திருநீறு அணிவதால் ஏற்படும் நன்மைகள்
என்ன.?-- ஓரு அறிவியல் பூர்வ உண்மை.!
---------------------------------------------
----------------------
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின்
சாணத்தை எடுத்து உருண்டை ஆக்கி
வெயிலில் காயவைக்க வேண்டும். பின்
இதனை உமியினால் மூடி புடம் போட்டு
எடுக்க வேண்டும். இப்போது இந்த
உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும்.
இதுவே உண்மையான திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும்
திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள்
இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த்
தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்
கொள்ளுகின்றது.
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக்
கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில்
உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக்
கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம்
காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய
பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த
நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும்
வெளியிடப்படுகின்றது, உள்
இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின்
சக்தியை இழுத்து சரியான முறையில்
உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு
செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில்
இடுவார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக்
குறைந்துவிட்டால், இலங்கை போன்ற
வெப்பமான நாடுகளில் வளரும் கோழி
இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக்
கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை
தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா!
அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி
தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை
உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.
பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு
செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற
பலவகையான புல்வகைகளை உண்டு தனது
உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம்
தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண
மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக்
கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும்
இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய
நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால்
அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம்
இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே
மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில்
திருநீறு, சந்தனம் போன்றவை
இடப்படுகின்றன.
சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும்
வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம்
கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில்
பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத்
தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள
மூளையின் புறணி (frontal cortex) என்னும்
இடத்தில் அணியப்படும் சந்தனமானது
வெப்பம் மிகுதியால் ஏற்படும்
மூளைச்சோர்வை நீக்குகின்றது.
சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில்
இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில்
ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும்
மூளை பின்புற மேடு (Hippocampus)
என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான
முறையில் அனுப்புவதற்கு இந்த மூளையின்
புறணி சிறப்பான முறையில் தொழிற்படும்.
உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை
நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும்
இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி
நகைச்சுவையாகப் பார்வைக்குத்
தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில்
உண்டு பார்த்தீர்களா!
நெற்றியின் இரு புருவங்களுக்கும்
இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே
பட்டும்படாமலும் சுண்டுவிரலை
நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு
தோன்றும். அந்த உணர்வை அப்படியே
வைத்துத் தியானம் செய்தால்
மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை
தெளிவுபெறும், எதையும் தெளிவாகப்
புரிந்து கொள்ளும் நிலை தோன்றும்.
அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க
வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான
மருந்து.
இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி
விளங்கவைக்க முடியாத மக்களுக்கு
நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி
திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்ற
ார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான
விளக்கத்தை மறைத்துக் கூறிய
விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம்
மறைந்தது.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும்,
பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின்
ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது
சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக
அன்பைப் பெறலாம். மேலும், பூதியை
எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது
மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம்
உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று
அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே
கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு
உள்ளது............................
எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப்
பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும்
பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை
உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால்
தூய்மையாக, அறநெறியில்
இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென
உணர்த்துகிறது. சைவத்தின் முழுமுதற்
கடவுளான சிவனை இது குறிப்பதாக
சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும்
நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின்
எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே
என்பதை விபூதி குறிக்கின்றது.
திருநீர் அணிவதைப் பற்றிக்கூறும் போது சில
நேரங்களில் ஈரமான விபூதி அணிய
வேண்டுமென்றும் , சில நேரங்களில் ஈரமில்லா
திருநீர் அணிய வேண்டும் என்று நம்
முன்னோர்கள் கூறுவார்கள். இது முரண்பாடாக
உள்ளதே என்ன்று கருதலாம். திருநீர்
அணிந்தவர்களை கண்டால் மனதுக்குள்ளாவது
இகழும் இக்காலத்தில் இந்த முரண்பாடுக்கு
விளக்கம் கூறுவது , மிகவும் அவசியம்.
நம் முன்னோர்கள் இதற்கு பதில்
சொல்லவில்லை என்றாலும் திருநீறின்
மருத்துவ குணங்களை பற்றி அவர்கள்
நன்கறிந்திருந்தனர்.
