Thursday, April 7, 2016

Gnanapana Krishna gita 33rd adhyaya

Courtesy:Sri.Hariharan


ஞானப்பானா-கிருஷ்ணகீதை

அத்தியாயம் 33

 

வாழ்வின் நிலையற்ற தன்மை

 

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணாகோவிந்தாநாராயாண ! ஹரே!

அச்யுதானந்தாகோவிந்தாமாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

 

വിദ്യകൊണ്ടറിയേണ്ടതറിയാതെ

വിദ്വാനെന്നു നടക്കുന്നിതു ചിലര്

കുന്കുമത്തിന്റെ ഗന്ധമറിയാതെ

കുന്കുമമ് ചുമക്കുമ് പോലെ ഗര്ദ്ദഭമ്

வித்யகொண்டறியேண்டறியாதெ

வித்வானென்னு நடக்கன்னிது சிலர்

குங்குமத்தின்றெ கந்தமறியாதெ

குங்குமம் சுமக்கும் போலெ கர்த்தபம்

வித்யா- ஞானம் என்றால் என்னா என்று தெரியாமலையே நிறைய படிக்கின்றனர் மனிதர்கள். தன்னுள் இருக்கும் பரமனை அடையாளம் காண்பது தான் ஞானம் என்றறியாமல் வேதங்களையும் வேதாங்களையும் கரைத்துகுடித்து விட்டு தாங்கள் பண்டிதர்கள் அறிவாளிகள் என்ற மாதையில் வாழ்கிறார்கள் சிலர்.' நான் யார்" என்று தெரிந்து கொள்வதே உண்மையான ஞானம்- ஆத்ம சாக்ஷாத்காரம் தான் சிறந்த அறிவு என்று தெரியாமல்வாழ்வை வீணடிக்கிறார்கள் சிலர். விவேகம் என்பது எது நித்தியம் எது அனித்தியம் என்று தெரிந்து கொள்வதே. அந்த விவேகம் வராத வரை எத்தனை வேதங்களை படித்தவர்களாயிருந்தாலும் அவர்கள் கற்பூர வாசனை தெரியாத கழுதை கற்பூர பொதியை சுமப்பவர்களாவார்கள்

 

ക്രിഷണ ! ക്റിഷണ! നിരൂപ്ച്ചുകാണുമ്ബോള്

ത്രുഷ്ണ കൊണ്ടേ ഭ്രമിക്കുന്നിതൊക്കെയുമ്

എണ്ണിയെണ്ണിക്കുറയുന്നിതായുസ്സുമ്

മണ്ടിമ്ണ്ടിക്കരേറുന്നു മോഹവുമ്

க்ரிஷ்ண! க்ரிஷ்ண! நிரூபிச்சுகாணும்போள்

த்ருஷ்ண கொண்டே ப்ரமிக்குன்னிதொக்கெயும்

எண்ணியெண்ணிக்குறையுன்னிதாயுஸ்ஸும்

மண்டிமண்டிக்கரேறுன்னு மோஹவும்

கிருஷ்ண ! கிருஷ்ணா ! யோசித்துப் பார்க்கையில் எப்படி இந்த நிலை கெட்ட மாந்தரெல்லாம் மோகத்திற்கு வசப்பட்டு அந்த மயக்கத்திலேயே ஆயுள்குறைவது கூட தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்ஆயுள் குறையக் குறைய மனிதனின் ஆசை அதிகரித்துக்கொண்டே போகிறது.நெருப்பில்வார்க்கும் நெய் அதை அனைக்க உதவாமல் மேற்கொண்டு கொழுநுவிட்டு எரிய செய்வது போள் மோஹம் போதும் என்ற திருப்தியை  நிறைவைத் தராமல் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற உத்வேகத்தையே உண்டுபண்ணுகிறது.

വന്നുവോണമ് കഴിന്ജു വിഷുവെന്നുമ്

വന്നില്ലല്ലോ തിരുവാതിരൈയെന്നുമ്

കുമ്ഭ മാസത്തിലാകുന്നു നമ്മുടെ

ജന്മനക്ഷത്രമശ്വതിനാളെന്നുമ്

வன்னுவோணம் கழிஞ்சு விஷுவென்னும்

வன்னில்லல்லோ திருவாதிரையென்னும்

கும்பமாஸத்திலாகுன்னு நம்முடெ

ஜன்ம நக்ஷத்ரமஸ்வதினாளென்னும்

திஉவோணம், திருவாதிரை, விஷு, முதலிய பண்டிகைகளும் பிறந்த நாள், இறந்த பெரியோர்களுக்கான சிராத்தம் முதலிய தினங்களில் சிறந்த உணவுகளை சாப்பிட்டும் நாட்களை கழிக்கின்றனர் மனிதர்கள். எல்லாம் நினைவிற்கு வரும்; ஹரி நாமம் மட்டும் நினைவிற்கு வராது. என்னே பரிதாபம்.,

ശ്രാധമുണ്ടഹോ വ്രുശ്ചിക മാസത്തില്

സദ്യയൊന്നുമെളുതല്ലിനിയെന്നുമ്

ഉണ്ണിയുണ്ടായി വേള്പ്പിച്ചതിലൊരു

ഉണ്ണിയുണ്ടാക്കണ്ടാവൂ ന്ജാനെന്നുമ്

ஸ்ராத்தமுண்டஹோ வ்ரிச்சிகமாஸத்தில்

ஸத்யன்னுமெளுதல்லினியென்னும்

உண்ணியுண்டாயி வேள்ப்பிச்சதிலொரு

உண்ணியுண்டாயிக்கண்டாவூ ஞானென்னும்

தனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும்அந்தக் குழந்தைக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும்அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை பிறக்கவேண்டும்;ஆசைகள் நீண்டுகொண்டே போகின்றது.

കോണിക്കല്ത്തന്നെ വന്ന നിലമിനി

ക്കാണമന്നന്നെടുപ്പിക്കരുതെന്നുമ്

ഇതിലോരോന്നു ചിന്തിച്ചിരിക്കുമ്ബോള്

ചത്തുപോകുന്നു! ശിവ! ശിവ!

கோணிக்கல்த்தன்னெ வன்ன நிலமினி

க்காணமென்னன்னெடுப்பிக்கருடென்னும்

இதிலோரோன்னுசிந்திச்சிரிக்கும்போள்

சத்துபோகுன்னு ! சிவ ! சிவ!

வீட்டு வாசல் வரை நில புலங்கள்  இருக்க வேண்டும்; சொத்து சேர்க்க வேண்டும்; தனக்கு மட்டுமல்ல. தனது வருங்கால சந்ததியருக்கும் சேர்த்துவைக்க வேண்டும்; ஆசை வளர்ந்துகொண்டே பொகும். ஒரு நாள் சொல்லாமலையே மரணம் வந்து அள்லிக்கொண்டு போகும்.சிவ !  சிவ ! மனிதனின் நிச்சயமற்ற வாழ்வு எவ்வளவு அனித்தியம் .இதை புரிந்து கொள்ளாமல் பகவன் நாமம் சொல்லாமல் எப்படி வாழ்கிறார்கள் நிலைகெட்ட மனிதர்கள் என்று வியக்கிறார் பூந்தானம். நாமாவது பகவன் நாமம் சொல்லுவோம்.

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணாகோவிந்தாநாராயாண ! ஹரே!

அச்யுதானந்தாகோவிந்தாமாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

No comments:

Post a Comment