Tuesday, April 14, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part12

Courtesy:Sri.S.V.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம-12

 

ராகம்;சங்கராபரணம்                                தாளம்: த்ரிபுட

 

பல்லவி:தாரி ஜுஜுசுன்னதி நீதுப்ரிய தரலாஷியெள சின்னதி

 

நீ வரும் வழியை பார்த்துக்கொண்டு உன்னை நேசிப்பவள் அலைபாயும் கண்களுடன் சின்னத்தனமான எண்ணங்களுடன் காத்திரிக்கிறாள்

 

அ.ப: வாரிஜமுகி நீவு வச்சுவேள யனுகொனி கோரிகதோ ராஜகோபால ஸ்வாமி-நீ தாரி

 

தாமரை போன்ற முகத்தையுடையவள் நீ வரும் சமயம் என்று எண்ணி ஆசையுடன் ராஜகோபால ஸ்வாமி உன் வரவை எதிர்பார்க்கிறாள்

 

ச.1.வெண்ணெல காயக வேட்க மீர மஞ்சி சன்ன ஜாஜி விருல சருலனு கந்தமு  பன்னீடி செம்புலு ப்டகின்ட்லோநுஞ்சி வன்னேலாடி தலவாஹிட நிலசி-- நீ தாரி 

 

குளிர்ச்சியான சந்திரனின் ஒளியில் ஆசை பெருக வாசனை பொருந்திய ஜாதிபூ,விருவாட்சிபூ வாசனையாக உள்ள சந்தனம் பன்னீருடன் பன்னீர் செம்பு முதலியவைஹளுடன் படுக்கை அறையில் வைத்து சந்தோஷமாக வாசல்படியில் நின்றுகொண்டு உன்னை எதிர்பார்க்கிறாள்

 

ச.2.ஏவுகனைனணுநெந்து ஜெப்புடைன நீவோயணி யெஞ்சி திரிகி ஜூகி

யீவக சித்தமுனிச்ச்லு நிலிபினட்டி பாவமெவரிகைன பயலைன வெரவக நீ -தாரி


ஏதோ விதமாஹா சப்தம் வந்தாலும் நீ வருவதாஹா எண்ணி திரும்பிபார்த்து இந்த விதமாஹா மனதை உன் நினைவஹ நிறுத்தி தாபத்துடன் பயம் சிறிதும் இல்லாமல் உன்னை எதிர்பார்க்கிறாள்

 

ச.3.பச்சி பச்சிகானு பதமுலு பாடுசு வச்சி ராஜகோபாலஸ்வாமி நீவு

முச்சடலாடுசு முத்துலு பெட்டுசு க்ருச்சி கெளகலிஞ்சி கூடுட தலசி நீ --தாரி

 

மிஹவும் வெளிப்படையான பொருள் தரக்கூடிய ஸ்ருங்காரரஸ சொற்கள் அடங்கிய பாட்டுக்களை பாடிக்கொண்டு ராஜகோபாலஸ்வாமி நீ வந்து மகிழும்படி பேசி முத்தம் இட்டு கைநகம் படும்படியாக கட்டியனைத்து சேரவேண்டும் என்று நினைத்து உன்னை எதிர்பார்க்கிறாள்

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

இறைவனை பக்தர்கள் எதிர்பார்க்கும் அழகை ஸ்ருங்காரமாக வர்ணித்துள்ள கவி இறைவனை அடையும் வழியை பக்தர்கள் நாம சங்கீர்த்தனம் செய்தும்அர்ச்சனை நைவேத்யம் செய்தும் பாடியும் ஆடியும் (பலவிதமான பூக்களாகிய) பக்தர்கள் சரணாகதம் செய்தும் எந்த ஒலியை கேட்டாலும் அதை இறைவன் ஸ்வரூபமாக நினைத்தும் அச்சஞ்சலமான பக்தியுடன் பல ஸ்ருக்காரமான பாடல்ஹளை பாடியும் இறைவனை தம்மனதுக்குள் நிறுத்தி ப்ரம்ஹானந்தமாஹ இருக்க பக்தர்கள் அலைஹிரார்கள் என்பதை மிகவும் பக்திரஸத்துடன் ஸ்ருங்காரமாக படைத்திரிக்கிறார் கவி.இந்த பாட்டு ஷேத்ரஞயர் பதமாஹும்

 

இது வரை வந்தகேளிக்கை பாட்டுக்களை அனுபவித்தோம். இதன் பிறகு பவளிம்பு கீர்த்தனைகள் ஆரம்பம் ஆஹிறது. முதலில் உள்ள ஸ்லோகங்கள் மேல் உள்ள தெலுங்கு பாட்டுக்களுக்கே விளக்கம் தரப்படுஹிறது. பாட்டுக்களின் வரிசை மாறியிருக்கலாம் புதிய பாட்டுக்கள்சரணங்கள் இருக்கலாம் அவைகள் சுமார் 250வருடங்களுக்கு முன்னால் எழுதியுள்ள ஏட்டு சுவடியில் இருந்து எடுத்து எழுதப்பட்டது எங்கள் சொர்ணக்காடு  கிராமத்தில் அனுசரித்து வருகிறோம்

No comments:

Post a Comment