Courtesy: Smt.Uma Balasubramanian
கண்ணனுக்குப் பல மனைவியர் இருந்தாலும், அவர் தன்னை பிரம்மச்சாரி என்கிறார். எப்படி? யமுனைக்கரையில் இருந்த ஒருமாளிகையில் கண்ணனும், ருக்மிணியும் தங்கியிருந்தனர். யமுனை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மறுகரையில், கண்ணனின்பக்தரான துர்வாச முனிவர் நல்ல பசியுடன் காத்திருந்தார். பக்தனின் பசி பொறுக்காத கண்ணன், ""ருக்மிணி! என் பக்தர் துர்வாசர்கடும்பசியுடன் அக்கரையில் காத்திருக்கிறார். நீ போய் உணவு பரிமாறி விட்டுவா,'' என்று உத்தரவிட்டார்.""சுவாமி! ஆற்றில் வெள்ளம்அதிகமாக இருக்கிறதே! எப்படி கடந்து செல்வது?'' என்றாள் அவள்.
""நீ யமுனையின் அருகில் போய், "நித்ய பிரம்மச்சாரியான கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு உணவளிக்க என்னை அனுப்பியுள்ளார். எனவேநீ எனக்கு வழிவிடு'" என்று சொல். அந்த நதி இரண்டாகப் பிரிந்து உனக்கு வழிவிடும்,'' என்று பதிலளித்தார் கண்ணன்.
"என்ன இப்படிச் சொல்கிறார் இவர்! பல மனைவியருடன் வாழும் இவரா பிரம்மச்சாரி! எதற்காக இப்படி சொல்கிறார்? புரியவில்லையே'என்று அவள் குழம்பியபடியே, கிருஷ்ணர் சொன்னபடி செய்தாள்.
யமுனையும் வழிவிட்டது. அவள் தன் வேலையை முடித்துக் கொண்டு திரும்பினாள். அவளது முகக்குறிப்பைக் கொண்டே அவளதுசந்தேகத்தைப் புரிந்து கொண்ட கண்ணன்,""யார் ஒருவன் உலகமக்களைப் பக்தி வழியில் திருப்ப முயற்சிக்கிறானோ , அவன்பிரம்மச்சாரியாவான். அந்தப் பணியை நானும் செய்கிறேன். எனவே, நானும் பிரம்மச்சாரி தான். இதை யமுனை புரிந்து கொண்டுவழிவிட்டது அவ்வளவுதான் '' என்றார். பக்தி நெறியில்நம் மனதைச் செலுத்துவதுடன், பிறருக்கும் வழிகாட்டல் வேண்டும் .

கண்ணன் எப்பொழுதுமே சுமையை இறக்கி வைப்பவன் .
யமுனை நதியினின்றும் நீர் முகந்து கொண்டு வந்த ஒரு கோபிகை ஒரு குடத்தைத் தலையில் வைத்திருந்தாள் ஆனால் நீர் நிரம்பிய மறு குடத்தை எடுக்க முடியவில்லை கிருஷ்ணனின் உதவியை நாடினாள் . "இந்தக் குடத்தை என் இடுப்பில் சுமத்துகிறாயா?" என்று கேட்டாள் அந்த கோபிகை . ஆனால் அவன் மறுத்து விட்டான் . எப்போதும் உதவி புரியும் கிருஷ்ணன் ஏன் இவ்வாறு இருக்கிறான் என அவள் வியந்து மற்றொரு கோபிகையின் உதவியால் தண்ணீர்க் குடத்தை தன் இடுப்பில் ஏற்றிச் சென்றாள்.
என்ன விந்தை ! அவளுக்காக அவள் இல்லத்தின் வாயிலில் கிருஷ்ணன் காத்துக் கொண்டிருந்தான் . " சகியே ! குடத்தை நான் கீழே இறக்கிவிடுகிறேன் " என்றான் . அவளும் ," ஒன்றும் வேண்டாம் . அப்பொழுது என் குடத்தை என் இடுப்பில் ஏற்றி வைக்கமாட்டேன் என்று சொன்னாயே ! இப்பொழுது மட்டும் ஏன் உதவி புரிய வருகிறாய்? !" என்றாள்.
கிருஷ்ணனும் சிரித்துக் கொண்டே ," நான் யாவருக்கும் சுமையை ஏற்றுவது வழக்கமில்லை , இறக்கிவிடுவதுதான் என் வேலை "என்றான் . நல்ல எண்ணம் தானே ! நாமும் கண்ணன் போல் இல்லாமல் இருந்தாலும் ,உதவி என்று யாரேனும் கேட்டால் தயங்காது செய்து அவர்கள் சுமையைத் தீர்க்கலாமே !
No comments:
Post a Comment