Courtesy: Sri.Sundararajan
பள்ளிப்படை என்பது சோழர் காலத்தில் இறந்து போகும் ராஜ குடும்பத்தினர், பெரும் போரில் இறக்கும் வீரர்கள் ஆகியோரது அஸ்தியின் மேல் கோயில் எழுப்புவது.
பஞ்சவன் மாதேவி என்பவள் ராஜ ராஜ சோழனின் ஐந்தாவது மனைவி. பள்ளிப்படை எழுப்ப பட்டிருப்பதை வைத்து அவள் ராஜ ராஜனின் பிடித்தமான மனைவி என்றும் தெரிந்து கொள்ளலாம். அவளது அஸ்தியின் மேல் ஒரு லிங்கம் அமைக்க பெற்று கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் 1978ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் அறியப்பட்டு முழு கோயிலும் மீட்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பானதொரு விஷயம்.
கோயிலின் கற்பக்கிருகத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நேரே கீழாக பஞ்சவன் மாதேவியின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கின்றது. பஞ்சவன் மாதேவி ஒரு தளிச்சேரி பெண் என்றும் ,ஆடல் கலை மற்றும் போர்த்திறனிலும் சிறந்து விளங்கியவள் என்றும். ராஜராஜன் உள்ளம் கவர்ந்த அன்பு மனைவி என்றும், ராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவில் எழுப்பிய பொழுது மன்னனுக்கு எல்லாமுமாக இருந்து உதவி செய்தவர் என்றும். ராஜேந்திர சோழனை தன்னுடைய சொந்த மகனாக பாவித்து வளர்த்தவர் அதலால் ராஜேந்திரனை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று மூலிகை மருந்து உண்டு தன்னை மலடாக்கி கொண்டவள் போன்ற பல செவிவழி செய்திகள் உண்டு.
பஞ்சவன் மாதேவி அளித்த கொடைகளும்,சாதனைகளும் பலவாகும்.நினைவு கூறத்தக்க வகையில் புகழ் மிகுந்து திகழ்ந்ததால் சோழ நாட்டில் ஓர் ஊருக்கே இவர் பெயரால் "பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்களம்" என பெயர் மாற்றம் ஏற்பட்டது.
No comments:
Post a Comment