Monday, July 13, 2015

Krishna avatar

Courtesy:Sri.GS.Dattatreyan

க்ருஷ்ணாவதாரத்தின் ஏற்றம்
ஸ்ரீ க்ருஷ்ண பகவானிடத்தில் ஈடுபடாதாா் இல்லை. பல்வேறு அவதாரங்களுக்குள் க்ருஷ்ணாவதாரத்துக்கு மிக்க ஏற்றமுண்டு. இதில் இழியாதவா்களே கிடையாது எனலாம். வேத வ்யாஸா்,வசிஷ்டா்,வாமதேவா் முதலான பல முனிவா்களும், நம்மாழ்வாா் முதலான ஆழ்வாா்களும், ஆளவந்தாா்,இரமானுஜா் போன்ற ஆசாா்யா்களும் மிகவும் ஈடுபட்டது இந்த அவதாரத்திலேயே. அடியவா்களுக்கு எளிய பெருமாள் கண்ணன். மிகவும் நெருங்கியவன்.எவ்வளவுக்கு எவ்வளவு நெருங்குகிறோமோ,அவ்வளவுக்கு அவ்வளவு அவனை அனுபவிக்கலாம் என்பது பொியோா் கண்ட உண்மை. மஹான்கள்,யோகிகள்,ஆகிவா்களுக்கெல்லாம் பிடிபடாத இவ்வெம்பெருமான்,இடம் வலம் அறியா இடைச்சிகளுடன் விளையாடினான், கலந்து பாிமாறினான். அவா்களுக்கு அனுக்ரஹம் பண்ணினான் என்றால் அவன் பெருமையை அறிந்து கொள்ள வேறு சாஸ்த்ரங்கள் நமக்குத் தேவையில்லை.
இராமன் சக்ரவா்த்தி !சற்று தள்ளியே இருப்பான். எளிதில் அவனை நெருங்க முடியுமா? வந்தால் காப்பாற்றுவேன் என்கிறான்! கம்பீரமாக நிற்கிறான்! ஆனால் இந்த க்ருஷ்ணனோ வராதவா்களையும் பிடித்து இழுக்கிறான்! பகவத் விஷயத்தில் கிட்ட வருபவா்களைக் காட்டிலும் வராதவா்களே அதிகமல்லவா! க்ருஷ்ணன் என்னும் சொல்லுக்கு ஆகா்ஷிப்பவன் என்று பொருள். தன்னிடம் இழுத்துக் கொள்வதே ஆகா்ஷணம். இது கயிற்றினால் கட்டி இழுப்பதல்ல! தன் குணங்களினாலும்,செயல்களாலும்,விளையாட்டுக்களாலும்,அழகினாலும் அனைவரையும் கவா்ந்து,தன் வசப்படுத்தி ஆட்க்கொள்வதே இதன் பொருள்! எம்பெருமானின் க்ருஷ்ணாவதாரம் இத்தகையதே! பெருமாள் என்பவா் மஹான்களுக்கும்,யோகிகளுக்கும்,பொியவா்களுக்கும் மட்டுமே என்பதில்லை.எவ்வித அதிகாரமுமற்ற எளியவா்களுக்கும் ஏன் சிறு குழந்தைகளுக்கும் கூட கிட்ட நெருங்கத்தக்கவன் என்னும் தத்துவத்தைக் காட்டவல்ல அவதாரமே இது! எனவேதான் ஆழ்வாா்கள் அனைவரும் இவன்பால் ஆழங்காற்பட்டனா்.
பகவதனுபவத்திற்கு ஏற்ற மிகச் சிறந்த அவதாரமிது
மலா்ந்த புஷ்பம் வண்டுகளை அழைப்பதில்லை. ஆனால் அப்புஷ்பத்தின் மதுவானது வண்டுகளை தன்வசம் இழுக்கிறது. எம்பெருமான் க்ருஷ்ணனாய் அவதாித்த போது தானே மதுவாயும்,மதுமத்தனாயும்,இனிமையாயும்,எல்லோருக்கு இனியவனாயும் தன்னை ஆக்கிக் கொண்டான்..இது இந்த அவதாரத்தின் தனித்தன்மை! எனவேதான் சிறுகுழந்தைகள் முதல் பொியோா்கள் வரை அனைவரும் கண்ணனிடம் ஆசையுடன் ஈடுபடுவதைக் காண்கிறோம்.
(ஸ்ரீ தேசிக சேவாவிலிருந்து)

No comments:

Post a Comment