Wednesday, July 8, 2015

kanda sashti kavacam - kaapu cheyyul

Courtesy:Smt.Uma Balasubramanian

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்—கதித்து ஓங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை---

நிமலராகிய சிவபெருமான்கருணையினால் பெற்றருளிய கந்தக் கடவுளுக்கு உகந்த  சஷ்டி திதியிலே ஓதுதற்கு உரிய , கவசம் போன்று காக்கும் பெருமையுடைய கவச மந்திரத்தைப் பக்தியோடு தோத்திரம் செய்து முருகனைத் துதிப்பவர்களுக்கு , வலிமையுடைய பழைய தீவினைகளெல்லாம் நீங்கி விடும்( பண்டை வினை கொண்டுழன்று வெந்து விழுதல் இருக்காது )  . நம் வருத்தங்கள் ( பிறவித் துன்பம் )  எல்லாம் அகன்றுவிடும் உள்ளத்தின் உள்ளே இந்த மந்திரத்தை ஊன்றி வைப்போருக்கு பொருட் செல்வம் வாய்க்கப் பெற்று , அது மேன்மேலும் பெருகும் . மேலும் யோக சாதனையும் சித்திக்கும் .

No comments:

Post a Comment