Monday, July 6, 2015

Atma vidya vilasam - HH.Sadasiva Brahmendral

Courtesy:Sri.GS.Dattatreyan

பிரம்ம ஞானி சதாசிவ ப்ரம்மேந்த்ராள்

அவதூதராக திகம்பர சாமியாராக ஆடையின்றி சதாசிவம் ஒரு முறை பசி வேளையில் ஒரு முஸ்லிம் அந்தப்புரத்திற்குள் நுழைந்தார். அவருக்கு எதுவும் வித்தியாசமே கிடையாதே. ஆகாரம் ஒன்றும் கொடுக்காவிட்டாலும் அந்த பெண்கள் முறையிட்டதால் கோபம் கொண்ட அந்த சுல்தான் சதாசிவ ப்ரம்மேந்த்ராளை தேடினான். அவரோ ஒன்றும் கிடைக்காவிட்டாலும் காவிரிக்கரைக்கு சென்று நீராவது பருகினால் போதுமே என்று நடந்து கொண்டிருந்தார். நாமாவளி ஏதோ அவர் வாயினின்றும் வெளி வந்தது. சுல்தான் அவரைப் பார்த்து ஓடி சென்று அவர் கை ஒன்றை வாளால் வெட்டி துண்டாக்கினான். அவரோ தனது ஒரு கை வேட்டப்பட்டதோ, துண்டாகி கீழே ரத்த ஆற்றில் மிதந்ததோ அறியவில்லை. வலியோ பசியோ எதுவுமே இன்றி அவர் தானாக சென்று கொண்டிருந்தார். சுல்தான் நடுங்கி விட்டான். ''என்ன ஆச்சர்யம், இந்த மகான், என்னை பார்த்தார், நான் வெட்டினதை அறிந்தார், கை துண்டானது, கீழே ரத்தம் சொட்ட சொட்ட அவர் எதுவுமே நடக்காதது போல் பேசாமல் நடந்து போகிறாரே'' மனிதனல்ல அவர். மகான் என்று புரிந்து கொண்டான். ''சுவாமி என்னை மன்னியுங்கள், உங்கள் கரத்தை வெட்டின இந்த பாவிக்கு தண்டனை கொடுங்கள் என்று அவர் காலில் விழுந்தான்'' அவர் கவனம் இப்போது தான் அவனிடமோ தனது வெட்டப்பட்ட கருத்தையோ எண்ணியது. கை எங்கே என்று பார்த்தார் தடவினார். கை மீண்டும் அங்கே தானாகவே தோன்றியது. இந்த நிகழ்ச்சி தான் சுவாமி சிவானந்தாவை உலுக்கு ஆத்ம விசாரத்துக்கு இட்டுச் சென்றது என்று அவரே எழுதியிருக்கிறார்.

இப்படிப்பட்ட பிரம்ம ஞானி சதாசிவ ப்ரம்மேந்த்ராவின் அவருடைய ஒரு சிறந்த நூல் ஆத்ம வித்யா விலாசம்.

அதில் இருந்து தான் உங்களுக்கு சில பகுதிகளைத்தர விழைந்தேன் இன்று. கொஞ்சம் பார்ப்போமா.

மொத்தம் 43 ஸ்லோகங்கள். அத்தனையும் தன்னை உணர்ந்தவன் பற்றியவையே.

ஆத்மா கண்ணுக்கு தெரியாதது. தேட வைப்பது. எளிதில் பிடிக்க முடியாதது. வேதம் விசித்தரமாக சொல்கிறது என்னவென்றால் ஒரு பசுவின் வாலில் ஒரு முடியை எடுத்து அதை நூறாக பிளந்து, ஒரு பிளவை எடுஹ்து அதை ஆயிரம் பாகங்களாக பிரித்து, அந்த ஆயிரத்தில் ஒன்றை மீண்டும் ஒரு ஆயிரமாக துண்டக்கு. அதேபோல் அந்த ஒரு துண்டையும் மறுபடியும் ஆயிரம் துண்டாக்கு. செய்துவிட்டாயா. கடைசியில் மிஞ்சுவது ஏதாவது இருந்தால் அது தான் ஆத்மாவின் அளவு. போதுமா? இப்படி சொன்னதன் காரணம் ஆத்மா என்பது அவ்வளவு நுட்பமானது என்று விளக்க. இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அந்த ஆத்மா எங்கும் இருக்கும் சர்வ வியாபி. அறிய முடிவது. சதானந்த ஸ்வரூபம். இது அல்ல இது அல்ல என்று ஒவ்வொன்றாய் விலக்கினால் கடைசியில் எஞ்சுவது. மிஞ்சுவது. 
1. தக்ணா மூர்த்தி யார். கல்லால மரத்தின் கீழ் வீற்றிருந்து, சின் முத்ரை காட்டி (ஜீவனும் பிரம்மமும் ஒன்று என விளக்க) வார்த்தையின்றி மோன நிலையில் பிரம்ம ஞானத்தை உபதேசிப்பவர். அறியாமையை போக்கி ஞானத்தை அளிப்பவர்.

