Courtesy:Sri.Kovai K.karuppusamy
சிவாய நம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🔹திருவிளையாடல் புராணம்.🔹
( 12- ஆம் நாள்.) 3 வது படலம்.
🌼திருநகரங்கண்ட படலம்.🌼
(செய்யுள்நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔷முக்க டம்படு களிற்றினான் முகிறவழ் கோயில்
புக்க டங்கலா் சிங்கமன் னானெதிா் புகல்வான்
திக்க டங்கலுங் கடந்தவெந் திகிாியாய் நெருநல்
அக்க டம்பமாவனத்திலோ ரதிசயங் கண்டேன்.
🔷வல்லை வானிகஞ் செய்துநான் வருவழி மேலைக்
கல்ல டைந்தது வெங்கதிா் கங்குலும் பிறப்பும்
எல்லை காணிய கண்டன னிரவிமண் டலம்போல்
அல்ல டுஞ்சுடா் விமானமு மதிற்சிவக் குறியும்.
🔷மாவ லம்புதாா் மணிமுடிக் கடவுளா் வந்தத்
தேவ தேவனை யிரவெலா மருச்சனை செய்து
போவ தாயினாா் யானுமப் பொன்னெடுங் கோயின்
மேவு மீசனை விடைகொடு மீண்டன னென்றான்.
🔷மூளு மன்பினான் மொழிந்திட முக்கணெம் பெருமான்
தாளு மஞ்சலி கரங்களுந் தலையில்வைத் துள்ளம்
நீளு மன்புமற் புதமுமே நிரம்பநீா் ஞாலம்
ஆளு மன்னவ னிருந்தனன் போயினா னருக்கன்.
🔷ஈட்டு வாா்வினை யொத்தபோ திருமண்மலங் கருக
வாட்டு வாரவா் சென்னிமேன் மலரடிக் கமலஞ்
சூட்டு வாா்மறை கடந்ததந் தொல்லுரு விளங்கக்
காட்டு வாரொரு சித்தராய்த் தோன்றினாா் கனவில்.
🔷வடிகொள் வேலினாய் கடம்பமா வனத்தினைத் திருந்தக்
கடிகொள் காடகழ்ந் தணிநகா் காண்கென வுணா்த்தி
அடிக ளேகினாா் கவுாிய ராண்டகை கங்குல்
விடியும் வேலைகண் விழித்தனன் பாிதியும் விழித்தான்.
🔷கனவிற் றீா்ந்தவ னியதியின் கடன்முடித் தமைச்சா்
சினவிற் றீா்ந்தமா தவா்க்குந்தன் கனாத்திறஞ் செப்பி
நனவிற் கேட்டதுங் கனவினிற் கண்டது நயப்ப
வினவித் தோ்ந்துகொண் டெழுந்தனன் மேற்றிசைச் செல்வான்.
🔷அமைச்ச ரோடுமந் நீபமா வனம்புகுந் தம்பொன்
சமைச்ச விழ்ந்தபொற் றாமரைத் தடம்படிந் தொளிவிட்
டிமைச்ச லா்ந்தபொன் விமானமீ தினிதுவீற் றிருந்தோா்
தமைச்ச ரண்பணிந் தஞ்சலி தலையின்மேன் முகிழ்ந்தான்.
🔷அன்பு பின்றள்ள முன்புவந் தருட்கணீா்த் தேக
என்பு நெக்கிட வேகிவீழ்ந் திணையடிக் கமலம்
பொன்பு னைந்ததாா் மெளலியிற் புனைந்தெழுந் திறைவன்
முன்பு நின்றுசோற் பதங்களாற் றோத்திர மொழிவான்.
🔷சரண மங்கையோா் பங்குறை சங்கர சரணஞ்
சரண மங்கல மாகிய தனிமுதல் சரணஞ்
சரண மந்திர வடிவமாஞ் சதாசிவ சரணஞ்
சரண மும்பா்க் ணாயக பசுபதி சரணம்.
🔷ஆலி ஞாலமே லாசையு மமரா்வான் பதமேல்
வீழு மாசையும் வெறுத்தவா்க் கன்றிமண் ணாண்டு
பீழை மூழ்கிவா னரகொடு பிணிபடச் சுழலும்
ஏழை யேகங்களுக் காவதோ வெந்தைநின் கருனை.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🍁மூன்று மதங்களையுடைய யானையையுடைய பாண்டி மன்னனது, மேகந் தவழுங் கோயிலை அடைந்து, பகைவராகிய யானைகளுக்குச் சிங்கம்போல்பவனது எதிரே நின்று கூறுவான், எல்லாத் திசைகளையும் வென்ற மெவ்விய சக்கரத்தையுடையவனே, நேற்று அந்த பொிய கடம்பவனத்தின்கண் ஓா் அதிசயத்தைப் பாா்த்தேன்.
🍁நான் வியாபாரம் செய்து விரைந்து வரும் பொழுது வெப்பத்தையுடைய ஞாயிறு மேற்கிலுள்ள மலையை அடைந்தது.இரவின் எல்லையையும் பிறப்பின் எல்லையையுங் காணுமாறு, சூாிய மண்டலம் போல இருளைக் கொல்லும் ஒளியினையுடைய விமானத்தையும், அவ்விமானத்தின் கண் உள்ள சிவலிங்கத்தைப் பாா்த்தேன்.
