Sunday, February 16, 2014

SANTANU

Courtesy: Sri.Satyamoorthy

சந்தனு என்ற மன்னன், கங்காதேவிமீது காதல்கொண்டு தன் னை மணந்து கொள்ளும்படி வேண்டி னான். அப்போது கங்காதேவி ஒரு நிபந்தனை விதித்தாள். அந்த நிபந்த னை யாதெனில், அவள் என்ன‍ செய் தாலும் அதை ஏன் செய்தாய் எதற்கு செய்தாய் என்பனபோன்ற கேள்விக ளை அவன் கேட்க கூடாது.என்பதே!

இவளது இந்நிபந்தனைக்கு மன்ன‍ன் சம்ம‍தித்து கங்கா தேவியை மணந்து கொண்டான். பின் கங்காதேவி கருவு ற்றாள். இதனால் மன்ன‍ன் மிகுந்த சந்தோஷமடைந்தான் இருப் பினும் கருவுற்ற‍ குழந்தை பிறந்தததும் அதை கொன்று ஆற்றில் வீசினாள், திகைப்பில்

ஆழ்ந்த மன்ன‍ ன், இவளிடம் ஏன் செய்தாய்? என்று கேட்காமல் தனது உள்ள‍ த்திலேயே குமுறிக்கொண்டி ருந்தான். மீண்டும் கங்காதே வி கருவுற்றாள் அக்குழந்தை யையும் கங்காதேவி கொன் று ஆற்றில் வீசினாள் இப்ப‍ டியே தொடர்ச்சியாக தனக்கு பிறந்த‌ குழந்தைகளை கொ ன்று ஆறில் விசிக்கொண்டி ருந்தாள். பின் எட்டாவதாக ஒரு குழந்தையை பெற்றெடுத்தா ள் கங்கா தேவி, எங்கே இந்தக் குழந்தையையும் கொன்று ஆற்றில் வீசிவிடுவாளோ என்ற அச்ச‍த்தில் கங்கா தேவியிட ம் ஏன் இப்ப‍டி செய்கிறாய்? எதற்காக இப்ப‍டி செய்கிறாய் என் று கோபத்தில் கேள்விகளை கனைகளாக அவளிடம் தொடுத் தாள்.

அதற்கு கங்காதேவி,

மன்னா! கங்காவாகிய நான் ஒருமுறை பிரம்மலோகம் சென் றேன். அங்கே பல தேவர்களும் இருந்தனர். அங்கிருந்த வாயு பகவான் தேவர்களின் மனவுறுதியைச் சோதிப்பதற்காக ஒரு சோதனை செய்தான். என்னுடை ய மார்பு தெரியும்படியாக ஆடை யை காற்றடித்து பறக்க வைத்தா ன். ஆசா பாசங்களுக்கு அப்பாற் பட்ட தேவர்கள் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டனர். ஆனால், வருணன் மட்டும் என் அங்கங்களை ரசித்தான். இதனா ல், அங்கிருந்த பிரம்மன் கடும் கோபமடைந்தார்.ஏ வருணா! ஒரு பெண்ணை அவளறியாமல் ரசித்த நீ பூமியில் மானிட னாகப் பிறப்பாய் என சாபமிட்டார். என்னை பார்த்து, எந்தச் சூழலிலும் ஒரு பெண் தன் மானத்தைக் காக்க முயன்றிருக்க வேண்டும், காற்றடித்த வேளையில் நீ அதைச் செய்யத் தவறி யதுடன், ஒரு ஆண்மகனின் மனம் பேதலிக்க வும் காரணமாகஇருந்தாய். எனவே நீயும் பூமியில் மனுஷி யாகப் பிறப்பாய். இந்த வருணனு க்கு வாழ்க்கைப்பட்டு சாப விமோசன காலம் வரை வாழ்ந்து, இங்கேமீண்டும் வருவாய் என்றார்.நான் மிகுந்த கவலையுடன் பூலோகம் நோக்கி வந்துகொண்டிருந்தேன். அப்போது எட்டு திசைகளின் காவலர்களா ன அஷ்ட வசுக்கள் என் எதிரே வந்தனர். அவர்களில் பிரபாசன் என்பவனும் ஒருவ ன். அவர்களும் கவலை பொங்கும் முகத்து டன் காட்சியளித்தனர். கவலைக்கான கார ணத்தை நான் கேட்டேன்.தாயே! இந்த பிர பாசன் தன் மனைவி மீது மிகுந்த மோகம் கொண்டு, அவள் சொன்னதையெல்லாம் செய்வான். அவள் பேராசைக்காரி. நினைத் ததையெல்லாம் அடைய விரும்புபவள். வசிஷ்டரின் ஆசிரம த்தில் நினைத் ததை தரும் காமதேனு என்ற பசு இருந்தது. அ தைப் பிடித்து வந்து தன்னிடம் தரும்படி கணவனிடம் அவள் சொன்னாள். இவனும் அவள் மீதுள்ள ஆசையால், பசுவைத்திருடஏற்பாடுசெய்தான். அவ னை கண்டிக்க வேண்டிய நாங் கள், நண்பன் என்றமுறையி லே அவனுக்கு துணைபோ னோம். வசிஷ்டரின் ஆசிரமத்து க்குள் புகுந்து, காமதேனுவை த் திருடினோம். அவர் கோபமடை ந்து, நாங்கள் பூமியில் மானிட ர்களாகப் பிறக்க சாப மிட்டார்.

