Friday, August 19, 2016

Om kaaram

ஓங்காரம் - ஓம்

ஓம் என்னும் சொல் அ+உ+ம் என்ற முன்று எழுத்துக்களால்ஆனது. 

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்துஉயிர்மெய்யானது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.இதை குறிப்பது தான் ஓம்.

அவரவர் கையால் மனிதனின் உடலை அளக்கும் பொழுதுஎண்சாண் அளவுடையது, மனிதன் விடும் மூச்சு இருவகை.உள்மூச்சு வெளிமூச்சு. 

உலக வாழ்க்கையில் ஏற்படும் மனமாற்சரியங்களை குறிக்கும்96 தத்துவங்களுடன் சேர்த்து பார்க்கலாம். 

அ என்பது தமிழ் எண்களில் 8ஐ குறிக்கும்
உ என்பது தமிழ் எண்களில் 2ஐ குறிக்கும்
ம் என்பது - உ என்ற எழுத்து உள்மூச்சை குறிக்கும் ம் என்றஎழுத்து வெளிமூச்சு. அதாவது ஆறு அறிவின் உணர்வுஇயக்கத்தால் எற்படும் இன்பத்தை குறிக்கும்.

8x2x6 = 96 இது 96 தத்துவங்களை குறிப்பதாகும். 

அகக்கருவிகள் 36

பூதம் 5
மண்
நீர்
தீ
காற்று
ஆகாயம்
தன்மாத்திரை 5
ச்ப்தம்
ஸ்பரிசம்
ரூபம்
ரசம்
கந்தம்
கன்மேந்திரியம் 5
வாக்கு
பாதம்
கை
எருவாய்
கருவாய்
ஞானேந்திரியம் 5
செவி
கண்
மூக்கு
நாக்கு
மெய்
அந்தக்கரணம் 4
மனம்
அகங்காரம்
புத்தி
சித்தம்
வித்தியா தத்துவம் 7
புருடன்
அராகம்
வித்தை
கலை
நியதி
காலம்
மாயை
சிவத்டத்துவம் 5
சுத்தவித்தை
ஈச்சுரம்
சாதாக்கியம்
விந்து
நாதம்


புறக்கருவிகள் 60

பிருதிவியின் காரியம் 5
மயிர்
தோல்
எலும்பு
நரம்பு
தசை
அப்புவின் காரியம் 5
நீர்
உதிரம்
மூளை
மச்சை
சுக்கிலம்
தேயுவின் காரியம் 5
ஆகாரம்
நித்திரை
பயம்
மைதுனம்
சோம்பல்
வாயுவின் காரியம் 5
ஓடல்
இருத்தல்
நடத்தல்
கிடத்தல்
தத்தல்
ஆகாயத்தின் காரியம் 5
குரோதம்
லோபம்
மோகம்
மதம்
மாற்சரியம்
வசனாதி 5
வசனம்
கமனம்
தானம்
விசர்க்கம்
ஆனந்தம்
வாயு 10
பிராணன்
அபானன்
வியானன்
உதானன்
சமானன்
நாகன்
கூர்மன்
கிருதரன்
தேவதத்தன்
தனஞ்சயன்
நாடி 10
இடை
பிங்கலை
சுழுமுனை
காந்தாரி
அத்தி
சிங்குவை
அலம்புடை
புருடன்
சங்கினி
குகு
வாக்கு 4
சூக்குமை
பைசந்தி
மத்திமை
வைகரி
ஏடணை 3
தாரவேடணை
புத்திர்வேடணை
அர்த்தவேடணை
குணம் 3
சாத்துவீகம்
இராசதம்
தாமதம்

இவை தவிர ஓங்காரத்தின் பொருளாக அம்மையும்அப்பனையும் இணைத்து அ என்னும் எழுத்து சிவனையும் உஎன்னும் எழுத்து உமையாளையும் குறிப்பதாகவும்கூறுவார்கள் சான்றோர்கள்.

No comments:

Post a Comment