Courtesy:Sri.Maasila Gopi Krishnan
தமிழ்நாடு சிவன் கோயில்கள் - இருப்பிட விபரங்கள் ...
தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பெற்ற தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்பெற்றுள்ள 274 சிவஸ்தலங்களில்
தமிழ்நாட்டில் மட்டும் (பாண்டிச்சேரி உட்பட) 264 சிவஸ்தலங்கள் உள்ளன. இந்த 264 கோவில்களிலும் 190 சிவஸ்தலங்கள் முன் காலத்தில் சோழ நாடு என்று குறிப்பிடப்படும் பகுதியான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் (Districts) அமைந்துள்ளன.
இவை காவிரியின் வடகரையில் 63ம்,
காவிரியின் தென்கரையில் 127ம் ஆக 190 சிவஸ்தலங்கள்.
மற்ற 74 சிவஸ்தலங்களில்
பாண்டிய நாட்டில் 14,
கொங்கு நாட்டில் 7,
தொண்டை நாட்டில் 31,
நடு நாட்டில் 22 ஆக அமைந்துள்ளன.
நடு நாட்டில் அமைந்துள்ள விபரம் கீழே காண்க.
விழுப்புரம் மாவட்டம்
திருநாவலூர்,
திருநெல்வெண்ணை,
திருக்கோவிலூர்,
திருஅறையணிநல்லூர்,
திருவிடையாறு,
திருவெண்ணைநல்லுர்,
திருத்துறையூர்,
திருமுண்டீச்சரம்,
புறவர் பனங்காட்டூர்,
திரு ஆமாத்தூர்
கடலூர் மாவட்டம்
திருநெல்வாயில்
அரத்துறை,
தூங்கானை மாடம்
(பெண்ணாகடம்),
திருக்கூடலையாற்றுர்,
திருஎருக்கத்தம்புலியூர்,
திருத்திணை நகர்,
திருச்சோபுரம்,
திருவதிகை,
திருமாணிகுழி,
திருப்பாதிரிப்புலியூர்,
திருமுதுகுன்றம்
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை
காவிரி நதியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
கடலூர் மாவட்டம்
சிதம்பரம்,
திருவேட்களம்,
திருநெல்வாயல்,
திருக்கழிப்பாலை,
திருஓமாம்புலியூர்,
திருக்கானாட்டுமுல்லூர்,
திருநாரையூர்,
திருக்கடம்பூர்
நாகப்பட்டிணம் மாவட்டம்
திருநல்லுர் பெருமணம்,
திருமயேந்திரப்பள்ளி,
திருமுல்லைவாயில்,
திருக்கலிக்காமூர்,
திருசாய்க்காடு,
திருபல்லவனீச்சுரம்,
திருவெண்காடு,
கீழை திருக்காட்டுப்பள்ளி,
திருக்குருகாவூர் வெள்ளடை,
சீர்காழி,
திருகோலக்கா,
திருபுள்ளிருக்குவேளூர்,
திருக்கண்ணார்கோவில்,
திருக்கடைமுடி,
திருநின்றியூர்,
திருபுன்கூர்,
நீடூர்,
திருஅன்னியூர்,
திருவேள்விக்குடி,
திருஎதிர்கொள்பாடி,
திருமணஞ்சேரி,
திருக்குருக்கை,
திருக்கருப்பறியலூர்,
திருக்குரக்குக்கா,
திருவாளொளிப்புத்தூர்,
திருமண்ணிப்படிக்கரை
தஞ்சாவூர் மாவட்டம்
திருபந்தனைநல்லூர்,
திருகஞ்சனூர்,
திருகோடிக்கா,
திருமங்கலக்குடி,
திருப்பனந்தாள்,
திருஆப்பாடி,
திருசேய்ஞலூர்,
திருந்துதேவன்குடி,
திருவியலூர்,
திருக்கொட்டையூர்,
திருஇன்னாம்பர்,
திருப்புறம்பியம்,
திருவிசயமங்கை,
திருவைகாவூர்,
வடகுரங்காடுதுறை,
திருப்பழனம்,
திருவையாறு,
திருநெய்த்தானம்,
திருப்பெரும்புலியூர்,
திருக்கானூர்
அரியலூர் மாவட்டம்
திருமழபாடி,
திருப்பழுவூர்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருஅன்பில் ஆலாந்துறை,
திருமாந்துறை,
திருபாற்றுறை,
திருவானைக்கா,
திருப்பாச்சிலாச்சிராமம்,
திருபைஞ்ஜிலி,
திருஈங்கோய்மலை
