Monday, August 1, 2016

Vaadhyar

Courtesy:Sri.Mayavaram Guru

படித்ததைப் பகிர்கிறேன்..இதைப் படியுங்கள்... பொறுமை இருந்தால்... (எனக்கு மெயிலில் வந்தது)

என்னை யோசிக்க வைத்த நியாயமான மன குமுறல்:

வாத்யார்களைக் குறை சொல்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்:
அடியேன் வாத்யார்களுக்கு ஆதரவாக எழுதுவதாக எடுத்துக்கொள்ளலாம், தவறில்லை.
என்னைப் பொறுத்தவரை சில வாத்யார்களால் க்ருஹஸ்தர்கள் அநுபவிக்கும்இன்னல்களுக்குத் தீர்வு காணவும், சாஸ்த்ர - ஸம்ப்ரதாயங்கள் கட்டுக்குலையாமல்பேணப்பட்டு வரவேண்டும் என்பதற்காகவும், 
க்ருஹஸ்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் பகிர்கிறேன்
அடியேன் ஒரு வாத்யாரிடம் உப வாத்தியாராக சில வருடங்களாக இருப்பதால் கர்த்தாக்களால் வாத்யார்க்கு ஏற்படும் கஷ்டமும்
வாத்யாரால் கர்தாவுக்கான கஷ்டமும் அடியேன் நன்கு அறிவேன்.
ப்ரச்சினைக்கு தேவை தீர்வே தவிர, யார் தரப்பில் நியாயம் உள்ளது என்கிற ஆராய்சி அல்ல.
(இன்றைய) வாத்யார் என்பவர் தனிப்பிறவி அல்ல, ஸந்யாஸியும் அல்ல. வேறு லௌகீக உத்யோகம் கிடைக்காதவர்கள், ஏற்கனவே வைதீகத்தில் உள்ளவர்களிடம் தொடர்புள்ளவர்கள், நம்மால் சமாளிக்க முடியும் என்கிற தைரியம் உள்ளவர்கள் வாத்யார் ஆகத் தீர்மானிக்கிறார்கள்.
அக்காலத்தில் வந்த ப்ரயோக புத்தகங்கள் அனைத்தும் க்ரந்த லிபியில் மட்டுமே வெளிவந்தன. ஆனால் தற்போது, தன்னைத் தன் திறமையை வெளியுலகிற்குத் தெரிவிக்க விரும்பும் சிலர் பல
(தமிழ் ) மொழியில் ப்ரயோக புத்தகத்தை வெளியிட்டுள்ளனர்.
அதை வாங்கிப் படித்துக்கொண்டு தாமாகவே சிலர் வாத்யாராகத் தயாராகிவிடுகின்றனர்.
இப்படிப்பட்ட வாத்யார்களின் நோக்கம் பணம் ஈட்டுவதத்தைத் தவிர வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை.
இப்படிப்பட்ட வாத்யார்களுக்கு ஆதரவு அளிப்பது யார்?
வைதீக ப்ரயோக பாடசாலை என்று ஒன்று எங்காவது உள்ளதா?
இந்தந்த ப்ரயோகம் பண்ணிவைக்க இவர் தகுதியுள்ளவர் என சான்றிதழ் அளிக்கும் முறை ஏதாவது உள்ளதா?
சில காலங்களுக்கு முன்பு வரை (சுமார் 50 வருடங்களுக்கு முன்பு), புரோகிதம் என்பது ஒரு பரம்பரைத் தொழிலாகஇருந்து வந்தது.
