Thursday, November 6, 2014

Gold

Courtesy: Sri.GS.Dattatreyan

தங்கம் செய்யும் முறையை பற்றி சித்தர் பாடல்களில்...!
தவராக புரிந்துகொண்டு புலம்பும் நம்மவர்கள்.

நல்ல வெள்ளி ஆறதாய் நயந்த செம்பு நாலதாய் 
கொள்ளு நாகம் மூன்றதாய் கலாவு செம்பொன் இறந்ததாய்
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊதா வல்லிரேல்
எல்லை ஒத்த சொதியானை எட்டு மாற்ற தாகுமே!!!

- சிவவாக்கியர்

"எட்டான போன்னத்துவத்தை தகடடித்து
எழிலாய்ப் புடமிட்டால் தங்கமாகும்
கட்டான தங்கமது என்ன கூறுவேன்
காசினியில் நாதாக்கள் கண்ட தங்கம்
பட்டான தங்கமதை பூசை கொள்வீர்
பாங்கான சிவபூசை உறுதி காண்பீர்
மட்டான தங்கமென்று எண்ணவேண்டா
மகத்தான குருபூசைத் தங்கமாமே"

-கருவூரார்

"பொன்தான் பிறந்தது புகழான கற்ப்பத்தில்
பொன்தான் பிறந்தது பேராத் துரிசியில்
பொன்தான் பிறந்தது புகழான கற்ப்பத்தில்
பொன்தான் உபதேசப் போக்கில் பிறந்ததுவே"

-திருமூலர்

நல்ல வெள்ளி ஆறுபங்கும், செம்பு நாலு பங்கும், துத்தநாகம் மூன்று பங்கும், தங்கம் இரண்டு பங்கும் சேர்ந்து துருத்தி கொண்டு ஊத்தி உருக்கினால் அது எட்டு மாற்றுத் தங்கமாகும் என்று பொருள் கண்டு ஏமாந்தது போனவர்கள் அநேகர். நான்கு இதழ் கமலமான மூலாதாரத்தில் உள்ள குண்ட்டளினியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு அந்த கரணங்களாலும் இணைத்து ஆனவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் நீக்கி, நம்முள் செம்பொன்னம்பலமாக விளங்கும் சோதியில் அகாரம், உகாரம் என்ற எட்டிரண்டால் வாசியை வில்லில் இருந்து அம்புவிடும் போது தோன்றும் 'ம்' என்ற ஓசை லயத்துடன் உண்மை விளங்கி ஊதா வல்லவர்கலானால் ஆறு ஆதாரங்களையும் கடந்து அப்பாலாய் சோதியாய் நிற்கும் ஈசனிடம் சேரலாம். இப்படி யோக ஞான தியானம் செய்யும் சாதகர்களின் உடம்பு பொன் போல மின்னும். இது எல்லையில்லா அந்த பரம்பொருள் அருளால் ஆகும்.

புரியவில்லையே ஐயனே என்பவர்களுக்காக திருமூலர் தனது எளிய தமிழில் கூறியது.

"செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் சிரீயும் கிரீயுமெனச்
செம்பு பொன்னான திருவம் பலமே"

இதில் செம்பு நாம், தங்கம் முக்திநிலை...!

எனவே அடியார்கள் தயவுசெய்து தங்கம் செய்கிறேன் தங்கம் செய்கிறேன் என்றி சொல்லி காலத்தை விரையம் செய்ய வேண்டாம். முன்னோர்கள் கூறிய தங்கம் வேறு என்பதை புரிந்துகொள்ளுங்கள்

No comments:

Post a Comment