ஈசனே!* 
பிறப்பை விதிக்கும் பிரம்மனின் சங்காரம் திருக்கடவூர் திருமயானத்தில் இறப்பை நிகழ்த்தும் எமனின் சங்காரம் திருக்கடவூரில்.  இந்த இரண்டு தலங்களின் தரிசனம் பிறப்பு, இறப்பு ஆகிய தொடர் சுழல்களிலிருந்து உயிர்களை விடுவிக்கட்டும். அது சரி, மறு பிறவியை நிர்ணயிப்பதில் நல்வினை, தீவினை இரண்டுக்கும் இடமுண்டுதானே?" சுந்தரியின் கேள்வியில் சுடர் விடுமி சூட்சுமம் உணர்ந்து மெல்லச் சிரித்தார் மகாதேவன்.

*"ஞானகாம்யா!!* இருவினைகளும் நீங்கி ஒளிதுலங்கும் உயிர்தான் முக்திக்கு முழுமையான தகுதி கொண்டது. திருக்கடவூரில் அகத்தியர் பூசித்த பாபகரேஸ்வரரும் புலத்தியர் பூசித்த புண்ணியகரேஸ்வரரும் பாவங்களின் இரும்புத்தளை, புண்ணியங்களின் பொன்தளை ஆகியவற்றிலிருந்து உயிர்களை விடுவிப்மார்கள்.

*கைவல்யா!*
*உயிர்களின் வாழ்வை இயக்கும் நவக் கிரகங்களின் ஆளுமை மிருத்யுஞ்சயத் தலத்தில் செல்லாது. எனவே திருக்கடவூரில் நவக்கிரக சந்நிதி இராது.*

வாசுகி வந்து வணங்கியதால் திருக்கடவூர் குண்டலினி ஆற்றலை எளிதில் எழுப்பும் தன்மை கொண்டதாய்த் திகழும். ராகுவுக்கும் கேதுவுக்கும் நவக்கிரகங்களின் வரிசையில் இடம் கொடுத்த துர்க்கை வணங்கியதால் இத்தலம் நாக தோஷங்களை நீக்கும்.

*பிரகல்தா!* 
எனது வீரச்செயல்கள் நிகழ்ந்த தலங்களுக்கு வீரட்டம் என்று பெயர். *காலனைக் காலால் காய்ந்த திருக்கடவூர், திரிபுரம் எரித்த திருவதிகை, அந்தகாசுரனை வதம் செய்த திருக்கோயிலூர், காமனை எரித்த கொருக்கை, நான் முகனின் சிரம்கொய்த கண்டியூர், தட்சனின் யாகமழித்த பரசலூர், சலந்தரனை வதம் செய்த விற்குடி, ஆபிசார வேள்வியிலெழுந்த யானையை வதம் செய்த வழுவூர் ஆகியவை அட்ட வீரட்டத் தலங்கள்.*

*நிரஞ்சனா!* 
என்னுடைய வடிவங்கள் ஐந்து. *உருவ நிலை, அருவநிலை, அருவுருவநிலை, உயிர்களுடன் ஒன்றிய நிலை, தனித்திருக்கும் சர்வபூதநிலை, இந்த வடிவங்கள் வருங்காலங்களில் ஆயிரத்தெட்டு திருமூர்த்தங்களாக விரியும்.* அதன் பின்னர் நூற்றெட்டு வடிவங்களாக சுருங்கும். காலப் போக்கில் அறுபத்துநான்கு வடிவங்களாய், அஷிடாஷ்ட விக்ரகங்களாய் வகுத்து வழிபடுவர். திருக்கடவூரில் அமிர்தலிங்கம் அருவுருவ நிலை. கால சம்ஹாரமூர்த்தம் உருவநிலை.

*நித்யா!*
காலம் நிலையானது. காலத்தின் எல்லைகள் எம்முடைய நிர்ணயங்களுக்கு உட்பட்டவை. காலகாலன் என்பது எமனை சங்கரித்ததால் மட்டுமே ஏற்பட்ட பெயரல்ல. காலத்தால் அறியவொண்ணா நிலையிலிருப்பதால் காலகாலன் என்று பெயர்.

*பூர்வஜா!*
கால சம்ஹாரன் என்ற பெயரும் எமனை சங்கரித்ததால் மட்டுமே ஏற்பட்ட பெயரல்ல. ஒவ்வொரு புதிய கணமும் கடந்து போகும் கணத்தின் அழிவில் பிறக்கும்.  நகரும் காலம் நின்றுவிடாமல் ஒவ்வொரு கணத்தையும் சங்கரித்து காலக்கணக்கைத் துல்லியமாய் நகர்த்துவதாலும் எம்முடைய திருநாமம் காலசம்ஹாரன்!" சொல்லிக் கொண்டே நிமிர்ந்த சிவப்பரம்பொருளின் திரு நயனங்களில் துள்ளின சந்தோஷ ரேகைகள்.

*"சித்தரூபிணி!*
சிவம் நினைப்பதையே தானும் நினைப்பவர்கள் சித்தர்கள். ஒவ்வொரு சித்தனின் போக்கும் சிவனின் போக்கு. எந்தவொரு தலமும் வல்லதிர்வுகள் கொண்டு வரப் பிரசாதத்துவம் பெற சித்தர்களின் இருப்பும் ஒரு காரணம்.

*திருக்கடவூர்த் தலத்துக்குரிய சித்தன் அதோ வந்து கொண்டிருக்கிறான் பாா்!"*

கண்ணுதற் கடவுளின் கமலவிரல் நீண்ட திசை நோக்கித் திரும்பினாள் திரிபுர சுந்தரி.

அங்கே..... 
*எழுந்து நடக்கும் தவமாய்,* *தீவிரத்தின் வடிவமாய்,* *சடாமுடி பறக்க,* 
*திருநீறு மணக்க,* *கால்முளைத்த காற்றாய்,* வந்து கொண்டிருந்த புண்ணிய உரு பார்த்துப் புன்னகையுடன் சொன்னாள்......

*அடடா!" காலங்கி சித்தனா?"*.................. .,.........,,


No comments:

Post a Comment