அதனால் அந்தந்த வாத்யாரின் பிள்ளைகள் அவரிடமே நன்கு கசடறக் கற்று, நன்கு தேர்ச்சிபெற்று பின்னரே வாத்யாராக பணியைத் தொடர்ந்தனர்.
அக்காலத்தில் பணத்தைக் காட்டிலும் நற்பெயருக்கு மிகுந்த அவா மதிப்பு இருந்தது.
பெரும்பான்மையான க்ருஹஸ்தர்கள் ஸம்ஸ்க்ருத ஜ்ஞானத்துடன் இருந்தனர்.
ஆத்து வாத்யார் என ஒருவரை மட்டுமே வைத்துக்கொண்டு அவர்பண்ணிவைக்கும் ப்ரயோகத்திற்கு வெகுமதியாக மிகச்சொற்பமான கட்டணமே அளிப்பர்.
அதேநேரம் அந்த ஆத்து வாத்யாரின் ஆத்துக்குத்தேவையான அனைத்துவித சௌகர்யங்களையும் க்ருஹஸ்தர்கள் செய்து கொடுப்பர்.
அக்காலத்தில்புண்யாஹவாசனத்திற்கு அவர்கள் வயலில் விளைந்த நல்ல அரிசி ஒரு மரக்கால் அரிசி சேர்ப்பார்கள்.
இக்காலத்தில் ரேஷனில் அரிசி வாங்கி வைத்துக்கொண்டு (அதை வேலைக்காரியிடம் கொடுத்தால் வாங்கமாட்டாள்) வாத்யாருக்கு ரேஷன் அரிசியைக்கொடுக்கிறார்கள்.
காய்கறிகள், வெல்லம், பருப்பு போன்ற பொருடக்கள் வாத்யார்க்கு 
ஒருவீட்டில் சம்பாவணையாக கொடுத்தால் குறைந்தது ஒரு வாரத்திற்கு வாத்தியார் குடும்ப பயன்பாட்டிற்க்கு போதுமானதாக இருந்தது.
வருடாந்திரத்தில் பெரிய மனிதர்கள் மிராசுகள் ஆத்து வாத்யார் குடும்பத்திற்கேதுணிஎடுத்துக்கொடுப்பார்கள். (காசைத்தான் கண்ணால் பாரக்க முடியாது) நெல் போன்ற தானியங்கள் கொடுப்பார்கள்.
அக்காலத்தில் ஒருசிலரே பட்டணத்தில் இருந்தனர், பெரும்பான்மையோர் கிராமத்தில் இருந்தனர்.
பட்டனத்தில் இருந்தவர்களும் விசேட காரியங்கள் அனைத்தையும் சொந்த ஊரில் சென்றுதான் நடத்துவார்கள்.
பெரும்பாலும் வாத்யார் ஊரைவிட்டு வெளியேசெல்ல அவசியமில்லாமல் இருந்தது.
ஒரு சிலர் பட்டணத்தில் விசேடங்கள் நடத்த ஆரம்பித்த பிறகும் ஊரிலிருந்து ஆத்து வாத்யாரைஅழைத்துவந்துதான் நடத்துவார்கள்.
பட்டணத்தில் நடத்துபவர்கள் வாத்யாருக்கு ஒரு கணிசமாக ஸம்பாவனையும் மற்றும் போக வர வண்டி சத்தமும்அளித்து வந்தனர்.
காலம் செல்லச் செல்ல, ப்ராமணர்கள் பெரும்பகுதி ஊரிலுள்ள நிலபுலன்களையெல்லாம்விட்டு விட்டு, பெரியவர்களையும் அழைத்துக்கொண்டு வந்து பட்டணத்துக்கு வெளிப்புறத்தில் சொந்தமாக இடம் வாங்கி குடியேறத் துவங்கினார்கள்.

