Monday, March 2, 2015

Thirumeichoor

Courtesy: amrita Vahini

பேரளம் என்ற ஊரிலிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ளது திருமீயச்சூர்.  மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 18 கிமீ தொலைவில் உள்ளது.  பாடல் பெற்ற ஸ்தலம். இங்குதான், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் உலகுக்கு உபதேசிக்கப்பட்டது.  இறைவன் பெயர் திருமேனிநாதர்.  இறைவியின் பெயர் ஸ்ரீ லலிதாம்பிகை. 

கர்த்துரு என்றும் வினதை என்றும் இரு மனைவியர்களைக் கொண்டவர் ஸப்தரிஷிக்களில் ஒருவரான காஸ்யப முனிவர்.  அவர்களுடைய தோட்டத்தில் ஒரு நாள் இந்திரனுடைய உச்சைஸ்ரவஸ் எனப்படும் வெண்மையான குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது. குதிரையின் வாலில் கருப்பான ஒரு கோடு தென்படுவதாக கர்த்துரு சொல்ல வினதை அதை மறுத்தாள்.  கர்த்துருவின் ஆணைக்கு இணங்க, கார்கோடகன் என்ற கருநாகம் உச்சைஸ்ரவஸின் வாலில் சுருட்டிக் கொண்டது.  அதன் வாலை வினதையிடம் காண்பித்து,  தான் வெற்றி பெற்றதாக கூறிக்கொண்டாள் கர்த்துரு.  இதனால், முனிவர் இட்ட சாபம் நீங்க இந்த க்ஷேத்திரத்திற்கு வந்து வழிபட்டாள் கர்த்துரு.  சாப விமோசனம் அளித்தபின், அவளிடம் இரு முட்டைகளைக் கொடுத்தார் இறைவன்.  பர்ணசாலையில் மிகவும் ஜாக்கிரதையாக பார்த்து கொண்டிருந்தாள்.  சரியாக 10ம் மாதத்தில் ஒரு முட்டையை உடைக்க, அதில் இருந்து கை, கால் இல்லாத அருணன் என்ற பெயர் கொண்ட அழகான ஆண் குழந்தை பிறந்தது.  அக்குழந்தை பிற்காலத்தில், சூரிய பகவானுக்கு தேர் ஓட்டும் சாரதியாக பொறுப்பேற்க முடிந்தது.

இரண்டாவது முட்டையை 12ம் மாதத்தில் உடைத்துப் பார்த்தால், அதில் குழந்தைக்கு இறக்கை இரண்டும், கூரிய மூக்கும் வளர்ந்திருந்தது.  கருடன் என்று பெயரிடப்பட்ட அக்குழந்தை, பிற்காலத்தில் ஸ்ரீமன் நாராயணனுக்கு வாகனமாக அமர்த்தப்பட்டார்.
ஓரு காரணத்தால் கோபமடைந்த அம்பாளை சாந்தமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார், இறைவன்.  இதன் காரணமாக, இறைவி சாந்தநாயகி என்ற பெயராலும் அழைக்கப் பெற்றாள்.  இக்காட்சியை சிற்பியின் கைவண்ணத்தால் சிற்பம் ஒன்று வெளிப்ராகாரத்தில்  செதுக்கப்பட்டிருக்கிறது.  அதில், ஸ்ரீ லலிதாம்பிகையின் கண்ணத்தை சமாதானம் செய்யும் பொருட்டு சிவபெருமான் வருடுகிறார்.  ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் இறைவி சினம் கொண்டும், மறு பக்கத்தில் இருந்து பார்த்தால் அழகிய புன்முறுவலுடனும் காட்சி அளிக்கிறாள்.  இறைவியின் புன்முறுவல் காரணமாக, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உச்சரித்தனர்.  அழகியின் ஆயிரம் நாமங்களை ஹயக்ரீவர் அகத்திய முனிவருக்கு உபதேசம் செய்தார்.

இக்கோயிலில் உள்ள அஷ்டபுஜ துர்க்கையின் கையில் ஒரு கிளி இருக்கிறது.  அஷ்டபுஜ துர்க்கையை வேண்டிக் கொண்டால், இக்கிளி மூலமாகத் தான் ஸ்ரீ லலிதாம்பிகையின் அருளை நமக்கு கிடைக்க வழி செய்கிறாள்,  அஷ்டபுஜ துர்க்கை. 

அதனால்தான், இக்கோயிலில் நிறைய கிளிகள் பறந்து செல்கின்றன.

செம்பியன் மகாதேவியும், ராஜ ராஜ  சோழனும் இக்கோயிலுக்கு நிறைய திருப்பணி செய்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment