Tuesday, March 31, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part1

courtesy;Sri.SV.Narayayan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்

 

இந்த கலியுகத்தில் நாம  சங்கீர்த்தனதின் மூலம் தான் இறைவனை அடையமுடியும் என்று எடுத்துக்காட்டும் முறையில் இந்த வான்தொத்சவுமும் பவளிம்பும் அமைந்திருக்கிறது.  இந்த பூலோகத்தில் இருக்கும் அனைவரும் நாயகிகளாகவும் இறைவன் ஒருவனே நாயகனாகவும் புராணங்கள்  சொல்கின்றன நாயகி நாயகனை அடைய தன அனுபவிக்கும் முறைகளை சிருங்கர ரூபமாக தாளபாக்கம் சின்ன திருமலய்யா (சின்னமையா) தாளபாக்கம் அன்னமாச்சாரியார் பேரன் அவர்களால் சித்தரிக்கபட்டுள்ளது

வசந்த கேளிக்கை மற்றும் பவளிம்பு பாட்டுக்கள் நாயகன் நாயகிக்கும் இடையில் உள்ள அன்யோன்யமான விஷயங்களை பிரதிபலிப்பதுபோல் இருக்கிறது.  நாயகன் நாயகிக்கு இடையில் எந்தவிதமான ரகசியமும் இருக்காது என்பது தெரிந்த விஷயம். அவர்கள் இருவரும் அன்யோன்யமாக இருப்பதால் அன்புபாசம்பக்தி நாளுக்கு நாள் வளர்ந்து பெருகுகிறது இதுவே ஸ்ருங்காரமாக ஒரு பெரிய கவியால் சித்தரிக்கபட்டுள்ளது. வேறு விதமாக புரிந்துகொள்ளாமல் இறைவனை அடையும உயர்ந்த வழி என்பதை புரிந்துகொண்டு பக்தியை பெருக்கி முக்தி அடைய வேண்டும் என்பதுதான் நோக்கம்

உலஹத்தில் உள்ள ஜீவாத்மாக்கள் அனைவருமே பெண்கள்பரமாத்மாவான இறைவன் ஒருவனே ஆண். பென்னாகபட்டவள் (நாயகி) ஒரு காலத்தில் நாயகனாக இருக்ககூடிய கணவனை அடைஹிராளோ அது போல் நாமும் சரியான முறையில் பக்தி செய்து நமக்கு நாயகனாக உள்ள இர்ரைவனை அடையவேண்டும் என்பது இதன் நோக்கம்.

ஸ்ரவணம்,கீர்த்தனம்,ஸ்மரணம்,பாதஸேவனம்,அர்ச்சனம்,வந்தனம்,தாஸ்யம்ஸக்யம்அத்மநிவேதனம் என்னும் அடிப்படையில் பஜனையில் ஆரம்பத்தில் ஸ்ரவணம் ஆரம்பித்து பவளிம்பு முடியும் பொழுது அத்மநிவேதனத்தில் முடிவடைகிறது.

பவளிம்பு கடைசி அங்கமாக கோணங்கிதாசர் வருகிறார். கோணங்கிதஸ்ரை திருஷ்டி பரிஹரமாகவும் கேலியாகவும் சித்தரித்து நடத்துகிறோம். இதன் தாத்பர்யம் மிஹவும் உயர்நதது. கோணங்கிதாசர் வந்தது முதல் மிஹவும் விளயாட்டாக புரியாத முறையில் சம்பாஷனை நடக்கிறது நாம் உலகத்தை அறியாத நிலையையே இது எடுத்துக்காட்டுகிறது. கோணங்கி சமராதனையில் அவரே சாப்பிடுவது உலஹத்தில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் ஒருவரே காப்பாற்றுகிறார் என்பது தத்வம். இறைவனுடைய வயிற்றில் இந்த பூலோகமே இருக்கிறது என்பது புராணம். முடிவில் கோணங்கிதாசர் தட்டி எழுப்புஹிறார். அக்யானத்தில் இருக்கும் நம்மை எழுப்பி கோணங்கிதாசர் திரையை விலக்கி ஸ்வாமி தரிசனம் செய்து வைக்கிறார். இறைவனே குருவஹா வந்து நம்மை முக்தி உண்டான வழியை காட்டுகிறார். கொனங்கிதாசரக வருபவர் இறைவனுடைய ஸ்வரூபம் என்பதை நாம் உணர வேண்டும். இதுதான் "அத்மநிவேதனம்".

நாம் பஜனை முறையில் நடத்தும் கல்யனவைபவங்களில் ஜெயதேவர் அருளிய கீதகோவிந்தம் பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அன்கீஹரிக்கபட்டது. கீதகோவிந்தம் காவ்யம் முழுவதும் கல்யனவைபவங்களில் பாடுவதுபோல் பகவான் ஸ்ரீவெங்கடேச பெருமாளால் அன்கீஹரிக்கபட்ட இந்த வசந்த கேளிக்கைபவ்வளிம்பு கல்யாண வைபவங்களில் பாடப்படவேண்டும் என்பது என் விருப்பம்

சுமார் இருநூறு வருடங்களுக்கு மேலாக பஜனை முறையில் கல்யாண வைபவங்கள் இன்றுவரை நடந்து கொண்டிருக்கும் சில இடங்களில் முப்பத்திரண்டு பாட்டுக்கள் வரை இருக்கிறதுஇன்று உள்ள சில பாடல்கள் இடம் பெறவில்லை. கீதகோவிந்தம் இருபத்திநான்கு பாட்டுக்கள் இருப்பதால் பவளிம்புவையும் இர்பத்தினாங்கஹா மாற்றியிருக்கிறார்கள் இது யாருடைய காலத்தில் நடந்தது என்பது தெரியாது. இது இன்று உள்ள இளய தலைமுறைக்கு தெரிவிக்க ஆசைப்பட்டேன்.

இதில் குற்றம் இருந்தால் தயவுசெய்து மன்னிக்ககவும் நிறைவாக இருந்தால் என் இஷ்ட தெய்வமான ஸ்ரீராமபிரனுக்கு அர்ப்பணம் செய்கின்றேன்


No comments:

Post a Comment