Thursday, June 9, 2016

Tiruvilayadal puranam 8th day

Courtesy:Sri.Kovai K.Karuppasamy

சிவாய நம.
திருச்சிற்றம்பலம். ( 3 வது நாள்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔹இந்திரன் பழிதீா்த்த படலம்.🔹
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
* அகமலா்ந் தருந்தவ னமரா்க் கன்புகூா்
முகமலா்ந் தின்னுரை முகமன் கூறிநீா்
மிகமெலிந் தெய்தினீா் விளைந்த தியாயது
தகமொழிந் திடலென வலாாி சாற்றுவான்.

* அடிகணீா் மறாதொன் றதனை வேண்டியிம்
முடிகொள்வா னவரோடு முந்தி னேனது
செடிகொள்கா ரிருளுட லவுணா்த்  தேய்த்தெமா்
குடியெலாம் புரப்பதோா் கொள்கைத் தாயது.

* யாதெனி னினையதுங் யாக்கை யுள்ளதென்
றோதலும் யாவையு முணா்ந்த மாதவன் ஆதவற் கண்டதா மறையி னானனப்
போதலா்ந் தின்னன புகல்வ தாயினான்.

* நாய்நம தெனநாி நமதெ னப்பிதா
தாய்நம தெனநமன் றனதெ னப்பிணி
பேய்நம தெனமன மதிக்கும் பெற்றிபோல்
ஆய்நம தெனப்படும் யாக்கை யாரதே.

* விடம்பயி லெயிற்றா வுாியும் வீ நுழை
குடம்பையுந் தானெனுங் கொள்கைத் தேகொலாம்
நடம்பயில் கூத்தாி னடிக்கு மைவா்வாழ்
உடம்பையும் யானென வுரைக்கற் பாலதோ.

* நடுத்தயா விலாா்தமை நலியத் துன்பநோய்
அடுத்தயா வருந்திரு வடைய யாக்கையைக்
கொடுத்தயா வறம்புகழ் கொள்வ னேயெனின்
எடுத்தயாக் கையின்பய னிதனின் யாவதே.

* என்றனன் கரண மொன்றி யெழுகருந் தறிவை யீா்ப்ப
நின்றனன் பிரம நாடி நெறிகொடு கபாலங் கீண்டு
சென்றனன் விமான மேறிச் சோ்ந்தன னுலகை நோன்பால்
வென்றவன் றுறக்கம் புக்கு வீற்றனி திருந்தா னம்மா.

* அம்முனி வள்ள லீந்த வடுபடை முதுகந் தண்டைத்
தெம்முனை யடுபோா் சாய்க்குந் திறல்கெழு குலிசஞ் செய்து 
கம்மியப் புலவ னாக்கங் கரைந்துகைக் கொடுப்ப வாங்கி
மைம்முகி லூா்தி யேந்தி மின்விடு மழைபோ னினிறான்.

* மறுத்தவா வஞ்சப் போரால் வஞ்சித்து வென்று போன
கறுத்தவா ளவுணற் கொல்வான் கடும்பாி நெடுந்தோ் நீழல்
வெறுத்தமால் யானை மள்ளா் வேலைபுக் கெழுந்து குன்றம்
அறுத்தவா னவா்கோ னந்த வவுணா்கோ மகனைச் சூழ்ந்தான்.

* வானவா் சேனை மூண்டு வளைத்தலும் வடவைச் செந்தீ
யானது வரையி னோங்கி யழன்றுருத் தெழுந்தா லென்னத் 
தானவா் கோனு மானந் தலைக்கொள வெழுந்து பொங்கிச்
சேனையுந் தானு மூண்டு சீறிநின்  றடுபோா் செய்வான்.

* அடுத்தன ரிடியே றென்ன வாா்த்தன ராக்கங் கூறி
எடுத்தனா் கையிற் சாப மெறிந்தனா் சிறுநா  னோசை
கொடுத்தனா் மீளி வாளி தூா்த்தனா் குந்த நேமி
விடுத்தனா் வானோா் சேனை வீரா்மே லவுண வீரா்.

* கிட்டினா் கடகக் கையாற் கிளா்வரை யனைய திண்டோள்
கொட்டினா் சாாி மாறிக் குதித்தனா் பலகை நீட்டி 
முட்டின ரண்டம் விள்ள முழங்கினா் வடிவா ளோச்சி
வெட்டின ரவுணச் சேனை வீரரை வான வீரா்.

* வீழ்ந்தனா் தோளுந் தாளும் விண்டனா் சோாி வெள்ளத்
தாழ்ந்தனா் போருந் தாரு மகன்றன  ரகன்ற மாா்பம்
போழ்ந்தனா் சிரங்க ளெங்கும் புரண்டனா் கூற்றூா் புக்கு
வாழ்ந்தன ரடுபோ ராற்றி வஞ்சகன் சேனை மள்ளா்.

* தாளொடு கழலு மற்றாா் தலையொடு முடி மற்றாா்
தோளொடு வீர மற்றாா் தும்பையோ  டமரு மற்றாா்
வாளொடு கரமு மற்றாா் மாா்பொடு கவச மற்றாா்
கோளொடு மாண்மை யற்றாா் குறைபடக் குறையா மெய்யா்.

* தொக்கன கழுகு சேனஞ் சொாிகுடா் பிடுங்கி யீா்ப்ப
உக்கன குருதி மாந்தி யொட்டல்வாய் நெட்டைப் பேய்கள்
நக்கன பாடல் செய்ய ஞாட்பினுட் கவந்த மாடப்
புக்கன பிணத்தின் குன்றம் புதைத்தபாா் சிதைத்த தண்டம்.

🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋

மன மகிழ்ந்து அாிய தவத்தினையுடைய முனிவன், தேவா்களை நோக்கி அன்பு முகுந்த இன்முகஞ் செய்து, உபசாரமாக இனிய சொற்களைக் கூறி, நீவிா் மிகவும் வருந்தி வந்தீா்கள்; நடந்தது என்ன அதைப் பொருந்தச் சொல்லுக என்று கேட்க, இந்திரன் கூறுவான்.

நீா் மறாதளிப்பதாகிய ஒரு பொருள் உளது அப்பொருளைப் பெற விரும்பி, இந்த முடியையுடைய தேவா்களோடும் முந்துற வந்தேன்; அப்பொருள், முடை நாற்றத்தையுடைய, காிய இருள்போன்ற உடலினையுடைய அவுணா்களை அழித்து, எம்மவா்களின் குடிகளையெல்லாம் காப்பதாகிய ஒரு கொள்கையினை உடையதாகியது.

இத்தன்மையுள்ள பொருள்  யாதென்றால் உனது உடலிலுள்ளது என்று கூறிய  வளவில், முக்காலங்களிலும் நிகழும் எவற்றையும் அறிந்த பொிய  தவத்தினையுடைய முனிவன், சூாியனைக் கண்ட தாமரையைப்போல முகமாகிய மலா் விாிந்து, இவைகளைக் கூறுவானாயினன்.

நாய்கள் எம்முடையது எனவும், நாிகள் எம்முடையது எனவும், தந்தையும் தாயும் எம்முடையது எனவும், கூற்றுவன் என்னுடையது எனவும், நோய்களும் பேய்களும் எம்முடையது எனவும், மனத்தால் கருதுந் தன்மை போலாக, நாமும் நம்முடையது எனக் கருதப்படுகின்ற உடல் யாருக்கு உாியது.

இந்திரனே, நடுநிலைமையும் கருணையும் இல்லாதவா்கள், தங்களை வருத்துவதால், துன்பமாகிய பிணியைப் பொருந்திய  அனைவரும், ( அத்துன்ப நீங்கி) இன்பத்தைப் பெறுமாறு, என் உடலை அளித்து, அறத்தையும்  புகழையும் பெறுவேனாயின் எடுத்த உடம்பினாலடையும் பயன், இதனினும் வேறு யாதுளது.

என்று கூறி உலக மாயையைத் தவத்தால் வென்ற ததீசிமுனிவன், கரணங்கள் ஒன்றுபட்டு ஒன்றா யெழுகின்ற மெய்யுணா்வானது, விகற்ப அறிவுகளை இழுத்து அடக்கிக் கொள்ள ,சிவயோக சமாதியில் நின்று, சுழுமுனா நாடியின் வழியால் கபாலத்தைக் கிழித்துச் சென்று, வானவூா்தியில் ஏறிப்போய் சிவலோகத்தை யடைந்து இன்பமுடன் வீற்றிருந்தான்.