செய்யும் தொழிலில் இடையூறு இல்லாமல் இருக்கவும், அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊர் செல்வதைத் தவிர்க்கவும்
இந்த அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது.
ஆற்று நீரில் முழுகிச் ஸ்நானம் செய்தல், நித்ய கர்மாநுஷ்டானம் செய்தல், ப்ராம்மணனுக்கான சிகை - கச்சத்துடன் இருத்தல், ஸ்தோத்ர பாடம் - சூக்தாதிகள், ப்ரபந்தம் போன்ற அடிப்படை விஷயங்களையும் விட ஆரம்பித்தனர்.
பட்டணத்தில் இதரர்களுடன் வசிக்க ஆரம்பித்ததால்அவர்களைப் போலவே கச்சம் துறந்து, லுங்கி அணிதல், மீசை வைத்துக்கொள்ளுதல், நெற்றியில் ப்ராம்மணஅடையாளம் எதையும் இடாமல் பாஷண்டியாக இருப்பதைப்பற்றிக்கூட எந்தக் கவலையும் அவர்களுக்கில்லாது போயிற்று.
ஶ்ரீரங்கம், திருக்குடந்தை, காஞ்சிபுரம் போன்ற புண்ய கேஷத்ரங்களில் கர்மாக்களை செய்யவேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தது.
அவரவர் ஊர் குலதெய்வங்களை மாதத்தில், வருடத்தில் ஒருநாள் தரிசிக்கவேண்டும் என்ற எண்ணமும் பழக்கமும் ஒழிந்துபோயிற்று. பலருக்கு தங்கள் குலதெய்வங்களே மறந்து போய் விட்டது.
இவர்களுடைய அக்கறையெல்லாம் பணம், பணம், பணம் மேலும் மேலும் பணம் ஸம்பாதிக்கவேண்டும் என்பதாக இருந்தது.
கிராமத்தில் ஒரு வாத்யார், நடந்தோ ஒரு சைக்கிளை வைத்துக்கொண்டு அனைவரது இல்லத்திற்கும் வந்து கர்மாவை பண்ணி வைப்பார்.
பட்டணத்தில் ப்ராமணர்கள் ஆளுக்கு ஒரு மூலையில் இருப்பதால் அவரவர் இருக்கும் இடத்திற்கு வந்து வைதீக காரியம் செய்து வைக்க நிறைய வாத்யார்களின் தேவை அவசியமாயிற்று.
அவர்களும் பைக், ஸ்கூட்டர், ஆட்டோ என வாகனத்தில் வரவேண்டியுள்ளது.
கர்த்தாக்கள் தங்கள் தங்கள் மதிப்பைக் காட்ட மற்றவரைக் காட்டிலும் கூடுதலாக ஸம்பாவனை அளித்து வாத்யாரின்மதிப்பைப் பெற விரும்பினார்கள்.
பலர் வாத்யார்க்கும் குடும்பம் உள்ளது. விலைவாசி, வாடகை, குழந்தைகள் படிப்பு என செலவுகள் உள்ளது. நாமும் தகுந்தபடி சம்பாவனை செய்யவேண்டும் என நினைக்க வேண்டும். (வாத்யார்கேட்கும் ஞாயமான சம்பாவனையை குறைக்க பேரம் பேச கூடாது ) ஒரு வைதீக ப்ராமணனுக்கு வாழ்க்கையில் உதவியதாக கொள்ளவேண்டும்.
பட்டணத்தில் உள்ள இவர்களில் பலருக்கு தங்கள் கோத்திரம் என்ன, சூத்திரம் என்ன, அபிவாதி எப்படிப் பண்ணவேண்டும் என்பது கூடத் தெரியாமல் அல்லது மறந்து போயிற்று