அதிகாலையில் எழுந்து கை, கால், முகம்,
கழுவி, திருநீர்ச்சட்டியிலிருந்து ஒரு பிடி
எடுத்து நெற்றியிலும் , பின் மாறிடத்தும் .இரு
புஜங்களிலும் சில வர்மஸ்தானங்களிலும்
பாட்டனும் பாட்டியும் பூசிக்கொள்ளவதை
சிலராவது பார்த்திருப்போம் . மாலைப்
பொழுதிலும் இவ்வாறு கை,கால்,கழுவி வந்து
நனைக்காமல் திருநீர் பூசுவதுண்டு, ஆனால்
குளித்த ஓய்ந் திருநீர் எடுத்து நணித்து
உடலில் பூசி வந்தனர் . இப்படி இரண்டு
வகையான திருநீர் பூசும் முறை பார்க்கும்
போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது
நனைக்காத திருநீருக்கு அணுக்களை அழிக்கும்
சக்த்தியும் நனைத்த திருநீருக்கு உடலில்
மிகையாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும்
சக்தியும் உண்டென்பதாகும்.
இவ்வளவும் அறிந்த பின் ,நம் உடலில்
காலையிலும் , மாலையிலும் மட்டும் ஏன்
அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது
என்பதை கவனிப்போம் .இரவு ஒரு நேரம் ஒரு
நபர் தூங்கும் போது அவர் படுக்கையில்
லட்சக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும்
என்று விஞானம் கூறுகிறது.அதே போல்
மாலை நேரத்தில் சுற்று சூழலில் எண்ணற்ற
நோயனுக்கள் உலாவுகின்றன என்பது
அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு .
அதனால் காலையும் மாலையும்
நோயனுக்களின் பாதிப்பு ஏற்படாமலிருக்க
ஈரமில்லாத திருநீரை அணிந்து வருகின்றனர்.
குளிக்கும் நேரம் உடலின் மூட்டுகளில் ஈரம்
காரணமாக நீர் கட்டு உருவாகவும் காலப்
போக்கில் அது வாயிலாககொழுப்பு
அதிகரிக்கவும் அது மூட்டு வாதமாக
மாறவும் வாய்ப்புண்டு .இப்படி உருவாகும்
நீர்க்கட்டி தவிர்ப்பதற்க்காகத்தான் குளித்த
உடன் ஈரமான திருநீர் அணிவது.
அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
---------------------------------------------
------------
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய
பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி
வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது
ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின்
சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும்
வேலையை திருநீர் செவ்வனே செய்யும்,
அதனால்தான் நெற்றியில் திருநீறு
பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும்
சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே
நெற்றி வழியாக அதிகம் கவரப்படும்,
அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும்
வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக
செய்துவிடலாம். மனோ தத்துவம்,
ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம்
போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன
எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது.
கண்ணேறு என்று சொல்லப்படும்
தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை
தடுக்கவும் திருநீறு இடப்படும்.
ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக
வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய
இங்கே சந்தனம் பூசுவார்கள்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான
ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை
தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும்,
ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை
தூண்டத்தான். இது தொடக்கம்.
நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.
எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ
இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல்
என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி
தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும்
போது அது நீறத்துவங்கும் கொதிக்கும்,
நெருப்பு இல்லாமல் புகையும், அதில்
நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை.
அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி
எடுக்கப்பட்டது திருநீறு.
[தொகு]ஆக்ஞா (நெற்றி) தியானம்
மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற
வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும்,
அதாவது சுண்டு விரலை நமது
நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும்
நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு
ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து
தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி)
தியானம், இது குண்டலினி யோகாவின்
தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா
யோகோ போன்ற இடங்களில் சென்றால்
சொல்லித்தருவார்கள்.
பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர்
வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.
இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள்
சீர்படும், மற்றவரை விட அதிகமாக
சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும்.
எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்,
காரிய சித்தி உருவாகும்.
