Sunday, June 21, 2015

Poem on Periyavaa

Courtesy: Sri.Krishnamoorthy Balasubramanian

பூர்வஜென்ம புண்ணியமது உன்னைக் கண்டது, உன்னுன் அருகில் இருந்தது,,,
அது போனஜென்ம வாசனையில் அருகில் வந்தது....
கண்ணிரண்டில் காந்தரேகை மிளிர நின்றது - அது
காலகாலமாய் இழுத்துக்கொண்டு வந்தது
புன்சிரிப்பில் யாகத்தீயை காட்டி நின்றது .
ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரசேகரம் என்ற பெயரைக்கொண்டது.
"ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரசேகராய." ....
அன்பு வழியில் வாழ வைத்து ஆற்றல் எல்லாம் பெருகச் செய்து
ஆசிகளை நமக்கு தரும் அற்புத மந்திரம் -அது
நல்லதையே நினைக்கச் செய்து நல்லதையே நடத்தித் தந்து
நல்லவராய் நம்மை மாற்றும் அறிய மந்திரம்
உச்சரிக்க உச்சரிக்க உயர்வளிக்கும் மந்திரம் - அது
செப்பிவிட செப்பிவிட காப்பாகும் மந்திரம்
ஏற்றிவிட மனதில் ஏற்றிவிட ஏற்றம் தரும் மந்திரம் 
ஜெபித்திட நாளும் ஜெபித்திட ஜெயம் தரும் மந்திரம் 
ஜெபிப்போம் நாளும்...
ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரசேகராய

சித்தம் உன்னிடம் நிலைத்திடவே
நித்தம் உனை நாம் ஸ்மரித்திடவே
நெஞ்சமும் நினைவும் நீயே
கொஞ்சமும் குறையாத அருளும் நீயே
வஞ்சமின்றி சுரக்கும் அன்பும் நீயே
கெஞ்சுகிறேன் அருள் பாலி அன்புத் தெய்வமே.
அந்தமும் ஆதியும் இல்லாதவனே
பந்தங்கள் அறுத்திடுவாய் காமகோடி தெய்வமே
சிந்தனையும் செயலும் நீயே என் குருவே
வந்தனை செய்கிறேன் வரமருள் பகவானே.
தித்திக்கும் உன் நாமம் என்றும் செப்பிடுவேன்
எத்திக்கு நோக்கினும் நின்னையே கண்டிடுவேன்
வந்திக்கும் கரங்களைக் காத்திடுவாய் இறைஞ்சுகிறேன்
சந்திரசேகரனை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
சன்னதி வந்ததும் தாய் உன்னைக் கண்டதும்
எனை மறந்து கண்களிலே கண்ணீரின் வெளிப்பாடு..
குருவாய் அருளும் தவமே!
யோகமும் ஞானமும் அருளிடும் தவமே!
குருவாய் உள்ளோர் குவலயம் காக்க அருளாய் 
மலர்ந்து அருளிடும் மாதவமே!
ஞானஅம்பிகை ஞானமூர்த்தியும்
நாதனின் ஈசனாய் நாதேஸ்வரனுள்
ஞானமாய் இருந்தே அருளிடும் மாதவமே!
பெற்றதவத்தால் பேரோளி அருளே போற்றி!
இடர்இருள் நீக்கி அருள்ஒளிதவமே போற்றி!
பிறவிதோறும் பேரருள் பாதம் இத்தூசு பணிந்திட அருளினை போற்றி!
இந்நாதனின் சித்தருள் அருளே குருவடி பணிந்தோம்!
தேவா! வெற்றியின் அர்த்தம் நீதானே
ஆரத்தி எடுப்போம் ஸ்ரீ மஹா பெரியவா உமக்கே!

கைவிட்டு விடுவாயோ என்றேன்? 
எனை கைவிட்டு விடுவாயோ என்றேன்.
கையின் மேல் அடித்து கைவிடேன் என்றான்!
மயல் கொண்டு அவனது மலரடி வணங்குவேன்!
கோரிக்கை ஒன்றுமில்லை காணிக்கை என்னிடமில்லை
முழுமனதாய் உந்தன் பாதம் சரணடைந்தேன்
"நா இருக்கேன்" என்று கூறி ஏற்றெடுத்தாய் என்னை நீயும்
உந்தன் நிழலில் மற்றொரு பூவாய் நானும் அமர்ந்தேன்!
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு : குருர் தேவோ மஹேச்வர :|
குருஸ் ஸாக்ஷ£த் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம :||
யஸ்யைவ கருணாலேச: ஸ்ருஷ்டிஸ்தித்யந்தகாரணம் ||
தம் வந்தே கருணாகாரம் சந்த்ரசேகரதேசிகம் ||
ஓம் அந்தேவாசி-ஜன-ஸன்மார்க-தாயினே நம:
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்த்ர-சேகரேந்த்ர-ஸரஸ்வதி-யதீந்த்ராய நமோ நம:
ஸ்ரீ மஹா ஸ்வாமிகளை சரணாகதி அடைந்தோர்க்கு அருள் மழை பொழிந்த ஸ்ரீ மஹாமுனிவர் தாள் பணிவோம்!
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர! ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர!ஹரஹரசங்கர !ஜெயஜெயசங்கர!

No comments:

Post a Comment