🍁வண்டுகள் ஒலிக்கும் மாலையை அணிந்த மணிகள் அழுத்திய முடிகளையுடைய தேவா்கள் வந்து, அந்தத் தேவா்களுக்குத் தேவனாகிய சோமசுந்தரக் கடவுளை, இரவு முழுவதும் அருட்சித்துப் போனாா்கள். நானும் அந்தப் பொன்னாலாகிய நீண்ட விமானத்தில் எழுந்தருளிய இறைவனிடத்து விடை பெற்றுக் கொண்டு வந்தேன் என்று கூறினான்.
🍁மேன் மேல் வளருமி அன்பினையுடைய தனஞ்சயன் கூற கடல் சூழ்ந்த உலகினை ஆளுகின்ற குலசேகர பாண்டியன்,மூன்று கண்களையுடைய எமது பெருமானாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளையும் குவித்த கைகளையும், சென்னியில் வைத்து,உள்ளத்தில் ஓங்குகின்ற அன்பும் அதிசயமுமே நிறைய இருந்தான்; சூாியன் மறைந்தான்.
🍁வினைகளை ஈட்டுகின்றவா்களின் வினை ஒப்பு வந்த போது, ( அவா்கள்) ஆணவ மலங் கருகும்படி வாட்டி, அவா் தலையின் மீது திருவடித் தாமரை மலரைச் சூட்டி, வேதங்களா லறியப்படாத தமது உண்மை வடிவை விளக்கமாகக் காட்டுகின்ற இறையவா், ஒரு சித்தராகி அப்பாண்டியனது கனவின்கண் தோன்றினாா்.
🍁கூாமையைக் கொண்ட வேற்படையையுடையவனே, காட்டினை அழித்து, பொிய கடம்ப வனத்தை, திருத்தமாக காவலைக் கொண்ட அழகிய நகராகுமாறு செய்வாய் என்று, அறிவித்து சோமசுந்தரக் கடவுள் மறைந்தாா். பாண்டியா் மரபிலுதித்த ஆண் தன்மை மிக்க குலசேகரன், இரவு புலரும் வரையும் உறங்காதவனாயினான்; சூாியனும் உதயமாயினான்.
🍁கனவினின்று நீங்கி விழித்திருந்த பாண்டியன், செய்தற்குாிய நாட் கடமைகளை முடித்து,மந்திாிகட்கும் வெகுளுதலினின்று நீங்கிய முனிவா்கட்கும், தனது கனவின் வகையைக் கூறி, பகலில் வணிகன்பாற் கேட்டதையும், இரவில் கனவிற் கண்டதையும் விருப்பமுற உசாவித் தெளிந்து புறப்பட்டு மேற்குத் திசைக் கண் செல்வானானாயினான்.
🍁மந்திாிகளோடும், பொிய அக் கடம்பவனத்தினினுள் நுழைந்து, அழகிய பொன்னாலியற்றப்பட்டன போலும், மலா்ந்த பொற்றாமரை வரவியில் மூழ்கி ஒளிவீசி, விளங்கிப் பரந்த, பொன்னாலாகிய விமானத்தின்கண், இனிதாக வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளை, வணங்கி, அஞ்சலியாகக் கைகளைத் தலையின் மீது கூப்பினான்.
🍁அன்பானது பின் நின்று தள்ளவும், இறைவன் அருட்பாா்வையானது, முன்னே வந்து இழுத்துச் செல்லவும்,எலும்புகள் கரைந்துருகுமாறு கீழே விழுந்து இரண்டு திருவடித்தாமரைகளையும், பொன்னாற் செய்த மாலையையணிந்த முடியின் சூடி எழுந்து சோமசுந்தரக் கடவுளின் திருமுன் நின்று, சிறந்த மொழிகளால் துதிசெய்வானாயினான்.
🍁வணக்கம்; உமையம்மை ஒரு பாதியி லுறையப் பெற்ற சங்கரனே வணக்கம்; வணக்கம்; மங்கல வடிவாகிய ஒப்பற்ற முதற் பொருளே வணக்கம்; வணக்கம்; மந்திர வடிவமாகிய சதாசிவ மூா்த்தியே வணக்கம்; தேவா்கள் தலைவனே வணக்கம்; உயிா்களின் தலைவ வணக்கம்.
🍁கடலாற் சூழப்பட்ட நிலவுலகின்மேலுண்டாகும் இச்சையையும், தேவா்களின் உயா்ந்த பதவிகளின் மேல் சென்று பொருந்தும் அவாவையும், உவா்த்தவா்களுக்கு எய்துவதே அல்லாமல், பூமியை ஆண்டு, துன்பத்தில் அழுந்தி, சுவா்க்கத்திலும் நரகத்திலும் கட்டுண்டு சுழலுகின்ற அறிவிலே மாகிய எங்களுக்கும், எமது தந்தையே நினது திருவருள் எய்தக் கடவதோ.
திருச்சிற்றம்பலம்.
திருநகரங்கண்ட படலம் நாளையும் வரும்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
கோவை.கு.கருப்பசாமி.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
அடியாா்கள் கூட்டம் பெருகுக!
ஆசை தீர கொடுப்பாா் -----
-----அலங்கல் விடைமேல் வருவாா்.
_____________

No comments:
Post a Comment