பலர் பஞ்சகச்சம் கூட கட்ட தெரியாதவர்களாக உள்ளனர். இதற்க்கும் வாத்யார் உதவி வேண்டியுள்ளது என்ன செய்ய அவர்கள் வேலை அப்படி. எனவே அனைத்திற்கும் வாத்யாரை நம்பி வாழத் தலைப்பட்டார்கள்.
நாளாக ஆக, ப்ரயோகத்தில் சொல்லியுள்ளபடி பண்ணி வைக்க வேண்டியது ஒரு வாத்யாரின் பொறுப்பு, தப்பாகப் பண்ணி வைத்தால் அந்த பாபம் அவருக்குத்தான் என்று, "வாத்யார் சொல்படித் தர்ப்பயாமி" என்று ஹாஸ்யமாக வேறு சொல்லிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

பலர் வாத்யார் உச்சரிக்கும் மந்திரத்தை திரும்பசொல்லுவதில்லை. அதற்க்கும் தமக்கும் சம்பந்தமில்லாத மாதிரி வேடிக்கை பார்த்தபடியே வாயசைப்பர். (பாவம் வாத்யார் மந்திரத்தை தனக்கு தானே திருவை சொல்லுவது போல்சொல்லிக்கொண்டு இருப்பார்)
யஜமானர் இப்படி மாறினால், யஜமானியம்மாள் மாறமாட்டார்களா?!
எல்லா விசேஷங்களுக்கும் தங்கள் கைப்பட தளிகை செய்துவந்த மாதுசிரோமணிகள்தங்களால் இனி இயலாது எனவே தளிகை பண்ண ஆள்வைக்க வேண்டும் என்றார்கள்.
பட்டணத்தில் நிறைய பணம் பொருள் என இருவரும் சேர்ந்து / அல்லது தனியாளாக நிறைய ஸம்பாதிக்கிறவர்களுக்கு மனைவிக்காக இதைக்கூட செய்யக்கூடாதா என்று எண்ணி தளிகைக்கும் தனி ஆள்/ தளிகை காண்ட்ராக்டர்களை வைக்க ஆரம்பித்தார்கள்.
தளிகையாளர்கள் தங்கள் கைப்பக்குவத்தைக் காட்டி, ஏற்பாடு செய்தவரை உடலளவில் சோம்பேறியாக்கி, நாவுக்கு நல்ல ருசியான விருந்தளித்து, தங்களது தளிகைக்கு மற்றவர் நாவை அடிமையாக்கி வைத்தார்கள்.
இதற்க்கு ஏற்ற சம்பாவணையை பெறுகிறார்கள். தற்போது வைதீகத்தை விட இதர செலவுகள் ( மண்டபம் / அலங்காரம் /பூமாலை (நேரத்திற்கு ஒன்று பல விதங்களில்) திருமண வரவேற்ப்பு / சிகை, மருதாணி, உடை அலங்காரம்) பலமடங்கு ஏறியது.
அடுத்து முக்கியமானது ச்ரார்த்தம் நவீன வாழ்வில் ப்ராமண ஸ்திரிகள் கொஞ்சம் கொஞ்சமாக நம் இல்லங்களில் மாதவிலக்கான சமயங்களில் சிறிது தூரம் (குறைந்தது ஒரு 30அடி) ஒதுங்குவதைக்கூட குறைத்து இல்லை நிறுத்திக் கொண்டார்கள்.
அணைவரும் (ஆண்/ பெண்) இப்படி மாறிவிட்டார்களே தவிர, இவர்கள் மனச்சாட்சி மட்டும் இவர்களை விட்டு வைக்கவில்லை. இதனால் இவர்கள் வசிக்கும் வீடு ப்ராம்மணனுடைய தெய்வீகமான வீடாக ஒருவரால்கூட நினைக் இயலவில்லை.
இதனால் இருக்குமிடத்தில் ச்ரார்த்த கர்மாக்களைச்செய்ய இவர்களுக்கே பிடிக்கவில்லை.
பட்டணத்தில் வேறு பொது இடங்களைத் (மண்டபம் / மடம் / ஆஸ்ரம்ம் ) விசேட காரியம் செய்வதற்க்கு தேடி ஓட ஆரம்பித்தார்கள்.
இப்படியாகத்தானே லௌகீகமான சினிமா, டிராமா, டி.வி, ஹோட்டல் என்று பொழுதுபோக்கு அம்சங்களும் அதற்காகச் செலவிடும் பணமும் நேரங்களும், அதிகமாகிப்போக, வைதீகம் ஆசாரம் எல்லாம் அலுத்துப்போக ஆரம்பித்தது.
வைதீகத்திற்குச் செலவு செய்வது வீண்செலவாகத் தெரிய ஆரம்பித்தது.
காலம் காலமாகச் செய்து வந்த வைதீகத்தை விட்டால் யாராவது ஏதாவது சொல்வார்களோ என்கிற பயத்தில் ஊருக்காக வைதீகம் செய்ய ஆரம்பித்தார்கள் (செய்கிறார்கள்).
தற்போது ப்ராம்மணன் என்பவன் ப்ராம்மணீயத்தை? இழந்து பெயரளவு ப்ராம்மணனாகவே மாறிவிட்டார்கள்.
இன்னும் சொல்ல போனால் பெயரளவில் ஆத்திகன், மனதளவில் நாத்திகன்.
இவர்களைப்போலவே பணம் ஸம்பாதிப்பதற்கு குறுக்குவழியில் தோன்றிய ஆன்மீகவாதிகள், ஜோதிடர்கள் போன்றோரின் "பித்ரு சாப" பயத்தினால்தான் இன்னமும் சிலபேர் ச்ராத்தாதிகளைப் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
கல்யாணம், உபநயனம் எல்லாம் வெகு ஆடம்பர விஷயமாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது.
அதிலெல்லாம் செலவு செய்வதைக் குறைத்தால் இவர்களின் சமூக அந்தஸ்து பாழ்பட்டுவிடும் என்பதால் அதற்கான செலவுபற்றி கவலைப்படமாட்டார்கள்.
ப்ருது ச்ராத்தம் செய்வதே வீண், ஏதோ பயத்திற்காகச் செய்கிறோம், இதற்கு இவ்வளவு அழவேண்டுமா என்று ச்ராத்தம் ஒன்றுதான் இவர்களுக்கு மிகவும் செலவு.