இதை முறையாக செய்யவேண்டும், இந்த
தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி
தியானமும் செய்யவேண்டும்,
இல்லையென்றால் அது ஒற்றைத்
தலைவேதனையில் கொண்டுவந்து
விட்டுவிடும்.
இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு
செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா
நெற்றி பாழ்.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
பலன்கள்
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச்
சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற
செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற
எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை
ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள்
அனைத்தையும் அழித்தும் அனைத்துப்
பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி
அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல
வழிகாட்டும். இதைத்தான் திருமூலர்
பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
தந்தை என்பது சிவபெருமானால்
தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில்
ஒன்றாகும். இப்பசுவானது சிவனது
சத்தியோசாத முகத்திலிருந்து
தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது
கபில நிறத்தினை உடையது. இப்பசுவின்
சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு
விபூதி என்று அழைக்கப்பெறுகிறது.
"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர்,
திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம்.
மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின்
எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற
சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம்
உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக
எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில்
தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே
சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண்
முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின்
மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில்
துரியவெளியுள்ளது. அவ்விடத்தில்
அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு
இடுவர்.
இது தற்பொழுது உள்ள குறிப்பு.
1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக
நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது.
அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக
வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே,
நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண்
போன்றவற்றை இடுவது வழக்கம்.
2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது
இல்லை. அது கபாலக் குகைக்குள்தான்
தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக்
கபாலக் குகைக்குள் நுழைய முடியும்
என்பதைக் குறிக்க வேண்டுமாகில்
திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய
பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி
வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது
ஒரு வர்ம ஸாதனம் கூட.
சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி
வழியாக கடத்தும் வேலையை திருநீர்
செவ்வனே செய்யும், அதனால்தான்
நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும்
சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே
நெற்றி வழியாக அதிகம் கவரப்படும்,
அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும்
வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக
செய்துவிடலாம். மனோ தத்துவம்,
ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம்
போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன
எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது.
கண்ணேறு என்று சொல்லப்படும்
தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை
தடுக்கவும் திருநீறு இடப்படும்.
ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக
வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய
இங்கே சந்தனம் பூசுவார்கள்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான
ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை
தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும்,
ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை
தூண்டத்தான். இது தொடக்கம்.
நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.
எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ
இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல்
என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி
தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும்
போது அது நீறத்துவங்கும் கொதிக்கும்,
நெருப்பு இல்லாமல் புகையும், அதில்
நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை.
அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி
எடுக்கப்பட்டது திருநீறு.
ஆக்ஞா (நெற்றி) தியானம்
மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற
வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும்,
அதாவது சுண்டு விரலை நமது
நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும்
நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித
உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே
வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி)
தியானம், இது குண்டலினி யோகாவின்
தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா
யோகோ போன்ற இடங்களில் சென்றால்
சொல்லித்தருவார்கள்.
பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர்
வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.
இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள்
சீர்படும், மற்றவரை விட அதிகமாக
சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும்.
எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்,
காரிய சித்தி உருவாகும்.
இதை முறையாக செய்யவேண்டும், இந்த
தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி
தியானமும் செய்யவேண்டும்,
இல்லையென்றால் அது ஒற்றைத்
தலைவேதனையில் கொண்டுவந்து
விட்டுவிடும்.
இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு
செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா
நெற்றி பாழ்.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
அணியும் முறை
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது
நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல்,
வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல்,
மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால்
திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று,
பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது
திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது
சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு
பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக்
கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி
முழுவதும் அல்லது 3 படுக்கை வசக்
கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை,
மாலை, பூசைக்கு முன்னும் பின்னும்,
ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு
உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க
வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப்
பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று
படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை
"திரிபுண்டரம்" எனப்படும்.
