Wednesday, June 3, 2015

Valli kalyanam

Courtesy:Sri.Dr.K.Rajaram

ஆலோலம் கேட்டு வந்த மாலோலன் மருகன்

by Dr. K. Rajaram

வள்ளி தினப் புன வனத்தில் பரண் மீது நின்று 'ஆலோலம் ஆலோலம்' என்று கூவி கவண் சுழற்றி,  பயிரைக்  கொத்தி நாசமாக வந்த பறவைகளை விரட்டினாள். ஆலோலம் கேட்டு உவந்த மாலோலன் மருகன் அவளுக்குத் தந்த தரிசனம் கச்சியப்பரால் பாடப் பெற்றது.
 
முந்நான்கு தோளும் முகங்களோர் மூவிரண்டும்  
கொன்னார்வை வேலும் குலிசமும் ஏனைப் படையும்
பொன்னார் மணி மயிலுமாகப் புனைக் குறவர்
மின்னாள் கண்காண வெளி நின்றனன் விறலோன் .
 
இவ்வுலகில் வாழும் ஒவ்வாரு ஜீவனும் வள்ளி. நமது மனம் என்ற தினை வயலில் பலகாலம் உழைத்து நற்பயிர்கள் முளைத்துள்ளன. அதை நாசம் செய்ய தீய சக்திகள் எனும் பறவைகள் வருகின்றன. மாலோலன் மருகன் புகழ் பாடி அவற்றை விரட்டுவது நம் கடன். நம் குரல் கேட்டு வேலவன் வருவான். அருள் பொழி வள்ளல் அருளுவது வள்ளிக்கு. நாம் அனைவரும் அந்த வள்ளி.
At that moment, Murugan invoked the help of his brother Vināyaka who appeared behind Valli in the shape of a frightening elephant. The terror-stricken girl rushed into the arms of the elderly ascetic for protection. 
அப்பனைப் போலவே மகனும்! கடும் தவம் புரிந்த பார்வதியின் முன் கிழவனாக வந்து அப்பன் சோதித்தைப் போலவே வள்ளியையும் சோதித்தான் முருகன். விலகி ஓடிய வள்ளியை மீண்டும் திருப்பி சேர்த்து வைத்தது யானை முகத்தோன். நாமும் அறியாமையால் அவனை விட்டு விலகிப் போகிறோம். விநாயகப் பெருமான் தடுத்தாட்கொண்டு அருளுகிறார். நம்மைவிட அதிகம் அக்கறை இறைவனுக்குத் தான்! முன்பு மாமரமாக சூரபன்மன் நின்றது அறியாமையினால். மாறாக, வேட்டுவர் தலைவன் நம்பிராஜன் முன் வேங்கை மரமாக வேலோன் நின்றது அவன் அறியாமையைப் போக்க!
 
ஆங்கது காலைதன்னில் அடிமுதன் மறைகளாக
ஓங்கிய நடுவண் எல்லா முயர் சிவநூலதாகப்
பாங்கமர் கவடு முற்றும் பல்கலையாகத் தானோர்
வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்.

 
அன்னதோர் வேளைதன்னில் அறுமுகம் உடைய வள்ளல்
தன்னுழை இருந்த நங்கைதனை அருளொடு நோக்கக்
கொன்னவில் குறவர் மாதர் குயிற்றிய கோலம் நீங்கி
முன்னுறு தெய்வக் கோல முழுதொருங் குற்றதன்றே.

Valli Tirumanam 
(வள்ளி கல்யாணமும் இனிதே நடந்தேறியது. கச்சியப்பர் பாடுவது காண்க)
 
அந்த நல்வேளைதன்னில் அன்புடைக் குறவர் கோமான்
கந்தவேள் பாணி தன்னில் கன்னிகை கரத்தை நல்கி
நன் தவமாகி வந்த நங்கையை நயப்பாய் இன்று
தந்தனன் கொள்க என்று தண்புனல் தாரை உய்த்தான்.

 
ஹிமவான் பரமசிவனாரை மாப்பிள்ளையாக அடைந்து மகிழ்ந்ததுபோல் நம்பிராஜனும் இங்கே மகிழ்ந்தான். பெண்ணும் மாப்பிள்ளையும் திருத்தணி சென்று சிவபூஜை செய்தனர். பின்னர் கயிலை அருகே கந்தகிரி அடைந்து அங்கே தெய்வானையின் கால்களில் வள்ளி பணிந்து அவ்விருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். முன் பிறவியில் சகோதரிகளாக இருந்தவர்கள் அல்லவா?

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?
 
சூர்க்கடல் பருகும் வேலோன் துணைவியர் இருவரோடும்
போர்கடல் கொண்ட சீயப் பொலன்மணி அணைமேற் சேர்ந்தான்
பாற்கடல் அமளி தன்னில் பாவையர் புறத்து வைகக்
கார்க்கடல் பவள வண்ணன் கருணையோடு அமருமாபோல் .
 
(க்ரியா சக்தி ஞானசக்தி எனும் இரு கிளைகளாம் மனைவியருடன் கந்தவேள்
எனும் ஒரு கற்பக விருட்சம், எல்லா உயிர்க்கும் அருள் மலர் பொழிந்து, பிறவியைக் காய்த்து (கெடுத்து/கோபித்து நிறுத்தி), முத்திக் கனியைத் தரும்.)
 
கள்ளகம் குடைந்த செவ்வேல் கந்தனோர் தரு அதாகி
வல்லியர் கரியை ஞானவல்லியின் கிளையாய் சூழப்
பல்லுயிர்க் கருணை பூத்துப் பவநெறி காய்த்திட்டு அன்பர்
எல்லவர் தமக்கு முத்தி இருங்கனி உதவும் என்றும்.

 
kachiappa sivachariyarகச்சியப்பருக்கு நம் நன்றியை நவில்வோம்!
 
 தினைநிலந்தனில் வள்ளியை சற்றே வருத்-
-தினை! உன்னை உணர்த்தினை! பொருந்தினை! நின் கருத்-
-தினை அறியா எம் வினை திருத்தினை! உன்னுள் இருத்-
-தினை! இப்பேறு விளக்கிய கச்சியப்பர் வாழி வாழியே!
 
கச்சியப்பர் கந்தபுராணம் மெச்சிய முருகன் நம்
உச்சியும் உள்ளமும் குளிரத்  தோன்றினான்!
அச்சிவ பாலனை அடைந்து நிலைபெற -நம் 
வச்சிர மனத்தினை உருக்கி வணங்குவாம்!