Thursday, April 30, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part34

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-34.

 

ராகம்: சௌராஷ்ட்ரம்                   தாளம்: சாபு

 

பல்லவி: ஜெரிவச்சேனு { ஜாரவச்சேனு} அலமேலுமங்க

         ஜிலுகு பையத ஜாரகா

 

{இந்த இடத்தில் ஜாரவச்சேனு என்று இருக்கவேண்டும் ஜெரி என்றால் சேர்ந்து என்று பொருள் ஜார என்றால் சாய்ந்து என்றுபொருள் இந்த பாட்டில் தாயார் தனியாக வருவதால் ஜார என்பது சரியாக இருக்கும் சொர்ணக்காடு {பனை ஓலை} ஏட்டு சுவடியில் ஜார என்று உள்ளது}

 

அலமேலுமங்க தாயார் வந்தாள் தன் மேலுள்ள ஜொலிக்கும் நகைஹள் ஒரு பக்கமாக சரிந்து இருந்தது

 

அ.ப். காரவம்புன வேங்கடபதி படகில்லு  

     தீரனி ப்ரமதோதிரிகி ஜூசுகொண்டே—ஜெரிவச்சேனு

 

வெட்கத்துடன்  வேங்கடபதி பள்ளியறையிலிருந்து தீராத ஆசையுடன் திரும்பி பார்த்துக்கொண்டு அலமேலுமங்க தாயார் வந்தாள்

 

ச.1. முடிபூலு ராலக முங்குரு லசியாட

     விடமு காப்புர தாவி வெதசல்லக

     ஒடலு வாடுதேர ஒன்டிகட்டுதோனு

     படதிரவலகில்கு பாவல மேட்லதோ—ஜெரிவச்சேனு

 

தலையில் பூக்கள் உதிர்ந்து விழ கழுத்து நகைஹள் ஆடவும் தாம்பூலத்தின் காவி கரை ஒரு பக்கமாஹ் வழியவும் உடல் தளர்ச்சியாகவும் திருமனமானவர்ஹல் புடவை கட்டவேண்டிய முறையில் {மடிஸார்} இல்லாமல் சாதாரணமாக கட்டிய புடவையுடன் முந்தாணி சரியவும் மெட்டி கழண்டு விழுந்து விடும் நிலையில் அலமேலுமங்க தாயார் வந்தாள்

 

ச.2.நிகரம்பு ஜவ்வாஜி நிக்குல கஸ்தூரி

   அகரு குங்குமகந்தமு அலதுகோனி

   மகுவமோமு நிதுர மப்பு தேரகானு

   நோகிலின கெம்மோவி மஉலா தோடனு—ஜெரிவச்சேனு

 

 

 

கன்னத்தில் இருந்த  ஜவ்வாது நெற்றியில் இருந்த கஸ்தூரி

அகரு வாசனையை உடய குங்குமம் சந்தனத்துடன் கலந்து கலைந்துதாயாரின் முகத்தில் தூக்க கலக்கம் மாராமலும் தாம்பூலம் வாயிலிருந்து ஒழுகி காய்ந்துபோன முகத்துடன் அலமேலுமங்க தாயார் வந்தாள்

 

ச.3.செலுவ ராயுடைன ஸ்ரீவேங்கடபதி

   தலபுன நாயகி தருணீமணி

   முழக நவ்வு முத்து மோமுகல நாரி

   கலதீர மீரின ஸ்ருங்காரி ஒய்யாரி—ஜெரிவச்சேனு

 

மிஹவும் ப்ரியமான திருவேங்கடரமணனின் மனதில் எப்பொழுதும் இருக்கும் நாயகி பெண்களில் தலைசிரந்த அலமேலுமங்கைத்தாயாரின் அழஹான முகத்தை உடைய தாயார் புன்சிரிப்புடன் தன்னுடைய சொப்பனம் தீர்ந்த சந்தோஷ்ழ்த்தில் அழஹாஹவும் ஆடம்பரமாஹவும் அலமேலுமங்க தாயார் வந்தாள்

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

இதற்குமுன் குறிப்பிட்டது போல் தாயார் பக்தனில் முதன்மையானவள். ஒரு பக்தனுக்கு ஏற்படும் அனுபவங்களை தாயாரை முன் நிறுத்தி கவி நமக்கு சொல்லியிருக்கிறார். பக்தனின் மனதில் இறைவனும் இறைவன் மனதில் பக்தனும் இருப்பதால் பக்தன் தான் அல்ங்கோலமஹா இருந்தாலும் பிறர் சிரிக்கும்படி இருந்தாலும் தானும் இறைவனும் ஒன்றாஹ கலந்துவிட்ட நிலையில் {ஜீவாத்மா பரமாத்மா சங்கமம்} ஒளிவீசும் பக்தனாஹ அழஹாஹ் கானப்படுஹிரான் இந்த பாட்டு ஸ்ருங்காரத்தின் உச்சமாஹ கானாப்பட்டாலும் பக்தனுடைய உள்ளம் உடல் இறைவனுடன் தான்  கொண்டுள்ள ஈடுபாட்டினை கவி மிஹவும் அழ்ஹஹ எடுத்துகாட்டியிருக்கிறார்.

No comments:

Post a Comment