வேடிக்கை பார்ப்பது, நியூஸ் பேப்பர் விமர்சனம் இவற்றில் எவ்வளவு பொழுது வீணாகிறது.
அதையெல்லாம் பகவத்நாம ஸ்மரணையில் செலவிடலாமே. இதற்கென்று தனியே பொழுது ஏற்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை.
காரியாலயத்திற்கு பஸ்ஸிலோ, ரயிலிலோ போகும்போது கூட பகவத்நாமாவை ஜபித்துக் கொண்டே போகலாமே.
ஓடி ஓடி சம்பாதிப்பதில் ஒரு பைசா கூட பிற்பாடு உடன் வராதே.
மறு உலகத்தில் செலாவணி பகவத்நாமா ஒன்றுதானே.
மனசு பகவானின் இடம்.
அதைக் குப்பைத் தொட்டியாக்கி இருக்கிறோம்.
அதைச் சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக அமைந்துவிட வேண்டும்.
தினமும் ஐந்து நிமிடங்களாவது இப்படி தியானம் செய்ய வேண்டும்.
லோகமே மூழ்கிப்போனாலும் நிற்காமல் நடக்க வேண்டிய காரியம் இது.
ஏனெனில் லோகம் மூழ்கும்போது நமக்கு கைக்கொடுப்பது இதுதான்.
.........தெய்வத்தின் குரல்
(ஸ்ரீ மகா பெரியவா )
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
No comments:
Post a Comment