Courtesy:Sri.Gs.Dattatreyan
நன்றி ஜோதிட மணி ஶ்ரீ தட்சிணாமூர்த்தி அவர்கள்.
ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்!
வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முதல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள்.
எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு.
இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.
வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்.
திருச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன்னிய சமுதாய மக்கள் வன்னி மரத்தைப் புனித மரமாகக் கருதுகின்றார்கள். வன்னிய சமுதாய மக்கள் மரணம் அடைந்தபின் வன்னிமரக்கட்டைகளின் மீது பூத உடலை வைத்து எரித்து சாம்பலாக்கும் பழக்கம் இன்றும் காண முடிகிறது.
இந்தியப் பாலைவனங்களின் தங்க மரம்' எனச் சிறப்பிக்கப்படுவது வன்னி மரம். பாலைவனங்களிலும் வானிலை அதிகம் வறண்டிருக்கும் பகுதியிலும் தாக்குப்பிடித்து வளரக் கூடிய பசுமை மாறாத மரம் வன்னி. இதன் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுவதால், 'கற்பகதரு' என்றும் சொல்வார்கள்.
சனி பகவான் கோவிலில் வணங்கப்படும்வன்னி மரம் (PROSOPIS SPICIGERIA LINN) திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பாடல் :வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே வன்னி மரத்தைப் பற்றி ரிக்வேதம், மகாபாரதம் மற்றும் ராமாயணத்திலும் கூறப்பட்டிருக்கின்றது. மார்ப்புச் சளியையும் இந்த வன்னிக்காய் பொடி எடுக்கும். இந்த வன்னி இலையை அம்மியில் அரைத்து அப்படியே புண் இருக்கும் இடத்தில் கட்டினால் அப்படியே சரியாகிவிடும். எல்லா மரத்தையும் கரையாண் அறிக்கும். ஆனால் இதை மட்டும் கரையாண் தொடாது. நெருங்கவே முடியாது. அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த மரத்தினுடைய அமைப்பு எவ்வளவு வலிமையானது என்று.
பல ஆலயங்களில் தலவிருட்சமாக இருப்பதே இந்த வன்னி மரம்தான். விருதாச்சலத்தை எடுத்துக்கொண்டால் வன்னி மரம்தான் தலவிருட்சம். இராம பிராண் இராவணை நோக்கி போர் தொடுக்கப் போகும் முன்பாக வன்னி மரத்தை தொட்டு வணங்கி வலம் வந்து சென்றதாக ஐதீகம். அதேபோல, வள்ளிக் குறத்தியை மணப்பதற்காக முருகன் வன்னி மர வடிவில் காட்சியளித்ததாகவும் ஐதீகம்.
அதேபோல, பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செல்வதற்கு முன்பாக நிராயுதபாணியாக இருக்க வேண்டுமல்லவா, அப்பொழுது அவர்களுடைய ஆடை, அணிகலன்கள், ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு பெரிய துணியில் வைத்துக் கட்டி, மரஉறி தறித்து கிளம்புவதற்கு முன்பாக, வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றதாகவும் ஐதீகம். அப்படியானால், இது ஒரு பாதுகாப்பிற்கு உரிய மரம், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் என்ற அதன் தன்மை நமக்குத் தெரிகிறது.
வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.
உமா தேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
வன்னிமரம் விநாயப்பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில் அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகில் உள்ள சாத்தனூர், பாசிகுளம் விநாயகர் சாஸ்தாவுக்கு அக்னி சொரூபமாக வன்னிமர வடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது.
வன்னிமர இலையை வட மொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள்.
இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும்.
விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.
நவக்கிரங்களில் இது சனி பகவான் (SATURN PLANET) தொடர்பு கொண்டது.
பெண் தெய்வம் நீலாதேவிக்குப் படைக்கப்படுகிறது.விருத்தாசலத்திலுள்ள விருதகிரீஸ்வரர் கோவிலிலுள்ள வன்னி மரத்தை பக்தர்கள் 9 முறை சுற்றி வந்து மரத்தின் தண்டில் நூலைக் கட்டி நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். இதனால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். சொத்து சுகம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இம்மரத்தின் பட்டையைத் துண்டு செய்து சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்று நம்புகின்றனர்.
வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள விநாயகபுரம் ஒட்டநேரியிலுள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் வன்னி மரத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. சனி பகவான், நீலாதேவி பெண்அம்மன், காக வாகனத்தில் கருப்பு நிற ஆடை அணிவித்து எள் தானியத்துடன்,
நவரத்தினத்தில் நீலக்கல் பதித்து, வன்னி மரத்தின் அடியில் மேற்கு திசையை நோக்கி மகரம், கும்ப ராசியில், இந்த ஆலயத்தில் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன.
மராட்டிய போர் வீரர்கள் போருக்குப் புறப்படும் முன் வன்னி மர இலைகளைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு புறப்படும் பழக்கமிருந்தது. வன்னி மரத்தைச் சுற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை பிறக்கும
No comments:
Post a Comment