நமசிவாய
நம் குழந்தைகளை சிறு வயதிலேயே நல்ல பழக்க வழக்கங்கள், ஆனமீக சிந்தனைகள் எப்படி கற்றுக் கொடுப்பது பற்றிப் பார்ப்போம்
நமக்கு குழந்தைகளால் பிரச்சனையே நாம் நம் குழந்தைகளுக்கு ஆன்மீகம் பற்றியோ கோவில்கள்
பற்றியோ நல்ல பழக்க வழக்கங்கள் பற்றியோ சொல்லி கொடுப்பதில்லை
நாம் நம் குழந்தைக்கு 3 வயதிலிருந்தே பள்ளிகூடம் ( பள்ளியில் குழந்தையை சேர்ப்பதற்கு) ஆஸ்பத்திரி ( மருத்துவமனைகள்) என்று அலைகிறோம்
இறைவனையோ நம் சமயத்தையோ நாம் சொல்லி கொடுப்பதில்லை ஏன் என்றால் அது நம் குழந்தைகளின் பாடதிட்டத்தில் இல்லை இருந்தால் அதற்க்கும் டூஷன் வைத்திருபார்கள்
இன்று ஒரு செங்கல் 5ரூபாய் விலை ஆனால் ஒரு அற்புதமான கோவிலை கட்டியவர்களின் உழைப்பும் தர்ம சிந்தனையும் பற்றி நாம் நம் குழந்தை களுக்கு சொல்லி தருவதில்லை
அவர்களுக்கு தேவைபடும்போது அவர்களாகவே தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறோம்.
முதலில் படிக்கட்டும் பின்பு நல்ல உத்யோகம் கிடைக்கட்டும் என்று நமது சமயத்தை பற்றி தெரியாமல் வளர்த்து விடுகிறோம் அவர்களும் 40 வயது வரும் போது நமதுசமயத்தில் உள்ள யோகம் ,அனுஷ்டானம்,
ஓழுக்கம் பற்றி தெரியாமல்
வசதி படைத்தவன் ஹய்டெக் சாமியார்களிடமும்
அப்பர் மிடில்கிலாஸ் கோவில் சிவாச்சாரியார்களிடமும்
லோயர் மிடில்கிலாஸ் ஜோஷியர்களிடமும்
ஏழைகள் குறிசொல்பவர்களிடமும் சென்று மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்.
நம் போன்றவர்கள் ( சிவனடியார்கள்) நீங்கள் இறைவனை நம்புங்கள்
நித்தம் கோவில் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினால்
உங்களால் முடிகிறதென்றால் "அது அவன் அருள் இருந்தால் தான் அவன் அருள் கிடைக்கும் என்று ஒரு ரெடிமேடான பதிலையே வைத்திருக்கிறாரகள்
இது திருவாசகத்தை பற்றி சரியாக அறியாததனால் வருவது
'சிவன் அவன் என் சிந்தையில் நின்ற அதனால்
அவன் அருளாளே அவன் தாள் வணங்கி என்று
இவர்கள் சிவனை சிந்தையில் வைக்காமல் எப்படி அவன் அருள் கிடைக்கும்
ஆகவே முதலில் உங்கள் குழந்தைகளை கோவிலுக்கு அடிக்கடி அழைத்து செல்லுங்கள்
சிவன் விநாயகர் முருகர் மற்றும் 63 நாயன்மார்கள் பற்றிய தகவல்களை கதையாகவோ அல்லது புராணமாகவோ எளிமையாக கூறுங்கள்
7 வயது அல்லது 3ஆம் வகுப்பு படிக்கும் போது உழவாரப்பணி செய்ய அனுப்புங்கள்
12 திருமுறைகளை ( பண்ணுடன் பயிற்சி கொடுத்து) பாடச்சொல்லுங்கள்
10-12 வயதுக்குள் தீட்சை ( திருமடங்களில் சமய தீட்சை, விஷேட தீட்சை, அபிடேக தீட்சை) வாங்க சொல்லுங்கள்
14-21வயதுக்குள் சித்தாந்தம் ( திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் மூலம் நடத்தப்படும் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து சைவ சித்தாந்தம்) பயிலச்சொல்லுங்கள்
இப்போது பாருங்கள் 22வயதில் உங்கள் மகனோ ,மகளோ எவ்வளவு தெளிவுடன் இருக்கிறார்கள் என்றும் மேலும் சிவக்கலையுடன் இருக்கிறார்கள் என்றும் பாருங்கள்
ஆகவே நாம் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே ஆன்மீக சிந்தனையை ( சிறு செடி வைத்து நீர் ஊற்றி வளர்ப்பது போல்) ஊட்டிவிட்டால் அது பெருகி கற்பக விற்சகம் போல் வளர்ந்து தன்னையும் பாதுகாத்து மற்றோர்களையும் நல்வழிப்படுத்தும்
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment