Monday, April 13, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part11

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம-11

 

ராகம்:யதுகுலகாம்ப்தி                         தளம்:சாபு

 

பல்லவி: ஏ மாடலாடின நீ மாடலேகாணி ஏமி செப்பினனு எதுராடதுரா-ஏ மாடலாடின

 

எந்த விஷயத்தை பேசினாலும் அதுவும் உன்னுடைய பேச்சுத்தான் எதாவது சொன்னாலும் எதிர்த்து பேசமாட்டாள்

 

அ.ப.    தாமராஸாஷ நீவு எப்புடு ஒத்துவோ அனி தலவஹிடில்லுகநிலபடுசுனு

 

தாமரை போன்ற கண்களுடயவனே நீ எந்த சமயத்தில் வருவாயோ என்று வீட்டு வாசற்படியில் எதிர்பார்த்து நிற்கிறாள்.

 

ச.1.கண்ணுல நீரு காலுவலை பாரேனுரா

காந்த் விரஹாக்னினி கனகூடதுரா

நின்னு எடபாஸி யரநிமிஷம்  ஒர்வதுரா

வன்னே காடாயோரி வலதுன ராதுரா

 

கண்ணிலிருந்து கண்ணீர் கால்வாய் போல் வந்தது விரஹதாபத்தில் உள்ள அவள் கண்களை பார்க்க முடியவில்லை உன்னை விட்டு அரை நிமிஷம் கூட இருக்க முடியாதவளை நீ பிரிந்து இருப்பது நல்லது இல்லை

 

ச.2.மனஸுகு இம்பைன ஸோம்முலு பெட்டதுரா

    மரிவெல ஹெச்சைன சீர கட்டதுரா

    தனிவினாஹாரமு நிதுரயு காஞ்சதுரா

    தானுமணின தைர்யமு புட்டதுரா


மனஸுக்கு பிடித்தமான ஆபரணங்களை போட்டுக்கொள்ள மாட்டாள். மிஹவும் உயர்வான புடவை கட்டமாட்டாள். தாங்கமுடியாத துக்கத்தால் தூக்கத்தையும் விரும்பமாட்டாள் துக்கத்தை சமாளிக்கக்கூடிய தைர்யமும் பிறக்காது

 


ச.3.சொகஸு குப்பலனுன்ன முத்யால சருலேல்லா

   சொபகுலெக சிட்லி சுன்னமைனுரா

   மகுவ தெகுவ ஜேஸி மானணி பொந்து தலசி

   வககாட ஸ்ரீ ராஜகோபால தேவா

 

அழஹான முத்து சரங்களாலான மாலைகளெல்லாம் சிதைந்து சுண்ணாம்பு போல் பொடி பொடியாஹிவிட்டது இவள் தன்னையும் மீறி உன்னை எப்படியும் கலந்து மறக்கமுடியாத சந்தோஷத்தை நினைத்து அனுபவிக்க ஆசைபடுஹிறாள் ஸ்ரீராஜகோபாலா.  

 

இந்த பாட்டின் உட் பொருள்

 

அனன்யாஸ் சிந்தயந்தோமாம் என்பது போல் யார் ஒருவர் இறைவனை நினைத்துகொண்டு இருக்கிரார்ஹளோ அவர்கள் எதை  பேசினாலும் அந்த வார்த்தைகள் இறைவனுடைய அருளையே பேசுவார்கள். யாராவது இவர்களை ஏஸி பேஸினாலும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். இறைவன் எந்த சமயத்தில் தன மனதில் வந்து அமருவாரோ என்று காத்துகொண்டு இருப்பார்கள். இவர்கள் இறைவனை நினைக்கும்பொழுதே காதலாகி கண்ணீர் பெருகி அரை நிமிடம் கூட இறைவன் நாமாக்களை சொல்லாமல் இருக்கமுடியாது. விலை உயர்ந்த ஆபரணங்கள்,உடைகள் ,உணவு,உறக்கம் இவைஹளை இவர்கள் விரும்பமாட்டார்கள் இவ்வாறு இறைவனை நினைத்து இறைவன் பெயர்களை சொல்லிக்கொண்டு இருப்பவர்களை இனியும் சோதனை செய்யாமல் அவர்ஹளுடன் எல்லா சமயத்திலும் இருந்து அவர்கள் சந்தோஷத்தை அதிகபடுத்தி ப்ருஹ்மானந்தத்தை அளிக்கவேண்டும் ஸ்ரீ ராஜகோபாலா

No comments:

Post a Comment