Monday, August 10, 2015

1st qualification for Spirituality

Courtesy:Sri.KVS.Seshadri Iyengar

ஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?

கண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன். அர்ஜுனனும் ஆம் என்றான். இல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.ரொம்ப சரி...அது கழுகே தான், என்றான் அர்ஜுனன்.மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை... என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன். என்னடா நீ!நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...!அது என்ன பறவை என தெளிவாகச் சொல், என்றகண்ணனிடம்,கண்ணா! என்பார்வையை விட உன்வார்த்தையில் எனக்கு நம்பிக்கைஅதிகம். மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! புராணங்களில் அப்படி சொல்லியிருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே... நம்புகிற மாதிரி இல்லையே... என்று வாதம் செய்தால், பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க முடியாது.

Kvs Seshadri Iyengar's photo.

No comments:

Post a Comment