காவிரி நதியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
கரூர் மாவட்டம் (2)
திருகடம்பந்துறை,
திருப்பராய்த்துறை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் (6)
திருவாட்போக்கி,
திருகற்குடி,
திருமூக்கீச்சரம்,
திருச்சிராப்பள்ளி,
திருஎறும்பியூர்,
திருநெடுங்களம்
தஞ்சாவூர் மாவட்டம் (35)
மேலை திருக்காட்டுப்பள்ளி,
திருவாலம்பொழில்,
திருபூந்துருத்தி,
திருக்கண்டியூர்,
திருசோற்றுத்துறை,
திருவேதிகுடி,
திருதென்குடித்திட்டை,
திருபுள்ளமங்கை,
திருசக்கரப்பள்ளி,
திருக்கருகாவூர்,
திருப்பாலைத்துறை,
ஆவூர் பசுபதீச்சரம்,
திருபட்டீச்சரம்,
திருசத்திமுற்றம்,
பழையாறை வடதளி,
திருவலஞ்சுழி,
திருக்குடமூக்கு,
திருக்குடந்தை கீழ்கோட்டம்,
திருக்குடந்தைக் காரோணம்,
திருநாகேஸ்வரம்,
திருவிடைமருதூர்,
தென்குரங்காடுதுறை,
திருநீலக்குடி,
திருவைகல் மாடக்கோவில்,
திருநல்லம்,
திருக்கோழம்பம்,
கருவிலிக்கொட்டிட்டை,
திருபேணுபெருந்துறை,
திருநறையூர்,
அரிசிற்கரைப்புத்தூர்,
சிவபுரம்,
திருகலயநல்லூர்,
திருக்கருக்குடி,
திருச்சேறை,
திருப்பரிதிநியமம்
நாகப்பட்டிணம் மாவட்டம் (21)
திருவாவடுதுறை,
திருத்துருத்தி,
திருவழுந்தூர்,
மயிலாடுதுறை,
திருவிளநகர்,
திருப்பறியலூர்,
திருசெம்பொன்பள்ளி,
திருநனிபள்ளி,
திருவலம்புரம்,
திருதலைச்சங்காடு,
திருஆக்கூர்,
திருக்கடவூர்,
திருக்கடவூர் மயானம்,
திருப்புகலூர்,
திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்,
திருசெங்கட்டாங்குடி,
திருமருகல்,
நாகைக் காரோணம்,
சிக்கல்,
திருக்கீழ்வேளூர்,
தேவூர்,
புதுவை மாநிலம் (4)
திருவேட்டக்குடி,
திருதெளிச்சேரி,
திருதர்மபுரம்,
திருநள்ளாறு
திருவாரூர் மாவட்டம் (59)
திருநல்லூர்,
திருக்கோட்டாறு,
அம்பர் பெருந்திருக்கோவில்,
அம்பர் மாகாளம்,
திருமீயச்சூர்,
திருமீயச்சூர் இளங்கோவில்,
திருதிலதைப்பதி,
திருப்பாம்புரம்,
சிறுகுடி,
திருவீழிமிழிலை,
திருவன்னியூர்,
திருவாஞ்சியம்,
நன்னிலம்,
திருகொண்டீச்சரம்,
திருப்பனையூர்,
திருவிற்குடி,
இராமனதீச்சுரம்,
திருபயற்றூர்,
திருச்சாத்தமங்கை,
பள்ளியின் முக்கூடல்,
திருவாரூர்,
திருவாரூர் அரநெறி,
ஆரூர் பறவையுன்மண்டளி,
திருவிளமர்,
திருக்கரவீரம்,
திருப்பெருவேளுர்,
திருதலையாலங்காடு,
திருக்குடவாயில்,
திருநாலூர் மயானம்,
கடுவாய்க்கரைப்புத்தூர்,
திருஇரும்பூளை,
திருஅரதைப் பெரும்பாழி,
திருஅவளிவநல்லூர்,
திருவெண்ணியூர்,
திருப்பூவனூர்,
திருப்பாதாளீச்சரம்,
திருக்களர்,
திருசிற்றேமம்,
திருவுசத்தானம்,
திருஇடும்பாவனம்,
திருக்கடிக்குளம்,
திருத்தண்டலை நீணெறி,
திருக்கோட்டூர்,
திருவெண்டுறை,
திருக்கொள்ளம்புதூர்,
திருப்பேரெயில்,
திருக்கொள்ளிக்காடு,
திருதெங்கூர்,
திருநெல்லிக்கா,
திருநாட்டியாத்தான்குடி,
திருக்காறாயில்,
திருகன்றாப்பூர்,
திருவலிவலம்,
திருகைச்சினம்,
திருக்கோளிலி,
திருவாய்மூர்,
திருமறைக்காடு,
அகத்தியான்பள்ளி,
கோடியக்கரை
தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் .
