Thursday, April 9, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part7

courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ்விளக்கம—7

 

   ராகம்:செஜ்சுருட்டி               தாளம்: சாபு


1.ஸ்ரீ ரமணுனி லீலனு சங்கீர்த்தன ஸேயரே செலுலாரா

   கோரிவேடுசு காந்தமு மா தில்ல கோவிந்துனி பை சல்லரே


 மகாலக்ஷ்மியின் நாயகனான மாஹாவிஷ்னுவின் அவதாரங்களை பாட்டாக பாடுங்கள் தோழிகளே. ஆசையுடன் தயாரிக்கப்பட்ட சந்தனத்தை எங்கள் மனம் கவர்ந்த கோவிந்தராஜன் மேல்  தெளியுங்கள்


2.ஆடபாடலு மிஞ்சுக சொம்புமீரி போடுலு ரானிஞ்சக

    கூடுவ கந்தமுலு மா தில்ல கோவிந்துனி பை சல்லரே


நாட்டியமும் பாட்டுக்களும்  இறைவனுடைய புகழ் அதிகம் தெரியும்படியகவும் பாட்டின் அழகு கெடாமலும் சங்கதிகளை குறைத்தும் கலந்து வைத்திருக்கின்ற சந்தனத்தை எங்கள் மனம் கவர்ந்த கோவிந்தன் மேல்  தெளியுங்கள்


3.ரம்மனி யொக்கரோக்கரு சங்கீதமு கம்மக பாடுகொனி

   கம்மனி கந்தமுலு மா தில்ல கோவிந்துனி பை சல்லரே


ஒருவர் மற்றவரை வா என்று அழைத்து அன்யோன்யமாக இனிமையான பாடிக்கொண்டு வாசனையுள்ள சந்தனத்தை எங்கள் மனம் கவர்ந்த கோவிந்தன் மேல் தெளியுங்கள்


4.கவி காய்குலெல்லனு கூடுகொனி கடுவேடுகனு உண்டக

  குவலயாஷுலு கந்தமு மா தில்ல கோவிந்துனி பை சல்லரே


  தத்துவம் தெரிந்த கவிகளும் பாடுஹிரவர்களும் (சாஹித்யகர்தா)

 சேர்ந்துகொண்டு கடுமையான பிரார்த்தனையுடன் ஆம்பல்பூவைபோல் கண் உள்ளவர்களே சந்தனத்தை எங்கள் மனதுக்குஹந்த கோவிந்தன் மேல் தெளியுங்கள்


5.தப்பக மீ கோர்க்யலனு இச்சே ஸ்வாமியு  எப்புடு கொலுவரம்ம

   கொப்ப கின்னேல கந்தமுல் மா தில்ல கோவிந்துனி பை சல்லரே


மோசம் செய்யாமல் உங்கள் ஆசையான எண்ணங்களை தீர்த்துவைக்கும் இறைவனை எல்லா சமயத்திலும் ஆராதியுங்கள் உயர்வான கிண்ணத்தில் உள்ள சந்தனத்தை எங்கள் மனம் கவர்ந்த கோவிந்தன் மேல்  தெளியுங்கள்


இந்த பாட்டின் உட் பொருள்

 

நாம் வைராக்கிய பக்தியுடன் இறைவனிடம் நம் மனதை ஈடுபடுத்தவேண்டும் என்பதை இந்த பாட்டுமூலம் தெளிவுபடுத்தபடுஹிறது

No comments:

Post a Comment