Monday, May 18, 2015

Morning Vishnu & evening Siva -periyavaa

Courtesy:  http://amrithavarshini.proboards.com/thread/952/#ixzz3V7G4Yong
தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

காலையில் திருமால்-மாலையில் மஹாதேவன்

சிவபெருமான்திருமால் இரண்டு பேரையும் உபாஸிப்பதற்கு நீண்டகாலமாக ஒரு விதி இருக்கிறதுலோக விவகாரங்களை நாம் அழகாக,தர்மமாக நடத்துவதற்கு ஜகத் பரிபாலகரான மஹாவிஷ்ணுவையும்இந்த வியாபாரங்களிலிருந்து மனஸைத் திருப்பி ஆதார வஸ்துவில்ஒடுங்குவதற்கு சம்ஹார மூர்த்தியான பரமேசுவரனையும் தியானிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கேற்ப வெளியிலே பார்த்தாலும் மஹாவிஷ்ணுதானே திருபுவன சக்கரவர்தியாக இருக்கிறார்பரமேசுவரனோ ஆண்டியாக பிச்சாண்டியாகஇருக்கிறார்இருவரிடமும் இருக்கிற சொத்துக்களைக் கொஞ்சம் கணக்கெடுத்துப் பார்ப்போம்சிவனிடம் சாம்பல்எருக்கம்பூதும்பைப்போ,ஊமத்தைமண்டைஒடுயானைத்தோல்பாம்பு - இவைதான் இருக்கின்றனஇதற்கெல்லாம் யாரும் விலை கொடுக்கமாட்டார்கள்.விலைபோகாத வஸ்துக்கள்தான் சிவனிடம் உள்ளனமஹாவிஷ்ணுவிடமோ கிரீட குண்டலங்கள்முக்தா ஹாரங்கள்பீதாம்பரம்கௌஸ்துபமணி எல்லாம் இருக்கின்றனஇவற்றுக்கும் எவரும் விலை நிர்ணயிக்க முடியாதுசிவனிடம் உள்ளதற்கு விலை மதிப்பு இல்லை. (valueless);விஷ்ணுவிடம் உள்ளதோ விலைமதிக்க முடியாதது (invaluable). எல்லாவற்றுக்கும் மேலாக மஹா விஷ்ணுவிடம் ஐசுவரிய தேவதையானமஹா லக்ஷ்மியே இருக்கிறாள்பரமசிவனிடம் இருக்கும் அம்பாளுக்கோ 'அபர்ணாஎன்று பெயர்ஒர் இலை (பரணம்கூட இல்லாதவள் என்றுஅர்த்தம்இலையைக்கூட உண்ணாமல் பரம தியாகியாகத் தபஸ் செய்தவள் அபர்ணா.

இதிலிருந்து லோகமெல்லாம் தர்மத்தோடு சந்தோஷமாக இருப்பதற்கு மஹாவிஷ்ணுவையும்வைராக்கியம் வருவதற்குப் பரமேசுவரனையும்ஆராதிப்பதில்பொருத்தம் இருப்பது தெரியும்மகாவிஷ்ணுவால் ஞானம் தரமுடியாது என்றோபரமேசுவரனால் லோக வியாபாரம் நன்றாகநடக்க அநுக்கிரகிக்க இயலாது என்றே அர்த்தமில்லைஇரண்டு மூர்த்திகளை வழிபடுகிறபோதுஇப்படி இரண்டு விதங்களில் ஆராதிப்பதுஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவரிடம் சித்த ஒருமைப்பாடு (ஐகாக்ரியம்கொள்வதற்கு உதவும்.

இந்த அடிப்படையில்தான் விடியற்காலையில் ஒவ்வொரு வரும் எழுந்தவுடன் 'ஹரிநாராயண ஹரிநாராயணஎன்று கொஞ்ச காலமேனும்ஸ்மரணம் செய்ய வேண்டும் என்றும்சாயங்காலத்தில் 'சிவ சிவஎன்று சிறிது பொழுதேனும் ஸ்மரிக்க வேண்டும் என்றும் பெரியவர்கள்விதித்திருக்கிறார்கள்வெகு சுலபமான சாதனம்எல்லோரும் இதை அவசியம் செய்ய வேண்டும்.

காலையில் லோகம் முழுக்கத் தூக்கத்திலிருந்து விடுபட்டு மலர்ச்சி அடைகிறதுசூரியன் பலபல என உதிக்கிறான்உலக காரியங்கள் எல்லாம்தொடங்குகின்றனஎனவே குளிர்ந்த வைகறைப் போதில் நீருண்ட மேகம்போல் குளிர்ந்த ஜகத் பரிபாலகரான விஷ்ணுவின் நாமங்களைஉச்சரிக்க வேண்டும்மாலையில் அவரவரும் வேலை முடித்து வீடு திரும்புகிறார்கள்மாடுகள் கொட்டிலுக்கு திரும்புகின்றனபட்சிகள்கூட்டிக்குத் திரும்பிவிடுகின்றனசூரியனும் மலைவாயில் இறங்குகிறான்இப்படி லோக வியாபாரங்கள் ஒடுங்கத் தொடங்குகிறஅந்தப்போழுதில்நம் ஆட்டங்களையெல்லாம் ஒடுக்கி அமைதி தருகிற ஞானமூர்த்தியான பரமேசுவரனின் நாமாவை உச்சரிக்க வேண்டும்.

அண்டம் பிண்டம் இரண்டும் அடிப்படையில் ஒரே சரக்கானதால்வெளி உலக நடப்புக்கும் நம் அக உணர்வுகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது.உலகில் அருணோதயத்துக்கு முன்பு பட்சி ஜாலங்கள் விழித்துக்கொண்டு கூவத் தொடங்குகிற வேளையில், 'லோகமெல்லாம் நன்றாகஇருக்கவேண்டும்என்ற எண்ணத்தை மனஸில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டுஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனைத் தியானிப்பது எளிதில்கைவரும்இதேபோல் வெளிவுலகம் ஒடுங்கித் தன்மயமாகிஇருள் கவிந்து வருகிற அந்த வேளையில்இந்திரியங்களை ஒடுக்கிசாந்தமாகசிவபெருமானின் தியானத்தில் அமிழ்வது சகஜமாகவும் சுலபமாகவும் இருக்கும்.

நம்முடைய மனோபாவத்தைப் பொறுத்துஇப்படி இரண்டு விதத்தில் உபாஸித்தாலும் இரண்டு மூர்த்திகளும் ஒன்றேதான் என்ற நினைப்புபோகக்கூடாதுகாலையில் பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு சந்தியாவந்தனம் செய்த அதே மனிதர்பகலில் ஸுட் போட்டுக்கொண்டு ஆபீஸுக்குப்போகிறார்வெவ்வேறு காரியங்களுக்காக வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக் கொண்டாலும் ஆசாமி ஒருத்தர்தான்ஸ்வாமியும்ஒருத்தர்தான்.