Monday, December 2, 2013

KANCHI MAHAN: LOKA SAMASTHA SUKHINO BHAVANTHO

Courtesy: Sri.VK.Mani



 
அது 1988ஆம் வருடம். தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கியில் இருந்து கடன் கேட்டிருந்தோம். கொஞ்சம் உதாசீனமாகப் பதில் கிடைத்தது. இதை தந்தையிடம் சொல்லவேயில்லை.
திடீரென்று அப்பா, அம்மா இருவரும் காஞ்சிபுரம் போகலாம் என்று அழைத்த உடன் கிளம்பினேன். பெரியவாளைத் தரிசனம் செய்ய, 300க்கும் அதிகமானோர் நின்றிருக்க, நாங்கள் கடைசியில் நின்றிருந்தோம்.
திடீரெனப் பெரியவா வழிவிடச் சொல்லி கூட்டத்தை சைகை செய்தார். வழி கிடைத்தவுடன் கடைசியில் நின்றிருந்த எங்களை அருகில் வரும்படி அழைத்தார். மெய் பதற அவர் முன் சென்று நின்றோம்.
"என்ன வேண்டும்?" என்று இரண்டு முறை கேட்டார்.
நாங்கள், "எதுவும் வேண்டாம்" என்று, பவ்யமாகத் தலை அசைத்தோம்.
மூன்றாவது முறை கோபமாகக் கேட்டார்.
உடனே "பிரசாதம் வேண்டும்" எனக் கூறினோம்.
உடனே, தனது திருவடிகளில் அணிந்திருந்த பாதுகைகளை எடுத்து, தாமரை மலரை அதன் மேல் வைத்து எங்களிடம் கொடுத்தார்.
பரதாழ்வார், ஸ்ரீராமரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றார். அது மகா புண்ணியம். கேட்காமலேயே – மகா பெரியவாளின் பாதுகை கிடைத்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.
அந்த நொடியில் என் சர்வ நாடியும் அடங்கின. சர்வாங்கமும் ஒடுங்கின. மேனி புல்லரித்து, எத்தனை நேரம் உறைந்து போனேன் என்று தெரியாமல் செய்த அபார கருணை அது. பரவசமான நேரம்!உயிர் உள்ளவரை இறைவனது எல்லையில்லாக் கருணை என்னை ஆள வேண்டும் என்ற இறைஞ்சுதலுடன், அந்தப் பாதுகைகளைச் சுமந்து வந்தேன்.
தேரில் தெய்வம் உலா வந்து கொண்டிருக்கும்போது, தெருவில் இறங்கி, நாம் அந்தத் தெய்வத்தை தரிசனம் செய்யப் போகும் சமயத்தில், அந்தத் தெய்வம் தேரிலிருந்து இறங்கி வந்து நம் கைகளைப் பிடித்துக்கொண்டு கருணை செய்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான ஒரு புளகாங்கிதம் அது.
காஞ்சியில் இருந்து திரும்பி வந்த உடன், வங்கியில் இருந்து அழைப்பு வந்தது. 'ஏதோ ஒரு டென்ஷனில் சொல்லிவிட்டோம். எத்தனை லட்சம் வேண்டுமானாலும் கடன் தருகிறோம். வேண்டுமானால், செக்கை அனுப்பி வைக்கிறோம்' என்றனர்.
இப்படி ஒன்றிரண்டு அல்ல; 20 வருடங்களுக்கும் அதிகமாக வாடாமல் அதே மலர்களுடன், சந்தனப் பேழையில் இருந்துகொண்டு, நிறையத் திருப்பங்களை, நானே எதிர்பார்க்காத அளவுக்கு நடத்தி வருகின்றன, அந்தப் பாதுகைகள்."
சொல்லும்போதே அவர் குரலில் பரவசம் தெறிக்கிறது. அந்தப் பரவசம் நமக்குள்ளும் ததும்பத்தான் செய்கிறது.
~ கோவை கிருஷ்ணா ஸ்வீட் அதிபர் கிருஷ்ணன்.
நன்றி: "தீபம்" (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாற்பது வருஷத்துக்கு முன்னாடி காஞ்சிபுரத்தில் ஒரு அக்ரஹாரத்தின் வழியாய் காமாட்சியம்மன் கோயிலுக்குப் போய்க்கிட்டிருந்தேன். திடீரென பெரியவர் வர்றார்ன்னு குரல் கேட்டது. பரபரப்பாய் மக்கள் இங்கேயும், அங்கேயும் போய்க்கிட்டிருந்தாங்க. நானும் ஏதோ வயசான பெரியவர் வர்றார்ன்னு திரும்பிப் பார்த்தா, மஹா பெரியவா.
நான் சடார்ன்னு அந்த ஞானியின் காலைப் பிடிச்சிட்டேன். அப்புறம் அவர் அந்த இடத்தை விட்டுப் போயிட்டார். நான் ஒரு மணி நேரம் அந்த இடத்திலேயே நின்னேன். அக்ரஹாரத்து அய்யர்களெல்லாம், 'நாங்க கூட-இவரைத் தொட்டது கிடையாது. நீ காலையே பிடிச்சுட்டியே'ன்னாங்க. நான் ரொம்பப் பயந்து போயி, கோயிலுக்குள் நுழைந்தேன்.
கோயிலுக்குள் மஹா பெரியவர் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் பண்ணிக்கிட்டிருந்தார். தூரத்தில் நின்ன என்னை 'வா'ன்னு சைகையால கூப்பிட்டார்.
'சாமி தெரியாமல் காலைப் பிடிச்சுட்டேன்'னேன்.
அதற்குப் பெரியவர் 'ஏதோ பூர்வஜென்ம வாசம், என் காலைப் பிடிச்சுட்ட. பரவாயில்லை, என்ன பண்றே'ன்னு கேட்டார்.
'சினிமாவுல இருக்கேன்' என்றேன்.
'அதனால என்ன? எங்க இருந்தாலும் ஒழுக்கமாக இரு' என்று சொல்லி தமது கைகளை எனது கைகள் மீது வைத்து ஆசீர்வாதம் பண்ணினார்.
அன்றிலிருந்து இன்று வரை காமாட்சின்னு சொல்லும்போது, அந்த மஹா பெரியவர் என்னை ஆசீர்வதிக்கிறதா உணர்றேன்."
~ குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி
நன்றி: "கல்கி"

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

" சேய்க்கு வந்த நோய்க்கு தாயும் மருந்து உண்பது போல!"