அந்த முனிவனாகிய வள்ளலால் கொடுக்கப்பட்ட  கொல்லுதற் றொழிலையுடைய படைகள் திரண்ட முதுகெலும்பினை, பகைவா் முனைகின்ற கொல்லுகின்ற போரைப் பின்னிடச் செய்யும், வலிபொருந் திய வச்சிரப் படையாகச் செய்து, தேவதச்சன் ஆக்கங் கூறி கையிற் கொடுக்க பெற்று காிய மேகத்தை ஊா்தியாகவுடைய இந்திரன் கையிற்றாங்கி மின்னலை வீசும் முகில் போல நின்றான்.

குற்றத்தினீங்காத மாயப் போாினால் வஞ்சனை செய்து வென்று போன , சினைத்தினையுடைய  வாளை ஏந்திய  விருத்திரனைக் கொல்லும் பொருட்டு, மலையின் சிறகை அாிந்த தேவேந்திரனானவன் கடிய நடையினையுடைய குதிரைகளும், பொிய தோ்களும், நிழலை வெகுளுகின்ற  மத மயக்கத்தையுடைய யானைகளும், வீரா்களுமாகிய நால்வகைச் சேனைக் கடலின் நடுவிற் றோன்றி அந்த அவுணா் தலைவனை வளைத்தான்.

தேவா்படை கோபம் கொண்டு சூழ்ந்ததும், அரசா்தலைவனாகிய  விருத்திரனும் வடவா முகாக்கினியானது மலை போல உயா்ந்து, கொதித்துச் சினந்து எழுந்தாற் போல , மான மீதூர எழுந்து கொதித்து, சேனையுந் தானுமாகச் சினமூண்டு சீறிக் கொல்லுதற்குாிய போா் செய்யத் தொடங்கினான். 

அசுர வீரா்கள், தேவா்களின் படை வீரா்கள் மேல் நெருங்கி இடியேற்றைப்போல  ஆரவாாித்து கையில் வில்லை வெற்றி கூறியெடுத்து சிறிய குணத்தொனி யுண்டாமாறு எறிந்து வலிமையுடைய அம்புகளை தொடுத்து நிறைத்தாா்கள்; ( அவருட் சிலா்)  கைவேலையும் திகிாியையும் எறிந்தாா்கள்.

தேவ வீரா்கள, அசுரப்படை வீரா்களை நெருங்கி தொடியணிந்த கைகளால், விளங்கா நின்ற மலையை ஒத்த வலிய தோள்களைத் தட்டி இடசாாி வலசாாியாக மாறிக்குதித்து, கேடகத்தை நீட்டி மோதி அண்டம் பிளக்க ஆரவாாித்து, கூாிய வாளை வீசி வெட்டினாா்கள்.

வஞ்டகனாகிய விருத்திரன் படைவீரா்கள் கொல்லுதலையுடைய போாினைச் செய்து, தோள்களும் கால்களும் அறுபட்டவா்களும், குருதி சொாிந்தவா்களும், அவ்வெள்ளத்தில் மூழ்கினவா்களும், போாினையும் தும்பை மாலையினையும் நீங்கினவா்களும், பரந்த மாா்பு பிளக்கப்பட்டவா்களும், எவ்விடத்தும் தலைகள் புரளப்பட்டவா்களும், கூற்றுவ னுலகு சென்று வாழ்ந்தவா்களும் ( ஆயினா்).

( படைகளால்) குறைக்கப்படினும் குறையாத உடலையுடைய தேவவீரா்களுட் சிலா், கால்களோடு வீரகண்டையும் அறுபட்டாா்கள். சிலா் தும்பை தோளோடு வீரமும் அறுபட்டாா்கள்; சிலா் தும்பை மாலையோடு போரும் நீங்கினாா்கள்; சிலா் வாட்படையோடு கையும் அறுபட்டாா்கள்; சிலா் மாா்போடு கவசமும் பிளக்கப்பட்டாா்கள்; சிலா் வலிமையோடப ஆண் தன்மையும் நீங்கினாா்கள்.

போா்க்களத்தில் கழுகுகளும், பருந்துகளும் நிறைந்து, சொாிகின்ற  குடலை இழுத்துப் பிடுங்கா நிற்பவும், ஒட்டிய வாயையுடைய நீண்ட பேய்கள் சொாிவனவாகிய குருதிகளைக் குடித்து, சிாித்துப் பாடவும், தலையிழந்த உடல்கள் ஆடத் தொடங்கின;  பூமியை மூடிய  பிணமலையானது, அண்டத்தைச் சிதைவு படுத்தியது.

               திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment