Sunday, February 15, 2015

Kalamega pulavar

Courtesy:Sri.KS.Ramki


தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல உடனே பாடுகிறார் நம் கவி,
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

கூகை என்றால் ஆந்தையை குறிக்கும். காக்கையானது பக லில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையா னது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அர சன் பகைவரிடத்திலிரு ந்து தம் நாட்டை இரவில் ஆந்தை யைப்போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவே ண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்கவேண்டும். தகு தியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகிவி டக்கூடும்.
வசை பாடல் -
மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ?
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!
இந்த வெண்பாவை மேலோட்டமாக பார்க்கும்போது வரும் அர்த்தம், மாட்டுக்கோனாருடைய தங்கை ஒருத்தி மதுரை யைவிட்டுச் சிதம்பரத் தில் உள்ள ஆட்டுக் கோனாருக்கு மனைவியானாள். அங்கு குட்டிகளை மறித்து மேய்க்க அந்த அலங்கார மணிகட்டிய சிறிய இடைச்சி கோட்டா னைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றாள். நீங்கள் கேட்டதி ல்லை யா?இனி சிலேடையின் உட் பொருளை பாருங்கள்: மாட்டுக்கோன் – மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோன் – ஆடலரசனான நடராச பெருமானுக்கு மனை வியானாள்.
கோட்டானை என்பது கோடு – ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்த முள்ள விநாயகரை குட்டிமறிக்க – நாம் குட்டிக்கொண்டு வணங்குவத ற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி – அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி. எவ்வளவு அருமையான விளக்கம்?
எள்ளல் -
ஒருவரை கிண்டல் செய்வதை எள்ளி நகையாடுதல் என்கிறோம். இந்த வகைப் பாடலிலும் கவியை அடித்துக் கொள்ள ஆளில்லை.
தில்லைக் கூத்தரசர் திருவிழாவைப் பார்த்து இகழ்வது போல் புகழ்ந்து பாடியது இப்பாடல்.
பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! – பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்!
எளிமையான தமிழ் சொற்களைக் கொண்டே பாடல் அமை த்து அனைவரும் அறிந்து இன்புறும் வகையில் உள்ள பாடல் இது. பெருமாளை தூக்கி கொண்டு போகும் கழுகென எள்ள ல் தெரிந்தாலும், திருஉலாவை அழகாக சொல்வதை காண முடிகிறது.
சிலேடை -
ஒரே பாடல் இரு பொருள் தருமாறு பாடுவது சிலேடை. ஒரு நாள் நாக ப்பட்டினத்திற்கு செல்லும் காளமேகத்திற்கு பசி எடுக்கிறது. உணவுக் காக சத்திரத்தை தேடி அலைந்து இறுதியில் "காத்தான்" என்பவரின் சத்திரத்தை காண்கிறார். பணி எல்லாம் முடித்துவிட்டு வேலையாட் கள் உறங்கிக் கொண்டிருக்க, அவர்களை எழுப்பி தன்னுடைய பசியை சொல்கிறார். பணியாட்கள் தூக்க கலக்கத்தில் உலையே ற்றி சமைக்கின் றார்கள். இருப்பினும் கவிக்கு பசி அதிகமாக சத்தமாக இப்படி பாடுகி றார்,
"கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் – குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்."
கவியின் வசை காலம் கடந்து நிற்குமென அஞ்சிய சத்திர உரிமையாளர், கவிக்கு சேவை செய்து உணவு படைத்து விட்டு அந்தப் பாடலை கைவிடுமாறு கேட்க. "ஊரெல்லாம் பஞ்சத்தால் அரிசி அத்தமித்துப் போனாலும், உன்னிடத்தில் தானமாய் அரிசி வந்து நிற்கும். அதைக் குத்தி உலையிட்டு பரிமாற ஊரின் பசியடங்கும். அந்த அன்னத்தின் வெண்மை கண்டு வெள்ளியும் வெட்கப்பட்டு மேற்கிளம்பும்." என கவி யோ மகிழ்ச்சியோடு பாடலுக்கு விளக்கம் தருகிறார்.
வசை பாடுவதில் வல்லவர் புகழ்ந்துறைப்பதிலும் வல்லவர். என்ன ஒரு கவித்திறன்.

No comments:

Post a Comment