ஒரு சிறுவனின் சருமத்தில் கருந்திட்டுகள் தோன்றி உடல் முழுதும் பரவி
விட்டது. பார்க்கவே அருவறுப்பூட்டும் தோற்றம். உடன் படித்தவர்களும் அவனை
ஒதுக்கி விட்டனர். உடல் வியாதி பாதியும் மனச் சோகம் மீதியுமாக சோம்பிப்
போன பிள்ளையை அவனின் அம்மா சுவாமிகளிடம் அழைத்து வந்தாள். பெரியவர் அந்த
சிறுவனிடம் கேட்டார்: ''குழந்தே, என்னோட மூணு நாள் இருக்கியா?'' சிறுவன்
ஒப்புக்கொள்ள அம்மாவும் சுவாமிகளிடம் அவனை விட்டு விட்டுப் போனாள்.

''நான் என்ன சாப்பிடறனோ அதையேதான் நீயும் சாப்பிடணும். நமக்குள்ள
ஒப்பந்தம். சரியா?'' என்று சுவாமிகள் கேட்க பையன் சந்தோஷமாய்
சம்மதித்தான். அடுத்த மூன்று நாட்கள் பெரியவர் சாப்பிட்ட அதே ஆகாரம்தான்
பிரசாதமாய் பையனுக்கும் வழங்கப்பட்டது. அது என்ன உணவு? பச்சை வாழைத்தண்டை
பொடிப்பொடியாக நறுக்கி எந்தவிதத் தாளிப்பும் சேர்க்காமல் சிறிது தயிர்
மட்டுமே கலந்ததுதான் அந்த உணவு. அதை மட்டுமே சாப்பிட்ட அந்த சிறுவனின்
நோய் மூன்றே நாளில் நன்கு நிவர்த்தி ஆகியது. சோம்பி வந்த சிறுவன்
மலர்ச்சியோடு வீட்டிற்குத் திரும்பிச் செல்ல ரெடியானான். ''வீட்டிற்குப்
போன பின்பும் ஒரு மாசம் உப்பு, புளி, காரம் சேர்க்காமே சாப்பிடு. இந்த
வியாதி இனிமே வரவே வராது'' என்று ஆசி கூறி சுவாமிகள் அந்த சிறுவனை
வழியனுப்பி வைத்தார்.

உண்மையில் பெரியவர் அந்தக் காலத்தில் ஓரளவு காய்கறிகளும் சிறிது அரிசிச்
சாதமும் எடுத்துக் கொள்ளும் வழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தார். ஆனால்
பையனுக்கு இந்தப் பத்தியம் அவசியம் என்பதால் அந்த மகான் தன் உணவையும்
மாற்றிக் கொண்டார். குழந்தை தன் நாக்கைக் கட்டுப்படுத்தும் போது தாமும்
அந்தக்கட்டுப்பாட்டை ஏற்க வேண்டும் என்று கருதி காரியத்திலும் செய்து
காட்டினார். சேய்க்கு வந்த நோய்க்கு தாயும் மருந்து உண்பது போல!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 ஓங்கி ஒரு குட்டு

அவர்கள் ஐந்தாறு பேர். திருமண். வைணவ கறை வேஷ்டி. எல்லோரும் 'வந்தனம்' சொன்னர், ஒருவரை தவிர. அவர் 'பரப்ப்ரமமாக' இருந்தார்.
 
வயதானவர். 'இவருக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. எல்லா டாக்டரையும் பார்த்தாச்சு. இப்போ, குணசீலம், சோளிங்கர், வரதர்,.. கோவில் எல்லாம் போயிட்டு வரோம். பெரியவாதான் குணப்படுத்தணம்'.
 
'விஷ்ணு சஹஸ்ர நாம பாராயண க்ரமத்திலிரிந்து 'அச்சுதானந்த கோவிந்த நமோ சரண, பேஷஜாத் நஸ்யந்தி சகலா ரோக, சத்யம் சத்யம் வதாம்யஹம்' என்ற ஸ்லோகத்தை 108 முறை சொல்லச் சொன்னார்.
 
அடுத்தது அவர் சொன்னதுதான் அனைவரயும் அதிர்ச்சி அடைய வைத்தது. பயில்வான் போன்ற ஒருவரை கூப்பிட்டு, ஓங்கி ஒரு குட்டு அக்கிழவரின் தலையில் குட்டச் சொன்னார். அடுத்த நொடி அப்பெரியவர் 'ஏன்டா ரகு, நாம எங்க இருக்கோம், இது மடம் மாதிரி தெரியறது' என்றார்.
 
எல்லோருக்கும் கண்களில் குளம் கட்டியது. 'பெரியவா காப்பாத்திட்டேள்'. அவர் எப்போதும் போல் 'நான் என்ன பண்ணினேன், நீங்க திவ்ய தேசம் போயிட்டு வந்திருக்கேள். அந்த பெருமாள் தான் காப்பாத்தி இருக்கார்' என்றார்.
__._,_._____,_._,___






No comments:

Post a Comment