பண்ணவும் முடியாமல், விடவும் முடியாமல் மிகவும் உறுத்தலாக இருக்கிறது.
தினமும் ஒரு 20/-ரூபாய் அப்பாவுக்காக, மற்றும் ஒரு 20/- ரூபாய் அம்மாவுக்காக ( இன்று ஹோட்டல் காபி 30/- ரூபாய்) செய்யும் சிரார்த்தத்துக்கு என ஒதுக்கி வைத்தால் கூட 365*20=7300/- ரூபாய்.

சந்தோஷமாக வாத்யார்சம்பாவனை ப்ராமணார்த்த ஸ்வாமி தளிகையாளர் சம்பாவனை கர்தா மற்றும் உறவினர்கள் சாப்பாடு, அதிகமான பட்சணம் என ப்ருதுர் கர்மாவை செய்யலாமே
அல்லது மாதம் 600/- வீதம் இருவருக்கும் ஒரு சேமிப்பில் போட்டால் கூட 12*600= 7200/- ரூபாய் வருமே (மனம் தான் வேண்டும்)
பல ஞானவான்கள் கயாவுக்குப்போய் ஒருதரம் ச்ராத்தம் பண்ணிவிட்டு வந்தால் அதன் பிறகு ச்ராத்தம் பண்ணவதை விட்டுவிடலாமா எனக் கேட்கிறார்கள்.

