Tuesday, April 7, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part5

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ்விளக்கம்—5


ராகம்:யதுகுலகாம்போதி              தாளம்:ஆதி


1.கன்யலாரா மீரந்துரு கண்டிரோமே யீ பொன்னபூலு பூசியுண்டே போத்துநேடு


கன்னிபெண்களே நீங்கள் எல்லோரும் பார்த்தீர்களா இன்று இந்த பொன்ன பூ பூத்திருக்கிறது


2.பங்கஜலோசனுலாரா பாகுமீர யீ குங்கும கன்னேரி பூலு கோய ராரே


தாமரை பூவைபோல் கண்களையுடைய பெண்களே நல்லவிதமாஹா குங்குமம் போல் சிவந்து இருக்கும் இந்த அரளி பூக்களை பறிக்க வாருங்கள்


3.ஜாஜுலு சன்னஜாஜுலு சாலு நேடு விருவாஜி பூலு கோய ராரே வனித்லாரா


ஜாதி பூ, சின்னஜாதி பூ இன்று போதுமானது விருவாட்சி பூ பறிக்க வாருங்கள் பெண்களே


4.மல்யலு மொல்யலு சாமந்த பூவுலு இந்து கொல்லலை பூசியுன்னதி கோய ராரே


மல்லிகைமுல்லைசாமந்தி பூக்கள் கும்பலாக (மொத்தமாக) பூத்திருக்கிறது பறிக்க வாருங்கள்


இந்த பாட்டின் உட் பொருள்


இந்த பாட்டில் பூத்திருக்கும் பூக்களை பறிக்க எல்லோரையும் அழைப்பது போல் இருக்கிறது.பூஜை முறை அறிந்தவர்கள் தோட்டத்தில் உள்ள எல்லா பூவையும் பறிப்பது இல்லை. பறிக்கப்பட்ட 
பூக்கள் இறைவனை அடைஹிறது. இந்த கலியுகத்தில் பக்தி மார்கத்தில் உள்ளவர்கள் பறிக்கப்பட்ட பூவை போன்றவர்கள்

No comments:

Post a Comment