2. என் மனதில் நான் வணங்குவது சிவேந்திர குருவை. அவரே எனக்கு அத்வைத தேஜஸ் (ஒளி ) அளிப்பவர். சம்சார சாகரத்தை கடக்க (உலக வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுதலை பெற ) ஒரு நாவாய்., படகு ஆனவர்.

3. என் சிவேந்திர குருவே உன் தாள் பணிகிறேன். என் பெயர் (சதாசிவன்) தானே உனக்கும். உன் அசாதாரண சக்தியும், உதடுகளில் உருவாகும் குறிப்புகளும் தான் நான் யார் என்று உணர்த்தின சர்வமுமாக விளங்கும் பிரம்மத்தில் நானும் உண்டு என்று அறிவித்தன. என்னில் பிரம்மத்தை காண உதவின. எனக்கு இதால் எத்தனை சொல்லொணா இன்பம், எல்லையில்லா அமைதி. இதைப்போய் நான் எத்தனை வேதம் படித்தாலும் அனுபவிக்க முடியுமா. அறிய முடியுமா.

4. பிரம்மம் தான் காரணாதி காரணம்.காரணத்தின் காரணம். பிரபஞ்சம் ஏற்பட காரணமே, மாயை என்கிற பிரம்மத்தின் ஒரு பகுதி யின் மூச்சு, அதிலிருந்து தான் பஞ்ச பூதங்களும் எழுந்தன. களிமண்ணை பிசைந்து மொத்தையாக சக்கரத்தின் மீது வைத்து அதன் சுழற்சியில் உருவாகும் மண் பாண்டம் போலவே தான் இது. அந்த மாயக் குயவனார் தான் சர்வேஸ்வரன். 
5. இந்த பர ஒளி, பிரகாசமே ஆத்மா. அதுவே எதுவும். வேரொன்றுமில்லை. இதற்கு இந்த பார் ஒளிக்கு ஒரு உரு அமைக்க முடியுமா. இருக்க முடியுமா. எல்லைக்குட்பட்டது தானே உருவம். அகண்டத்துக்கு? தற்கு ஒலியேது, குரலேது? தொட முடியாதது, பிடிபடாதது.

