பத்ராசல மஹிமை
ராமாயண காலத்தில் பத்ராசல மலையில் பத்ரன் என்பவர் இருந்தார். ஸ்ரீ ராமர் வனவாசம் வரும்பொழுது இந்த பத்ராசல மலைக்கு வந்தார். பத்ரன் ராமரை அங்கேயே இருக்கும்படி வேண்டினார் அதற்க்கு ராமர் இஷ்டப்படவில்லை தான் தீர்த்த யாத்ரை முடித்துக்கொண்டு வரும்போது இங்கு வருகிறேன் என்று சொல்லி அங்கிருந்து தெர்க்குமுஹமஹா யத்ரைக்கு போய்விட்டார். அன்று முதல் பத்ரன் ராம நாமம் ஜபம் செய்துகொண்டு ராமரை எதிர்பார்த்து காத்திருந்தான். ராமரின் இலங்கையில் ராவண சம்ஹாரம் ஆனவுடன் அவசரமஹா பரதனை தீக்குளிப்பில் இருந்து தடுப்பதர்க்கஹா நந்திகிராமம் சென்று அங்கிருந்து அயோத்திக்கு சென்றுவிட்டார் இராமாயண காலம் முடிந்து ராமரும் வைகுண்டம் சென்றுவிட்டார். ஆனால் பத்ரன் மட்டும் இராமரை எதிர்பார்த்து ராம ஜபம் செய்த்கொண்டு இருந்தார.
வைகுண்டத்தில் ஒருநாள் திடிரென்று மகாவிஷ்ணு எழுந்து வேஹமாஹா பூலோகத்தை நோக்கி ஓடினார் இதை பார்த்த சங்கு, சக்கரம், மஹாலக்ஷ்மி, கருடன் எல்லோரும் பின்தொடர்ந்தார்கள். மஹாவிஷ்ணு பத்ரன் முன் நின்று பத்ரா என்று கூப்பிட்டார். பத்ரன் கண் திறந்து பார்த்து நீங்கள் யார் என்று கேட்டார் நான்தான் நீ தேடிகொண்டிருக்கும் ராமன் என்றார். பத்ரன் என் ராமர் இப்படி இருக்கமாட்டார் நீ யாரோ எனக்கு தெரியாது நீ போய்விடு என்றார். உடனே மகாவிஷ்ணு சதுர்புஜத்துடன் கையில் வில்லுடன் ராமராஹா காட்சி கொடுத்தார். உடனே பத்ரன் மன்னிப்பு கேட்டு வணங்கினான். சதுர்புஜ ராமர் உனக்கு என்ன வரம் வேண்டும் கேளேன்றார் அதற்க்கு பத்ரன் சதுர்புஜராமராஹ இங்கேயே இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். ராமர் நான் இங்கே இருக்கவேண்டும் என்றால் எனக்கு இடம் வேண்டுமே என்றார். பதரன் என் தலைமேல் இருங்கள் என்றார். இன்றும் பத்ராசலத்தில் மூலஸ்தானத்திற்கு பின்னால் ஒரு கல்லின்மேல் ராமர் ஏறின பாதமும் அங்கு ராமர் விக்ரஹமும் இருப்பதை காணலாம் தினமும் அபிஷேகமும் முதல் நைவேத்யமும் நடை பெருஹிறது. இன்று நாம் பஜனையில் பத்ரகிரிதசர் முத்ரையில் படும் பாட்டுக்கள் இந்த பத்ரனால் எழுதப்பட்டவை.
இதற்க்கு பிறகு பல வருடங்களுக்கு பின்னால் கஞ்சுகச்சார்ல கோபாலன் பத்ராச்சலத்திர்க்கு தசில்தராஹா வந்தார். இவருடைய சொப்பனத்தில் ராமர் தோன்றி தனக்கு கோயில் கட்டும்படி சொன்னார், தான் பத்ரனால் இங்குவந்தது தான் இருக்கும் இடம் எல்லாவற்றையும் சொப்பனத்தில் காட்டினார். தானிஷாவின் அரசாங்க பணத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேஹமும் செய்தார் ஆகையால் பதினான்கு வருடம் காராக்ருஹத்தில் இருந்தார் பிறகு ராமரால் காப்பற்ற பட்டார்இவர்தான் பத்ரசல ராமதாசர். நாம் பஜனையில் ராமதாசர் முத்திரை வரும் பாட்டுக்கள் இவரால் எழுதப்பட்டவை.
இவருக்கு பிறகு பல வருடங்கள் கழித்து பத்ரச்சலத்தில் தாசில்தாராக வந்தவர் பத்ரகிரிவசர் இவர் ராமதாசர் செய்த ராம கைங்கர்யத்தை விடாமல் செய்தார் இவர் எழுதிய பாட்டுக்கள் பத்ரகிரிவசர் என்னும் முத்திரையில் நாம் இன்று பஜனையில் படிகொண்டு இருக்கிரொம் ஆகையால் பத்ரகிரிதாசர், பத்ரச்சலராமதசர்,பத்ரகிரிவாசர் மூன்றுபேரும் வேறு வேறு காலத்தில் இருந்தவர்கள்.
No comments:
Post a Comment