உண்மை தான் இபோ ரொம்ப பேர்கள் அப்பா அம்மா சிரார்த்த தினத்தன்று எங்கியாவது ஒரு மடம்/ அனாதை ஆஸ்ர்மம் அல்லது முதியோர் இலங்களூக்கு போயி ஒரு நாற்பது ஐம்பது பேர்களூக்கு மதிய சாப்பாடு போட்டு விட்டு வந்து விடுகின்றார்கள் ...
கேட்டால் செலவும் கம்மி மந்தரம் நேரம் எல்லாம் மிச்சம் .......... எல்லாமே கிருஷ்ணார்பணம் என்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்களிடமிருந்து தான் வாழ வேறு வழியின்றி இயன்றவரை பணம் சம்பாதிக்கும் நிலை தான் இன்றைய வாத்யார்களுக்கு அதில் சந்தேஹமில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைய வைதீகமும் இருக்கிறது - இதை யாரும் மறுக்கமுடியாது.
சமூகம் சார்ந்த இந்த பிரச்சினைக்கு மனதுதான் காரணம்.
வாழ்க்கைமறை மாற்றமென்பது தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாறுபடுகிறது.
வைஷ்ணவநித்யானுஷ்டானுங்களுடன் வாழ்ந்தால் தான் மற்ற க்ரமங்களும் சரியாக நடக்கும்.
பல புரோகிதர்கள் பரிட்சையில் மார்க் வாங்க வேண்டும்என்ற காரணத்திற்காக மட்டுமே சமஸ்க்ருதம்படிக்கிறார்கள்.
போதாத குறைக்கு அரசியல் எதிர்ப்பு வேறு.
ஒரு கிறித்தவ பாதிரிக்கு உள்ள மதிப்பு கூட குடுமி வைத்த வைதீக/ ஆன்மீக பிராமணனுக்கு இல்லை.
அரசியல் காரணமும் லௌகீக ஆசைகளும் ப்ராமணனை எங்கோ தூரத்திற்கு கொண்டுபோய் விட்டுவிட்டன இன்று.

மீள்வது வெகுகடினம்.
இதற்குத் தீர்வு என்ன?
மீண்டும் பழைய நிலைக்கு லௌகீக ப்ராம்மணர்கள் வர இயலாது.
அவர்கள் நினைத்தால் இந்த நிலையை எளிதாக மாற்றலாம்:
ப்ராமணார்த்தம் - போக்தா - ச்ராத்த போஜனம் புஜிப்பதற்கு வைதீகர்களை எதிர்பார்க்காதீர்கள்.
எவ்வளவு வசதியானவரானாலும் தங்கள் உறவு அல்லது ப்ராமண நண்பர்களில் தாங்கள் மதிக்கக்கூடிய இருவரை அல்லது தங்கள் மாப்பிள்ளைஅல்லது ஸம்பந்தி, மைத்துனர், மாமாபிள்ளை, அத்தை பிள்ளை போன்றவர்களில் இருவரை தொடர்ந்து ஸ்வாமியாக ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.
இது பாவ கர்மா இல்லை மிக மிக புண்ணிய கர்மா. கண்டிப்பாக ப்ராமணர்கள் அனைவருமே ஸ்வாமிகளாக இருக்கலாம்., ஸ்வாமிகளாக இருக்க வேண்டும்.