6. இப்படித்தான் என்று சொல்லமுடியாத குண மற்றது. புராதனமா புதினமா என்று புரிபடாதது. இளசா பழசா என்று இனம் காண முடியாதது. அழியுமா அழியாததா என்றே வகைப்படாதது. கண்ணில் காண முடியாதது. அனுபவத்தில் உணர முடிவது. அசைவது போல தோன்றினாலும் அசைவில்லாதது. விவரிக்க இயலாதது. நமது நிரூபணங்களுக்கு அப்பால் பட்டது. இன்றையது, அன்ரையது என்றுக்குமானது. இப்படியிருந்து தன்னைத் தேடுபவோருக்கு அவர்கள் இதயத்திலேயே கிடைப்பது தான் அதி ஆச்சர்யம். இருதயக் குகையில் வசிப்பது. தேடிப்பிடித்த ஞானிக்கு அது ஆகாயம். பரவெளி. வார்த்தை. பிரபஞ்சத்தில் பல உலகிலும் தெரிவது. 
7. இந்த ஆத்மா மாயையால் பின்னப்பட்டுள்ளது. மாயையால் சூழப்பட்டாலும் எதிலும் சம்பந்தமில்லாதது. அஞ்ஞானம் என்னும் அறியாமையால் பிணைக்கபட்டாலும் ஆத்மா சர்வ ஞானத்தின் குறி. ஞானத்தின் கருணையால் தான் ஞானி உருவாகி அதை அறிகிறான். அவனருளால் அவன் தாளை வணங்குவது போல். இத்தனை சூழ்ந்திருந்தாலும் ஆத்மா இதுபோல் இருக்கிறான் தெரியுமா. கெட்டியான உறைக்குள் கூரான வாள் போல. உரையிலிருந்து விடுபட்டால் தான் வாழ் ஒளிவீசி தனது பராக்ரமத்தை காட்ட முடியும். வேடிக்கை என்ன தெரியுமா. இந்த ஆத்மாவுக்கு பல பெயர்கள் சூட்டி அழைக்கிரவர்களுக்கு அவனைத் தெரியாது. புரியாது. பூம்மிக்கடியில் புதைந்த விதை அவன். மண்ணுக்கு ஆல மரத்தின் சக்தி அதன் விதியால் தான் என்று தெரியாமலே விதையை விழுங்கி விருக்ஷத்தி வெளியேற்றுகிறது . உன்கையால் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினால் தான் அந்த மண்ணிலிருந்து விதை முளைக்கிறது. நீ ஆத்மாவைத் தேடுவதும் கூட அந்தமாதிரி தண்ணீர் கொஞ்சம் மண்ணில் ஊற்றுவது போல தான். 
8. ஜீவன் அதுபோலவே மாயையால் கட்டுண்டவன். அவன் பாவம் ஆத்மாவைப்போல் சம்பந்தப்படாமல் இருக்க முடியவில்லை. விழிப்பு, உறக்கம், கனவு, ஏழ்மை, காசு தேடி ராவும் பகலும் அலைச்சல், அந்த காசினால் வரும் எண்ணற்ற துன்பங்கள், மறு பிறப்பு, மறுபடியும் உழலல் , திரும்ப திரும்ப இதே கதை. . நிழல் நிஜமாக தோன்றி அவனை வாட்டுகிறது. தானே தன்னைச் சுற்றி போட்டுக்கொண்ட விலங்கினால் துன்பம் சேர்கிறது அவனுக்கு. பாவம், அதை படிப்போம, இதை செய்வோமா என்று கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி என்ன பயன்? சரியான நேரத்தில் அவனுக்கு ஒரு கிடைக்கும்போது தான் வெளிச்சம் தெரிகிறது. இருட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது.

9 ஒரு ஜீவன், தக்க குருவை அடைந்தானானால் அவர் அருளால் அவரிடம் உள்ள ஸ்ரத்தையால், பக்தியால், அவனால் கரையேற முடியும். அறிவு துலங்கும். பாசி விலகும். மாயை அறுபடும். தேகம் தான் ஆத்மா என்கிற தேஹாத்ம புத்தி அகலும். விடா முயற்சியாலும் பயிற்சியாலும் உண்மையிலே தான் யார் என்று அறிவான். அதற்கும் அவன் உடலுக்கும் என்ன உறவு என்று புலனாகும். இதுவே அவனை சத் சித் ஆனந்தமாக்கும். துக்கம் சுகம், துன்பம் இன்பம் எதுவும் நெருங்காமல் அவன் சமநிலையில் எப்போதும் நிலைப்பான். சுத்த சைதன்ய நிலை ஆனந்த ஸ்வரூபத்தை அவனுக்கு கொண்டுவரும். ஆழ்ந்த அமைதியின் உரு அவன்..

10. குருவின் கடாக்ஷம் பூரணமாக ஜீவன் மேல் இருக்கும் பக்ஷத்தில் ஆனந்த சாகரத்தில் அவன் மூழ்குவான். அவன் மனம் எண்ணங்களிலிருந்து விடுபட்டு (மனோ நாசம்) அதல் உலக இயலிலிருந்து துண்டிக்கப்பட்டு எதை பார்க்க வேண்டுமோ அது ஒன்றே அவன் பார்வை ஆகிறது. மாயை மறைகிறது. இத்தகைய ஜீவன் தான் பிரம்ம ஞானி. 
11. இத்தகைய குருவின் அருளால், ஜீவனுக்கு பரிபூர்ண ஆனந்தம் மட்டும் அல்ல அசைவற்ற ஆழ்ந்த அமைதி கிட்டுகிறது. அவனது ஹ்ருதயம் உலகியல் சம்பந்தப்பட்ட இன்ப துன்பங்கள் அறவே நீங்கி சம நிலையில் ஆத்மாவோடு ஒன்றிய இயல்பு ஏற்படுகிறது. ஹ்ருத்+அயம் (ஹ்ருதயம் ஆத்மாவே தான் ஆகிய நிலை) என்னால் எழுத இயலாத முடியாத ஆனந்த பரவச நிலை.