சென்னை மாவட்டம்
திருமயிலை (சென்னை),
திருவான்மியூர் (சென்னை)
திருவள்ளூர் மாவட்டம்
திருவிற்கோலம்,
திருவாலங்காடு
திருப்பாசூர்
திருவெண்பாக்கம்
திருக்கள்ளில்
திருவொற்றியூர் (சென்னை),
திருமுல்லைவாயில் (சென்னை)
திருவேற்காடு (சென்னை)
காஞ்சீபுரம் மாவட்டம்
கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்),
திருக்கச்சி மேற்றளி,
திருஓணகாந்தான்தளி
கச்சி அநேகதங்காபதம்,
கச்சிநெறிக் காரைக்காடு,
திருமாகறல்,
இலம்பையங்கோட்டூர்,
திருவிற்கோலம்
திருக்கச்சூர் ஆலக்கோவில்,
திருஇடைச்சுரம்,
திருக்கழுகுன்றம்,
அச்சிறுபாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம்
திருகுரங்கணில் முட்டம்,
திருவோத்தூர்,
திருப்பனங்காட்டூர்
வேலூர் மாவட்டம்
திருவல்லம்,
திருமாற்பேறு,
திருஊறல் (தக்கோலம்)
விழுப்புரம் மாவட்டம்
திருவக்கரை,
திருஅரசிலி
கடலூர் மாவட்டம்
இரும்பை மாகாளம்
பாண்டிய நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ......
மதுரை மாவட்டம்
திருஆலவாய் (மதுரை),
திருஆப்பனுர்,
திருவேடகம்,
திருப்பரங்குன்றம்
சிவகங்கை மாவட்டம்
திருகொடுங்குன்றம்,
திருப்புத்தூர்,
திருக்கானப்பேர்
புதுக்கோட்டை மாவட்டம்
திருப்புனவாயில்
ராமநாதபுரம் மாவட்டம்
இராமேஸ்வரம்,
திருவாடானை,
திருப்பூவணம்
விருதுநகர் மாவட்டம்
திருச்சுழியல்
திருநெல்வேலி மாவட்டம்
குற்றாலம்,
திருநெல்வேலி
பஞ்ச பூதத் தலங்கள்
உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.
1. காஞ்சீபுரம்
2. திருவானைக்கா
3. திருவண்ணாமலை
4. சிதம்பரம்
5. திருக்காளத்தி
இவற்றில் திருக்காளத்தியைத் தவிர மற்ற நான்கு தலங்களும் தமிழ்நாட்டிலுள்ளன. திருக்காளத்தி ஆந்திர மாநிலத்தில் உள்ளது.
பஞ்ச சபைத் தலங்கள்
இறைவன் நடராசர் உருவத்தில் அருட்கூத்து ஆடுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து தலங்களைக் குறிப்பிடுவர். அந்த ஐந்து சபைகள் அமைந்துள்ள இடங்கள் (சிவாலயங்கள்) இவையாகும்
1. தில்லை(சிதம்பரம்) - கனக சபை
2. திருவாலங்காடு - இரத்தின சபை
3. மதுரை - வெள்ளி சபை
4. திருநெல்வேலி - தாமிர சபை
5. திருக்குற்றாலம் - சித்திர சபை
No comments:
Post a Comment