எங்களுக்கான சாப விமோச னம் பற்றி கேட்டோம். நீங்கள் பூமியில் பிறந்தவுடன் இறந்து விட்டால், மீண்டும் திசைக் காவலர் பதவியைப் பெறலாம் எ ன அவர் கருணையுடன் சொன்னார். அதனால் பூமியில் பிறக் கவும், எங்களை உடனே கொல்லும் மனதுடையவளு மான ஒருதாயை தேடி கொண்டிருக்கிறோ ம். நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? எனக் கேட்டனர். நானும் என் சாபம் பற்றி அவர்க ளிடம் சொல்லி, அவர்களிடம் இரக்கம் கொண்டு, குழந்தைகளே! வருணபகவான் பூமியில் சந்தனு என்ற மன்னனாகப் பிறப்பான். நான் அவனது மனை வியாவேன். உங்களை என் வயிற்றில் பிரசவிக்கிறேன். பிறந்த உடனேயே உங்களை ஆற்றில் எறிந்து கொன்று, உங்கள் பதவியை உடனடி யாகக் கிடைக்கச் செய்கிறேன் என்றேன். அதன்படியே எனக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் கொன்றேன். மனைவியின் மோகத்தில் சிக்கிய பிரபாசனே இந்த எட்டாவது குழந்தை. வசிஷ்டரின் சாபப்படி இவன் இந்தபூமியில் பெண்ணா சையே இல்லாமல் வாழ்வான். உலகம் உள்ளளவும் இவனது புகழ் பூமி யில் நிலைத்திருக் கும், என்றாள். தானே உலகி ற்கு மழையளிக்கும் வருணபக வான் என்று சந்தனு மன்னன் சந்தோஷப்பட்டாலும், இப் பிற வியில் தன் குலம் விருத் தியடையாமல் போனது பற்றி வருத்தப்பட்டான்.கங்கா! நம் ஏழு குழந்தைகளும் இறந்து விட்டார்கள். இவனும் பெண் ணாசை இல்லாமல் இருந்தால், நம் சந்திர குலம் எப்படி விரு த்தியடையும்? என்னோடு என் குலம் அழிந்து விடுமே. நாம் இன்னும் குழந்தைகளை பெ றுவோம். அதன் பின் இருவ ருமே தேவலோகம் செல்ல லாம், என்றான். கங்கா விர க்தியாக சிரித்தாள். மன்னா! நீ என் நிபந்தனையை மீறி கேள்வி கேட் டாய். எப்போது கேள்வி கேட்கிறாயோ, அப் போது நான் உன்னைப் பிரிந்துவிடுவேன் என்று சொல்லித்தா னே உன்னைத் திருமணம் செய்தேன். இனி உன்னோடு நான் வாழமாட்டேன். இந்த மகனுடன் நதியில் கலந்து விடுவேன்.

அவன் வாலிபன் ஆன பிறகு உன்னிடம் ஒப்படைப்பேன், என்று கூறிவிட்டு கங்கையில் மறைந்து விட்டாள். கங்காவின் நினைவில் சந்தனு மூழ்கி கிடந்தான். அவள் எப்போது வரு வாள் என காத்திருந்தான். கங்காதேவிக்கு முன்னதாக அவன் சில பெண்களைத் திருமணம் செய்திருந்தான். அவர்களால் அவனைத் தங்கள் வசப்படுத்த முடியவில்லை. வேட்டைக்கு போய் தன் மனதைஅதில் திருப்ப முயன்றான். அப் போது கங் கைக்கரைக்குபோ ய், தன் மனைவி வரமாட்டா ளா என காத்துக்கிடப்பான். ஆ ண்டுகள் பல கடந்தன. ஒரு நாள் அவன் கங் கைக்கரையில் நின்ற போது, பூணூல் அணிந்து கையில் வில்லேந்திய வாலிப ன் ஒருவனைப் பார்த்தான். பார் த்தவுட னேயே அவன் தன் மகன் தான் என்பதை உள்ளுணர்வால் புரிந்து கொண்டான். அவ னை நோக்கி ஓடிவந்தான். அந்த வாலிபன் சந்தனு மீது மோக னாஸ்திரத்தை எய்தான். அவன் தனது தந்தை என்பதை அவ ன் அறிந்திருக்கவில்லை. சந்தனு மயக்கமடைந்து கீழே விழுந்தான். அவன் மீது இரக்கம் கொண்ட கங்கா, தன் மகனுடன் கரை க்கு வந்தாள். அவன் தலை யை அன்போடு வருடினாள். தன் மகனிடம், இவர் உன் தந்தை, என்றாள். அவள் கைப்பட்டதுமே அவன் எழுந்தான். அவனை அன்போடு தழுவிக் கொண்ட கங்கா, அரசே! நான் இன்று தேவலோகம் கிளம்புகிறேன். உங்க ளிடம் சொன்னபடி உங்கள் மகனை ஒப்படைத்து விட்டேன். இவன் பெயர் தேவவிரதன். பரசுராமரின் திருவருளால் அவரது ஆயுதங்களை யே பெற்ற வன். சிறந்த வில்லாளி வீரன். இவனோடு சேர்ந்து நீங்கள் இனி நாட்டை ஆளலாம், என்று சொ ல்லிவிட்டு, அவன் பதிலுக்கு காத்தி ராமல், நதியில் சென்று மறைந்தா ள்.

No comments:

Post a Comment