உங்கள் உறவுமுறையும் நல்ல நிலையில் இருக்கும்
தக்ஷிணையாக அதிகம் (எதுவும் கொடுக்கவேண்டாம்) கொடுத்தாலும் அது உங்களுக்கு வீணாகத் தெரியாது.
அதுபோல் தாங்களும் வருடத்தில் சில முறை யாராவது உறவினர் வீட்டில் ஸ்வாமியாக இருந்து நிறைவேற்றிக்கொடுங்கள்.
இதைக் கடைப்பிடிப்பதால் 75 சதவீததற்குமேல் ப்ராமணார்த்தம் ஸ்வாமி பிரச்சினை தீரும்.
ச்ராத்தம் கற்க நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள்:
ச்ராத்த ப்ரயோகம் மந்திரம் சுமார் 100 பக்கங்கள் இருக்கும்,
அதில் கடுமையான வேத பாகங்கள் சில மட்டுமே உள்ளன
(அவற்றை இன்றைய வாத்யார்கள் கூடச் சொல்லுவதில்லை).
ஜபமாகப் பண்ணவேண்டியவற்றை மொபைலில்்ஆடியோவாக பதிவு செய்து வைத்துக்கொண்டு தேவையான இடத்தில் ஒலிக்கச் செய்யுங்கள்.
மற்ற விஷயங்களைச் சிறிது சிறிதாக மனப்பாடம்செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
மனப்பாடம் செய்யும் வரை, அல்லது மனப்பாடம் செய்ய முடியாத பகுதிகைளை ப்ரிண்ட் செய்தோ மொபைலில் பி டி எப் ஆக வைத்துக்கொண்டோ பார்த்துச் சொல்லலாம்.
தினமும் ஒரு முறை படித்தால் ஒரு வருடத்தில் கண்டிப்பாக மனப்பாடம் ஆகிவிடும்.
நேரமும் ஆர்வமும் இல்லாதவர்கள் :- தங்கள் பகுதியில் ஒரு பத்து இருபதுபோர் சேர்ந்து, ஏதாவது தனியார் கம்பெனி போன்றவற்றில் சொற்ப சம்பளத்தில் வேலையில் இருப்பவர்கள், வி ஆர் எஸ் வாங்கியவர்கள் ஒரளவு வைதீகத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தால் அவரை அணுகி ச்ராத்த ப்ரயோகத்தைக் கற்கச் செய்து அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உண்மையிலேயே ஸ்ரார்த்தத்திற்க்கு ஸ்ரீவாத்யார் ஸம்பாவனை கொடுக்க வசதியில்லாதவர்கள் (அப்படியிருக்கிறார்களா என தெரியவில்லை) தம் உறவினர்களில் யாராவது இரண்டுபேரைக் கூப்பிட்டு சங்கல்பம் சொல்லி ( மாதாவா/பிதாவா) காலலம்பி சாதம்போட்டு முடிந்த தக்ஷிணையைக் கொடுத்து ஸேவிக்கலாம்.
ஆனால் இயற்கையில் வசதி இல்லாதவர்களிடம் நேரம் நிறைய இருக்க வாய்ப்புண்டு, இவர்கள சிறந்த வாத்யார் யாரையாவது அணுகி கற்றுக்கொண்டு தாங்களும் பயன்பெற்று மற்றவர்களுக்கும் பயன் உள்ளவர்களாக இருத்தலே சிறப்பு.
மற்றவர்கள் எப்பவும்போல் தங்கள் இயலாமையை மறைக்க வாத்தியாரைத் திட்டிக்கொண்டே காலத்தைக் கடத்தலாம்.
கல்யாணம் போன்ற வைதீகங்களில் நேரம் முக்கியம் திருமாங்கல்ய தாரணம்/ மாப்பிள்ளை விரத்தானம்/பிரம்மோபதேசம்/ சீமந்தம்/ ஆயுஸ்ஹோம்ம்/ சுதர்சன ஹோம்ம்/கிரஹபிரவேசம் /ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் செய்யவேண்டும் வாத்தியார் அதை முறைபடி செய்ய நேரம் கொடுக்க வேண்டும். (வீடியோ போட்டோ நண்பர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட வைதிக கர்மாகளுக்கு நேரமும் முக்கியதுவமும் கொடுக்கவேண்டும் )
வாத்தியார்கள் அந்த நேரத்தில் மேற்படி கர்மாவை செய்ய நிறைய மந்திரம் சொல்ல வேண்டும் இதற்க்கு நம்மால் (நேரத்துக்கு ரெடியாதல்) பிறரால்( போட்டோ,வீடியோ/ ஊஞ்சல் சுத்தி பாடுதலில் அதிக நேரம்) எந்த இடையூறு இல்லாமல் இருந்தால் எல்லாம் சுபமாக திருப்தியாக நடக்கும்.
முடிந்தவரை வாத்யாரை வைதீகர்களை நல்ல சம்பாவனை மற்றும் வஸ்திரங்கள் தானங்கள் கொடுத்து கௌரவியுங்கள்( வருடம் இரு முறையேனும் விசேஷம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்)
ப்ருந்தாரண்ய நிவாஸாய பலராமானுஜாய ச
ருக்மினி ப்ராநநாதாய பார்த்தஸூதாய மங்களம்.


No comments:

Post a Comment