Wednesday, January 28, 2015

Philosophy of Ramayanam

Courtesy: Smt.Uma Balasubramanian

 இராமாயண தத்துவம்    --- உமா பாலசுப்ரமணியன்

 ஆனந்தமயமான    அயோத்தி  நகரத்தை   ஆள்பவர்  பரபிரம்மம்  என்னும்  தசரதரேயாகும் . அவருக்கு இச்சாசக்தி,  கிரியா சக்தி,  ஞான சக்தி என்ற மூன்று  மனைவியர்கள்  இருந்தனர். அவர்களில்  ஞான சக்தியான கௌசல்யா தேவியின் கர்ப்பத்தில் ஆத்மா என்னும்  ஸ்ரீ இராம மூர்த்தி  அவதரித்தார்.                                                                                                   அவர்  அஞ்ஞானமென்னும்   அவஸ்தையினால்  தான் நாராயணன்  என்பதை  மறந்து  , ( தன்  நிஜத்தன்மையை  மறந்து )   உடல் , பிரபஞ்சம் , இந்திரியங்கள் முதலியவைளின்  மீது    அதிக பற்று   வைத்திருந்தார் .                                                                                                              பிறகு  வசிஷ்ட  முனியின்  உபதேசத்தினால் , மறுபடியும்  தன்  அறிவை  அறிந்து , வைராக்கியம்  எனும்  லட்சுமண  மூர்த்தியைத்  தன்னுடன்  அழைத்துக்  கொண்டு ,  மனன   என்னும்  விசுவாமித்திரருடன் புறப்பட்டு ,  பஞ்சமகாபாதகன் என்னும்   மலைகளைக்  கடந்து , ஞானம்   என்னும்   கூர்மையான பாணத்தினால்  மாயாசக்தி  என்னும்  தாடகியை   வதைத்து , ஆசையெனும்  மாரீசனை சமுத்திரத்தில்   மூழ்கச்  செய்தார் . துராசாரமென்னும்  (  கெட்ட  நடவடிக்கை )  சிலையைக்  காலினால் மிதித்து,  சதாசாரமென்னும்  (  நல்ல  நடவடிக்கை )   அகலிகையின்  சாபத்தை   நீக்கி , காந்தமென்னும்  மிதிலை நகரம்  பிரவேசித்து ,   சக்தி  என்னும்  ஜனகனைச்  சந்தித்தார் .  பிறகு   அஞ்ஞானமென்னும்  ,  ( சிவனுடைய  ) வில்லை  முறித்து ,   .ஆனந்தமென்னும்    சீதாப்  பிராட்டியை   மணந்தார். மனமென்னும் பரசுராமரைப்  பங்கப் படுத்தி ,  மோட்சம்  எனும்  அயோத்தி  நகரை வந்தடைந்து, ஜீவத்வ   தியாகம்  எனும்  பட்டாபிஷேகத்திற்கு  அருகாமையில்   இருந்தார். அப்பொழுது  கிரியாசக்தி என்னும்  கைகேயினால்    சபலத்துவம்  எனும் தடை   உண்டாகப்  பெற்று ,   ஆத்மா எனும்    இராமன் ,  பிரம்மமென்னும் தசரதனைப்  பிரிந்து  , மோட்சமென்னும்  அயோத்தியா  நகரை விட்டு , ஆனந்தமெனும் சீதையுடனும் ,  வைராக்கியம்  எனும் லட்சுமணனுடனும் புறப்பட்டு , சித்தமெனும்  சரயூ  நதியைக்   கடந்தார்.   பின்   புத்தி எனும்   குஹனின்  துணை  கொண்டு   , நிக்ஷேமம் எனும்   பெரிய காட்டிற்குள் புகுந்தார் ,   தபஸ்   என்னும் சித்திர  கூடத்தில்  நின்று , அகங்காரம்   என்னும்   விராதனைப்  பலி  கொடுத்து    மனமென்னும்   காகாசுரனை   வதைத்து , சங்கல்பமெனும்  கண்களைக் குத்தி  ,  நிர்விகல்பம்  எனும்  கண்களைத்  தந்து , வீரியம்  எனும்  அகஸ்திய முனிவரை   ஆசீர்வதித்தார் . பின்   தைரியமெனும்   அஸ்திரத்தை  உபயோகித்து , காமமெனும் சூர்ப்பனகையை  பங்கப்படுத்தினார்.  ஆகாமம் எனும்  மாரீசன்  வஞ்சித்த  பொழுது , இராஜஸம்   எனும் இராவணன் ,  டம்பம்   எனும்  சன்னியாஸி   வேடம்  பூண்டு  , ஆனந்தமென்னும் சீதையை   அபகரித்துக்   கொண்டு  போனான் . பின்  ஆனந்தமெனும்  சீதையைக்  காணாது  , ஆத்மா எனும்  இராமன்       மிக்கத்   துயருற்று  , வைராக்கியம்   எனும்  இலட்சுமணமணனுடன்  சென்று , விசேஷமென்னும்  ஜடாயுவை   நற்கதி அடையச்  செய்தார் ,   அதன்   பிறகு     சிந்தை   எனும்   கவந்தனை   வதை  செய்து , சந்தோஷம்  எனும் சபரியின்  பூஜையை  ஏற்றுக்   கொண்டார். பின்   நித்தியாசனமெனும்  அனுமனின்   துணைகொண்டு  , பயமென்னும்  வாலியைக்  கொன்று,  நிர்ப்பயமெனும்  சுக்ரீவனை   ஆதரித்தார். நித்தியாசனமென்னும்   அனுமான் ,  யோகமென்னும்  பெரிய   கடலைக்  கடந்து   ,   லோபமென்னும் இலங்கையைத்  தாண்டினார் .  துர்  வாசனைகள்  எனும்  அரக்கர்களை வென்று  ,  ஆனந்த   சீதையைக்  கண்டு  ,  சங்கல்பமெனும்  அசோக  வனத்தை  அழித்தார்.   அஞ்ஞானமெனும்    ஜம்புமாலியை  பஸ்மம்  செய்து  , சம்சயமென்னும்  அக்ஷதனை  சிக்ஷித்து  , விபரீதம்   எனும் இந்திரஜித்தை திரஸ்கரித்து  ,  பிரமை  என்னும்  பாசத்தை  அறுத்தார்.   பின்பு இராஜஸம்   எனும்   இராவணனை   எதிர்த்து ,  மெய்  ஞானமென்னும்  மஹா   அக்னியை    ஒளிவிடச்   செய்து  , இலங்கையைக்   கொளுத்தி  , மோகமென்னும்   பெரிய  சமுத்திரத்தைத்  தாண்டி ஆனந்தமான  சீதையைக்  கைக்  கொண்டார் . 

No comments:

Post a Comment