Thursday, April 23, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part26

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-26.

 

 

ராகம்; jநவரோஜ்                     தாளம்; சாபு

 

பல்லவி; ஜோஜோ தீனஜனாவன லோல

          ஜோஜோ யதுகுலதிலக கோபால-- ஜோஜோ

 

நலிவடைந்து போன  மக்களின் நாயகனே யாதவகுலத்தின் தலைவனே கோபாலா தூங்கு

 

ச.1.வேதமுல் ரத்னால கொலுஸுலையமர

   வேதன்த்மபரஞ்ஜி தொட்லகானமர

   நாதமு ப்ரவனமு பானுபையமர

   ப்ரணவார்தமை இச்சட பவ்வளிஞ்சு ஸ்வாமி—ஜோஜோ

 

தொட்டிலின் நான்கு பக்கமும் நவரத்ன கற்ககள் பதிக்கப்பட்ட சங்கிலியாக வேதங்கள் அமையவும் மிஹவும் உயர்வான தொட்டிலாஹ வேதாந்தங்கள் இருக்கவும் உலஹத்தில் உள்ள நாதங்களும் ஓம்காரமும் தொட்டிலில் விரிப்பாஹாவும் ஓம்காரத்தின் பொருளான இறைவனே இங்கு படுத்துக்கொள்

 

ச.2.அதிவிசித்ராமுக பதியவதாரமுலலோ

   அமருக பதினால்கு ஜகதுல ப்ரோவ

   ப்ரதியுகமுன ஜனியிஞ்சு மிகுல

   ப்ரபலி ஜன்மரஹிதுடனுகொன்னஸ்வாமி—ஜோஜோ

 

மிஹவும் அதிசயமான பத்து அவதாரங்களிலே ஸாந்த்தமாஹ பதினான்கு உலக ஜீவராசிகளை காப்பாற்ற ஒவ்வொரு யுஹத்திலும் கர்மபந்தமில்லாத பிறவி எடுத்து எந்த சமயத்திலும் அளவிடமுடியாத கஷ்டத்தையும் போக்கி மறுபிறவி இல்லாமல் அருளக்கூடிய இறைவனே

 

ச.3.ஸாந்தியு மணிமய மகுடமாய் மெரய

   சக்துலு முக்தா ஹாரமை மெரய

   தாந்தியு குஸும மாலிகய மெரய

   தரலோ ஸ்ரீவேங்கடரமணுடௌ ஸ்வாமி-- ஜோஜோ

 

 

இறைவனுடைய சாந்தமான குணம் என்னும் மனிஹளால் அமையப்பெற்ற மகுடம் ஒளிவீஸ இறைவனுடைய சக்தி முத்க்களாலான மாலையாஹ்  ஒளிவீஸ பக்தி வாசனையுடைய பூமாலையாஹ ஒளிவீஸ இந்த உலஹத்து நாயஹனான் ஸ்ரீவேங்கடேஸ்னே.

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

பக்தனின் மனதை தொட்டிலாக்கி இறைவன் ஆடும் சமயத்தில் பக்தனுடைய மனது அமைந்திருக்கும் அழகை கவி வர்ணித்துள்ளார்

No comments:

Post a Comment