ஸ்ரீரங்கம் கோவில் வேடுபறி இரண்டாம் பாகம் காணொளி
திருமங்கைமன்னன் பற்றி இல்லாமல் வேடுபறியா என்று நமது அன்பர்கள் பலர் கேட்டதற்கு இணங்க ...(இதில் நம் பெருமாள் அதிகம் இல்லையே என்று கேட்காதீங்க ..அவர் இந்த அழகு விளையாட்டை நம்மை போல் ஓராமாக நின்று வேடிக்கை பார்ப்பவராக மட்டும் இருப்பார் ..)
பலருக்கு இந்த திருநாள் பற்றிய குறிப்புகளை படிக்க ....
கீழை ஆலிநாடன் வீதியாகிய மணல்வெளியில் நடைபெறும். இன்று நம்பெருமாள் வாஹனத்திலிருப்பதால் பரமபதவாசல் வழியாக எழுந்தருள மாட்டார். காவல் மிராசுக்காரர்கள் திருமங்கையாழ்வாரோடு வந்து நம்பெருமாளைச் சுற்றி நோட்டமிட்டுச் செல்வார்கள். திருமங்கையாழ்வார் வலது கண்ணோரத்தின் கீழ் வைத்த பிடியும் தாழ்ந்த தோளும், மடித்த இடக்காலும், மண்டிபோட்ட வலக்காலும், சக்கரமாய் வளைத்த வில்லுடன் வந்து நம்பெருமாளும் கைங்கர்ய பரர்களும் விழித்திருக்கிறார்களா, தூங்குகிறார்களா என்று துப்பறிந்து போவார். பரமபத வாசலில் கத்தி, கேடயம், உடைவாள், முதலியன தரித்து , தம்முடைய பரிஜனங்களோடு வந்து நம்பெருமாளுடைய சொத்துக்களையெல்லாம் கொள்ளையிட்டுக்கொண்டு ஓடுவார். நம்பெருமாளும் ஓடிப்போய் அவரை பிடிக்க முடியாமல் திரும்பி வந்து, பறிமுதல் கணக்கு வாசித்த பிறகு காவல்காரர்களை அனுப்புவார். தம்முடைய அந்தரங்க சீடர்களோடு வந்து கொள்ளை அடித்துச் சென்றபின், கோயில் கணக்கப்பிள்ளை இன்னென்ன பொருட்கள் திருமங்கயாழ்வாரால் கொள்ளையடிக்கப்பட்டன என்பதைப் படிப்பார்.
"வருஷம் , மாதம் நாள் கிழமை இவற்றின் அடைவுகளைக் கொடுத்து நம்பெருமாள் திருவாய்மொழித் திருநாள் 8ஆம் திருநாளைக்கு குதிரை நம்பிரானில் எழுந்தருளி ஆலிநாடன் திருச்சுற்றில் மாறன் பாட்டு கேளா நிற்குகையில் நம் கலியனான திருமங்கை ஆழ்வார் வழிநடையாக வந்து பறித்துக் கொண்டு போன ஸ்ரீபண்டார உடமைகளின் விபவம்: ஸ்ரீ ரங்கா நாராயண ஜீயர் காணிக்கை அஞ்சனகாப்பு தங்கச்சிமிழ் 1, வேதவியாச பட்டர் காணிக்கை தங்க பதக்கம்1, பராசர பட்டர் பதக்கம்1,வாதூல தேசிகர் தாழிப் பதக்கம்1, உத்தமநம்பி காணிக்கை -ரத்ன தாழி பதக்கம்1, கந்தாடை ராமாநுஜன் காணிக்கை -தங்க உத்தரணி1, கம்பய மகா தேவராயர் காணிக்கை வெள்ளிக்கொப்பரை-1, விஜயரங்க சொக்கநாத நாயக்கர் திருப்படிகம்1 ...."
அவர்கள் திருடன் போன பாதையிலேயே காலடி பார்த்துப் போய், வழியிலகப்பட்ட வெள்ளித்தடியை "வெள்ளித்தடி
மச்சம் கிடைத்துவிட்டது" என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். ஸ்தானீகர் வாங்கி உயரப்பிடித்துப் நம்பெருமாளிடம் காட்டுவார்.
இதற்குள் திருமங்கையாழ்வார் காவல்காரர்கள் கையிலகப்பட்டு அஞ்ஜலி ஹஸ்தராய்ப் நம்பெருமாளிடம் வருவார். "நம்பெருமாள் அருளப்பாடு கலியன்" என்று தம்முடைய கோரா குல்லாய் முதலியவற்றை ஆழ்வாருக்கு ஸாதித்திடுவார். அரையர் "வாடினேன் வாடி " (பெரியதிருமொழி 111) ஸேவித்த பிறகு, நம்பெருமாள் புறப்பட்டு, காவல்காரர்களுக்கு மரியாதை செய்வித்து, அரையர்களுக்கு அருளப்பாடு ஸாதித்து, ஆயிரங்கால் மண்டபத்தில் ஆழ்வார் ஆசார்யர்களுக்காக வாஹனத்துடனேயே ஒய்யார நடையில் போய் திருவந்திக்காப்பு ஆகி, திருமாமணி மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ. ஸ்ரீரங்கம் 2012 ஜனவரி 13 அன்றுவெளியிட்டது
No comments:
Post a Comment