Monday, January 12, 2015

TORTOISE & APPAR SWAMIGAL

Courtesy: Tamil saivites

ஒரு கதை!

கடற்கரையிலிருந்து கொஞ்சத் தூரம் தள்ளி அமைந்திருந்த அந்தப் பெரிய பள்ளத்துக்குள் மழைநீர் தேங்கி நீர்க்குட்டையாக அதை மாற்றியிருந்தது. அந்தப் பகுதி மக்கள் அதை கிணறாகப் பயன்படுத்தி வந்தனர்.

அதற்குள் மகிழ்ச்சியாக பாட்டுப் பாடியவாறே நீந்தி விளையாடிக் கொண்டிருந்த ஒரு ஆமை, தூரத்தே தன்னைப் போல் இன்னொரு ஆமை வருவதைக் கண்டு ஆச்சரியத்தோடு பார்த்தது.

"ஆமாம், யார் நீ, எங்கிருந்து வருகிறாய்?" 
வந்த ஆமை களைப்போடு புன்னகைத்தது. "நான் கடலாமை. கடலிலிருந்து முட்டையிடுவதற்காக கரைப் பக்கம் வந்தேன், வழி தவறிவிட்டேன்."

"கடலா? அப்படியென்றால்?"
"ஓ! உனக்கு கடலையே தெரியாதா? அதுவும் உன் கிணற்றைப் போல தண்ணீர் தான்... ஆனால் மிகப் பெரிது!"

"உளறாதே, இந்தக் கிணற்றை விடப் பெரிய நீர்நிலை எங்கே இருக்கப் போகிறது? உன் கடல் இந்த மூலையிலிருந்து அந்த மூலை வரை இருக்குமா?" கேட்டது கிணற்று ஆமை.

கடலாமை வாய்விட்டுச் சிரித்தது "முட்டாள் ஆமையே, எதனை எதோடு ஒப்பிடுகிறாய்? கடல் எங்கே கேவலம் இந்தக் கிணறு எங்கே?"

கிணற்று ஆமைக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. "யார் முட்டாள்? என்ன தைரியம் இருந்தால் என் கிணற்றை விட உன் கடல் பெரிதென்று சொல்லுவாய்? மரியாதையாக இங்கிருந்து போய் விடு!"

கடலாமைக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. இந்த மூடனிடம் இதைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று நடையைக் கட்டியது. "ஹ... எங்க வந்து யார ஏமாத்தப் பாக்கறே... கடல் கிணத்த விடப் பெருசாம்!" கோபத்தோடு முறைத்த கிணற்றுஆமை, விட்ட இடத்திலிருந்து தன் பாட்டைத் தொடர்ந்தது .
------------------

"யோவ், கிணற்றுத் தவளை கதைய கிணற்று ஆமைனு மாத்தி சொல்லி புதுக் கதை சொல்றேனு பீத்திக்கிறியா"னு, கிணற்று ஆமையை விடக் கோபமாக நீங்கள் முறைப்பது தெரிகிறது. 

பொறுங்கள்! இதுதான் நம் பாரம்பரியத்தில் வந்த தொன்மையான கதை! ஆமை, தவளையாக அழகூட்டப்பட்டு பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் சொன்ன கதை தான் நம் மத்தியில் இன்று பிரபலமாக இருக்கின்றது.

ஆமா, கிணற்றாமை கதை தான் நம் பாரம்பரியக் கதைனு ஒனக்கு எப்பிடித் தெரியும்?

நாஞ் சொல்லல... இதச் சொன்னவரு ஏழாம் நூற்றாண்டில வாழ்ந்த அப்பர் சுவாமிகள்.

கிணற்று ஆமை கடலாமையைப் பார்த்து, கடல் இந்தக் குட்டை அளவு இருக்குமோ என்று ஏளனமாகக் கேட்பது போல, பாவஞ் செய்தவர்கள், இறைவனின் தன்மையை அறியாது, தமக்குத் தெரிந்த சிறுபொருட்களுடன் அவனை ஒப்பிட்டு கேலி செய்வர் என்று பாடுகிறார் அப்பர் பெருமான்.

கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூவலோடு ஒக்குமோ கடல் என்றல் போல்
பாவகாரிகள் பார்ப்பரிது என்பரால்
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே. 
(திருமுறை 5:100:1)

(கூவல் - நீர்க்குட்டை, கிணறு)

ஒரு கதை!    கடற்கரையிலிருந்து கொஞ்சத் தூரம் தள்ளி அமைந்திருந்த அந்தப் பெரிய பள்ளத்துக்குள் மழைநீர் தேங்கி  நீர்க்குட்டையாக அதை மாற்றியிருந்தது. அந்தப் பகுதி மக்கள் அதை கிணறாகப் பயன்படுத்தி வந்தனர்.     அதற்குள் மகிழ்ச்சியாக பாட்டுப் பாடியவாறே நீந்தி விளையாடிக் கொண்டிருந்த ஒரு ஆமை, தூரத்தே தன்னைப் போல் இன்னொரு ஆமை வருவதைக் கண்டு ஆச்சரியத்தோடு பார்த்தது.     "ஆமாம், யார் நீ, எங்கிருந்து வருகிறாய்?"    வந்த ஆமை களைப்போடு புன்னகைத்தது. "நான் கடலாமை. கடலிலிருந்து முட்டையிடுவதற்காக கரைப் பக்கம் வந்தேன், வழி தவறிவிட்டேன்."    "கடலா? அப்படியென்றால்?"  "ஓ! உனக்கு கடலையே தெரியாதா? அதுவும் உன் கிணற்றைப் போல தண்ணீர் தான்... ஆனால் மிகப் பெரிது!"    "உளறாதே, இந்தக் கிணற்றை விடப் பெரிய நீர்நிலை எங்கே இருக்கப் போகிறது? உன் கடல் இந்த மூலையிலிருந்து அந்த மூலை வரை இருக்குமா?" கேட்டது கிணற்று ஆமை.     கடலாமை வாய்விட்டுச் சிரித்தது "முட்டாள் ஆமையே, எதனை எதோடு ஒப்பிடுகிறாய்? கடல் எங்கே கேவலம் இந்தக் கிணறு எங்கே?"    கிணற்று ஆமைக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. "யார் முட்டாள்? என்ன தைரியம் இருந்தால் என் கிணற்றை விட உன் கடல் பெரிதென்று சொல்லுவாய்? மரியாதையாக இங்கிருந்து போய் விடு!"    கடலாமைக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. இந்த மூடனிடம் இதைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று நடையைக் கட்டியது. "ஹ... எங்க வந்து யார ஏமாத்தப் பாக்கறே... கடல் கிணத்த விடப் பெருசாம்!" கோபத்தோடு முறைத்த கிணற்றுஆமை, விட்ட இடத்திலிருந்து தன் பாட்டைத் தொடர்ந்தது .  ------------------    "யோவ், கிணற்றுத் தவளை கதைய கிணற்று ஆமைனு மாத்தி சொல்லி புதுக் கதை சொல்றேனு பீத்திக்கிறியா"னு, கிணற்று ஆமையை விடக் கோபமாக நீங்கள் முறைப்பது தெரிகிறது. :)    பொறுங்கள்! இதுதான் நம் பாரம்பரியத்தில் வந்த தொன்மையான கதை! ஆமை, தவளையாக அழகூட்டப்பட்டு பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் சொன்ன கதை தான் நம் மத்தியில் இன்று பிரபலமாக இருக்கின்றது.    ஆமா, கிணற்றாமை கதை தான் நம் பாரம்பரியக் கதைனு ஒனக்கு எப்பிடித் தெரியும்?    :)    நாஞ் சொல்லல... இதச் சொன்னவரு ஏழாம் நூற்றாண்டில வாழ்ந்த அப்பர் சுவாமிகள்.    கிணற்று ஆமை கடலாமையைப் பார்த்து, கடல் இந்தக் குட்டை அளவு இருக்குமோ என்று ஏளனமாகக் கேட்பது போல, பாவஞ் செய்தவர்கள், இறைவனின் தன்மையை அறியாது, தமக்குத் தெரிந்த சிறுபொருட்களுடன் அவனை ஒப்பிட்டு கேலி செய்வர் என்று பாடுகிறார் அப்பர் பெருமான்.    கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்  கூவலோடு ஒக்குமோ கடல் என்றல் போல்  பாவகாரிகள் பார்ப்பரிது என்பரால்  தேவதேவன் சிவன் பெருந்தன்மையே.   (திருமுறை 5:100:1)    (கூவல் - நீர்க்குட்டை, கிணறு)

No comments:

Post a Comment