Wednesday, May 28, 2014

Saneeswara & Hanuman

courtesy: Sri.Mayavaram Guru


ராம நாம மகிமை -
 ​
விடாத சனி விட்டதெப்படி?
திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை
​ ​
நிலைநாட்ட பகவான் விஷ்ணு இராமராக
 ​ ​
​​
வதரித்த போது, அவருக்கு உதவி
​ ​
செய்வதற்காக அனுமனாகச் சிவபெருமான்
 ​ ​
அவதாரம் எடுத்தார். மீண்டும் ஒருமுறை பீடிக்க
​ ​
முயன்ற சம்பவம் இராமாயணத்தில்
 ​ ​
காணப்படுகிறது.

இராவணனை அழிக்க வானரப் படைகளுடன்
​ ​
இலங்கை செல்வதற்காகக் கடலில் பாலம்
 ​ ​
அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்
​ ​
ராமன். 

இந்த சேதுபாலம் அமைக்கும் பணியில் சுக்ரீவன்,
 ​ ​
அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானரப்படைகள் ஈடுபட்டிருந்தன. வானரம்
​ ​
ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு
 ​ ​
மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து
​ ​
கடலில் வீசிக்கொண்டிருந்தன. 

இராமர், லட்சுமணர் ஆகியோர் கடலில் பாலம்
 ​ ​
உருவாவதை நோக்கிய வண்ணம்
​ ​
எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.
​ ​
 அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து,
​ ​
அவற்றின் மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற
​ ​
 அட்சரங்களைச் செதுக்கி கடலில் எறிந்து
​ ​
கொண்டிருந்தார்.

அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி,
 ​ ​
இராம லட்சுமணர்களை வணங்கியபடி, "பிரபு!
​ ​
அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம்
 ​ ​
தொடங்குகிறது. என்னைத் தவறாக
​ ​
எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய
​ ​
 அனுமதி தாருங்கள்" என்று வேண்டினார்.

"எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம்.
​ ​
அதுபோல உங்கள் கடமையை நீங்கள்
 ​ ​
செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப்
​ ​
பாருங்கள்" என்றார் ராமன்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, "ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது
 ​ ​
உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. உன்னைப்பீடித்து ஆட்டிப் படைக்க, உன் உடலில் ஓர் இடம்கொடு" என்றார்.

"சனீஸ்வரா! இராவணனின் சிறையில் இருக்கும்
 ​ ​
சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை
​ ​
செல்லவே இந்த சேதுபாலப் பணியை ஸ்ரீராமசேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக்
 ​ ​
கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம்
​ ​
வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே
 ​ ​
தாங்கள் வியாபித்துக் கொள்ளலாம்" என்றான்
​ ​
அனுமன்.

"ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த காலஅளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது.
 ​ ​
உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கி விட்டது.
​ ​
உடனடியாகச் சொல்; 

உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?"
 ​ ​
என்று கேட்டார் சனீஸ்வரன்.

"என் கைகள் இராம வேலையில் ஈடுபட்டுள்ளது.
​ ​
அதனால், அங்கே இடம் தர முடியாது. என்
 ​ ​
கால்களில் இடம் தந்தால், அது பெரும்
​ ​
அவமதிப்பாகும். "நீங்கள் என் தலை மீது அமர்ந்து
 ​ ​
தங்கள் கடமையைச் செய்யுங்கள்" என்று
​ ​
கூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது
 ​ ​
ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன். 

அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கி வந்த
​ ​
அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு,
 ​ ​
மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து
​ ​
எடுத்துத் தலைமீது வைத்துக் கொண்டு, கடலைநோக்கி நடந்து, பாறைகளைக் கடலில் வீசினார். 

பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை
 ​ ​
அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது
​ ​
அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்க
​ ​
 வேண்டியதாயிற்று. 

அதனால், சனீஸ்வரனுக்கே
​ ​
கொஞ்சம் பயம்
​ ​
 ​வ​
ந்துவிட்டது. "ஏழரைச் சனியில் அடுத்தவரை
​ ​
அவதிப்படுத்த வந்து நாமே அவதிப்பட
 ​ ​
வேண்டியதாகி விட்டதே...?" என்று யோசித்தார்.

அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது
​ ​
தலையிலிருந்து கீழே குதித்தார்.

"சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப்
 ​ ​
பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு
​ ​
சீக்கிரம் விட்டு விட்டீர்கள்?" என்று கேட்டார்
 ​ ​
அனுமன்.

அதற்கு சனீஸ்வரன், "ஆஞ்சநேயா! உன்னை ஒருசில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச்
​ ​
சுமந்து சேதுபாலப் பணியில் ஈடுபட்டுப்
 ​ ​
புண்ணியம் பெற்றேன். 

சிவபெருமானின் அம்சமான தங்களைக் கடந்த
​ ​
யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று,
 ​ ​
வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி
​ ​
அடைந்து விட்டேன்" என்றார் சனீஸ்வரன்.

"இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே
 ​ ​
வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில்
​ ​
ஏழரை நிமிடங்களாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?" என்றார் அனுமான். 

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், "அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மைசெய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன
 ​ ​
வேண்டும் கேள்" என்றார். 

"இராம நாமத்தை பக்தியுடன் பாராயணம்
​ ​
செய்பவர்களை உங்களது ஏழரைச் சனிகாலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்கள்
 ​ ​
காத்தருள வேண்டும்" என வரம் கேட்டார்
​ ​
அனுமன். 

சனியும் வரம் தந்து அருளினார்.

இதனால் சனி பீடித்திருக்கும் காலத்தில்
 ​ ​
அனுமனை வணங்கி இராம பாராயணம்
​ ​
செய்பவர்களுக்கு சனியால் ஏற்படும் தொல்லை
 ​ ​
குறையும் என்று நம்பப்படுகிறது
​.​


No comments:

Post a Comment