திருநீறு அணியும் இடங்கள்
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப்
பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அவை
தலை நடுவில் (உச்சி)
நெற்றி
மார்பு
தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
இடது தோள்
வலது தோள்
இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
இடது மணிக்கட்டு
வலது மணிக்கட்டு
இடது இடுப்பு
வலது இடுப்பு
இடது கால் நடுவில்
வலது கால் நடுவில்
முதுகுக்குக் கீழ்
கழுத்து முழுவதும்
வலது காதில் ஒரு பொட்டு
இடது காதில் ஒரு பொட்டு
பலன்கள்
திருநீறுஅணிவதால் தடையற்ற இறைச்
சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற
செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற
எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை
ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள்
அனைத்தையும் அழித்தும் அனைத்துப்
பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி
அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல
வழிகாட்டும். இதைத்தான் திருமூலர்
பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
அகத்திய மாமுனிவர் சொன்ன வசிய திருநீறு...
---------------------------------------------
-------------------------
கோவிலில் இறைவனை தரிசித்த பிறகும்,
பெரியவர்கள், ஆன்றோர்களை சந்தித்து விடை
பெறும்போதும் அவர்கள் விபூதி வழங்கி
ஆசிர்வதிப்பது காலம் காலமாய்
நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கால
ஓட்டத்தில் பெரியவர்களிடம் விபூதி
வாங்கிடும் பழக்கம் அருகி விட்டாலும்,
கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில்
இருக்கிறது. இந்த விபூதியானது அதனை
அணிந்து கொள்கிறவர்களை தீவினைகளில்
இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன்,
செல்வத்தையும் தருகிறது. இது பொது
விதியாக இருந்தாலும், சிலர் தங்கள்
தேவைகளை, லட்சியங்களை
நிறைவேற்றிடும் பொருட்டு வசிய
விபூதியை உருவாக்கி பயன் படுத்தி
இருக்கின்றனர்.
இத்தகைய வசிய திருநீற்றைத் தயாரிக்கும்
பல்வேறு முறைகளை சித்தர்களின்
நூல்களிலும், மலையாள மாந்திரிக
நூல்களிலும் காணமுடிகிறது. அப்படியான
ஒரு வசிய திருநீற்றினை தயாரிக்கும்
முறையினை இன்றைய பதிவில் பகிர்ந்து
கொள்கிறேன்.
அகத்தியரின் "அகத்தியர்
பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப்
பட்ட தகவல் இது. இதன் உண்மைத் தன்மை
ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது.
எனவே இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டும்
அணுகிட வேண்டுகிறேன்..
கிருபையுள்ள புலத்தியனேவ சிய மொன்று
கெணிதமுடன் சொல்லுகிறே னன்றாய்
கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
சுகமாக வெந்தஅஸ்திநீயெ டுத்து
மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி
ஆதிசத்தி தன்னுடைய வேருங் கூட்டிக்
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
கருணையுடன் றானரைத்தே யுண்டை
செய்யே.
செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
செம்மையுட னெருவடுக்கிப்
புடத்தைப்போடு
மெய்யடா சொல்லுகிறே நீறிப் போகும்
வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து
மார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
மார்க்கமுடன் அரசரிடஞ் சென்று பாரே.
சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
சிவசிவா செகமோகம்ஸ்ரீவ சிய மாகும்
அண்டர் பிரானருள் பெருகிவ சிய முண்டாம்
அப்பனே ஓம்கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வேற்றிப் பின்னர்
பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்துருக்கள்வ ணங்கு
வார்கள்
துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ சிய
மாமே.
ஆதி குருவான சிவன் விரும்பி வசிக்கும்
பூமியான இடுகாட்டிற்குச் சென்று எரியும்
சுடலையில் இருந்து நன்கு வெந்த
அஸ்தியை சேகரித்து எடுத்து வந்து, அதன்
எடைக்கு சம அளவில் விஷ்ணு கிரந்தியின்
வேரினைச் சேர்த்து கல்வத்தில் இட்டு
அதனோடு தாய்ப்பால் சேர்த்து நன்கு
அரைத்து உருண்டையாக செய்து கொள்ள
வேண்டுமாம். இந்த உருண்டைகளை சூரிய
ஒளியில் நன்கு உலரவிட்டு எடுத்து நான்கு
வரட்டிகளைக் கொண்டு புடமிட
வேண்டுமாம். இதனால் அந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும் என்கிறார். இந்த
திருநீற்றுடன் சவ்வாதும், புனுகும் சேர்த்து
ஒரு சிமிழில் சேகரித்துக் கொள்ள
வேண்டுமாம்.
இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு எடுத்து
கைகளில் வைத்துக் கொண்டு "அங்" என்று
லட்சம் உரு செபித்து பின்னர் அதனை
நெற்றியில் பூசிக்கொண்டு அரசரிடம்
சென்றால் அரசர்கள் வசியமாவார்களாம். இது
இராஜவசியம் என்றும் அத்துடன் செக
மோகமும் பெண்வசியமும் உண்டாகும்
என்கிறார்.
மேலும் இந்த திருநீற்றில் இருந்து சிறிதளவு
எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு
"ஓம்கிலிறீ " என்று லட்சம் உரு ஓதி
நெற்றியில் விபூதியைப் பூசிக் கொள்ள
வேண்டுமாம் அப்போது எதிரிகளும்
வணங்கும் நிலை உண்டாவதுடன் தீங்கு
செய்யும் விலங்குகளும் வசியமாகும்
என்கிறார்.
மந்திரமாவது நீறு
மாமருந்தாவது நீறு
சுந்தரமாவது நீறு
மாயத்தந்திரம்
நீங்க செய்வது நீறு.!
ஓர் அதிசய திருநீறு
சுத்தமான விபூதி
2 கிலோ
கல் நாற்பற்பம், படிகாரப்பற்பம்
சிலாசத்து பற்பம்,ஆமையோடு பற்பம்,சிருங்கி
பற்பம்,நண்டுக்கல் பற்பம் தலா 10 கிராம்
விபூதியோடு சேர்த்து கலந்து
வைத்துக்கொண்டு தினமும் நெற்றியிலும்
மார்பிலும் அணிந்து வந்தால் நாள்ப்பட்ட சளி,
தலைநீர், சுவாசக்கோளாறுகள் நீங்கும்.!
தினமும் காலையில் வெறும் வயிற்றில்
இரண்டு சிட்டிகை விபூதியை எடுத்து
வாயில்போட்டு தின்று ஒருவாய் வென்னீர்
குடித்து பின் ஒருமணி நேரம் வரை நீர் உணவு
எதுவும் அருந்தாமல்
இருந்துவிட்டு பிறகு உணவோ நீரோ அருந்த
சிறுநீரகக்கல் கறையும், பித்தப்பை கற்கள்
கரையும். அதோடு ஆஸ்துமா, இரத்த
அழுத்தம், எலும்பு தேய்வு, சக்கரை
வியாதி,வயிற்றுப்புண், கர்பபை கோளாறு,
போன்ற அனைத்து வியாதிகளும்
கட்டுப்படும்.
தோல் நோய் இருப்பவர்கள் இந்தப் பொடியை
சிறிது வேப்பெண்ணையில் குழப்பிப் போட்டு
வர தோல்நோய்கள் எதுவும் குணமாகும்.!
செய்வினை, பில்லிசூன்யம், ஏவல் போன்ற
எதிர்மறை ஆற்றலால் அவதிப்படுபவர்கள்
இந்த விபூதி குழைத்து உடலில் தேய்த்து
குளித்து வந்தால் எத்தகைய தீய ஆற்றலும்
செயலிழந்து விடும்.!
ஆதாரம்: பாம்பாட்டி சித்தன் வைத்தியத்
திரட்டு.! இதே முறையில் நாமே விபூதி
செய்து சிறுநீரில் கல் இருந்த ஒரு மனிதருக்கு
இரண்டு மாதங்கள் காலை மாலை சாப்பிட்டு
வரக் கூறினோம். அதோடு சலபாசனம்,
வக்ராசனம் போன்ற யோகாசனங்களையும்
செய்துவந்தார்!
அதோடு தினமும் ஒருவேளை இயற்கை
உணவையும் உண்டு வந்தார். இதன்மூலம் 12
mm, 9 mm அளவில் இருந்த இரண்டு கற்கள்
முற்றிலும் கரைந்துவிட்டன!
No comments:
Post a Comment